Advertisment

DC VS KKR Highlights: எழுச்சி பெற்ற டெல்லி; கொல்கத்தாவுக்கு 5வது தோல்வி!

DC vs KKR match highlights in tamil: கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது டெல்லி.

author-image
WebDesk
New Update
IPL 2022: Match 41, DC VS KKR

டெல்லி கேபிடல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

IPL 2022, DC VS KKR Highlights  in tamil: 15வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்த 41-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பந்துவீசுவதாக அறிவித்தார். இதன்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.

Advertisment

கொல்கத்தா அணியில் ஆரோன் பின்ச் - வெங்கடேஷ் ஐயர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். அணிக்கு வலுவான தொடக்கம் கொடுக்க முயற்சித்த இந்த ஜோடியில் ஆரோன் பின்ச் 3 ரன்னிலும், வெங்கடேஷ் 6 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 4 பவுண்டரிகளுடன் 42 ரன்கள் சேர்த்த நிலையில் அவுட் ஆனார்.

பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்த நிலையில், மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிதிஷ் ராணா அரைசதம் விளாசினார். அவர் 34 பந்துகளில் 4 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 57 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். களத்தில் இருந்த ரின்கு சிங் 3 பவுண்டரிகளை விரட்டி 23 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த கொல்கத்தா அணி 146 ரன்கள் சேர்த்தது. இதனால் டெல்லி அணிக்கு 147 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தொடக்க முதல் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய டெல்லி அணி தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், முஸ்தபிசுர் ரஹ்மான் 3 விக்கெட்டுகளையும், சேத்தன் சகாரியா, அக்சர் படேல் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

தொடர்ந்து 147 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய டெல்லி அணியில் தொடக்க வீரர் பிருத்வி ஷா பூஜ்ஜிய ரன்னிலும், 2 பவுண்டரியை விரட்டிய மிட்செல் மார்ஷ் 13 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். அதிரடியாக விளையாடி 26 பந்துகளில் 8 பவுண்டரிகளை ஓடவிட்ட தொடக்க வீரர் டேவிட் வார்னர் 42 ரன்களை எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இதனால் நிதான ஆட்டத்தை கடைபிடித்த டெல்லி அணியில் 1 சிக்ஸர் 2 பவுண்டரிகளை துரத்திய அக்சர் படேல் (27) ரன்-அவுட் ஆகி வெளியேறினார்.

ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடித்த லலித் யாதவ் 22 ரன்னிலும், கேப்டன் ரிஷப் பண்ட் 2 ரன்னிலும் அடுத்தடுத்த ஓவர்களில் அவுட் ஆகி வெளியேறினார்கள். டெல்லி அணி வெற்றி இலக்கை அடைய பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோவ்மன் பவல், அணியின் வெற்றிக்கு 7 பந்துகளில் 4 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், சிக்ஸர் அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தார். இதனால் கொல்கத்தா அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணி வீழ்த்தியது.

நடப்பு தொடரில் 4வது வெற்றியை பதிவு செய்துள்ள டெல்லி கேபிடல்ஸ் அணி தற்போது புள்ளிப்பட்டியலில் 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 5 தொடர் தோல்விகளை சந்தித்துள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பட்டியலில் 8வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. சுழலில் வித்தையை காட்டிய குல்தீப் யாதவ் ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார். இது குல்தீப்-இன் 4வது ஆட்டநாயகன் விருது என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லி கேபிடல்ஸ் பிளேயிங் லெவன்:

பிருத்வி ஷா, டேவிட் வார்னர், ரிஷப் பண்ட் (கேப்டன்/ விக்கெட் கீப்பர்), மிட்செல் மார்ஷ், லலித் யாதவ், அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், ரோவ்மன் பவல், குல்தீப் யாதவ், முஸ்தபிசுர் ரஹ்மான், சேத்தன் சகாரியா

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பிளேயிங் லெவன்:

ஆரோன் பின்ச், சுனில் நரைன், ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), நிதிஷ் ராணா, வெங்கடேஷ் ஐயர், பாபா இந்திரஜித் (விக்கெட் கீப்பர்), ரின்கு சிங், ஆண்ட்ரே ரசல், உமேஷ் யாதவ், டிம் சவுத்தி, ஹர்ஷித் ராணா

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“


  • 23:12 (IST) 28 Apr 2022
    டெல்லியின் வெற்றிக்கு 12 பந்துகளில் 4 ரன்கள் தேவை!

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 147 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 18 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 143 ரன்களை சேர்த்துள்ளது.

    டெல்லி அணியின் வெற்றிக்கு 12 பந்துகளில் 4 ரன்கள் தேவை.


  • 22:59 (IST) 28 Apr 2022
    அக்சர் படேல் ரன்அவுட்; 15 ஓவர்கள் முடிவில் டெல்லி!

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 147 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் அதிரடியாக விளையாடிய அக்சர் படேல் (27) ரன்-அவுட் ஆகி வெளியேறினார்.

    டெல்லி அணி 15 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 113 ரன்களை சேர்த்துள்ளது.

    டெல்லி அணியின் வெற்றிக்கு 30 பந்துகளில் 34 ரன்கள் தேவை.


  • 22:52 (IST) 28 Apr 2022
    150 விக்கெட்டுகளை வீழ்த்திய சுனில் நரைன்!

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சுழற்பந்துவீச்சாளர் சுனில் நரைன் தனது 150வது விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். அவரின் பந்துவீச்சு எகானமி 6.66 ஆக உள்ளது.


  • 22:47 (IST) 28 Apr 2022
    5 விக்கெட்டுகளை பறிகொடுத்து திணறும் டெல்லி!

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 147 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் தற்போது 5 விக்கெட்டுகளை பறிகொடுத்து நிதானமாக விளையாடி வருகிறது.

    டெல்லி அணி 13 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 94 ரன்களை சேர்த்துள்ளது.

    டெல்லி அணியின் வெற்றிக்கு 42 பந்துகளில் 53 ரன்கள் தேவை.


  • 22:30 (IST) 28 Apr 2022
    வார்னர் அவுட்; 10 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி!

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 147 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் அதிரடியாக விளையாடி 26 பந்துகளில் 8 பவுண்டரிகளை ஓடவிட்ட டேவிட் வார்னர் 42 ரன்களை எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    டெல்லி அணி 10 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 83ரன்களை சேர்த்துள்ளது.

    டெல்லி அணியின் வெற்றிக்கு 60 பந்துகளில் 64 ரன்கள் தேவை.


  • 22:08 (IST) 28 Apr 2022
    2 விக்கெட்டுகளை இழந்த டெல்லி; பவர் பிளே முடிவில்...!

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 147 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 6 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 47 ரன்களை சேர்த்துள்ளது.

    அந்த அணியின் தொடக்க வீரர் பிருத்வி ஷா பூஜ்ஜிய ரன்னிலும், 2 பவுண்டரியை விரட்டிய மிட்செல் மார்ஷ் 13 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

    தொடக்க வீரர் வார்னர் 24 ரன்களுடனும், லலித் யாதவ் 7 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.


  • 21:51 (IST) 28 Apr 2022
    2 விக்கெட்டுகளை இழந்த டெல்லி!

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 147 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

    அந்த அணியின் தொடக்க வீரர் பிருத்வி ஷா பூஜ்ஜிய ரன்னிலும், 2 பவுண்டரியை விரட்டிய மிட்செல் மார்ஷ் 13 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

    டெல்லி அணி 2 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 17 ரன்களை சேர்த்துள்ளது.


  • 21:46 (IST) 28 Apr 2022
    அரைசதம் அடித்த ராணா; பந்துவீச்சில் மிரட்டிய டெல்லிக்கு 147 ரன்கள் வெற்றி இலக்கு!

    டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 146 ரன்கள் சேர்த்தது. அந்த அணியில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிதிஷ் ராணா அரைசதம் விளாசினார். கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 42 ரன்கள் எடுத்தார்.

    பந்துவீச்சில் தொடக்க முதல் மிரட்டிய டெல்லி அணியில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், முஸ்தபிசுர் ரஹ்மான் 3 விக்கெட்டுகளையும், சேத்தன் சகாரியா, அக்சர் படேல் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். தற்போது 147 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை டெல்லி அணி துரத்தி வருகிறது.


  • 20:53 (IST) 28 Apr 2022
    பந்துவீச்சில் மிரட்டும் டெல்லி; கொல்கத்தாவுக்கு தொடரும் விக்கெட் சரிவு!

    டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்து வரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தொடர் விக்கெட் சரிவை சந்தித்தது ரன் சேர்க்க திணறி வருகிறது.

    தற்போது கொல்கத்தா அணி 15 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 89 ரன்களை சேர்த்துள்ளது.


  • 20:25 (IST) 28 Apr 2022
    பந்துவீச்சில் மிரட்டும் டெல்லி; 4 விக்கெட்டுகளை பறிகொடுத்த கொல்கத்தா நிதான ஆட்டம்!

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்றிரவு 7:30 மணிக்கு தொடங்கிய 41-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதன்படி கொல்கத்தா முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

    தற்போது கொல்கத்தா அணி 10 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 56ரன்களை சேர்த்துள்ளது.


  • 18:54 (IST) 28 Apr 2022
    ஹெட்-டு-ஹெட்; நேருக்கு நேர்!

    டெல்லி கேப்பிட்டல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இதுவரை 31 ஆட்டங்களில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில், டெல்லி 14 முறையும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 16 முறையும் வென்றுள்ளன. ஒரு ஆட்டத்திற்கு முடிவு கிடைக்கவில்லை.

    முந்தைய ஆட்ட முடிவு:

    மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நடந்த இவ்விரு அணிகளுக்கிடையேயான கடைசி ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது.

    கடைசி ஐந்து ஆட்ட முடிவுகள்:

    டெல்லி கேப்பிடல்ஸ் 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

    டெல்லி கேப்பிடல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது


  • 18:48 (IST) 28 Apr 2022
    டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி உத்தேச வீரர்கள் பட்டியல்!

    ப்ரித்வி ஷா, டேவிட் வார்னர், ரிஷப் பண்ட்(கேப்டன் / விக்கெட் கீப்பர்), ரோவ்மன் பவல், சர்பராஸ் கான், லலித் யாதவ், அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், முஸ்தாபிசுர் ரஹ்மான், கலீல் அகமது.


  • 18:48 (IST) 28 Apr 2022
    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி உத்தேச வீரர்கள் பட்டியல்!

    அஜிங்க்யா ரஹானே, வெங்கடேஷ் ஐயர், ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), சாம் பில்லிங்ஸ் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் ராணா, ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன், பாட் கம்மின்ஸ், உமேஷ் யாதவ், ரசிக் சலாம், வருண் சக்கரவர்த்தி


  • 18:43 (IST) 28 Apr 2022
    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள் பட்டியல்!

    ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ஆரோன் பின்ச், அபிஜீத் தோமர், அஜிங்க்யா ரஹானே, பாபா இந்திரஜித், நிதிஷ் ராணா, பிரதம் சிங், ரின்கு சிங், அசோக் சர்மா, பாட் கம்மின்ஸ், ரசிக் தார், சிவம் மவி, டிம் சவுத்தி, உமேஷ் யாதவ், வருண் யாதவ் சகரவர்த்தி, அமன் கான், ஆண்ட்ரே ரசல், அனுகுல் ராய், சமிகா கருணாரத்னே, முகமது நபி, ரமேஷ் குமார், சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர், சாம் பில்லிங்ஸ், ஷெல்டன் ஜாக்சன்.


  • 18:42 (IST) 28 Apr 2022
    டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீரர்கள் பட்டியல்!

    ரிஷப் பந்த் (கேப்டன்), அஷ்வின் ஹெப்பர், டேவிட் வார்னர், மன்தீப் சிங், பிரித்வி ஷா, ரோவ்மன் பவல், அன்ரிச் நார்ட்ஜே, சேத்தன் சகாரியா, கலீல் அகமது, குல்தீப் யாதவ், லுங்கி என்கிடி, முஸ்தாபிசுர் ரஹ்மான், ஷர்துல் தாகூர், காம்சர் படேல், காம்சர் படேல் , லலித் யாதவ், மிட்செல் மார்ஷ், பிரவின் துபே, ரிபால் பட்டேல், சர்ஃபராஸ் கான், விக்கி ஓஸ்ட்வால், யாஷ் துல், கேஎஸ் பாரத் மற்றும் டிம் சீஃபர்ட்.


  • 18:41 (IST) 28 Apr 2022
    7:30 மணிக்கு தொடங்கும் ஆட்டம்!

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்றிரவு 7:30 மணிக்கு தொடங்கும் 41-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.


  • 18:39 (IST) 28 Apr 2022
    ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ லைவ் பிளாக்கு - க்கு அன்புடன் வரவேற்கிறோம்!

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் டெல்லி – கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் குறித்து உடனுக்குடன் தெரிந்துகொள்ள ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ லைவ் பிளாக்குடன் இணைந்திருங்கள்.


Sports Cricket Ipl Live Cricket Score Live Updates Ipl Cricket Ipl Live Score Live Updats Ipl 2022
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment