Advertisment

GT vs LSG: விருத்திமான் சஹா, சுப்மன் கில் அதிரடி... லக்னோவை 56 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது குஜராத்!

GT vs LSG match Score: ஐ.பி.எல் 16-வது சீசனில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே ஆமதாபாத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் குஜராத் அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

author-image
WebDesk
New Update
GT vs LSG live, GT vs LSG live score, GT vs LSG live score today, GT vs LSG live match, GT vs LSG live scorecard, IPL 2023, IPL, IPL live score, IPL 2023 live, IPL score live, GT vs LSG ipl 2023 live updates, ஐபிஎல் 2023, குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், குஜராத் vs லக்னோ, குஜராத் டைட்டன்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் லைவ் ஸ்கோர் கார்ட், IPL 2023 GT vs LSG live score, IPL match today, IPL match live score 2023, IPL match live score today, GT vs LSG scorecard, GT vs LSG IPL match live, Gujarat Titans vs Lucknow Super Giants, Gujarat Titans vs Lucknow Super Giants live, Gujarat Titans vs Lucknow Super Giants live cricket score, Gujarat Titans, Lucknow Super Giants, GT IPL 2023 team, LSG IPL 2023 team, GT vs LSG IPL match result, IPL 2023 news, IPL 2023 match, indian premier league, Titans vs Super Giants, Gujarat vs Lucknow

Gujarat Titans vs Lucknow Super Giants live score IPL 2023

GT vs LSG scorecard updates: ஐ.பி.எல் 16-வது சீசனில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே ஆமதாபாத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் குஜராத் அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Advertisment

குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள்:

ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), விருத்திமான் சஹா (விக்கெட் கீப்பர்), சுப்மன் கில், டேவிட் மில்லர், அபினவ் மனோகர், சாய் சுதர்சன், மேத்யூ வேட், ரஷித் கான், ராகுல் டெவாட்டியா, விஜய் சங்கர், முகமது ஷமி, அல்சாரி ஜோசப், யாஷ் தயாள், பிரதீப் சங்வான், தர்ஷன் நல்கண்டே, ஜெயந்த் யாத் , ஆர். சாய் கிஷோர், நூர் அகமது, தசுன் ஷனகா, ஒடியன் ஸ்மித், கே.எஸ்.பாரத், சிவம் மாவி, உர்வில் பட்டேல், ஜோசுவா லிட்டில் மற்றும் மோஹித் ஷர்மா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

அதே போல, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள்:

க்ருனால் பாண்ட்யா (கேப்டன்), அவேஷ் கான், ஆயுஷ் படோனி, குயின்டன் டி காக், கிருஷ்ணப்ப கவுதம், அர்பித் குலேரியா, தீபக் ஹூடா, பிரேரக் மன்கட், கருண் நாயர், கைல் மேயர்ஸ், அமித் மிஸ்ரா, மொஹ்சின் கான், நவீன் உல் ஹக், நிக்கோலஸ் பூரன், ரவி பிஷ்னோய், டேனியல் சாம்ஸ், கரண் சர்மா, ரொமாரியோ ஷெப்பர்ட், மார்கஸ் ஸ்டோனிஸ், ஸ்வப்னில் சிங், ஜெய்தேவ் உனத்கட், மனன் வோஹ்ரா, மார்க் வூட், யாஷ் தாக்கூர், யுத்வீர் சிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த ஆட்டத்துக்கான டாஸ் போடப்பட்டது. டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி, குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்தது.

அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சஹாவும், கில்லும் களமிறங்கினர். அவர்கள் எதிரணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். இருவரின் ஆட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் லக்னோ கேப்டன் க்ருணால் பாண்ட்யா திணறினார்.

சகா 43 பந்துகளில் 10 பவுண்டரி, 4 சிக்சருடன் 81 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திவந்த கில், 51 பந்துகளில் 2 பவுண்டரி, 7 சிக்சருடன் 94 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் இருந்தார். கேப்டன் ஹர்திக் 25 ரன்களும், டேவிட் மில்லர் 21 ரன்களும் எடுத்தனர். குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் மட்டும் இழந்து 227 ரன்கள் குவித்தது.

இதைத் தொடர்ந்து, 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் லக்னோ அணி களமிறங்கியது. லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கைல் மேயர்ஸ் மற்றும் குயிண்டன் டி காக் களமிறங்கினர். இருவரும் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அளித்தனர்.

கைல் மேயர்ஸ் 48 ரன்கள் எடுத்து அவுட்டானார். மறுபுறம் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டி காக், தன் பங்குக்கு 41 பந்துகளில் 7 பவுண்டரி, 3 சிக்சருடன் 70 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

லக்னோ அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமைந்தாலும், அதனை பயன்படுத்திக்கொள்ள பின்வரிசை பேட்ஸ்மேன்கள் சொதப்பினர். தீபக் ஹூடா (11), ஸ்டோய்னிஸ் (4), நிக்கோலஸ் பூரன் (3) ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால், போட்டி குஜராத் பக்கம் திரும்பியது. கடைசிகட்டத்தில் குஜராத் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி லக்னோ பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுத்தனர். லக்னோ பேட்ஸ்மேன்கள் எவ்வளவு முயற்சித்தும், அவர்களால், இலக்கு நோக்கி செல்லமுடியவில்லை.

இறுதியில் லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்களே எடுத்தது. கேப்டன் ஹர்திக் பாண்ட்யா அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதன் மூலம், குஜராத் அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் அபாரவெற்றி பெற்றது. குஜராத் டைட்டன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Ipl Cricket
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment