IPL GT vs MI Score Updates in tamil: 10 அணிகள் பங்கேற்று விளையாடி வரும் 16-வது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், இன்று இரவு 7.30 மணிக்கு குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்கும் 35வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
டாஸ் வென்ற மும்பை பவுலிங்; குஜராத் முதலில் பேட்டிங்
இந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி, குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்யும்.
இரு அணிகளின் பிளேயிங் லெவன்:
மும்பை இந்தியன்ஸ்:
ரோகித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), கேமரூன் கிரீன், சூர்யகுமார் யாதவ், டிம் டேவிட், நேஹால் வதேரா, குமார் கார்த்திகேயா, அர்ஜுன் டெண்டுல்கர், ரிலே மெரிடித், பியூஷ் சாவ்லா, ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப்.
குஜராத் டைட்டன்ஸ்:
விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), ஷுப்மான் கில், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), விஜய் சங்கர், டேவிட் மில்லர், அபினவ் மனோகர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், முகமது ஷமி, நூர் அகமது, மோகித் சர்மா.
குஜராத் பேட்டிங்
குஜராத் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக சஹா மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர். சஹா 4 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த ஹர்திக் பாண்டியா 13 ரன்களில் அவுட் ஆனார். இதனையடுத்து விஜய் சங்கர் களமிறங்கினர். இதற்கிடையில் மறுமுனையில் ஆடிய கில் சிறப்பாக ஆடி ரன் சேர்த்தார். 1 சிக்சர் மற்றும் 7 பவுண்டரிகள் விளாசிய கில் 56 ரன்களில் அவுட் ஆனார். அடுத்ததாக மில்லர் களமிறங்கி அதிரடியாக ஆடினார். இதற்கிடையில் விஜய் சங்கர் 19 ரன்களிலும் அவுட் ஆனார். அப்போது குஜராத் அணி 4 விக்கெட் இழப்புக்கு 101 ரன்கள் எடுத்திருந்தது.
அடுத்ததாக மில்லருடன் அபினவ் மனோகர் ஜோடி சேர்ந்தார். இருவரும் சிக்சரும் பவுண்டரிகளுமாக விளாசி ரன் குவித்தனர். அபினவ் மனோகர் 21 பந்தில் 42 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதில் 3 சிக்சர் மற்றும் 3 பவுண்டரிகள் அடங்கும். அடுத்து வந்த ராகுல் திவேதியா 3 சிக்சர்கள் விளாசினார். 1 பந்து மீதம் இருந்த நிலையில் மில்லர் அவுட் ஆனார். 22 பந்துகளில் 46 ரன்கள் சேர்த்த மில்லர், 4 சிக்சர்கள் மற்றும் 2 பவுண்டரிகள் விளாசினார். அடுத்து களமிறங்கிய ரஷித் கான் 2 ரன்கள் எடுக்க, குஜராத் அணியின் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
ராகுல் திவேதியா 20 ரன்களுடன் களத்தில் இருந்தார். குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் எடுத்தது. மும்பை தரப்பில் சாவ்லா 2 விக்கெட்களையும், அர்ஜூன், பெகண்ட்ராஃப், மெரிடித், குமார் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
மும்பை பேட்டிங்
மும்பை அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் மற்றும் இஷான் கிஷன் களமிறங்கினர். ரோகித் 2 ரன்களில் வெளியேறினார். அடுத்து களமிறங்கிய கிரீன் அதிரடியாக ஆடினார். இதற்கிடையில் 13 ரன்களில் இஷான் கிஷன் அவுட் ஆனார். அடுத்து வந்த திலக் வர்மா 2 ரன்களில் வெளியேறினார். அடுத்ததாக கிரீனுடன் சூர்யகுமார் ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பாக விளையாடி ரன் சேர்த்தனர். இந்தநிலையில் கிரீன் 33 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த டிக் டேவிட் டக் அவுட் ஆகி வெளியேறினார்.
இதனால் மும்பை அணி 10.4 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 59 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறியது. அடுத்ததாக வதேரா களமிறங்கி சிறப்பாக விளையாடினார். அணியின் எண்ணிக்கை 90 ஆக இருந்தப்போது சூர்யகுமார் 23 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த சாவ்லா 18 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். அடுத்ததாக அர்ஜூன் களமிறங்கிய சிறிது நேரத்திலே, 3 சிக்சர்கள் மற்றும் 3 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் சேர்த்த வதேரா அவுட் ஆனார். அடுத்தாக பெகண்ட்ராப் களமிறங்கினார். இந்தநிலையில் அர்ஜூன் 13 ரன்களில் அவுட் ஆனார். அடுத்ததாக மெரிடித் களமிறங்கிய நிலையில் மும்பை அணியின் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 55 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அபார வெற்றி பெற்றுள்ளது. குஜராத் அணியில் அகமது 3 விக்கெட்களையும், ரஷித் கான் மற்றும் மோகித் தலா 2 விக்கெட்களையும், ஹர்திக் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இந்த வெற்றி மூலம் குஜராத் அணி புள்ளி பட்டியலில் 2 ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.