Ajinkya Rahane - WTC final 2023 Tamil News: 2022 – 23 ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, இங்கிலாந்தின் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் ஜூன் 7ம் முதல் 11ம் தேதி வரை நடைபெறுகிறது. மறுநாள் 12ம் தேதி ‘ரிசர்வ் டே’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போட்டியில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த ஆஸ்திரேலியா – இந்தியா அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போடிக்கான இந்திய கிரிக்கெட் அணியை பிசிசிஐ இன்று அறிவித்தது. அந்த அணியில் அஜிங்க்யா ரஹானே சேர்க்கப்பட்டுள்ளார். நடப்பு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வரும் அவர் தனது தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 209 ரன்கள் எடுத்துள்ளார். 18 பவுண்டரிகள் மற்றும் 11 சிக்ஸர்களுடன் அவரது ஸ்ட்ரைக் ரேட் 199.04 ஆக உள்ளது.
முன்னாள் துணை கேப்டனான ரஹானே, கடைசியாக 2021-22ல் தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் இந்திய அணியில் இடம் பிடித்தது. தொடர்ச்சியான சீரற்ற ஃபார்ம், அதைத் தொடர்ந்த இந்தியாவின் டெஸ்ட் தொடர் தோல்வி, அவரை இந்திய அணியில் இருந்து முற்றிலும் கழற்றி விட வழிவகுத்தது. இந்த நிலையில், ஐ.பி.எல் 2023 தொடர் அவருக்கான இந்திய அணி வாய்ப்பை வழங்கியுள்ளது.
இந்த வாய்ப்பு அவர் சென்னை அணி சார்பாக தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் மட்டும் கிடைக்கவில்லை. மாறாக, இன்னும் சில காரணங்களும் உள்ளன. அவை குறித்து இங்கு சுருக்கமாக பார்க்கலாம்.
- இங்கிலாந்தில் விளையாடிய அனுபவம்
ரஹானே அனுபவம் கொண்ட மிடில் ஆர்டர் வீரராக இருக்கிறார். அவர் நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு தனது முதல் சுற்றுப்பயணங்களில் சதம் அடித்த வீரராகவும், இந்தியாவின் சிறந்த வெளிநாட்டு வீரர்களில் ஒருவராகவும் திகழ்கிறார் (தென் ஆப்பிரிக்காவில் சதத்தை நான்கு ரன்கள் வித்தியாசத்தில் இழந்தார். ) அவரது 12 டெஸ்ட் சதங்களில் 8 இந்தியாவுக்கு வெளியில் இருந்து வந்துள்ளன. இது அவர் எவ்வளவு விரைவாக தன்னை நிலைமைகளுக்கு மாற்றியமைக்கிறார் என்பதை எடுத்துக்காட்டுகிறது.
15 போட்டிகளில் 26.03 சராசரியை கொண்டுள்ள அவர் வேகப்பந்து வீச்சை சாதுரியமாக விளையாடுவார். அவர் மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் போன்ற முன்னணி ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்களை இதற்கு முன்பு பலமுறை எதிர்கொண்டுள்ளார். அந்த அனுபவமும் அவருக்கு ஓவலில் கைகொடுக்கும்.
- ஷ்ரேயாஸ் - ரிஷப் அணியில் இல்லை
டெஸ்ட் போட்டிகளில் இந்தியா பின்னடைவை சந்தித்த நேரங்களில் ரிஷப் பண்ட் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் அணியை பலமுறை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றுள்ளனர். ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரும் அதற்கு தயங்கவில்லை என்றாலும்,
ஷ்ரேயாஸ் - ரிஷப் மிடில் -ஆடரில் சிறப்பான இருந்தனர். துரதிர்ஷ்டவசமாக அவர்களுக்கு ஏற்பட்ட காயங்கள் அவர்களை அணியில் இருந்து விலக செய்தது. மேலும், அவர்களுக்குப் பதிலாக தேர்வு செய்வதற்கான குறைந்தபட்ச விருப்பங்களை அணிக்கு விட்டுச்சென்றனர்.
கே.எல் ராகுல் ஒரு விருப்பமாக இருந்தாலும், இந்தியாவுக்கு எப்போதும் மற்றொரு முன்னணி பேட்ஸ்மேன் தேவைப்படுவார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரில் அறிமுகமான சூரியகுமார் யாதவை தேர்வு செய்தால், அது பலரது புருவங்களையும் உயரச் செய்யும். அதனால், அவரை அணியில் இருந்து கழற்றி விடப்படும் கட்டாயம் ஏற்பட்டது.
அதே நேரத்தில் சர்ஃபராஸ் கான் இன்றுவரை டெஸ்ட் அணியில் விளையாடும் வாய்ப்பை பெறவில்லை எனவும், இதேபோல், அபிமன்யு ஈஸ்வரனுக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் சில ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொந்தளிப்பதைப் பார்க்க முடிகிறது. ஒருவேளை, வெளிநாட்டில் நடக்கும் ஒருநாள் அல்லது டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்த வீரர்களை நீங்கள் அறிமுகம் செய்வீர்களா? என்ற கேள்வியை அவர்களிடம் எழுப்பப்பட வேண்டும்.
இது இறுதிப் போட்டி என்பதாலும், இது ஒரு முறை போட்டியாக இருப்பதும், அனுபவம், திறனும் கொண்ட ரஹானேவின் தேர்வுக்கு தகுதி சேர்க்கிறது. அணி நிர்வாகம் பல தேர்வுகளை கண்டுகொள்ளாமல் விட்டுவிடவில்லை. அவர்களும் உள்ளனர். ஆனால், இது இறுதிப் போட்டி. இங்கு ஒரு வீரரை அறிமுகம் செய்து சூதாக இருக்கும். அதனால், ரஹானேவின் தேர்வு மற்றும் சோதிக்கப்பட்ட விருப்பத்தை ஒரு புத்திசாலித்தனமான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
- சமீபத்திய ஃபார்ம்
ஐபிஎல் 2023ல் அவர் திரும்பும் முன் ரஹானே மும்பைக்காக ரஞ்சி டிராபியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 7 போட்டிகளில் 57.63 சராசரியில் 2 பெரிய சதங்களுடன் (இரட்டை சதம் உட்பட) 634 ரன்கள் எடுத்து அசத்தி இருந்தார். கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் 71 ரன்களை எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்கமால் இருந்த அவர், அந்த ஆட்டத்திற்குப் பிறகான பேட்டியில் அவரது 'சிறந்த ஆட்டம்' இன்னும் வரவில்லை என்று கூறி இருந்தார்.
ரஹானேவின் நம்பிக்கை அதிகமாக இருப்பதாலும், அவரது பேட்டிங்கில் இருந்து ரன்கள் தடையின்றி வருவதாலும், இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவைத் துரத்துவதை இந்தியா உறுதிப்படுத்த வேண்டிய டானிக்காக அவர் இருக்கலாம். அவர்களின் பேட்டிங் வரிசையானது சமீப காலங்களில் உடையக்கூடியதாகத் தெரிகிறது. மேலும், ரஹானேவைச் சேர்ப்பது இந்த ஆட்டத்திற்கான விஷயங்களை எளிதாக்கும் என்பதில் சந்தேகமில்லை.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.