Impact Player Rule In IPL 2023 TAMIL NEWS: புதுமைகளை அறிமுகம் செய்வதற்கு பெயர் போன ஆஸ்திரேலிய பயிற்சியாளரான ட்ரென்ட் உட்ஹில், தற்போது இந்திய மண்ணில் விறுவிறுப்பாக நடந்து வரும் ஐ.பி.எல்-லில் அமல்படுத்தப்பட்டுள்ள 'இம்பாக்ட் பிளேயர்' விதியை உருவாக்கிவர். முன்பு இந்த விதி 'எக்ஸ்-ஃபேக்ட்டர்' என்று அழைக்கப்பட்டது. இதை உட்ஹில் ஆஸ்திரேலியாவில் நடக்கும் பிக் பாஷ் லீக் (BBL) தனது அணியுடன் அறிமுகப்படுத்தினார். ஆனாலும், இந்த விதி சில பல காரணங்களால் கடந்த ஆண்டு இறுதியில் கைவிடப்பட்டது. "நாங்கள் உற்சாகமாக இருந்தபோதிலும், நாங்கள் விரும்பிய அளவுக்கு கிளப்புகள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் பழமைவாதத்துடன் தொடர்புடையது என்று நான் நம்புகிறேன்," என்று உட்ஹில் நமது இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் எழுதி இருந்தார்.
அவ்வகையில், இந்த விதியை இந்திய கிரிக்கெட் எப்படி எதிர்கொள்கிறது? அவர்கள் பழமைவாதிகளா அல்லது பரிசோதனை ரீதியில் இருக்கிறார்களா? என்பது போன்ற ஆதாரங்களை அலசுவோம்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
லக்னோ நேற்று சென்னையுடன் மோதிய ஆட்டம் சுவாரஸ்யமாக இருந்தது. இந்த ஆட்டத்தில் சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது. அப்போது இன்னிங்ஸின் கடைசி ஓவரில் அவேஷ் கானுக்குப் பதிலாக லக்னோ அணியின் இம்பாக்ட் ப்ளேயராக ஆயுஷ் படோனி களம் புகுந்தார். மார்க் வுட் வீசிய அந்த ஓவரில் கேப்டன் தோனி இரண்டு சிக்ஸர்களை அடித்து நொறுக்கி 218 ரன்கள் கொண்ட இலக்கை நிர்ணயிக்க உதவினார். இந்த இலக்கை துரத்திய லக்னோ அணியில் நிக்கோலஸ் பூரன் மற்றும் கே.எஸ்.கௌதம் ஜோடி சில சிக்ஸர்களை அடித்தவுடன், அந்த அணியின் வெற்றிக்கு 26 பந்துகளில் 44 ரன்கள் எனக் குறைந்தது.
டி20 போட்டிகளில் இப்படியான ஒரு ஸ்கோரை எளிதியில் எட்டி விடலாம். ஆனால் இங்குதான் படோனியால் அதை செயல்படுத்த முடியவில்லை. அவர் ஒரு நல்ல புதுமையான பேட்ஸ்மேன். அவருக்கு லேப் ஷாட்கள் மற்றும் சில ஆங்கிள்களை நன்றாகப் பயன்படுத்தி ஆட முடியும். ஆனால், அந்த தருணத்தில் சென்னை சிறப்பான பந்துவீச்சை வீசிக் கொண்டிருந்தது. இதனால், அவர் ரன்களை சேர்க்க தடுமாறினார். அவரால் கனெக்ட் செய்து ஷாட்களை ஆட முடியவில்லை. கடைசியில் அணியின் வெற்றியும் நழுவி போனது. ஆனால், லக்னோ அணியின் தொடக்க வீரர் குயின்டன் டி காக் விரைவில் அணியில் சேர உள்ளதால், அடுத்த கேம்களில் அந்த அணி படோனியை இம்பாக்ட் ப்ளேயராக தேர்வு செய்யுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
நடப்பு சீசனில் இம்பேக்ட் பிளேயர் விதியை மும்முரமாக செயல்படுத்தும் அணியாக உள்ள லக்னோ, அதன் தொடக்க ஆட்டத்தில் ஆயுஷ் படோனி பேட்டிங் முடித்த பிறகு, அவருக்குப் பதிலாக கே கௌதமைக் களமிறக்கினார்கள். ஒரு அணி தனது பேட்டிங்கைப் பயன்படுத்துவதற்கு முன்பு முடிவடையும் வரை காத்திருக்காத ஒரே நிகழ்வு. களம் புகுந்த கௌதம் ஒரு சிக்ஸரை விளாசினார். மேலும், தனது நேர்த்தியான பந்துவீச்சில் 4 ஓவர்களில் 23 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். இது அந்த அணி டெல்லியை 50 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்த உதவியது.
சென்னை சூப்பர் கிங்ஸ்
முதல் ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு, எம்எஸ் தோனி இந்த விதியை கேப்டன்களுக்கு "ஆடம்பரமானது" என்று அழைத்தார். இரண்டு ஆட்டங்களின் முடிவில், நோ-பால் மற்றும் வைடுகள் தொடர்ந்தால், புதிய கேப்டனுக்கு கீழ் விளையாட வேண்டி இருக்கும் என்று அவர் தனது இம்பாக்ட் ப்ளேயரான துஷார் தேஷ்பாண்டேவை எச்சரித்தார்.
தேர்வு தெளிவாகவும் எளிமையாகவும் இருந்தது: அவர்களின் பேட்டிங் இன்னிங்ஸுக்குப் பிறகு அம்பதி ராயுடுவுக்குப் பதிலாக தேஷ்பாண்டே சேர்க்கப்பட்டார் (சென்னை அணியினர் இரண்டு ஆட்டங்களிலும் முதலில் பேட்டிங் செய்தனர்). முதல் ஆட்டத்தில் 3.2 ஓவர்களில் 51 ரன்களை விட்டுக்கொடுத்த தேஷ்பாண்டே, 2வது ஆட்டத்தில் நோ-பால் மற்றும் வைடுகளை வீசி தனது 4 ஓவர்களில் 45 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.
ஆனால், தோனி தேஷ்பாண்டேவை சரியாகப் புரிந்து கொண்டார். தேஷ்பாண்டேவும் தனது கடைசி 2 ஓவர்களில் ஓரளவுக்கு கம்பேக் கொடுத்தார். இதனால், அவருக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கலாம். கடைசி ஆட்டத்திலும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஐ.பி.எல் தொடரில் அதிக அனுபவம் இல்லாத அவர் பதற்றம் அடைந்து விடுகிறார். அதிலிருந்து மட்டும் அவரை மீண்டு வந்துவிட்டால் அவரை சென்னை அணி கடைசி வரை கைவிடாது. எனவே, சென்னை அணியில் இதுவரை, பந்துவீச முடியாத ஒரு பேட்ஸ்மேனுக்கு ஒரு பந்து வீச்சாளர் நேரடியான மாற்றாக உள்ளார்.
டெல்லி கேபிட்டல்ஸ்
டெல்லி அணியினர் அவர்களது இம்பாக்ட் ப்ளேயராக ஆல்ரவுண்டர் அமன் கானை தேர்வு செய்தனர். பயிற்சி முகாமில் அவரது பவர் ஹிட்டிங் ஆட்டம் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கை பெரிதும் கவர்ந்து போனது. "எங்கள் பயிற்சி முகாம்களில் அவர் இதுவரை செய்த எல்லாவற்றிலும் அவர் மிகவும் ஈர்க்கக்கூடியவராக இருந்தார். மறுநாள் இரவு நாங்கள் எங்கள் முதல் பயிற்சி ஆட்டத்தில் விளையாடியபோது அவர் அதில் ஆதிக்கம் செலுத்தினார். அவர் சுமார் 38 பந்துகளில் 72 ரன்கள் எடுத்தார், அவர் பெரியவர், உயரமானவர், வலிமையானவர் மற்றும் சக்தி வாய்ந்தவர் என்று நான் நினைக்கிறேன்,” என்று போட்டிக்கு முன் பாண்டிங் கூறியிருந்தார். அமன் கான் கடந்த காலத்தில் மும்பை அணியில் விளையாடி இருக்கிறார். அவரை அணியில் கொண்டு வருவதற்காக டெல்லி அணி கொல்கத்தாவுக்கு ஷர்துல் தாக்குரை டிரேடு செய்தது.
கூடுதலாக, அமன் கான் ஒரு வேகப்பந்து வீச்சாளரும் ஆவார். லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தில் கலீல் அகமதுவை (2 ஓவர்களுக்கு 30 ரன்கள்) வெளியேற்றிய டெல்லி அவரை பேட்டிங்கின் போது இம்பாக்ட் ப்ளேயராக களமிறக்கியது. 194 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய டெல்லி 15.3 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 112 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அமான் 4 ரன்கள் மட்டும் எடுத்து வெளியேறினார். ஆனாலும், பாண்டிங் மற்றும் சவுரவ் கங்குலியின் ஆதரவுடன், அமான் கானுக்கு இம்பாக்ட் ப்ளேயராக அதிக வாய்ப்புகள் கிடைக்கும்.
குஜராத் டைட்டன்ஸ்
ஹர்திக் பாண்டியா இம்பாக்ட் ப்ளேயர் விதியைப் பற்றி கவலைப்படவில்லை என்றும், அதை கையாள பந்துவீச்சு பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ராவை விட்டுவிட்டதாகவும் கூறியிருந்தார். துரதிர்ஷ்டவசமாக நெஹ்ராவுக்கு, கேன் வில்லியம்சன் முழங்காலில் காயம் ஏற்பட்டு ஐ.பி.எல்-லில் இருந்து வெளியேற வேண்டியதால், முதல் ஆட்டத்தில் அவரால் அதிகம் செய்ய முடியவில்லை. சேஸிங்கில் வில்லியம்சனுக்குப் பதிலாக சாய் சுதர்சனை பேட்டிங் செய்ய அனுமதித்தார்கள். சிறப்பான தொடக்கத்தைப் பெற்ற அவர் 23 ரன்களை அடித்து வெற்றிகரமான சேஸிங்கில் ஷுப்மான் கில்லுடன் ஒரு பார்ட்னர்ஷிப்பை உருவாக்கினார்.
பஞ்சாப் கிங்ஸ்
பஞ்சாப் அணியினர் சென்னையின் பாணியை பின்பற்றி வருகின்றனர். அதாவது, ஒரு பேட்ஸ்மேனுக்கு பதிலாக ஒரு பந்துவீச்சாளரை களமிறக்குவது. பானுகா ராஜபக்சே (32 பந்து 50) இடத்தில் ஆல்ரவுண்டர் ரிஷி தவானுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் தவான் ஒரு ஓவரில் 15 ரன்களை விட்டுக்கொடுத்தார். அதனால், அதற்குமேல் அவருக்கு ஓவர்கள் கொடுக்கப்படவில்லை.
தவான் சையத் முஷ்டாக் அலி போட்டியில் விளையாடி, ரன்னர்-அப் அணியான ஹிமாச்சலப் பிரதேசத்திற்காக ஓவருக்கு 7 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 13 விக்கெட்டுகளை வீழ்த்தியனார். அதனால், இது புரிந்துகொள்ளக்கூடிய தேர்வாக இருந்தது. தவானுடன், பஞ்சாப் கிங்ஸ் தனது பேட்டிங் திறமையைப் பயன்படுத்த முதலில் பேட்டிங் செய்தாலும் கூட இம்பாக்ட் ப்ளேயர் விதியைப் பயன்படுத்த அனுமதிக்கிறது. ஐபிஎல்லின் தேவைகளை அவர் எவ்வாறு உருவாக்குகிறார் என்பதை காலம் சொல்லும்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
நான்கு ஓவர்களில் 23 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்திய வருண் சக்ரவர்த்திக்கு பதிலாக வெங்கடேஷ் ஐயரை கொல்கத்தா இம்பாக்ட் ப்ளேயராக களமிறக்கியது. அவர் 192 ரன்கள் கொண்ட இலக்கைத் துரத்துவதில் ஆண்ட்ரே ரஸ்ஸலுடன் ஜோடி சேர்ந்து 70 ரன்களைச் சேர்த்தார்.121.43 ஸ்ட்ரைக் ரேட்டில் 34 ரன்களை அடித்து இலக்கை நெருங்க கொல்கத்தாவுக்கு உதவினார். அவர் ஆட்டமிழந்தபோது, கொல்கத்தாவின் வெற்றிக்கு 28 பந்துகளில் 54 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் மழை பெய்ததால் டி.எல்.எஸ் (DLS) முறைப்படி கொல்கத்தா 7 ரன்களுக்கு குறைவாக இருந்தது. அதனால், பஞ்சாப் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக சொந்த மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் 171 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் துரத்தியது. அப்போது, அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஃபாஃப் டு பிளெசிஸ் (73 ரன்) மற்றும் விராட் கோலி (82 ரன்) ஜோடி தங்களின் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணி வெற்றி இலக்கை எட்ட உதவினர். இதனால், பெங்களூரு அணி இம்பாக்ட் ப்ளேயரை களமிறக்க வேண்டிய தேவை ஏற்படவில்லை.
பெங்களூரு அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ரீஸ் டோப்லி பீல்டிங் காயத்திற்குப் பிறகு மைதானத்தை விட்டு வெளியேறியதால், அவர்களின் பந்துவீச்சு இன்னிங்ஸில் இம்பாக்ட் ப்ளேயரைப் பயன்படுத்த ஒரு வாய்ப்பு இருந்தது. ஆனால் போதுமான பந்துவீச்சு விருப்பங்களுடன் அவர்கள் இருந்ததால், சேஸிங்கின் போது இம்பாக்ட் ப்ளேயரைப் பயன்படுத்த முடிவு செய்திருக்கலாம். ஆனால், கோலி-டு பிளெசிஸ் காட்டிய வானவேடிக்கையால் அது ஒருபோதும் நிகழவில்லை.
மும்பை இந்தியன்ஸ்
சுவாரஸ்யமாக, மும்பை அணி வெறும் 3 வெளிநாட்டு வீரர்களுடன் சென்று 4வது வேகப்பந்து வீச்சாளரான ஜேசன் பெஹ்ரென்டார்ஃப் - அவர்களின் இம்பாக்ட் ப்ளேயராக களமிறக்கினர். அவருக்கு பதில் சூரியகுமார் யாதவை வெளியேற்றி இருந்தனர். சூரியகுமாரை அவர்களின் துணைக் கேப்டனாகக் கருதுவது மற்றும் ரோகித் சர்மா ஓய்வெடுக்க முடிவு செய்தால், கேப்டனாக களமிறங்குவது ஆர்வமுள்ள தேர்வாக இருந்தது. இம்பாக்ட் ப்ளேயராக மாற்றம் செய்யப்பட்ட பிறகு ரோஹித் காயமடைந்திருந்தால் என்ன செய்வது? பெஹ்ரன்டோர்ஃப் தனது மூன்று ஓவர்களில் 37 ரன்களை விட்டுக்கொடுத்தார்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத்
ராஜஸ்தான் ராயல்ஸ் ஐதராபாத் அணிக்கு 204 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அந்த அணி அதன் இம்பாக்ட் ப்ளேயராக அப்துல் சமத்தை களமிறக்கியது. அவருக்கான பேட்டிங் வாய்ப்பு வந்தபோது விஷயங்கள் மோசமாக இருந்தன. ஐதராபாத் அணி 5 விக்கெட்டு இழப்புக்கு 48 ரன்கள் மட்டுமே எடுத்து தத்தளித்துக் கொண்டிருந்தது. அவர் எடுத்த 32 ரன்கள் அணிக்கு பெரிய அளவில் உதவவில்லை. ஆனால் தோல்வியின் விளிம்பைக் குறைத்து இருந்தது.
ராஜஸ்தான் ராயல்ஸ்
நவ்தீப் சைனிக்கு தந்திரோபாயமாகத் தேவையான நகர்வைக் காட்டிலும் ஆட்டம் மற்றும் சில போட்டி நேரத்தைக் கொடுப்பதுதான் அவர்களுடையது. போட்டி நிலவரம் அப்படித்தான் இருந்தது. அவர்கள் 203 ரன்களை எடுத்தனர். சைனிக்கு வாய்ப்பு கிடைத்து போது, ஐதராபாத்தை 6 விக்கெட்டு இழப்புக்கு 63 ரன்கள் என்று இருந்தது.
சைனி தனது துல்லியமான பந்துவீச்சை வெளிப்படுத்தவில்லை. பீமரை வெளியே நழுவினார், மேலும் அவரது லயன் மற்றும் லென்த்துகளை விட்டு வெளியேறினார். ஆனால், இம்பாக்ட் ப்ளேயர் விதி இல்லை என்றால், அவருக்கு ஒரு கேம் கிடைக்காமல் இருந்திருக்கலாம். மேலும், அடுத்த கேமில் அவர் அப்படியே தனது ராவான வேகத்தில் வந்திருப்பார். ஆனால், இம்பாக்ட் ப்ளேயர் விதி ராஜஸ்தானுக்கு ஒரு உண்மையான போட்டி சூழ்நிலையில் சில பந்துவீச்சு மைல்களைப் பெற ஆடம்பரத்தை அனுமதித்தது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.