IPL 2022 CSK vs RCB Highlights in tamil: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை டாக்டர் டிஒய் பாட்டீல் மைதானத்தில் நேற்றிரவு நடந்த 22-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் பந்துவீசுவதாக அறிவித்தார். இதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது.
Let's Play!
Live - https://t.co/KYzdkMrl42 #CSKvRCB #TATAIPL pic.twitter.com/qRUuJPG5WZ— IndianPremierLeague (@IPL) April 12, 2022
சென்னை அணியில் ராபின் உத்தப்பா - ருதுராஜ் கெய்க்வாட் ஜோடி தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுக்க முயற்சித்த தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 3 பவுண்டரிகளை விரட்டி 17 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் வந்த மொயீன் அலி 3 ரன்கள் சேர்த்து ரன்-அவுட் ஆகி வெளியேறினார்.
சென்னை அணிக்கு பவர் பிளேவின் போது நல்ல தொடக்கம் கிடைக்காமல் இருந்த நிலையில், அடுத்த ஓவரிலே மொயீன் அலி அவுட் ஆனது அணிக்கு சற்று பின்னடைவை கொடுத்தது. இந்த தருணத்தில் களத்தில் இருந்த ராபின் உத்தப்பா - ஷிவம் துபே ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது. சென்னை அணி 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 60 ரன்களை எடுத்து இருந்த நிலையில், அடுத்தடுத்து வீசப்பட்ட ஓவர்களை துபே நொறுக்க தொடங்கினார்.
அவருடன் சேர்ந்து கொண்ட உத்தப்பாவும் பெங்களுரு அணியினரின் பந்தை வீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக, மேக்ஸ்வெல் வீசிய 13வது 1,6,6,0,0,6 என்று 3 சிக்ஸர்களை பறக்கவிட்டார். அவர் 34 பந்துகளில் 4 சிக்ஸர் 3 பவுண்டரிகளுடன் தனது அரைசத்தையும் பதிவு செய்தார்.
மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த துபே 30 பந்துகளில் 3 சிக்ஸர் 4 பவுண்டரிகளை பறக்க விட்டு அரைசதம் விளாசினார். தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இந்த ஜோடி வாணவேடிக்கை காட்டி ரன்மழை பொழிந்தனர். இதனால், பெங்களுரு அணியினர் பந்துவீசவே திணறினர்.
டிஒய் பாட்டீல் மைதானத்தின் மூலை முடுக்கெல்லாம் பந்துகளை பறக்க விட்ட உத்தப்பா - துபே ஜோடியில் 50 பந்துகளில் 4 பவுண்டரிகள் 9 சிக்ஸர்கள் என மிரட்டல் அடி அடித்த உத்தப்பா 88 ரன்கள் குவித்து கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். உத்தப்பாவின் விக்கெட்டுக்கு பின் வந்த கேப்டன் ஜடேஜா சிக்ஸர் விளாச முயன்று வந்த வேகத்தில் கேட்ச் கொடுத்து நடையைக் கட்டினார்.
7⃣7⃣-8⃣8️⃣ 🔥#CSKvRCB #WhistlePodu #Yellove 🦁💛 pic.twitter.com/34KP6NCWJZ
— Chennai Super Kings (@ChennaiIPL) April 12, 2022
கடைசி ஓவரை சந்தித்த துபே சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் 2 மட்டுமே அடித்தார். இதனால் அவர் 46 பந்துகளில் 5 பவுண்டரிகள் 8 சிக்ஸர்களை விளாசி 95 ரன்கள் சேர்த்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு சென்னை அணி 216 ரன்கள் குவித்தது. இதனால் பெங்களூரு அணிக்கு 217 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பெங்களுரு அணி தரப்பில் வனிந்து ஹசரங்கா அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Sooper Dubey! 🔥💪#CSKvRCB #WhistlePodu #Yellove 🦁💛 pic.twitter.com/HYOvMVoy4X
— Chennai Super Kings (@ChennaiIPL) April 12, 2022
200+ in our 200th Match! Let's go hold the fort!#CSKvRCB #WhistlePodu #Yellove 🦁💛 pic.twitter.com/jPX7mfu4gc
— Chennai Super Kings (@ChennaiIPL) April 12, 2022
தொடர்ந்து 217 ரன்கள் கொண்ட இமாலய இலக்கை துரத்திய பெங்களுரு அணிக்கு நல்ல தொடக்க கிடைக்கவில்லை. பவர் முடிவதற்குள் அந்த அணி கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ், அனுஜ் ராவத், விராட் கோலி ஆகிய மூவரின் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. பின்னர் வந்த வீரர்களில் 2 பவுண்டரிகள் 2 சிக்ஸர்களை விளாசிய கிளென் மேக்ஸ்வெல் கேப்டன் ஜடேஜா பந்துவீச்சில் க்ளீன் போல்ட்-அவுட் ஆகி வெளியேறினார்.
