scorecardresearch

பென் ஸ்டோக்ஸ் உள்ளே? சி.எஸ்.கே பிளேயிங் 11 எப்படி?

ஐபிஎல் தொடரின் 49வது லீக் போட்டியில் சென்னை அணியை எதிர்த்து மும்பை அணி விளையாட உள்ளது. இது “எல் கிளாசிக்கோ” ஆட்டம் என்பதால் இந்த போட்டி ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

IPL 2023: With Ben Stokes, CSK is now the all-rounder’s army Tamil News
Ben Stokes

சென்னைக்கு அணிக்கு கூடுதல் வலு சேர்க்கும் விதமாக நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸ்
காயத்தில் இருந்து குணமடைந்து மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். இதனால் மும்பை அணிக்கு எதிரான இன்றையப் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் களமிறங்க வாய்ப்பு
உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் இன்றையப் போட்டியில் சென்னை அணியில் மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், சேப்பாக்கம் மைதானத்தில் இரு அணிகளுக்கு இடையில் நடைபெற்ற ஆட்டங்களில், மும்பை அணியே அதிக வெற்றிகளை பெற்றுள்ளது. இதனால் இன்றையப் போட்டியில் சென்னை அணி வெற்றிபெறுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணி பந்துவீச்சில் இன்னும் முழுமையான ஃபார்முக்கு வரவில்லை. பவர் பிளே ஓவர்களில் அதிக ரன்களை விட்டுக் கொடுப்பதே சென்னை அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்துள்ளது.

குறிப்பாக காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள தீபக் சஹர், துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் சொதப்பி வருகிறார்கள். இதனால் பவர்பிளே ஓவர்களில் தீபக் சஹருக்கு உதவியாக பென்
ஸ்டோக்ஸை பந்துவீச வைக்க வேண்டும் என்று ரசிகர்கள் கூறி வந்தனர்.

இருப்பினும் தீக்சனா, பதிரானா, கான்வே, மொயின் அலி ஆகியோரில் யாரை பெஞ்சில் அமர வைப்பது என்பதில் முடிவு எடுக்க முடியாமல் சென்னை அணி திணறி வருகிறது.

இந்த நிலையில் பென் ஸ்டோக்ஸ், இன்றையப் போட்டியில் களமிறங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Ipl news download Indian Express Tamil App.

Web Title: Csk all rounder ben stokes ipl 2023 csk mumbai indians ms dhoni