கேட்சை கோட்டைவிட்ட ஷிவம் துபே; ஜடேஜாவுக்கு வந்த கோபம்: வீடியோ

IPL Cricket Update : சிவம் டூபே தயக்கம் காட்டியதால் கேட்ச் மிஸ் ஆகி சென்னை அணியின் வெற்றியும் மிஸ் ஆகிவிட்டது.

IPL Cricket Update : சிவம் டூபே தயக்கம் காட்டியதால் கேட்ச் மிஸ் ஆகி சென்னை அணியின் வெற்றியும் மிஸ் ஆகிவிட்டது.

author-image
WebDesk
New Update
கேட்சை கோட்டைவிட்ட ஷிவம் துபே; ஜடேஜாவுக்கு வந்த கோபம்: வீடியோ

IPL Cricket CSK VS GT Match Jadeja Viral Video : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் தோல்வியை தழுவிய நிலையில், இந்த போட்டியில் சென்னை அணியின் கேப்டன் ஜடேஜா விரக்தியில் செய்த செயல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

15-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 16-ந் தேதி தொடங்கிது. இதில் வழக்கத்திற்கு மாறாக ஜடேஜா தலைமையில் களமிறங்கியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முன்னாள் கேப்டன் தோனி ஒரு வீரராக அணியில் இடம்பெற்றுள்ளார். இந்நிலையில், தனது தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா அணியிடம் தோல்வியை தழுவிய சென்னை அணி, அடுத்து லக்னோ, பஞ்சாப், ஐதராபாத் உள்ளிட்ட அணிகளுக்கு எதிரான தொடர் தோல்வியை சந்தித்து.

ஐபிஎல் வரலாற்றில் சென்னை அணி இந்த தொடரில் தொடர்ச்சியாக 4 போட்டிகளில் தோல்வியடைந்து மோசமான சாதனை படைத்தது. தொடர்ந்து கடந்த 12-ந் தேதி நடைபெற்ற பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி தனது முதல் வெற்றியை பெற்றது. இதனைத் தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது 6-வது லீக் ஆட்டத்தில் நேற்று அறிமுக அணியான குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதியது.

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்தது. ஒரு கட்டத்தில் 200 ரன்களை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் சென்னை அணியை குஜராத் கட்டுப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து 170 ரன்கள் வெற்றி இக்காக கொண்டு களமிறங்கிய குஜராத் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது

Advertisment
Advertisements

இதனால் அந்த அணி 12.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 87 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதனால் சென்னை அணி வெற்றி பெற்றுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 6-வது விக்கெட்டுக்கு இணைந்த கேப்டன் ரஷித் கான் டேவிட மில்லர் ஜோடி சென்னை அணியின் பந்துவீச்சை சிதறடித்து கடைசி ஓவரின் 5-வது பந்தில் வெற்றி இலக்கை எட்டியது.

இதில் குஜராத் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த டேவிட் மில்லர், 51 பந்துகளில் 8 பவுண்டரி 6 சிக்ருடன், 94 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் இருந்தார். முன்னதாக இந்த போட்டியில், பிராவோ வீசிய 17-வது ஓவரின் 3-வது பந்தை எதிர்கொண்ட டேவிட் மில்லர் லாங்ஆன் திசையில் தூக்கி அடித்தார். இந்த பந்து கேட்ச் ஆக வாய்புள்ளதாக கருத்தப்பட்ட போது தயக்கத்துடன் ஓடி வந்த ஷிவம் டூபே ஒன் பவுன்சில் பந்தை பிடித்து எறிந்தார்.

ஆனால் டூபே உறுதியாக ஓடி இருந்தால் அந்த கேட்சை பிடித்திருக்க அதிக வாய்ப்பு இருந்தது. ஆனால் அவர் தயக்கம் காட்டியதால் கேட்ச் மிஸ் ஆகி சென்னை அணியின் வெற்றியும் மிஸ் ஆகிவிட்டது. கேட்ச் நழுவிப்போன விரக்தியில் பிராவோ தலையில் வைத்துக்கொண்டார். மறுபுறம் ஜடேஜா விரக்தியில் தனது தொப்பியை கழற்றி வீசி எறிய முற்பட்டார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட டேவிட் மில்லர் இறுதிவரை களத்தில் இருந்து ஆட்டத்தை முடித்து வைத்தார். தற்போது இந்த தொடரில் சென்னை அணி தனது 5-வது தோல்வியை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Ipl Cricket Ipl 2022 Csk

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: