Chennai Super Kings (CSK) vs Rajasthan Royals (RR); Chennai weather forecast Tamil News: 16-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று நடக்கும் 17-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. 2 தொடர் வெற்றி பெற்றுள்ள சென்னனை அணி சொந்த மைதானத்தில் அதன் ஆதிக்கத்தை தொடரவே நினைக்கும். அதற்கு சமபலம் பொருந்திய ராஜஸ்தான் முட்டுக்கட்டை போட முயலும். எனவே, இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.
சென்னையில் வானிலை எப்படி?
சென்னை – ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நடக்கும் சென்னை சேப்பாக்கத்தில் மேக மூட்டத்துடன் வெயில் இருக்கும். போட்டிக்கு முன்னதாக வெப்பநிலை 35 முதல் 26 டிகிரி செல்சியஸ் வரை மாறுபடும். மாலை 6:22 மணிக்கு சூரிய அஸ்தமனத்திற்கு முன் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பில்லாமல் பகலில் மேக மூட்டம் குறைவாக இருக்கும்.
மாலையில் போட்டி தொடங்கும் நேரத்தில், மையத்தில் 30 டிகிரி செல்சியஸ் வெப்பமாக இருக்கும். முதல் இன்னிங்ஸின் போது மேக மூட்டம் இல்லாமல் மழை பெய்யும் என்று கணிக்கப்படவில்லை. அதே நேரத்தில், காற்றில் ஈரப்பதம் 74% வரை இருக்கும். தெற்கு-தென்கிழக்கு திசையில் இருந்து மணிக்கு 15 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்றும், காற்று மணிக்கு 28 கிமீ வேகத்தில் வீசும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது இன்னிங்ஸில், வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸாக குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேக மூட்டம் சற்று அதிகரிக்கும். ஆனால் மழை அச்சுறுத்தல் வங்க கடலில் உள்ளது. பனிப் பொழிவு விளையாட்டில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil