scorecardresearch

CSK vs LSG: சி.எஸ்.கே vs லக்னோ… ஆன்லைனில் லைவ் பார்ப்பது எப்படி?

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி இந்திய நேரப்படி இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்குகிறது.

CSK vs LSG IPL 2023 Live Streaming
IPL 2023 CSK vs LSG Live Streaming: Chennai Super Kings captain MS Dhoni with ground staff inspects the pitch during the practice session. (PTI)

CSK vs LSG IPL 2023 Live Streaming TAMIL NEWS: 16-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் இந்திய மண்ணில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில், இன்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் அரங்கேறும் 6-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.

தொடக்க ஆட்டத்தில் குஜராத் அணிக்கு எதிராக தோல்வியடைந்த பிறகு, சென்னை சூப்பர் கிங்ஸ் தனது முதல் போட்டியை சொந்த மைதானத்தில் ஆடுகிறது. கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்குப் பிறகு சேப்பாக்கத்திற்கு அணி திரும்பும் நிலையில், ரசிகர்கள் உற்சாகமான வரவேற்பை அளிக்க காத்திருக்கிறார்கள். முந்தைய ஆட்டத்தில் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் தவிர மற்ற வீரர்கள் பேட்டிங்கில் சொதப்பினர். இன்றைய ஆட்டத்தில் அவர்கள் ஃபாமிற்கு திரும்புவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தற்போது, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் இடையேயான ஆட்டம் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவைகளை இங்கு பார்க்கலாம்.

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் இடையேயான ஐபிஎல் 2023 போட்டி எப்போது நடைபெறும்?

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2023 போட்டி ஏப்ரல் 3 ஆம் தேதி திங்கட்கிழமை நடைபெறுகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் இடையேயான ஐபிஎல் 2023 போட்டி எங்கு நடைபெறும்?

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2023 போட்டி சென்னை எம்.ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் இடையேயான ஐபிஎல் 2023 போட்டி எந்த நேரத்தில் தொடங்கும்?

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2023 போட்டி திங்கள்கிழமை இரவு 7:30 மணிக்கு இந்திய நேரப்படி தொடங்குகிறது. இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு டாஸ் போடப்படும்.

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஐபிஎல் 2023 போட்டியை எந்த டிவி சேனல்கள் ஒளிபரப்பும்?

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் போட்டி இந்தியாவில் உள்ள ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் ஒளிபரப்பப்படும்.

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஐபிஎல் 2023 போட்டியை நேரடியாக ஒளிபரப்புவது எப்படி?

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் போட்டி இந்தியாவில் ஜியோசினிமா ஆப் மற்றும் இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Ipl news download Indian Express Tamil App.

Web Title: Csk vs lsg ipl 2023 live streaming when and where to watch chennai super kings vs lucknow super giants in tamil