scorecardresearch

IPL 2023: சி.எஸ்.கே வீக் பாயின்ட் ‘பவர் பிளே’-தான்; குறி வைத்து தாக்கும் எதிர் அணிகள்

இதுவரை நடைபெற்ற போட்டிகளில் 10 புள்ளிகள் பெற்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 3 போட்டிகளில் வெற்றிபெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும்.

சென்னை சூப்பர் கிங்ஸ்
சென்னை சூப்பர் கிங்ஸ்

இதுவரை நடைபெற்ற 8 போட்டிகளில் 10 புள்ளிகள் பெற்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 3 போட்டிகளில் வெற்றிபெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும்.

ஐ.பி.எல் 16வது சீசன் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இதுவரை நடைபெற்ற போட்டிகளில், குஜராத் டைட்டன்ஸ் அணி 12 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது. குஜராத் டைட்டன்ஸ் ஆடிய 10 போட்டிகளில் 6 வெற்றிகளை பெற்றுள்ளது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் பட்டியலில் 4 வது இடத்தை பிடித்துள்ளது.

புள்ளிகள் பட்டியலில் முதலில் 4 இடத்தை பிடித்த  அணிகளின்,  நெட் ரன் ரேட் மிகவும் நெருக்கமாக இருப்பதால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 போட்டியில் வெற்றி பெற வேண்டும். தொடர்ந்து நடக்க இருக்கும் போட்டிகளில் மூன்றில் வெற்றிபெற்றால் மட்டுமே, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ’பிளே ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும். அதுபோல 4 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே இறுதி போட்டிக்கு செல்ல உதவியாக இருக்கும்.

இந்நிலையில் இன்று 3.30 மணிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் நடைபெறும் போட்டி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சவாலாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆல்ரவுணர் பென் ஸ்டோக்ஸ் காயத்தால் விளையாடாமல் இருப்பதால், இது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சிக்கலை ஏற்படுத்தலாம். மேலும் சென்னை அணியின் அடுத்த பலமாக பார்க்கப்பட்ட தீபக் சஹர், சிசண்டா மகலா  ஆகியோர் காயத்தின் காரணமாக போடிட்டியில் கலந்துகொள்ளவில்லை என்பதால் மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலவீனமாக உள்ளது.

ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங்கை பொருத்தவரை அஜின்கியா ரகானே மற்றும் ஷிவம் துபே ஒரு நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த வாய்ப்புள்ளது. கடந்த சீசனில் இதுதான் குறையாக இருந்தது.

இந்நிலையில் பந்து வீச்சாளர்களை பொருத்தவரையில் சென்னை அணி தீபக் சஹர் காயமடைந்ததால், எதிர் அணியின் விக்கெட்டுகளை ஆட்டத்தின் ஆரம்பத்திலே வீழ்த்துவதில் சிக்கல் ஏற்படும். முகேஷ் சௌத்ரி இந்த போட்டியில் விளையாடவில்லை என்பதால், அனுபவம் குறைந்த துஷார் தேஷ்பாண்டே, ராஜ்யவர்தன் ஹங்கர் கேகர், ஆகாஷ் சிங் ஆகியோரைத்தான் சென்னை அணி பந்து வீச்சில் நம்ப வேண்டும்.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Ipl news download Indian Express Tamil App.

Web Title: Chennai super kings only issue powerplay bowling concerns