Advertisment

‘என் வழி தனி வழி' தான் பிடித்த வசனம்… ரஜினி பற்றி நெகிழ்ந்த கொல்கத்தா இளம் வீரர்!

Kolkata Knight Riders’s Venkatesh Iyer interviews Tamil News: "சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘என் வழி தனி வழி' என்ற வசனம் தான் எனக்கு பிடித்த டயலாக். இந்த டயலாக் தான் எனக்கு எப்போதும் ஊக்கம் கொடுக்கும்." என்று கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர் வெங்கடேஷ் ஐயர் குறிப்பிட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
Ipl Tamil News: KKR’s Venkatesh Iyer speaks about super star rajini

cricketer Venkatesh Iyer Tamil News: ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் தொடங்கியுள்ள ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லமால் நடைபெற்று வருகிறது. இதன் நேற்றையை ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த ஆட்டத்தில் பந்து வீச்சு மற்றும் பேட்டிங்கில் மிரட்டிய கொல்கத்தா அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Advertisment
publive-image

நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் முதல் பகுதியில் தோல்விகளால் துவண்டு வந்த கொல்கத்தா அணி தற்போது நடைபெற்று வரும் 2ம் பகுதி ஆட்டத்தில் 2 தொடர் வெற்றிகளை பெற்று உத்தவேகம் அடைந்துள்ளது. கொல்கத்தாவின் இந்த அதிரடியான முன்னேற்றத்திற்கு அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் தான் மிக முக்கிய காரணம் என்றால் நிச்சயம் மிகையாகாது. குறிப்பாக, இளம் வீரர் வெங்கடேஷ் ஐயரின் பங்கை குறிப்பிட்டு கூறலாம்.

publive-image

இந்தாண்டுக்கான ஐபிஎல் ஏலத்தில் கொல்கத்தா அணியால் வாங்கப்பட்ட வெங்கடேஷ் ஐயர் முதல் பகுதி ஆட்டத்தில் களமிறப்படவில்லை. 2ம் பகுதி ஆட்டத்தில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், கிடைத்த வாய்ப்பை அற்புதமாக பயன்படுத்தி அதிவேக அரைசதம் அடித்து மிரட்டியுள்ளார்.

publive-image

பெங்களூரு அணிக்கெதிரான ஆட்டத்தில் அறிமுகமான வெங்கடேஷ் ஐயர், 27 பந்துகளில் 41 ரன்களை விளாசி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இதே போல் நேற்று மும்பைக்கு எதிரான போட்டியிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மேலும், 29 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அவர் 30 பந்துகளில் 53 ரன்கள் ( 3 சிக்ஸர், 4 பவுண்டரி) சேர்த்தார். தவிர, மும்பை அணியின் முன்னணி பவுலர்களாக வலம் வரும் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ட்ரெண்ட் போல்ட் ஆகியோரின் பந்துகளை வெளுத்து வாங்கினார்.

மும்பை அணியுடனான ஆட்டத்திற்கு பின்னர் வெங்கடேஷ் ஐயர் அளித்துள்ள பேட்டியில், "நான் கொல்கத்தா அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் மிகத்தீவிர ரசிகன். அவர் வழிநடத்திய கொல்கத்தா அணியில் சேர வேண்டும் என்பது தான் எனது ஆசை. தற்போது அந்த அணியில் விளையாடும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது." என்றார்.

மேலும், தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினி குறித்து நெகிழ்ந்துள்ள அவர், "நான் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மிகத் தீவிர ரசிகன். அவரது அனைத்து படங்களையும் தவறாமல் பார்ப்பேன். நான் இந்தூரில் ஒரு முறை இருந்தபோது, அவரின் படத்தை தியேட்டரில் பார்ப்பதற்காகவே சென்னை சென்றேன். என் வாழ்க்கையின் மிகப்பெரிய தருணமாக ரஜினிகாந்தை சந்திக்கும் நாள்தான் இருக்கும்.

publive-image

அவரது படத்தில் ‘என் வழி தனி வழி' என்ற வசனம் தான் எனக்கு பிடித்த டயலாக். இந்த டயலாக் தான் எனக்கு எப்போதும் ஊக்கம் கொடுக்கும். அதற்கு நான் ரஜினி சாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்று வெங்கடேஷ் ஐயர் கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sports Cricket Ipl Ipl Cricket Ipl News Kolkata Ipl 2021 Mi Vs Kkr
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment