IPL 2023 – CSK Vs SRH – MS Dhoni – Devon Conway TAMIL NEWS: 10 அணிகள் காலமாடி வரும் 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், எம்.எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் 3 வெற்றிகள் மற்றும் 2 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. அடுத்ததாக சென்னை அணி நாளை வெள்ளிக்கிழமை சென்னை சேப்பாக்கத்தில் நடக்கும் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை எதிர்கொள்கிறது. இதையொட்டி சென்னை அணியின் வீரக்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை அணியின் தொடக்க வீரரான டெவோன் கான்வே விக்கெட் கீப்பிங் பயிற்சியில் ஈடுபட்டார். அவருக்கு பயிற்சியை கேப்டன் தோனி வழங்கி இருந்தார்.

தோனி நடப்பு சீசன் தொடங்கும் முன்பே முழங்கால் காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். கடைசியாக நடந்த ஆட்டத்தின் போது அவர் அசௌகரியத்துடன் காணப்பட்டார். அந்தப் போட்டியில் அவர் விளையாடமாட்டார் என்று கூறப்பட்ட நிலையில், அவர் பேட்டிங் செய்யும் கட்டாயம் ஏற்பட்டது. ஆனால், ஐதராபாத் அணிக்கு எதிராக அவர் விளையாடும் வாய்ப்புகள் குறைவு தான்.
நேற்றைய பயிற்சியின் போது, தோனி டெவோன் கான்வேக்கு விக்கெட் கீப்பிங் பயிற்சி அளித்ததைக் காண முடிந்தது. அதுதொடர்பான புகைப்படங்கள் பதிவிடப்பட்டு வைரலாகியது. அதனால், அவர் நாளை நடக்கும் ஆட்டத்தில் இருந்து ஓய்வு எடுப்பார் என்று தெரிகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil