AI-generated images of Indian cricketers as toddlers Tamil News: செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் (Artificial Intelligence – AI) உலகெங்கிலும் ஒரு அற்புதமான நிகழ்வாக உருவெடுத்துள்ளது. இந்த தொழில்நுட்பத்தின் வருகை பல நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியும், அனைத்து துறைகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியும் வருகிறது.
ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்சின் மேம்பட்ட கிராஃபிக் செயலாக்கங்களுடன், படங்கள் மற்றும் முகங்களை எவ்வாறு கணிப்பது என்பது மிகவும் கவர்ச்சிகரமானதாக உள்ளது. சமீபத்தில், கவுரவ் அகர்வால் என்ற ட்விட்டர் பயனர் இந்திய கிரிக்கெட் வீரர்களின் குழந்தை பருவ புகைப்படங்களை உருவாக்கி இருந்தார்.
அவற்றில் தற்போதைய இந்திய கேப்டன் ரோகித் சர்மா, முன்னாள் இந்திய கேப்டன்கள் எம்எஸ் தோனி மற்றும் விராட் கோலி ஆகியோரின் புகைப்படங்களும் இடம் பிடித்தது. கிரிக்கெட் ரசிர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வரும் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
ஷ்ரேயாஸ் ஐயர்
மிகவும் பிரமிக்க வைக்கும் ஷ்ரேயாஸ் ஐயரின் படம்.

சஞ்சு சாம்சன்
ஐ.பி.எல் தொடருக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வழிநடத்தி வரும் இந்திய வீரரான சஞ்சு சாம்சன் புகைப்படம் மிகவும் வித்தியாசமாக உள்ளது. அவரது காதில் வளையம், இந்திய அணியில் தொடர்ந்து இடம் பிடிக்க வேண்டும் என ஏங்கும் அவரது கண்கள் பார்ப்போரை பிரமிக்க வைக்கிறது.

ஜஸ்பிரித் பும்ரா</strong>
இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தனது ஏ.ஐ தொழில்நுட்ப படத்தில் அச்சு அசல் குழந்தை போல் தோன்றுகிறார். ஆனால், அவரது தலையில் முடி சற்று அதிகமாகவே உள்ளது.

ஸ்மிருதி மந்தனா
இந்திய மகளிர் அணியின் பேட்டிங் நட்சத்திரமான ஸ்மிருதி மந்தனா ஏ.ஐ படத்தில் அழகாக இருக்கிறார். எனினும், எப்போதும் புன்னகையை தவழ விடும் அவரது முகத்திற்கு இன்னும் சற்று புன்னகையைச் சேர்த்திருக்கலாம்.

ரோகித் சர்மா
ஹிட்மேன் ரோகித் சர்மா குண்டாக இருக்கும் பையன் போல் இருக்கிறார். அவரது குழந்தைப் பருவ படம் பார்க்கவே ஈர்ப்பாக உள்ளது.

விராட் கோலி
இரண்டு காதுகளிலும் வளையம், ஸ்டைலான அந்த முடி மற்றும் அந்த அடர்த்தியான கண்கள் என விராட் கோலி தனது படத்தில் அசத்தலாக தோன்றுகிறார்.

எம்.எஸ்.தோனி
முன்னாள் இந்திய கேப்டன் தோனியின் இமேஜ் இங்கு சற்று குறைவாகவே உள்ளது. அவர் ஏதோ துயரத்தில் இருப்பதாக தெரிகிறது. இது அவரது ஆளுமை மற்றும் அமைதியான நடத்தைக்கு எதிராகவும் உள்ளது. மொத்தத்தில், முகம் பொருத்தமானதாகத் தெரிகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil