MS Dhoni felicitated ahead of his first match at Lucknow Tamil News: 16-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், இன்று (புதன்கிழமை) பிற்பகல் 3:30 மணிக்கு லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் தொடங்கிய 45வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.
இந்த ஆட்டத்திற்கான டாஸ் போடுதலின் மழை காரணமாக சிறிது தாமதம் ஏற்பட்டது. மழை நின்ற பின் டாஸ் போடப்பட்ட நிலையில், டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி பவுலிங் செய்வதாக அறிவித்தார். அதனால், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 19.2 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்து இருந்தது.
அந்த நேரத்தில் மழை மீண்டும் குறுக்கிட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டம் அத்துடன் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
தோனிக்கு சிறப்பு கவுரவம்
இந்நிலையில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) கேப்டனுமான எம்எஸ் தோனிக்கு சிறப்பு கவுரவம் கொடுக்கப்பட்டது.
லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் எம்எஸ் தோனியின் முதல் போட்டி என்பதால், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா அவரை பாராட்டி நினைவு பரிசு வழங்கினார்.
எம்எஸ் தோனி 243 போட்டிகளில் 39.47 சராசரியுடன் 5,052 ரன்கள் குவித்து ஐபிஎல் தொடரின் ஜாம்பவான் வீரராக உள்ளார். பெரும்பாலும் லோ-ஆடரில் பேட்டிங் செய்யும் அவர், 24 அரை சதங்கள், 348 பவுண்டரிகள் மற்றும் 237 சிக்ஸர்களை விளாசியுள்ளார்.
ICYMI!
Mr. Rajeev Shukla, Vice President of the BCCI felicitates @msdhoni with a special award at the Bharat Ratna Shri Atal Bihari Vajpayee Ekana Cricket Stadium in Lucknow 👏🏻👏🏻#TATAIPL | #LSGvCSK | @ShuklaRajiv pic.twitter.com/ddYZ1P65Ef— IndianPremierLeague (@IPL) May 3, 2023
நடப்பு சீசனுடன் அவர் ஓய்வு பெற உள்ளதாக கருத்து பரவி வரும் நிலையில், ஒவ்வொரு போட்டியிலும் அவருக்கு ஆதரவாக பெரும் ரசிகர்கள் கூட்டம் திரண்டு வருகிறார்கள். மேலும் அவர் கிரீஸுக்கு வரும்போது, அவர்கள் எழுப்பும் அதிக சத்தம் விண்ணை முட்டுகிறது. ஐபிஎல் 2023-ல் இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 74 ரன்கள் எடுத்துள்ளார். சராசரியாக 74.00 உடன் விளையாடி 8 சிக்ஸர்களை பறக்கவிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.