MS Dhoni Tamil News: 15வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்திய மண்ணில் அரங்கேறி வருகிறது. இதன் நேற்றைய 59வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனால் சென்னை அணி பேட்டிங் செய்து விளையாடியது.
ஆட்டத்தின் தொடக்கம் முதலே விக்கெட் சரிவை சந்தித்து வந்த சென்னை அணி 97 ரன்கள் எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து சுருண்டது. 98 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய மும்பை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. இந்தத் தோல்வியால் சென்னை அணி பிளேஆஃப் சுற்றுக்கு நுழையும் வாய்ப்பை இழந்துள்ளது.
இந்த ஆட்டத்திற்கு பிந்தைய நேர்காணலில் பேசிய கேப்டன் தோனி, “… எங்களிடம் சில நேர்மறையான அம்சங்கள் உள்ளன. அவை அடுத்த சீசனில் எடுக்கப்படும். ஆனால் முக்கியமானது என்னவென்றால், எந்த இடைவெளிகள் இருந்தாலும், கசிவுகள் ஏற்படாதவாறு அந்த இடைவெளிகளை நிரப்ப முயற்சிக்க வேண்டும்.
வேகப்பந்து வீச்சாளர்கள் முகேஷ் சௌத்ரி மற்றும் சிமர்ஜீத் சிங் ஆகிய இருவரும் நன்றாக பந்துவீசுவது பெரிய பாசிட்டிவ். அடுத்த சீசனில் இன்னும் இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் வருவார்கள் என்பதை மறந்துவிட வேண்டாம். ஐபிஎல்லில் அவர்களுக்கு என்ன இருக்கிறது என்பதை தயார் செய்ய அவர்களுக்கு போதுமான நேரத்தை வழங்க விரும்புகிறோம்.”என்று கூறினார்.
If you are one of the young Indian speedsters playing the #TATAIPL, this will encourage you even more. ☺️ ☺️
— IndianPremierLeague (@IPL) May 12, 2022
Hear what the legendary MS Dhoni said 👇 #CSKvMI pic.twitter.com/aWgvsQZq4o
முன்னதாக கடந்த ஆண்டு நடந்த சென்னை அணியின் பாராட்டு நிகழ்ச்சியின் போது பேசிய கேப்டன் தோனி தனது கடைசி டி20 ஆட்டம் சென்னையில் இருக்கும் என்று குறிப்பிட்டிருந்தார். “எனது கிரிக்கெட்டை நான் எப்போதும் திட்டமிட்டுள்ளேன். இந்திய அணிக்காக நான் விளையாடிய கடைசி ஒருநாள் போட்டி ராஞ்சியில்தான். இதேபோல் என்னுடைய கடைசி டி20 சென்னையில் நடக்கும் என்று நம்புகிறேன். அது அடுத்த வருடமா அல்லது ஐந்து வருடத்தில் இருக்குமா என்பது எனக்குத் தெரியாது, ”என்று அவர் கூறியிருந்தார்.
ஐபிஎல் தொடரில் நான்கு முறை சாம்பியனான சென்னை அணி நடப்பு தொடரில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. இந்த சீசன் தொடங்குவதற்கு முன்னர், மெகா ஏலத்தில் சுமார் 14கோடிக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட தீபக் சாஹர் காயத்தில் இருந்து மீளாத காரணத்தால் தொடரில் இருந்து வெளியேறினார். தொடரின்போது ஆடம் மில்னே வெளியேறினார்.
நடப்பு தொடரில் புதிய கேப்டனாக பொறுப்பேற்றுக்கொண்ட ஜடேஜாவுக்கு சிறப்பானதாக அமையவில்லை. தனது பதவியில் இருந்து விலகிய அவர் காயம் காரணமாக தற்போது மீதமுள்ள போட்டியில் பங்கேற்காமல் தொடரில் இருந்து முழுவதுமாக வெளியேறியுள்ளார். இறுதியில் தற்போது தோனி மீண்டும் தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டியதாயிற்று.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் உடனான சமீபத்திய உரையாடலின் போது பேசிய ஒரு சிஎஸ்கே அதிகாரி, தோனி அடுத்த ஆண்டும் தங்கள் கேப்டனாக இருக்க விரும்புவதாக தெரிவித்து இருந்தார். ஆனால் தோனி தனக்கென ஒரு திட்டத்தை கொண்டிருப்பவர். இந்த நேரத்தில், அந்த அதிகாரி கூறியது போல், மோசமான 2021 சீசனுக்கு முன்பு அணி கடந்த ஆண்டு செய்ததைப் போல, அடுத்த சீசனில் வலுவாக திரும்பி வருவதைப் பற்றியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

தோனி ஒரு பேட்ஸ்மேனாக, கேம்களை இன்னும் முடிக்கும் கொடுத்துக்கும் ஒரு ஃபினிஷராக செயல்படுகிறார். அதை இந்த சீசனில் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெளிப்படுத்தி இருந்தார். இதேபோல் அணி விக்கெட்களை பறிகொடுத்து ரன் சேர்க்க நேற்றை ஆட்டத்தில் போல் தடுமாறிய போது அவர் நங்கூரமாய் செயல்பட்டு அணி கவுரமான ஸ்கோரை எட்ட உதவுகிறார். மேலும், 40 வயது ஆனா போதும் உடலை கட்டுக்கோப்பாக வைத்து சிறப்பாக விளையாடி வரும் கேப்டன் தோனியை அடுத்த சீசனிலும் யார் தான் விளையாட எதிர்பார்க்காமல் இருப்பார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil