Advertisment

'இது ஒரு சிறப்பான கம் பேக்' - இந்திய அணியில் மீண்டும் தினேஷ் கார்த்திக்!

Dinesh Karthik on his selection for India’s upcoming home T20I series against South Africa Tamil News: தினேஷ் கார்த்திக், ஜூன் 9ஆம் தேதி தொடங்கும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார்.

author-image
WebDesk
May 23, 2022 14:28 IST
Dinesh Karthik says it’s most special comeback, on India recall for SA T20Is

Dinesh Karthik

Dinesh Karthik Tamil News: இந்திய கிரிக்கெட் அணியில் பல ஆண்டுகளாக விளையாடி வருபவர் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக். கடந்த 2004-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமான இவர், இதுவரை 26 டெஸ்ட் போட்டிகள், 94 ஒருநாள் போட்டிகள், 32 டி20 மற்றும் 227 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்திய அணியில் நிலையான இடம் கிடைக்கமால் தவித்து வந்த அவர் கடைசியாக 2019ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் விளையாடினார்.

Advertisment
publive-image

இதற்கிடையில், ஐபிஎல் தொடருக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 2018-20 வரையான சீசன்களில் கேப்டனாக வழிநடத்திய தினேஷ் கார்த்திக், பணிச்சுமை காரணமாக கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார். கடந்த 2021ம் ஆண்டு சீசனில் அவர் ஒரு சாதாரண வீரராக களமாடிய இருந்தார். அந்த சீசனில் கொல்கத்தா அணி இறுதிப்போட்டி வரை முன்னேறி இருந்தது. அந்த அணிக்கு நல்ல பங்களிப்பை அளித்த தினேஷ் கார்த்திக்கை ஐ.பி.எல் 2022 ஆம் ஆண்டுக்கான மெகா ஏலத்தில் கொல்கத்தா அணி தக்கவைக்க தவறிய நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 5.5 கோடிக்கு வாங்கியது.

publive-image

இதன்நடுவே தினேஷ் கார்த்திக், 2021ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் ஸ்கை ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில் இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு வர்ணனையாளராகவும் பணிபுரிந்திருந்தார். தற்போது நடப்பு ஐ.பி.எல். தொடரில் பெங்களூரு அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்ட்மேனாக களமாடி வரும் அவர், அந்த அணிக்காக தனது சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறார். சில போட்டிகளில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்த அவர் ஃபினிஷராகவும் செயல்பட்டு இருந்தார். அவரின் தரமான ஆட்டம் அனைவருக்கும் கவனம் ஈர்த்தது. அவர் குறித்து பேசிய வர்ணனையாளரர்களான முன்னாள் வீரர்கள் அவரை மீண்டும் இந்திய அணியில் சேர்க்க வேண்டும் வலியுறுத்தினர்.

இந்த நிலையில், தினேஷ் கார்த்திக் ஜூன் 9ஆம் தேதி தொடங்கும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். இதன்மூலம் அவர் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணியில் இணைந்துள்ளார். இத்தொடருக்கான இந்திய அணியை நேற்று பிசிசிஐ அறிவித்த நிலையில், அதில் அவரது பெயர் இடம்பிடித்தது. 18 பேர் கொண்ட இந்திய அணிக்கு கே.எல்.ராகுல் கேப்டனாகவும், ரிஷப் பந்த் துணை கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், குல்தீப் யாதவ் மற்றும் ஹர்திக் பண்டியா ஆகியோருக்கும் இந்திய அணியில் மீண்டும் இடம் கிடைத்துள்ளது. இளம் வீரர்கள் உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங் ஆகியோரும் இந்த அணியில் இணைத்துள்ளனர். கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தினேஷ் கார்த்திக் இந்திய அணிக்கு மீண்டும் தேர்வானது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் "உங்களை நீங்கள் நம்பினால், எல்லாமும் சரியாக நடக்கும். உங்கள் அனைவரது ஆதரவு, நம்பிக்கைக்கு மிக்க நன்றி. கடின உழைப்பு தொடர்கிறது…" என்று பதிவிட்டுள்ளார். தற்போது அவருக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் என அனைவரும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

இதனைத்தொடர்ந்து பெங்களூரு அணி அதன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள வீடியோவில் தினேஷ் கார்த்திக், "மிகவும் மகிழ்ச்சி, மிக, மிகவும் திருப்திகரமாக இருக்கிறது… இது என்னுடைய மிகவும் சிறப்பான கம்பேக் என்று சொல்ல வேண்டும், ஏனென்றால், முன்பு நிறைய பேர் என்னைக் கைவிட்டுவிட்டு இருந்தனர்.

எனக்கு திரும்பி வந்து நான் செய்ததைச் செய்ய, எனது பயிற்சியாளர் (அபிஷேக்) நாயருடன் நான் செய்த விதம், ஏலத்திற்கு முன் நடந்த விஷயங்கள் மற்றும் நான் அதை எவ்வாறு பயிற்சி செய்தேன். மேலும் பெங்களூரு அணியின் தலைமை பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் மற்றும் கிரிக்கெட் செயல்பாடுகளின் இயக்குனர் மைக் ஹெஸ்சன் ஆகியோருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன். அவர்கள் எனக்கு பல வழிகளில் உதவினர். இதேபோல் அணியில் எனக்கு அந்த வாய்ப்பை அளித்து, என் மீது நம்பிக்கை வைத்தனர்.

ஆர்சிபி அணிக்காக என்னால் முடிந்ததைச் செய்ய முயற்சிக்கிறேன். மொத்தத்தில், மிகவும் மகிழ்ச்சியான உணர்வு… ஒட்டுமொத்தமாக நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன்.

தேர்வாளர்களான ரோஹித் (சர்மா) மற்றும் (ராகுல்) டிராவிட் ஆகியோருக்கும் நன்றி கடன்பட்டுளேன். ஏனென்றால் இந்த நாட்களில் பல இளம் வீரர்கள் இந்திய அணிக்கான தேர்வில் இருக்கிறார்கள். ஆனால், என்னை அணியில் தேர்வு செய்தமைக்கு மிகவும் தாழ்மையான உணர்கிறேன்.

உலகக் கோப்பைக்கான பயணம் இன்னும் இருக்கிறது என்பதை நான் அறிவேன், ஆனால் விஷயங்களின் திட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பது மற்றும் எனது திறமைகளை வெளிப்படுத்த எனக்கு வாய்ப்பளித்தது, நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.

நான் சிறிது காலம் ஒரு வர்ணனையாளராக செயல்பட்டேன். மேலும் இந்திய அணிக்கு மீண்டும் வர முயற்சிப்பதில் எனக்கு ஆர்வம் இல்லை என்பது போல் தோன்றியது, ஆனால் என்னைப் பொறுத்தவரை, இந்திய அணியில் விளையாடுவதே முன்னுரிமை என்று நான் எப்போதும் கூறுவேன். . எனக்கு நேரம் இருந்ததால், நான் வர்ணனையாளராக பணிபுரிந்தேன்" என்று தெரிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Dinesh Karthik #Cricket #Sports #Ipl 2022 #Ipl News #Ipl Cricket #Ipl
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment