scorecardresearch

97 ரன்களில் சுருண்ட சென்னை; எளிதாக வெற்றி பெற்றது மும்பை!

IPL 2022, CSK vs MI Cricket Score Online and Updates in tamil: சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற இந்த போட்டியில், சென்னை அணி 97 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக, மும்பை அணி 98 ரன்கள் எடுத்து எளிதாக வெற்றி பெற்றது.

IPL 2022 CSK vs MI Live Cricket Score updates in tamil
IPL 2022, CSK vs MI Live Cricket Score Online and Updates

 CSK vs MI Cricket Score in tamil: 15வது ஐபில் கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் 59வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடியது. இதில், சென்னை அணி 97 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக, மும்பை அணி 98 ரன்கள் எடுத்து எளிதாக வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் (பிளேயிங் லெவன்):

ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, ராபின் உத்தப்பா, அம்பதி ராயுடு, மொயீன் அலி, சிவம் துபே, எம்எஸ் தோனி(கேப்டன் / விக்கெட் கீப்பர்), டுவைன் பிராவோ, மகேஷ் தீக்ஷனா, சிமர்ஜீத் சிங், முகேஷ் சவுத்ரி

மும்பை இந்தியன்ஸ் (பிளேயிங் லெவன்):

ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), திலக் வர்மா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ரமன்தீப் சிங், டிம் டேவிட், டேனியல் சாம்ஸ், குமார் கார்த்திகேயா, ரித்திக் ஷோக்கீன், ஜஸ்பிரித் பும்ரா, ரிலே மெரிடித்

நடப்பு சாம்பியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 11 ஆட்டங்களில் 4ல் வெற்றி, 7ல் தோல்வி என 8 புள்ளிகள் பெற்று 9-வது இடத்தில் இருக்கிறது. சென்னை அணிக்கு அடுத்த சுற்று வாய்ப்பு கிட்டுவது என்பது அதிர்ஷ்டத்தை பொறுத்ததே எனலாம். அந்த அணி எஞ்சிய லீக் ஆட்டங்கள் அனைத்திலும் வெற்றி பெறுவதுடன், மற்ற அணிகளின் முடிவும் சாதகமாக அமைந்து ரன்-ரேட்டிலும் உயரிய நிலையில் இருந்தால் தான் அடுத்த சுற்றுக்குள் நுழைய வாய்ப்பு உள்ளது.

மும்பை அணியை பொறுத்தவரை, நடப்பு தொடரில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் நிலையான திறனை வெளிப்படுத்த முடியாமல் திணறி வருகிறது. இதை அந்த அணியின் கேப்டன் ரோகித் சர்மா வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டுள்ளார். எனவே மும்பை அணி தங்களுடைய தவறுகளை சரிசெய்து எஞ்சிய போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு புள்ளி பட்டியலில் ஏற்றம் காண முயற்சிக்கும்.

மும்பைக்கு எதிரான முதலாவது ஆட்டத்தில் சென்னை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த வெற்றியை தொடர சென்னை அணி முனைப்பு காட்டும். என்று எதிர்பார்க்கப்பட்டது.

முதலில் பேட்டிங் செய்த சென்னை மும்பை அணி வீரர்களின் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 97 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனார்கள். சென்னை அணியில் தோனி அதிகபட்சமாக 36 ரன்கள் எடுத்து கடைசிவரை அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார். மும்பை அணியில் டேனியல் சாம்ஸ் 3 விக்கெட்டுகளையும் குமார் கார்த்திகேயா, ரிலே மெரிடித் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.

98 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களம் இறங்கிய மும்பை அணி 14.5 ஓவர்களில், 5 விக்கெட் இழப்புக்கு 103 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. மும்பை அணியில் அதிகபட்சமாக திலக் வர்மா 34 ரன்கள் எடுத்தார்.

Indian Premier League, 2022Wankhede Stadium, Mumbai   25 March 2023

Chennai Super Kings 97 (16.0)

vs

Mumbai Indians   103/5 (14.5)

Match Ended ( Day – Match 59 ) Mumbai Indians beat Chennai Super Kings by 5 wickets

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Ipl news download Indian Express Tamil App.

Web Title: Ipl 2022 csk vs mi live cricket score updates in tamil