Watch viral video Tamil News: இந்திய மண்ணில் அரங்கேறிய 15வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா கடந்த மாத இறுதியில் முடிவடைந்தது. இத்தொடருக்கான இறுதிப்போட்டி அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடந்த நிலையில், அதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய குஜராத் டைட்டன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. அறிமுக அணியான குஜராத் டைட்டன்ஸை கேப்டன் ஹர்திக் பாண்டியா திறம்பட வழிநடத்தி இருந்தார்.
இதேபோல் தோல்விகண்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை கேப்டன் சஞ்சு சாம்சன் மிகச்சிறப்பாகவே வழிநடத்தினார். அவரது தலைமையிலான அணியில் தொடக்க வீரராக களமாடிய ஜோஸ் பட்லர் நடப்பு தொடரில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அதிக ரன்களை குவித்த வீரர் என்கிற பெருமையைப் பெற்றார். 863 ரன்களுடன் (17 ஆட்டங்கள்) சீசனை முடித்த அவர், 6 தனிநபர் பரிசுகளுடன், மொத்தமாக 60 லட்சம் ரொக்க பணத்தையும் அள்ளிச் சென்றார்.
இதேபோல், அந்த அணியின் சுழல் மன்னன் யுஸ்வேந்திர சாஹல் தனது சுழல் வித்தையை வெளிப்படுத்தி மிரட்டியெடுத்தார். 17 போட்டிகளில் 27 விக்கெட்டுகளை வீழ்த்திய அவர் நடப்பு தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரரானார். கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் ஹாட்ரிக் சாதனையையும் படைத்த அவருக்கு ஊதா நிற தொப்பி வழங்கப்பட்ட நிலையில், அவர் ரூ.10,00,000 ரொக்க பணத்தையும் பரிசாக பெற்றுக்கொண்டார்.
இந்நிலையில், இந்திய சுழற்பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் – குஜராத் டைட்டன்ஸ் அணியின் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா குடிபோதையில் இருக்கும் வீடியோ சமூக வலைதள பக்கங்களில் அதிகமாக பகிரப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ராஜாஸ்தான் வீரர் யுஸ்வேந்திர சாஹலுடன், குஜராத் அணியின் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா இருக்கிறார். இரு அணிக்களுக்கு இடையேயான இறுதிப்போட்டிக்கு பிறகு நடைபெற்ற பார்ட்டியில் அவர்கள் கலந்து கொண்ட பிறகு சந்தித்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
வீடியோவில், பயிற்சியாளர் நெஹ்ரா “என்னுடன் பேருந்தில் வா” என்று சாஹலிடம் கூறுகிறார். அதற்கு சாஹல், “நான் பேருந்தில் பயணம் செய்ய விரும்பவில்லை” என்று பதிலளிக்கிறார். மேலும், “என் மனைவியை எப்படி தனியாக விட்டுவிட முடியும்” என்றும் கூறுகிறார். அதற்கு “நெஹ்ரா அவரும் நம்முடன் பேருந்தில் வருவார்” என்று கூறுகிறார்.
Watch this hilarious interaction between the Ashish Nehra and Yuzvendra Chahal😂
— Sanskruti Yadav (@SanskrutiYadav_) June 6, 2022
Nehra: “Abe tu idhar bus mein aa (come with me in the bus)”
Yuzi: “Bus mein nahi jaana mujhe (I don’t want to travel in the bus).” pic.twitter.com/QG1tGr3AhV
இந்த வீடியோ ரசிகர் ஒருவரால் பதிவு செய்யப்பட்டு சமூக வலைதள தளத்தில் பகிரப்பட்டுள்ள நிலையில், வீடியோ குறித்து கிரிக்கெட் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதில் ஒருவர், “இருவரும் ஃபுல் டைட்” என்று பதிவிட்டுள்ளார். மற்றொருவர், “அவர்கள் குடிபோதையில் உள்ளனர்”, என்றும் அதில் “சாஹல் அதிமாக குடித்துள்ளார்” என்று கமெண்ட் செய்துள்ளார். “சாஹல் வித்தியாசமாக இருக்கிறார். அவர் போதையில் உள்ளாரா?” என்று ஒரு ரசிகர் கேள்வியெழுப்பியுள்ளார்.
31 வயதான முன்னாள் செஸ் வீரர் சாஹல் முன்பு ஆஷிஷ் நெஹ்ராவுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணியில் இருந்தபோது உடன் பணியாற்றி இருக்கிறார். தற்போது சாஹல் நாளை வியாழக்கிழமை (ஜூன் 9) டெல்லியில் தொடங்கும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்ளும் இந்திய டி 20 அணியில் இடம்பிடித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil