/indian-express-tamil/media/media_files/2025/09/04/ipl-tickets-to-cost-double-after-central-govt-40-pc-gst-tamil-news-2025-09-04-12-30-47.jpg)
ஐ.பி.எல் டிக்கெட்டுகள் மீதான புதிய வரி விதிப்பு குறித்து மத்திய அரசை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
இந்தியா முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பை உறுதி செய்யும் வகையில், ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி அமலுக்கு வந்தது. கலால் வரி, வாட், சேவை வரி போன்ற பல்வேறு மறைமுக வரிகள் ஒருங்கிணைக்கப்பட்டு ஜி.எஸ்.டி. என்ற ஒரே குடையின் கீழ் கொண்டுவரப்பட்டன. இந்த ஜி.எஸ்.டி. 4 அடுக்குகளை கொண்டிருந்தது. 5, 12, 18 மற்றும் 28 சதவீதம் என 4 வகையான வரி விகிதத்தின் கீழ் அனைத்துப்பொருட்கள் மற்றும் சேவைகள் ஒருங்கிணைக்கப்பட்டன.
இந்நிலையில், ஜி.எஸ்.டி. அமலுக்கு வந்து 8 ஆண்டுகள் கடந்துள்ள சூழலில், ஜி.எஸ்.டி. விகிதங்களை குறைக்க மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற 56-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் ஜி.எஸ்.டி.யை 5 சதவீதம், 18 சதவீதம் என 2 அடுக்குகளாக குறைப்பது பற்றியும், மேலும் வரிகுறைப்பு பற்றியும் ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து, ஜி.எஸ்.டி. வரி விகிதக்குறைப்பை நிதியமைச்சகம் வெளியிட்டது. இதை அடுத்த தலைமுறை ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் எனவும், ஜி.எஸ்.டி 2.0 எனவும் அறிவித்தது.
இந்த அறிவிப்புக்கு பெரும்பாலோனோர் வரவேற்பு தெரிவித்து வரும் நிலையில், சிலர் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக கிரிக்கெட் ரசிகர்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அதாவது, ஜி.எஸ்.டி. வரி விதிப்பு மாற்றங்களில், இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) டிக்கெட்டுகளுக்கான வரியை 28 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக உயர்த்தபட்டுள்ளது. இது ஐ.பி.எல் போட்டிகளை நேரில் பார்த்து மகிழும் ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது.
ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் உலகின் பணக்கார கிரிக்கெட் லீக்காக வலம் வரும் ஐ.பி.எல் ஆடம்பர பிரிவில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், கேசினோக்கள் மற்றும் பந்தயங்கள் போன்றவற்றுடன் ஐ.பி.எல் டிக்கெட்டுக்கு 40 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வரி விதிப்பு செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வரும் நிலையில், அது அடுத்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல் சீசனுக்கான டிக்கெட் விலைகளைப் பாதிக்கும் எனக் கருத்தப்படுகிறது.
"GST on IPL raised from 28% to 40%."
— THE SKIN DOCTOR (@theskindoctor13) September 4, 2025
This misleading post is being circulated as if the govt has finally started taxing IPL or BCCI.
False. The hike is in GST on "IPL tickets", which means fans buying tickets will pay more, not BCCI. IPL and BCCI still enjoy exemptions on their…
இதனிடையே, டிக்கெட்டுகள் மீதான புதிய வரி விதிப்பு குறித்து மத்திய அரசை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். இந்த புதிய வரி விதிப்பு, வரி விலக்கு பெற்ற பி.சி.சி.ஐ-யை விட பார்வையாளர்கள் மற்றும் பொதுமக்களை இலக்காகக் கொண்டிருப்பதாக சிலர் விமர்சித்துள்ளனர். இது தொடர்பாக எக்ஸ் தள பயனர் ஒருவர், "ஐ.பி.எல் மீதான ஜி.எஸ்.டி 28% இலிருந்து 40% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அரசு ஐ.பி.எல் அல்லது பி.சி.சி.ஐ-க்கு வரி விதிக்கத் தொடங்கியிருப்பது போல் தவறாக புரிந்து கொல்லப்பட்டுள்ளது. அது தவறு. 'ஐபிஎல் டிக்கெட்டுகள்' மீதான ஜி.எஸ்.டி-யில் உயர்வு உள்ளது, அதாவது டிக்கெட் வாங்கும் ரசிகர்கள் பி.சி.சி.ஐ-க்கு அதிக கட்டணம் செலுத்துவார்கள். அதனால், ஐ.பி.எல் மற்றும் பி.சி.சி.ஐ இன்னும் தங்கள் சொந்த வருவாயில் விலக்குகளை அனுபவிக்கின்றது." என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.