ஒரு அணிக்கு எதிராக 1000 ரன்கள்… ரோகித் சர்மாவின் புதிய சாதனை!

MI vs KKR: Rohit Sharma’s new record in IPL history Tamil News: ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணிக்கு (கொல்கத்தா அணி) எதிராக 1000 ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற ‘ஹிட்மேன்’ ரோகித் சர்மா பெருமையை பெற்று உள்ளார்.

Ipl Tamil News: Rohit Sharma’s new record in IPL history

Rohit Sharma Tamil News: ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அபுதாபியில் நேற்று இரவு (வியாழக்கிழமை) நடந்த 34-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, முன்னாள் சாம்பியான கொல்கத்தா நைட் ரைடர்சை அணியை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்சை அணியின் கேப்டன் இயோன் மோர்கன் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி மும்பை அணியின் குயின்டன் டி காக் – ரோஹித் சர்மா ஜோடி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

மும்பை அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்த இந்த ஜோடி பவர் பிளே முடிவில் 56 ரன்கள் குவித்து இருந்தது. தொடர்ந்து அணியின் ரன் ரேட்டை உயர்த்த முயற்சித்த இந்த ஜோடியில் ரோகித் சர்மா 30 பந்துகளில் 33 ரன்கள் சேர்த்து கொல்கத்தாவின் சுனில் நரேன் சுழலில் சிக்கி ஆட்டமிழந்தார்.

எனினும் ரோகித் சர்மா இந்த ஆட்டத்தில் புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். அது என்ன சாதனை என்றால், ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணிக்கு (கொல்கத்தா அணி) எதிராக 1000 ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார். அவர் 3வது ஓவரில் வருண் சக்ரவர்த்தி வீசிய பந்தில் இந்த சாதனையை ஏற்படுத்தி உள்ளார்.

சன்ரைசர்ஸ் ஐதராபாத்தின் டேவிட் வார்னர், பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக 943 ரன்களும், கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக 915 ரன்களும் பெற்று பட்டியலில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவின் விராட் கோலி டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக 909 ரன்கள் எடுத்து நான்காவது இடத்தில் உள்ளார்.

இந்த ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சை அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக ராகுல் திரிபாதி 74 ரன்கள் குவித்து ஆட்டமிழக்கமால் களத்தில் இருந்தார். தொடரில் தொடர்ந்து 2 வெற்றிகளை ருசித்துள்ள கொல்கத்தா அணி புள்ளிப் பட்டியலில் 4 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. தொடர்ந்து 2 தோல்வியால் துவண்டுள்ள மும்பை அணி 6 இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Ipl tamil news rohit sharmas new record in ipl history

Next Story
ஐதராபாத் அணியின் அதிரடி வீரர் எடுத்த தைரியமான முடிவு… கலாய்த்து வரும் நெட்டிசன்கள்!IPL news in tamil: netizens reaction on Kedar Jadhav's DRS call 
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com