சென்னை அணியின் வெற்றிக்கு தங்களின் அதிரடியான ஆட்டத்தால் குடைச்சல் கொடுத்து வந்த பெங்களுருவின் சுயாஷ் பிரபுதேசாய் 34 ரன்களிலும், ஷாபாஸ் அகமது 41 ரன்களிலும், தினேஷ் கார்த்திக் 34 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை பறிகொடுத்த பெங்களுரு அணி 193 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனால், 23 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூருவை வீழ்த்திய சென்னை அணி தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.
A one-handed stunner from @RayuduAmbati as Akash Deep departs for a duck.
Live - https://t.co/KYzdkMrSTA #CSKvRCB #TATAIPL pic.twitter.com/i9W8kBo5nf— IndianPremierLeague (@IPL) April 12, 2022
The Jadeja catch celebration 👌👌#TATAIPL #CSKvRCB pic.twitter.com/u3zvE59I3k
— IndianPremierLeague (@IPL) April 12, 2022
சென்னை அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி சுழலில் வித்தை காட்டிய மகேஷ் தீக்ஷனா 4 விக்கெட்டுகளையும், கேப்டன் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். டுவைன் பிராவோ மற்றும் முகேஷ் சவுத்ரி தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருதை ஷிவம் துபே தட்டிச் சென்றார்.
Skipper's Threet! ⚔️🔥#CSKvRCB #Yellove #WhistlePodu 🦁💛 @imjadeja pic.twitter.com/tiC4iOrewZ
— Chennai Super Kings (@ChennaiIPL) April 12, 2022
Holding the 4t with the spin! #CSKvRCB #WhistlePodu #Yellove 🦁💛 pic.twitter.com/ns736zy00Z
— Chennai Super Kings (@ChennaiIPL) April 12, 2022
First win ku #WhistlePodu 🥳💛#CSKvRCB #Yellove 🦁 pic.twitter.com/VJtaA92h22
— Chennai Super Kings (@ChennaiIPL) April 12, 2022
Shivam Dube is adjudged Player of the Match for his stupendous knock of 95* off 46 deliveries.#TATAIPL #CSKvRCB pic.twitter.com/ogn4cKFU3M
— IndianPremierLeague (@IPL) April 12, 2022
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
- 23:11 (IST) 12 Apr 2022அதிரடி காட்டும் தினேஷ் கார்த்திக்; பெங்களூருக்கு துளிர் விடும் வெற்றி கனி!
சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 217 ரன்கள் கொண்ட இமாலய இலக்கை துரத்தி வரும் பெங்களூரு அணி 7 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது. அந்த அணியின் மிடில் -ஆடர் வீரர் தினேஷ் கார்த்திக் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அந்த அணியின் வெற்றிக்கு 18 பந்துகளில் 48 ரன்கள் தேவை.
தற்போது 17 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்துள்ள பெங்களூரு அணி 140 ரன்களை சேர்த்துள்ளது.
- 23:10 (IST) 12 Apr 2022டைவ் அடித்து கேட்ச் பிடித்து அசத்திய ராயுடு!
பெங்களூருவின் ஆகாஷ் தீப் ஆப் சைடில் அடித்த பந்தை தாவி டைவ் அடித்து கேட்ச் பிடித்து அசத்தினார் 36 வயதான அம்பதி ராயுடு.
36-year-old flying Ambati Rayudu. pic.twitter.com/Q01gHb9pqo
— Johns. (@CricCrazyJohns) April 12, 2022 - 22:52 (IST) 12 Apr 2022ஷாபாஸ் அகமது அவுட்; 15 ஓவர்கள் முடிவில் பெங்களுரு அணி!
சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 217 ரன்கள் கொண்ட இமாலய இலக்கை துரத்தி வரும் பெங்களூரு அணி 5 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது. அந்த அணியில்4 பவுண்டரிகளை விரட்டி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஷாபாஸ் அகமது 41 ரன்னில் அவுட் ஆனார்.
தற்போது 15 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்துள்ள பெங்களூரு அணி 140 ரன்களை சேர்த்துள்ளது.
- 22:39 (IST) 12 Apr 2022பிரபுதேசாய் அவுட்!
சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 217 ரன்கள் கொண்ட இமாலய இலக்கை துரத்தி வரும் பெங்களூரு அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வரும் நிலையில், அந்த அணியில் 1 சிக்ஸர் 5 பவுண்டரிகளை விரட்டி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சுயாஷ் பிரபுதேசாய் 34 ரன்னில் அவுட் ஆனார்.
தற்போது பெங்களூரு அணி 13 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்துள்ள பெங்களூரு அணி 116 ரன்களை சேர்த்துள்ளது.
Theekshana picks up his third wicket as Suyash Prabhudessai departs for 34.
— IndianPremierLeague (@IPL) April 12, 2022
Live - https://t.co/KYzdkMrSTA cskvrcb tataipl pic.twitter.com/QWWKJtPHOi - 22:15 (IST) 12 Apr 20229 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி!
சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 217 ரன்கள் கொண்ட இமாலய இலக்கை துரத்தி வரும் பெங்களூரு அணி 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வரும் நிலையில், அந்த அணியின் ஆல்ரவுண்டர் வீரர் மேக்ஸ்வெல் 21 ரன்கள் சேர்த்து ஜடேஜா பந்துவீச்சில் போல்ட்-அவுட் ஆனார்.
தற்போது பெங்களூரு அணி 9 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை பறிகொடுத்து 74 ரன்களை சேர்த்துள்ளது.
- 22:12 (IST) 12 Apr 2022பவர் பிளே முடிவில் பெங்களூரு அணி!
சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 217 ரன்கள் கொண்ட இமாலய இலக்கை துரத்தி வரும் பெங்களூரு அணி 6 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை பறிகொடுத்து 42 ரன்களை சேர்த்துள்ளது. அந்த அணியின் கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ், அனுஜ் ராவத், விராட் கோலி ஆகியோர் ஆட்டமிழந்து வெளியேறினர்.
- 21:14 (IST) 12 Apr 2022ராபின் உத்தப்பா, ஜடேஜா அவுட்!
சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில், சென்னை அணி பேட்டிங் செய்து வருகிறது. சென்னை அணி 19 ஓவர்கள் முடிவில் 201 ரன்களை குவித்துள்ள நிலையில், அதிரடியாக விளையாடி வந்த தொடக்க வீரர் உத்தப்பார் 88 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். பின்னர் வந்த கேப்டன் ஜடேஜா வந்த வேகத்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்.
- 21:06 (IST) 12 Apr 2022வெளுத்து வாங்கும் துபே!
சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில், சென்னை அணி பேட்டிங் செய்து வருகிறது. சென்னை அணியில் மிடில்-ஆடரில் களமிறங்கிய ஷிவம் துபே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர் அரைசதம் விளாசிய நிலையில், அவர் ஆகாஷ் தீப் வீசிய 18வது ஓவரை வெளுத்து வாங்கினார். 6 4 2 6 என பறக்க விட்டார்.
சென்னை அணி தற்போது 17 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்களை சேர்த்துள்ளது. சிவம் துபே 73 ரன்களுடனும், ராபின் உத்தப்பா 82 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
- 21:04 (IST) 12 Apr 2022வெளுத்து வாங்கும் துபே!
சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில், சென்னை அணி பேட்டிங் செய்து வருகிறது. சென்னை அணியில் மிடில்-ஆடரில் களமிறங்கிய ஷிவம் துபே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர் அரைசதம் விளாசிய நிலையில், அவர் ஆகாஷ் தீப் வீசிய 18வது ஓவரை வெளுத்து வாங்கினார். 6 4 2 6 என பறக்க விட்டார்.
சென்னை அணி தற்போது 17 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்களை சேர்த்துள்ளது. சிவம் துபே 73 ரன்களுடனும், ராபின் உத்தப்பா 82 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
- 20:46 (IST) 12 Apr 2022அரைசதம் விளாசினார் ஷிவம் துபே!
சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில், சென்னை அணி பேட்டிங் செய்து வருகிறது. சென்னை அணியில் மிடில்-ஆடரில் களமிறங்கிய ஷிவம் துபே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர் 30 பந்துகளில் 3 சிக்ஸர் 4 பவுண்டரிகளை வபறக்க விட்டு அரைசதம் விளாசினார்.
சென்னை அணி தற்போது 15 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்களை சேர்த்துள்ளது. சிவம் துபே 50 ரன்களுடனும், ராபின் உத்தப்பா 57 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
- 20:44 (IST) 12 Apr 2022அரைசதம் விளாசினார் உத்தப்பா!
சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில், சென்னை அணி பேட்டிங் செய்து வருகிறது. சென்னை அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய ராபின் உத்தப்பா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர் 34 பந்துகளில் 4 சிக்ஸர் 3 பவுண்டரிகளை விரட்டி அரைசதம் விளாசினார்
- 20:38 (IST) 12 Apr 2022துபே, உத்தப்பா அதிரடி; பெங்களூருவை வெளுத்து வாங்கும் சென்னை!
சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில், சென்னை அணி பேட்டிங் செய்து வருகிறது. சென்னை அணி 2 விக்கெட்டுகளை இழந்துள்ள நிலையில், தற்போது களத்தில் உள்ள துபே - உத்தப்பா ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். மேக்ஸ்வெல் வீசிய 13வது ஓவரை சந்தித்த உத்தப்பா 3 சிக்ஸர்களை பறக்கவிட்டு மிரட்டல் அடி கொடுத்தார்.
சென்னை அணி தற்போது 13 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 105 ரன்களை சேர்த்துள்ளது. சிவம் துபே 39 ரன்களுடனும், ராபின் உத்தப்பா 45 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
Robin Uthappa 🔥 pic.twitter.com/5mmqpmpaWN
— CRICKET🏏 (@AbdullahNeaz) April 12, 2022 - 20:23 (IST) 12 Apr 202210 ஓவர்கள் முடிவில் சென்னை அணி!
சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில், சென்னை அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணி தற்போது 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 60 ரன்களை சேர்த்துள்ளது. சிவம் துபே16 ரன்களுடனும், ராபின் உத்தப்பா 23 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
- 20:04 (IST) 12 Apr 2022பவர் பிளே முடிவில் சென்னை அணி!
சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில், சென்னை அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணி தற்போது 6 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 36 ரன்களை சேர்த்துள்ளது.
- 19:58 (IST) 12 Apr 2022ருதுராஜ் கெய்க்வாட் அவுட்!
சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில், சென்னை அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணியில் தொடக்க வீரர்களாக ராபின் உத்தப்பா - ருதுராஜ் கெய்க்வாட் ஜோடி களமிறங்கிய நிலையில், 3 பவுண்டரிகளை விரட்டிய ருதுராஜ் கெய்க்வாட் 17 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
Josh Hazlewood picks up his first wicket in rcb colours as Ruturaj Gaikwad is out LBW!
— IndianPremierLeague (@IPL) April 12, 2022
Live - https://t.co/KYzdkMrl42 cskvrcb tataipl pic.twitter.com/iDEPghDzyg - 19:41 (IST) 12 Apr 2022ஆட்டம் இனிதே ஆரம்பம்!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை டாக்டர் டிஒய் பாட்டீல் மைதானத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்கிய 22-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் பந்துவீசுவதாக அறிவித்தார். இதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்து விளையாடி வருகிறது.
சென்னை அணியில் தொடக்க வீரர்களாக ராபின் உத்தப்பா - ருதுராஜ் கெய்க்வாட் ஜோடி களமிறங்கியுள்ளனர்.
- 19:41 (IST) 12 Apr 2022ஆட்டம் இனிதே ஆரம்பம்!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை டாக்டர் டிஒய் பாட்டீல் மைதானத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்கிய 22-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் பந்துவீசுவதாக அறிவித்தார். இதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்து விளையாடி வருகிறது.
சென்னை அணியில் தொடக்க வீரர்களாக ராபின் உத்தப்பா - ருதுராஜ் கெய்க்வாட் ஜோடி களமிறங்கியுள்ளனர்.
- 19:16 (IST) 12 Apr 2022சென்னை சூப்பர் கிங்ஸ் பிளேயிங் லெவன்!
ராபின் உத்தப்பா, ருதுராஜ் கெய்க்வாட், மொயீன் அலி, அம்பதி ராயுடு, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா(கேப்டன்), எம்.எஸ். தோனி(விக்கெட் கீப்பர்), டுவைன் பிராவோ, கிறிஸ் ஜோர்டான், மகேஷ் தீக்ஷனா, முகேஷ் சவுத்ரி
A look at the Playing XI for cskvrcb
— IndianPremierLeague (@IPL) April 12, 2022
Live - https://t.co/KYzdkMrl42 cskvrcb tataipl https://t.co/77LqNeTf6f pic.twitter.com/dnUoJBwbF6 - 19:15 (IST) 12 Apr 2022டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சு தேர்வு; சென்னை முதலில் பேட்டிங்!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை டாக்டர் டிஒய் பாட்டீல் மைதானத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்கும் 22-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. தற்போது டாஸ் சுண்டப்பட்ட நிலையில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதனால் சென்னை அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கும்.
Faf du Plessis wins the toss and rcb will bowl first against csk.
— IndianPremierLeague (@IPL) April 12, 2022
Live - https://t.co/fphsgEEB54 cskvrcb tataipl pic.twitter.com/hZO6XpbB3K - 19:14 (IST) 12 Apr 2022ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பிளேயிங் லெவன்!
ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), அனுஜ் ராவத், விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஷாபாஸ் அகமது, வனிந்து ஹசரங்கா, ஜோஷ் ஹேசில்வுட், முகமது சிராஜ், சுயாஷ் பிரபுதேசாய், ஆகாஷ் தீப்
- 18:36 (IST) 12 Apr 2022நேருக்கு நேர் - ஹெட்-டு-ஹெட்!
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய இரு அணிகளும் இதுவரை 28 ஆட்டங்களில் மோதியுள்ளன. இதில் சென்னை 18 ஆட்டத்திலும், பெங்களூரு அணி 9 ஆட்டத்திலும் வெற்றி கண்டுள்ளன. ஒரு ஆட்டத்திற்கு முடிவு இல்லை.
முந்தைய ஆட்டம்:
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்த கடைசி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
கடைசி 5 ஆட்டங்களின் முடிவுகள்:
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சென்னை சூப்பர் கிங்ஸ் 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- 18:32 (IST) 12 Apr 20227:30 மணிக்கு தொடங்கும் ஆட்டம்!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை டாக்டர் டிஒய் பாட்டீல் மைதானத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்கும் 22-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.
Hello and welcome to the DY Patil Stadium for Match 22 of tataipl.@imjadeja's csk will take on @faf1307 led rcb.
— IndianPremierLeague (@IPL) April 12, 2022
Who are you rooting for ? 💛❤️cskvrcb pic.twitter.com/k2667iHBm4👋way Catchups - Chennai & Bangalore!whistlepodu yellove 🦁💛 pic.twitter.com/VByLD91W4m
— Chennai Super Kings (@ChennaiIPL) April 11, 2022 - 18:28 (IST) 12 Apr 2022சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உத்தேச வீரர்கள் பட்டியல்!
ருதுராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா, மொயின் அலி, அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா(கேப்டன்), சிவம் துபே, எம்எஸ் தோனி (விக்கெட் கீப்பர்), டுவைன் பிராவோ, கிறிஸ் ஜோர்டான், முகேஷ் சவுத்ரி, மகேஷ் தீக்சனா அல்லது டுவைன் பிரிட்டோரியஸ் அல்லது ஆடம் பிரிட்டோரியஸ்.
Navi-gating ➡️🏟️cskvrcb whistlepodu yellove 🦁💛 pic.twitter.com/omXJuyQJ9k
— Chennai Super Kings (@ChennaiIPL) April 12, 2022 - 18:28 (IST) 12 Apr 2022ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் உத்தேச வீரர்கள் பட்டியல்!
ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), அனுஜ் ராவத், விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஷாபாஸ் அகமது, டேவிட் வில்லி, வனிந்து ஹசரங்கா, சித்தார்த் கவுல், ஆகாஷ் தீப், முகமது சிராஜ்
playbold wearechallengers ipl2022 mission2022 rcb ್ಮRCB cskvrcb pic.twitter.com/LHTOTMfV0Z
— Royal Challengers Bangalore (@RCBTweets) April 12, 2022 - 18:26 (IST) 12 Apr 2022சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் பட்டியல்!
ராபின் உத்தப்பா, ருதுராஜ் கெய்க்வாட், மொயீன் அலி, அம்பதி ராயுடு, சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா (கேப்டன்), எம்.எஸ். தோனி (விக்கெட் கீப்பர்), டுவைன் பிராவோ, கிறிஸ் ஜோர்டான், மகேஷ் தீக்ஷனா, முகேஷ் சவுத்ரி, ஆடம் மில்னே, டுவைன் பிரிடோரியஸ். தீபக் சாஹர், டெவோன் கான்வே, மிட்செல் சான்ட்னர், துஷார் தேஷ்பாண்டே, ஹரி நிஷாந்த், என் ஜெகதீசன், சுப்ரான்சு சேனாபதி, பிரசாந்த் சோலங்கி, கேஎம் ஆசிப், சிமர்ஜீத் சிங், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், பகத் வர்மா
- 18:25 (IST) 12 Apr 2022ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீரர்கள் பட்டியல்!
ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), அனுஜ் ராவத், விராட் கோலி, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), கிளென் மேக்ஸ்வெல், ஷாபாஸ் அகமது, டேவிட் வில்லி, வனிந்து ஹசரங்கா, ஆகாஷ் தீப், சித்தார்த் கவுல், முகமது சிராஜ், கர்ன் ஷர்மா, ஜோஷ் ஹேசில்வுட் , ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், சாமா வி மிலிந்த், ரஜத் படிதார், மஹிபால் லோம்ரோர், ஃபின் ஆலன், சுயாஷ் பிரபுதேசாய், ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், அனீஸ்வர் கௌதம்
- 17:59 (IST) 12 Apr 2022‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ லைவ் பிளாக்கு - க்கு அன்புடன் வரவேற்கிறோம்!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் சென்னை – பெங்களூரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் குறித்து உடனுக்குடன் தெரிந்துகொள்ள ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ லைவ் பிளாக்குடன் இணைந்திருங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.