/tamil-ie/media/media_files/uploads/2022/06/tamil-indian-express-2022-06-02T125929.704.jpg)
Chennai Super Kings (CSK) - IPL 2023
Chennai Super Kings TAMIL NEWS: இந்திய மண்ணில் நடைபெற்ற 15 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 29ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதன் இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் – ராஜாதான் ராயல்ஸ் அணிகள் மோதிய நிலையில், ராஜஸ்தானை வீழ்த்திய குஜராத் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
புதிய திட்டத்தில் சென்னை…
இந்தாண்டு நடந்த மெகா ஏலத்திற்கு பிறகு அணியை மறுகட்டமைத்த நடப்பு சாம்பியானான சென்னை சூப்பர் கிங்ஸ் 4 தொடர் தோல்விகளால் துவண்டது. மேலும், லீக்கில் நடந்த 14 ஆட்டங்களில் 4ல் மட்டும் வெற்றி பெற்று பட்டியலில் 9வது இடத்தைப்பிடித்து பெரும் பின்னடைவை சந்தித்தது.
இதற்கிடையில், ஜடேஜா சென்னை அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்ட நிலையில், லீக் சுற்றின் பாதியிலே பணிச்சுமை, கவனச் சிதறல் காரணமாக கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்தார். இதனையடுத்து சென்னை அணியை மீண்டும் எம்.எஸ் தோனி வழிநடத்தினார். அவரது தலைமையிலான அணி எதிர்பார்த்தது போல் நடப்பு தொடர் அமையவில்லை. என்றாலும் அடுத்த சீசனில் மிகவும் உறுதியாகவும், வலிமை பெற்றும் “கம் பேக்” கொடுப்போம் என்று அவர் தெரிவித்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2022/05/tamil-indian-express-2022-05-20T140352.469-1.jpg)
கேப்டன் தோனி தற்போதைக்கு ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெறும் திட்டம் இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ள நிலையில், சென்னை அணி அடுத்த சீசன் குறித்து திட்டமிட்டு வருகிறது. அவ்வகையில், வரவிருக்கும் சீசனில் அணியில் உள்ள சில வீரர்களை கழற்றி விட்டுவிட்டு ஏலத்தில் சில புதிய வீரர்களை வாங்கவும் திட்டமிட்டுள்ளது. அப்படி சென்னை அணி கழற்றி விட்டால் எந்தெந்த வீரர்களை விடுவிக்கும், அவர்கள் யார், யார் என்று இங்கு பார்க்கலாம்.
- நாராயண் ஜெகதீசன்
/tamil-ie/media/media_files/uploads/2022/06/tamil-indian-express-2022-06-02T130300.810.jpg)
2018 ம் ஆண்டு நடந்த ஐபிஎல் ஏலத்தில், சென்னை அணியால் வாங்கப்பட்ட ஜெகதீசன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் அறிமுகமானார். பல சீசன்கள் அணியுடன் இருந்த போதிலும், ஜெகதீசன் அணியில் இன்னும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இந்த சீசனில், அவர் இரண்டு போட்டிகளில் பங்கேற்று 108.10 ஸ்ட்ரைக் ரேட்டில் 40 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். இதனால், சென்னை அணி அவருக்கு அடுத்த சீசனில் வாய்ப்பு கொடுக்குமா? என்பதில் சந்தேகம் தான் எழுகிறது.
- துஷார் தேஷ்பாண்டே
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி துஷார் தேஷ்பாண்டேவை (27 வயது) 20 லட்சத்துக்கு வாங்கியது. மெகா ஏலத்தில் 14 கோடிக்கு சென்னை அணி வாங்கிய வேகப்பந்துவீச்சாளர் தீபக் சாஹர் காயம் காரணமாக ஓய்விற்கு சென்றார். இதனால் துஷார் தேஷ்பாண்டே தனது திறனை நிரூபிக்க பொன்னான வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவர் வீசிய ஏழு ஓவர்களில் 63 ரன்களை விட்டுக்கொடுத்தார். மேலும் இரண்டு ஆட்டங்களில் ஒரு விக்கெட் மட்டுமே எடுத்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2022/06/tamil-indian-express-2022-06-02T130424.034-1.jpg)
அடுத்த சீசனை பொறுத்தமட்டில் காயம் காரணமாக ஓய்வில் உள்ள தீபக் சாஹர் மற்றும் ஆடம் மில்னே அணியில் இணைவர். இவர்களுக்கு பேக்-அப் வீரர்களாக சிமர்ஜீத் சிங் மற்றும் முகேஷ் சவுத்ரி இருக்கிறார்கள். இந்த இரு வீரர்களின் பந்துவீச்சு தோனிக்கு மிகவும் பிடித்துப் போனதால் அவர்களுக்கு அணியில் இடம் கன்பாஃர்ம். எனவே, துஷார் தேஷ்பாண்டேவை சென்னை அணி கழற்றி விடும் வீரர்களில் பட்டியலில் இணைக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.
- கிறிஸ் ஜோர்டான்
இந்தாண்டு நடந்த மெகா ஏலத்தில் இங்கிலாந்தின் டி20 ஸ்பெஷலிஸ்ட் கிறிஸ் ஜோர்டானை 3.60 கோடி ரூபாய்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் வாங்கியது. 33 வயதான கிறிஸ் ஜோர்டான் குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் ரன்களை வரிகொடுத்து இருந்தார். சென்னை அணி வெற்றியை ருசிக்க வேண்டிய ஆட்டம் இவரின் மோசமான பந்துவீச்சால் பறிகொடுத்து தோல்வியுற்றது. ஒரு இன்னிங்சுக்கு 8.9 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்த அவர் நான்கு இன்னிங்ஸ்களில் இரண்டு விக்கெட்டுகள் மட்டுமே எடுத்திருந்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2022/06/tamil-indian-express-2022-06-02T130536.388.jpg)
ஜோர்டானின் பந்துவீச்சு அணி நிர்வாகத்திற்கு திருப்திகரமான ஒன்றாக இல்லாதால் எதிர் வரும் சீசனில் அவர் அணியில் தொடர வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. அவருக்குப் பதிலாக சிறந்த பந்துவீச்சு ஆல்-ரவுண்டரைக் கொண்டு வர அணி விரும்புவதாகவும், அந்த இடத்திற்கு இங்கிலாந்து வீரரான பென் ஸ்டோக்ஸை அழைத்து வர குறி வைக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. எனினும், அடுத்தாண்டு நடக்கும் ஏலத்திற்கு முன்னதாக நடைபெறும் சர்வதேச ஆட்டங்களில் ஜோர்டான் ஜொலிக்கும் பட்சத்தில் அவர் பக்கம் அணியின் பார்வை மீண்டும் திரும்ப வாய்ப்புள்ளது.
- ராபின் உத்தப்பா
ஐபிஎல் தொடர் வரலாற்றில் பலமான தொடக்க பேட்டிங் வரிசையை கொண்ட அணியாக வலம் வந்த சென்னை அணி நடப்பு சீசனில் பெரும் பின்னடைவை சந்தித்தது. மெகா ஏலத்தில் வாங்கப்பட்ட நியூசிலாந்து வீரர் டெவோன் கான்வே தொடக்க ஆட்டங்களில் சொதப்பிய நிலையில், அவரது இடத்தில் 2 கோடிக்கு வாங்கப்பட்ட ராபின் உத்தப்பா களமிறக்கி விடப்பட்டார்.
தொடக்க ஆட்டங்களில் அதிரடி காட்டிய அவர் கடைசி 5 ஆட்டங்களில் 3, 30, 1, 1, 0, 1 என்று சொற்ப ரன்னில் வெளியேறி பேட்டிங்கில் தடுமாறினார். இதனால் அணியும் பெரும் பின்னடைவைச் சந்தித்தது. இரண்டு அரைசதங்களை அடித்த உத்தப்பா 12 ஆட்டங்களில் 230 ரன்கள் எடுத்தார். அவரது சராசரி 20.90 ஆக இருந்தது, உத்தப்பாவை பொறுத்தவரை அவர் ஒரு சிறந்த வீரராக இருந்தாலும், அவரின் வயது 36. எனவே அதில் கருத்தில் கொண்டுள்ள சென்னை அணி ஒரு வலுவான தொடக்க ஜோடியை கட்டமைக்க அவரை தியாகம் செய்யலாம் என்று தெரிகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.