கடைசி போட்டி சென்னை மைதானத்தில் தான்… நெகிழும் கேப்டன் தோனி!
MS Dhoni hints at playing in IPL 2022 Tamil News: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி அடுத்தாண்டு ஐபிஎல் தொடரிலும் தான் களமிறங்க உள்ளதை சூசகமாக கூறியுள்ளார்.
MS Dhoni hints at playing in IPL 2022 Tamil News: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி அடுத்தாண்டு ஐபிஎல் தொடரிலும் தான் களமிறங்க உள்ளதை சூசகமாக கூறியுள்ளார்.
MS Dhoni Tamil News: இந்திய கிரிக்கெட் அணியை சிறப்பாக வழிநடத்திய முக்கிய கேப்டன்களுள் ஒருவராக முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி வலம் வருகிறார். இவர் கடந்த ஆகஸ்டில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதனால் அதிர்ச்சியுற்ற கிரிக்கெட் ரசிகர்கள் அவர் ஐபிஎல் தொடரில் இருந்தும் ஓய்வு பெற உள்ளாரா? என்பது போன்ற கேள்வியை எழுப்பி வந்தனர். மேலும், நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை கைப்பற்றினால் தோனி ஓய்வு பெறுவார் என்று பலர் கருத்து தெரிவித்தனர்.
Advertisment
இந்நிலையில், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 75வது ஆண்டு விழா கொண்டாட்டத்தில் பங்கேற்ற சென்னை அணியின் கேப்டன் தோனி அடுத்தாண்டு ஐபிஎல் தொடரிலும் தான் களமிறங்க உள்ளதை சூசகமாக கூறியுள்ளார். நேற்று ஆன்லைன் வாயிலாக நடந்த இந்த நிகழ்ச்சியில் ரசிகர்களிடம் கலந்துரையாடிய அவர், "என்னுடைய கடைசி போட்டியானது (ஃபேர்வெல்) சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சென்னை மைதானத்தில் ரசிகர்களுக்கு மத்தியில் நடைபெறுவதே எனது விருப்பம். அப்போது ரசிகர்கள் நேரில் வந்து என்னை வழியனுப்ப வேண்டும். நானும் எனது ரசிகர்கள் அனைவரையும் சந்திப்பேன். அந்த வாய்ப்பு எனக்கு கிட்டும் என்றும் என நம்புகிறேன்." என்று நெகிழ்ந்து பேசியுள்ளார்.
Advertisment
Advertisements
கேப்டன் தோனியின் இந்த பதில் மூலம் அவர் ஐ.பி.எல்.லின் மற்றொரு சீசனிலும் விளையாடுவார் என்று தெரிகிறது. முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பிராட் ஹாக், டேல் ஸ்டெய்ன் மற்றும் பலர் நடப்பு ஐ.பி.எல். தொடரே தோனியின் கடைசி போட்டியாக இருக்கலாம் என்று கருத்து தெரிவித்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று 18 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil