IPL 2023, MI Vs PBKS, Arshdeep Singh Tamil News: 10 அணிகள் பங்கேற்று விளையாடி வரும் 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், நேற்று சனிக்கிழமை இரவு மும்பையில் நடந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. மிகவும் பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக அரைசதம் அடித்த கேப்டன் சாம் கர்ரன் 55 ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து 215 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய மும்பை அணி 201 ரன்கள் மட்டுமே எடுத்தது. கேப்டன் ரோகித் சர்மா 44 ரன்கள், அரைசதம் அடித்த கேமரூன் கிரீன் 67 ரன்கள், சூரியகுமார் யாதவ் 57 ரன்கள் எடுத்த போதிலும், மும்பை அணிக்கு தோல்வி முகமே மிஞ்சியது. அசத்தலாக பந்துவீசிய பஞ்சாப் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் அதன் சொந்த மைதானத்திலே வீழ்த்தியது.
What a mind-blowing match! Phenomenal effort by the boys. Incredible performances by Arshdeep Singh, Sam Curran, Harpreet Bhatia, Prabhsimran and Atharva Taide 😍 pic.twitter.com/LOb6IBRgvP
— Shikhar Dhawan (@SDhawan25) April 22, 2023
2 எல்.இ.டி ஸ்டம்ப்களை உடைத்த அர்ஷ்தீப் சிங்

பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணியின் வெற்றிக்கு கடைசி 6 பந்துகளில் 16 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை பஞ்சாப் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் வீசினார். 2 ரன்களை மட்டுமே கொடுத்த அவர், அதிரடி வீரர் திலக் வர்மா மற்றும் இம்பேக்ட் வீரரான வதேரா ஆகியோரின் விக்கெட்டுகளைக் கைப்பற்றி மிரட்டினார். இருவரின் விக்கெட்டுகளையும் அவர் எடுக்கும்போது, அவர்களுக்கு பின்புறத்தில் இருந்த மிடில் – ஸ்டம்புகளை உடைத்து பறக்கவிட்டார் அர்ஷ்தீப் சிங். அடுத்தடுத்த பந்துகளில் அவர் ஸ்டம்ப்களை உடைத்தது ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
உடைக்கப்பட்ட ஸ்டம்புகளின் விலை இத்தனை லட்சங்களா?
இந்நிலையில், அர்ஷ்தீப் சிங் உடைத்த ஸ்டம்புகள் எல்.இ.டி டிசைனில் கேமரா மற்றும் ஜிங் பெயில்கள் கொண்டவை. அதன் விலையானது பிராண்ட், வடிவமைப்பு மற்றும் அம்சங்கள் போன்ற பல காரணிகளைப் பொறுத்து மாறுபடும். பொதுவாக, கேமரா மற்றும் ஜிங் பெயில்களுடன் கூடிய உயர்நிலை எல்.இ.டி ஸ்டம்புகளின் விலை பல ஆயிரம் டாலர்கள் முதல் பல்லாயிரக்கணக்கான டாலர்கள் வரை இருக்கும்.
Stump breaker,
— JioCinema (@JioCinema) April 22, 2023
Game changer!
Remember to switch to Stump Cam when Arshdeep Akram bowls 😄#MIvPBKS #IPLonJioCinema #IPL2023 #TATAIPL | @arshdeepsinghh pic.twitter.com/ZnpuNzeF7x
எடுத்துக்காட்டாக, கேமராக்கள் மற்றும் ஜிங் பெயில்கள் கொண்ட எல்.இ.டி ஸ்டம்புகளை உள்ளடக்கிய ஜிங் அமைப்பு, பல செட் ஸ்டம்புகள் மற்றும் பெயில்கள் கொண்ட முழுமையான அமைப்பிற்கு சுமார் 40,000 அமெரிக்க டாலர்கள் முதல் 50,000 அமெரிக்க டாலர்கள் வரை செலவாகும். இந்திய ரூபாயில் அதின் மதிப்பு 32 லட்சம் முதல் 41 லட்சம் வரை இருக்கும் ஸ்டம்ப் விஷன் (Stump Vision) மற்றும் இன்டெலிகான் (Intelliconn) போன்ற பிற நிறுவனங்கள் 5,000 அமெரிக்க டாலர்கள் முதல் 20,000 அமெரிக்க டாலர்கள் வரையிலான விலையில் இதே போன்ற அமைப்புகளை வழங்குகின்றன [ இந்திய ரூபாயில் 4 லட்சம் முதல் 16 லட்சம் வரை].

அந்த வகையில், நேற்றைய ஆட்டத்தில் அர்ஷ்தீப் சிங் உடைத்த ஸ்டம்புகளின் விலை சுமார் 20 லட்ச ரூபாய் மதிப்பு இருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது. அந்த பணத்தில் நிறைய ஐபோன்கள் அல்லது ஸ்டைலான ஸ்போர்ட்ஸ் பைக் அல்லது பட்ஜெட் விலையில் எஸ்.யூ.வி கார் வாங்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil