Delhi Capitals (DC) vs Sunrisers Hyderabad (SRH) Highlights : 16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று டெல்லியின் ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெறும் 40-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசஸ் ஐதராபாத் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் வார்னர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
அதன்படி முதலில் களமிறங்கிய சன்ரைசஸ் ஐதராபாத் அணியில் மயங்க் அகர்வால், அபிஷேக் சர்மா தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் மயங்க் அகர்வால் 5 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இஷாந்த் சர்மா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய திரிபாதி 10 ரன்கள் எடுத்த நிலையில், மார்ஷ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த கேப்டன் மார்க்ரம் 8, ஹெரி புரூக் 0, ஆகியோர் அடுத்தடுத்து வீழ்தனர். ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும், அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தார். அரைசதம் கடந்த அவர், 36 பந்துகளில் 12 பவுண்டரி 1 சிக்சருடன் 67 ரன்கள் எடுத்து அக்சர் பட்டேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
6-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய குல்சன் அதிரடியாக விளையாட மறுமுனையில், அப்துல் சமத் 21 பந்துகளில் 28 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார், நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஐதராபாத் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் குவித்தது. குல்சன் 27 பந்துகளில் 2 பவுண்டரி 4 சிக்சருடன் 53 ரன்களுடனும், குசைன் 10 பந்துகளில் 16 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர்.
டெல்லி அணி தரப்பில் மார்ஷ் 4 விக்கெட்டுகளும், அக்சர் இஷாந்த் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து 198 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணிக்கு கேப்டன் டேவிட் வார்னர் ரன் கணக்கை தொடங்காமலே அவுட் ஆகி அதிர்ச்சி தொடக்கம் கொடுத்தார். அதன்பிறகு களமிறங்கிய மீச்செல் மார்ஷ் தொடக்க வீரர் பிலிப் சால்ட்டுன் ஜோடி சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் டெல்லி அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது.
இந்த ஜோடி 11 ஓவர்களில் 112 ரன்கள் சேர்த்த நிலையில், அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்திருந்த பிலிப் சால்ட் 35 பந்துகளில் 9 பவுண்டரியுடன் 59 ரன்கள் குவித்து மார்கண்ட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய மணிஷ் பாண்டே ஒரு ரன்னிலும், பிரியம் கர்க் 9 பந்துகளில் 12 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்த நிலையில், சர்ப்ரஸ் கான் 10 பந்துகளில் 9 ரன்கள் எடுத்து நடராஜன் பந்துவீச்சில் அட்டமிழந்தார்.
ஒரு பக்கம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய மார்ஷ், 39 பந்துகளில் 1 பவுண்டரி 6 சிக்சருடன் 69 ரன்கள் குவித்து குசின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இறுதிக்கட்டத்தில் வெற்றியை நோக்கி அக்சர் பட்டேல் அதிரடியாக விளையாடினாலும் டெல்லி அணியால் தோல்வியை தவிர்க்க முடியாவில்லை. 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 6 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன் மூலம் ஐதராபாத் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அக்சர் பட்டேல் 14 பந்துகளில் 1 பவுண்டரி 2 சிக்சருடன்’ 29 ரன்களும், ரிபல் பட்டேல் 8 பந்துகளில் 11 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். ஐதராபாத் அணி தரப்பில், மார்க்கண்டி 2 விக்கெட்டுகளும், புவனேஷ்வர், குசைன், நடராஜன், அபிஷேக் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் கடந்த போட்டியின் தோல்விக்கு டெல்லி அணி பழி தீர்த்துள்ளது
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“