IPL 2023 CSK vs MI Live Score Updates in Tamil: 10 அணிகள் பங்கேற்று விளையாடி வரும் 16-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் இந்திய மண்ணில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று (சனிக்கிழமை) இரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் அரங்கேறிய 12-வது லீக்கில் முன்னாள் சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி, மும்பை அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க முதலே சென்னை அணி அதிரடியாக பந்துவீசியது. இதனால் திணறல் ஆட்டத்தை வெளிப்படுத்திய மும்பை அணியில் அதிகபட்சமாக இஷான் கிஷன் 32 ரன்கள் எடுத்தார். இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு மும்பை அணி 157 ரன்கள் எடுத்தது. இதனால், சென்னை அணிக்கு 158 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
சென்னை அணி தரப்பில் ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், துஷார் தேஷ்பாண்டே மற்றும் மிட்செல் சான்ட்னர் தலா 2 விக்கெட்டுகளையும், சிசண்டா மாகலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
தொடர்ந்து 158 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய சென்னை அணியில் டெவோன் கான்வே - ருதுராஜ் கெய்க்வாட் ஜோடி தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் தொடக்க வீரர் கான்வே பூஜ்ஜிய ரன்னில் ஆட்டமிழந்து இருந்தாலும், அடுத்து வந்த ரகானே தனது அதிரடி ஆட்டத்தால் அனைவரது புருவத்தையும் உயர செய்தார்.
27 பந்துகளில் 7 பவுண்டரிகள் 3 சிக்ஸர்களை பறக்கவிட்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 61 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அவருக்குப் பின் வந்த ஷிவம் துபே (28 ரன்கள்) மற்றும் அம்பதி ராயுடு (20 ரன்கள்) அவர்களுடன் களத்தில் இருந்த ருதுராஜ் கெய்க்வாட் (40 ரன்கள்) ஆணியின் வெற்றியை உறுதி செய்தனர். இறுதியில் மும்பை அணியை சென்னை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றது. மும்பை அணி அதன் சொந்த மைதானத்திலே வீழ்த்தப்பட்டு இருப்பது இங்கு குறிபிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
- 23:01 (IST) 08 Apr 2023சென்னை வெற்றி
மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் 158 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வந்த சென்னை அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.
- 22:17 (IST) 08 Apr 2023ரகானே அரைசதம்; பேட்டிங்கில் மிரட்டும் சென்னை
மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் 158 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை சென்னை அணி துரத்தி வருகிறது. சென்னையின் வெற்றிக்கு 60 பந்துகளில் 61 ரன்கள் தேவை. 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 97 ரன்கள் சென்னை அணி எடுத்துள்ளது.
- 22:16 (IST) 08 Apr 2023ரகானே அரைசதம்; பேட்டிங்கில் மிரட்டும் சென்னை
மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் 158 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை சென்னை அணி துரத்தி வருகிறது. இதில், சென்னை அணியில் களமாடிய அஜிங்க்யா ரஹானே 27 பந்துகளில் 7 பவுண்டரிகள் 3 சிக்ஸர்களை பறக்கவிட்டு, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 61 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
- 21:18 (IST) 08 Apr 2023சுழலில் மிரட்டி எடுத்த ஜடேஜா... மும்பையை திணறடித்த சென்னைக்கு 158 ரன்கள் இலக்கு!
சென்னை அணிக்கு எதிரான மும்பை அணி பேட்டிங் செய்தது. தொடக்க முதலே சென்னை அணி அதிரடியாக பந்துவீசியது. இதனால் திணறல் ஆட்டத்தை வெளிப்படுத்திய மும்பை அணியில் அதிகபட்சமாக இஷான் கிஷன் 32 ரன்கள் எடுத்தார். இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு மும்பை அணி 157 ரன்கள் எடுத்தது. இதனால், சென்னை அணிக்கு 158 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்னை அணி தரப்பில் ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், துஷார் தேஷ்பாண்டே மற்றும் மிட்செல் சான்ட்னர் தலா 2 விக்கெட்டுகளையும், சிசண்டா மாகலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
- 20:47 (IST) 08 Apr 202315 ஓவர்கள் முடிவில் மும்பை!
சென்னை அணிக்கு எதிரான மும்பை அணி பேட்டிங் செய்து வருகிறது. சென்னை அணி அதிரடியாக பந்துவீசி வருகிறது. மும்பை அணி 15 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 109 ரன்கள் எடுத்துள்ளது.
- 20:38 (IST) 08 Apr 202313 ஓவர்கள் முடிவில் மும்பை!
சென்னை அணிக்கு எதிரான மும்பை அணி பேட்டிங் செய்து வருகிறது. சென்னை அணி அதிரடியாக பந்துவீசி வருகிறது. மும்பை அணி 13 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 102 ரன்கள் எடுத்துள்ளது.
- 20:32 (IST) 08 Apr 202312 ஓவர்கள் முடிவில் மும்பை!
சென்னை அணிக்கு எதிரான மும்பை அணி பேட்டிங் செய்து வருகிறது. சென்னை அணி அதிரடியாக பந்துவீசி வருகிறது. மும்பை அணி 12 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 93 ரன்கள் எடுத்துள்ளது.
- 20:05 (IST) 08 Apr 2023கேப்டன் ரோகித் காலி... மிரட்டும் துஷார் தேஷ்பாண்டே!
சென்னை அணிக்கு எதிரான மும்பை அணி பேட்டிங் செய்து வருகிறது. கேப்டன் ரோகித் 21 ரன்கள் எடுத்த நிலையில் துஷார் தேஷ்பாண்டே பந்தில் போல்ட் அவுட் ஆகி வெளியேறினார்.
- 19:25 (IST) 08 Apr 2023இரு அணிகளின் ஆடும் லெவன்
மும்பை இந்தியன்ஸ்:
ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), கேமரூன் கிரீன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, டிம் டேவிட், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அர்ஷத் கான், ஹிருத்திக் ஷோக்கீன், பியூஷ் சாவ்லா, ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப்
- 19:24 (IST) 08 Apr 2023இரு அணிகளின் ஆடும் லெவன்
சென்னை சூப்பர் கிங்ஸ்:
டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அஜிங்க்யா ரஹானே, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி(கேப்டன் / விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, டுவைன் பிரிட்டோரியஸ், தீபக் சாஹர், மிட்செல் சான்ட்னர், சிசண்டா மாகலா, துஷார் தேஷ்பாண்டே
- 19:13 (IST) 08 Apr 2023டாஸ் வென்ற சென்னை பவுலிங்; மும்பை முதலில் பேட்டிங்
இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி, மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
- 18:58 (IST) 08 Apr 2023இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்!
மும்பை:
ரோஹித் சர்மா(கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், கேமரூன் கிரீன், திலக் வர்மா, டிம் டேவிட், நெஹால் வதேரா, ஹிருத்திக் ஷோக்கீன், பியூஷ் சாவ்லா, ஜோப்ரா ஆர்ச்சர், அர்ஷத் கான்
சென்னை:
டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், மொயின் அலி, பென் ஸ்டோக்ஸ், அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி(w/c), ஷிவம் துபே, மிட்செல் சான்ட்னர், தீபக் சாஹர், ஆர்எஸ் ஹங்கர்கேகர்
- 18:34 (IST) 08 Apr 2023நேருக்கு நேர்
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை-மும்பை மோதல் என்றாலே எப்போதும் அனல் பறக்கும். ரசிகர்களின் ஆர்வமும் எகிறும். இந்த ஆட்டமும் அதற்கு விதிவிலக்கல்ல. இவ்விரு அணிகளும் இதுவரை 34 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 20-ல் மும்பையும், 14-ல் சென்னையும் வெற்றி கண்டன. ஐ.பி.எல். வரலாற்றில் சென்னைஅணி மும்பைக்கு எதிராகத் தான் அதிகமாக தோற்றிருப்பது கவனிக்கத்தக்கது.
இதே போல் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் மும்பைக்கு எதிராக 10 ஆட்டங்களில் ஆடியுள்ள சென்னை அணி அதில் 3-ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அவர்களின் ஆதிக்கத்துக்கு சென்னை அணி முட்டுக்கட்டை போடுமா? என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும். ஆடுகளத்தை பொறுத்தவரை தொடக்கத்தில் வேகப்பந்து வீச்சு கொஞ்சம் எடுபடலாம். எப்படி என்றாலும் ரன்வேட்டைக்கு உகந்த வகையிலேயே ஆடுகளம் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
- 18:32 (IST) 08 Apr 2023மும்பை எப்படி?
மும்பை அணி தொடக்க ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூருவிடம் படுதோல்வி கண்டது. அந்த ஆட்டத்தில் 48 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்த மும்பை அணி அதன் பிறகு திலக் வர்மாவின் (84 ரன்) அரைசதத்தால் 170-ஐ தாண்டியது. ஆனாலும் அந்த இலக்கை பெங்களூரு 16.2 ஓவர்களிலேயே எட்டிப்பிடித்தது. இப்போது உள்ளூரில் எழுச்சி பெற வேண்டிய நெருக்கடியுடன் மும்பை களம் இறங்குகிறது. உள்ளூர் சூழல் நிச்சயம் அந்த அணிக்கு அனுகூலமாக இருக்கும்.
- 17:59 (IST) 08 Apr 2023சென்னை அணி எப்படி?
தொடக்க ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத்திடம் தோற்ற சென்னை அணி அடுத்த ஆட்டத்தில் லக்னோவை 12 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்தது. முந்தைய ஆட்டத்தில் சென்னையின் பவுலர்கள் வைடு, நோ-பால்களை தாறுமாறாக வீசியதால் எரிச்சலடைந்த கேப்டன் தோனி கடுமையாக கண்டித்தார். இதனால் இன்றைய ஆட்டத்தில் சென்னை பவுலர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் பந்துவீசுவார்கள் என்று நம்பலாம்.
தென்ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் சிசாண்டா மகாலா இணைந்திருப்பது சென்னையின் பந்து வீச்சுக்கு மேலும் வலு சேர்க்கும். அவர் நியூசிலாந்து சுழற்பந்துவீச்சாளர் மிட்சல் சட்னருக்கு பதில் களமாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
- 17:44 (IST) 08 Apr 2023ஐ.பி.எல்.லில் எல்-கிளாசிகோ?
ஐ.பி.எல். தொடரில் 5 முறை சாம்பியனான மும்பை அணி மற்றும் 4 முறை சாம்பியனான சென்னை அணி மோதும் போட்டியை எல்-கிளாசிகோ என ரசிகர்கள் அழைக்கிறார்கள். சமபலம் கொண்ட இரு அணிகளும் நடப்பு ஐபிஎல் தொடரில் மோதும் முதல் போட்டி என்பதால் ரசிகர்களிடையே ஆர்வம் எகிறியள்ளது.
- 17:43 (IST) 08 Apr 2023எல்-கிளாசிகோ என்றால் என்ன?
கால்பந்து கிளப் தொடரில் பார்சிலோனா - ரியல் மேட்ரிட் அணிகள் இடையேயான போட்டி எல்-கிளாசிகோ என அழைக்கப்படுகிறது. கிளப் ரீதியிலான கால்பந்து தொடரின் இரு பலம் வாய்ந்த அணிகள் மோதும் போட்டி எல்-கிளாசிகோ என அழைக்கப்பட்டு வருகிறது.
- 17:37 (IST) 08 Apr 2023‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ லைவ் பிளாக்கு - க்கு அன்புடன் வரவேற்கிறோம்!
ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் சென்னை – மும்பை அணிகளுக்கு இடையிலான ஆட்டம் குறித்து உடனுக்குடன் தெரிந்துகொள்ள ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ லைவ் பிளாக்குடன் இணைந்திருங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.