Advertisment

DC vs GT Highlights: சாய் சுதர்சன், மில்லர் அபார ஆட்டம்... 2-வது வெற்றியை ருசித்த குஜராத்!

டெல்லி அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் வெற்றியை ருசித்தது.

author-image
WebDesk
New Update
DC vs GT Live Score | IPL 2023 Match | Delhi Capitals vs Gujarat Titans

IPL 2023,DC vs GT Match Highlights in tamil: 16-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் இந்திய மண்ணில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற 7-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.

Advertisment

இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய டெல்லி அணியில், ப்ரித்விஷா டேவிட் வார்னர் இருவரும் இன்னிங்சை தொடங்கியுள்ளனர். இதில் பிரித்விஷா 7 ரன்களில் ஆட்டமிழந்தாலும், மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான வார்னர் 32 பந்துகளில் 37 ரன்கள் குவித்து வெளியேறினார். தொடர்ந்து, மார்ஷ் 4 ரன்களிலும், ரோசோவ் ரன்கணக்கை தொடங்காமலும், சர்ப்ரஸ்கான் 34 பந்துகளில் 30 ரன்களும், அதிரடியாக விளையாடிய போரேல் 11 பந்துகளில் 20 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

அதிரடியில் அசத்திய அக்சர் பட்டேல் 22 பந்துகளில் 2 பவுண்டலரி 3 சிக்சருடன் 36 ரன்கள் குவித்தார். நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் டெல்லி அணி 8 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்துள்ளது. குஜராத் அணி தரப்பில் ஷமி, ரஷித் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், அல்சாரி ஜோசப் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

தொடர்ந்து 163 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணியில், விருத்திமான் சஹா, சுப்மான் கில் இருவரும் தலா 14 ரன்களில் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து களமிறங்கிய சாய் சுதர்சன் நியதான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், மறுமுனையில், ஹர்திக் பாண்டியா 5 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அதன்பிறகு களமிறங்கிய விஜய் சங்கர் சுதர்சனுடன் ஜோடி சேர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 53 ரன்கள் சேர்த்த நிலையில், விஜய் சங்கர் 29 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பிறகு களமிறங்கிய டேவிட் மில்லர் சாய் சுதர்சனுக்கு ஒத்துழைப்பு கொடுத்து விளையாடினார்.

இதனிடையே சிறப்பாக விளையாடி வந்த சாய் சுதர்சன் அரைசதம் கடந்த நிலையில், மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை தொடங்கிய மில்லர் அணிக்கு வெற்றியை தேடி கொடுத்தார். 18.1 ஓவர்களில் குஜராத் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சாய் சுதர்சன் 48 பந்துகளில் 4 பவுண்டரி 2 சிக்சருடன் 62 ரன்களும், மில்லர் 16 பந்துகளில் 2 பவுண்டரி 2 சிக்சருடன் 31 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். தொடர்ந்து 2 போட்டிகளிலும் வெற்றி பெற்ற குஜராத் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. அதே சமயம் டெல்லி அணி தொடர்ந்து 2-வது தோல்வியை சந்தித்துள்ளது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Delhi Sports Cricket Ipl Ipl Cricket Ipl News Gujarat Titans Delhi Capitals
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment