Advertisment

கண்கலங்கிய சிறுவர்கள்… சர்ஃபரைஸ் கொடுத்த தோனி… நெகிழும் ரசிகர்கள்!

IPL 2021 Qualifier 1, DC VS CSK MS Dhoni gifts signed ball to young CSK fans TAML NEWS: கேப்டன் தோனி தனது ஸ்டைலில் ஆட்டத்தை முடித்து வைத்தபோது ஆனந்த கண்ணீர் வடித்த குட்டீஸ் ரசிகர்களுக்கு மேட்ச் பந்தை கிஃப்ட் செய்து சர்ஃபரைஸ் கொடுத்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Ipl Tamil News: MS Dhoni gifts signed ball to young CSK fans Tamil News

MS Dhoni Tamil News: இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் துபாயில் நேற்று நடந்த முதலாவது குவாலிஃபைர் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மிகவும் பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

Advertisment
publive-image

எனவே முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிட்டல்ஸ் அணி 5 விக்கெட்களை இழந்து 172 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து களமிறங்கிய சென்னை அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி 9வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

publive-image

இந்த ஆட்டத்தில் சென்னை அணியின் வெற்றிக்கு 11 பந்துகளில் 23 ரன்கள் தேவைப்பட்டபோது களமிறங்கிய கேப்டன் தோனி வந்த சந்தித்த முதல் பந்தையே சிக்சருக்கு பறக்கவிட்டார். தொடர்ந்து 3 பவுண்டரிகளை விளாசிய அவர் 6 பந்துகளில் 18 ரன்கள் சேர்த்து தனக்கே உரிய பாணியில் ஆட்டத்தை முடித்து வைத்து சென்னை அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். இதனால் விண்டேஜ் தோனியை மீண்டும் பார்த்த ரசிகர்கள் குஷியில் உள்ளனர். அதோடு சமூக வலைதள பக்கங்களில் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

publive-image

இந்நிலையில், நேற்றைய ஆட்டம் நடந்த துபாய் மைதானத்தில் கேப்டன் தோனியின் இரண்டு குட்டீஸ் ரசிகர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர். தோனி பேட்டிங் செய்ய களமிறங்கிய போது இந்த அண்ணன் - தங்கை குட்டீஸ் கடவுளிடம் பிரார்த்தனை செய்தனர். இவர்கள் பிராத்தனை செய்வதை அப்போது திரையில் காண்பித்தனர். இதை களத்தில் இருந்த தோனியும் கவனித்திருந்தார்.

தொடர்ந்து கேப்டன் தோனி தனது ஸ்டைலில் ஆட்டத்தை முடித்து வைத்தபோது இந்த குட்டீஸ் ரசிகர்கள் ஆனந்த கண்ணீர் வடித்தனர். இது மைதானத்தில் இருந்த ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆட்டம் முடிந்து பெவிலியன் திரும்பிய தோனி, சிறுவர்கள் இருவரும் இருந்த இடத்திற்கு கீழே சென்று கையை அவர்களை உயர்த்தி உற்சாகப்படுத்தினார். பிறகு தனது கையில் இருந்த மேட்ச் பந்தில் கையெழுத்து இட்டு, அதனை சிறுவர்களிடம் தூக்கி போட்டார்.

கேப்டன் தோனியின் இந்த செயல் அவரது ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டு வரும் நிலையில் அந்த குட்டீஸ் நெகிழ்ந்த புகைப்படங்கள் தற்போது வைராகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Ms Dhoni Chennai Super Kings Delhi Capitals Ipl News Ipl Cricket Dc Vs Csk Ipl Ipl 2021
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment