IPL 2022, DC vs PBKS match highlights in tamil: 15 ஐபிஎல் தொடரில் மும்பை பிரபோர்ன் ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்த 32வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் டெல்லி கேப்பிடல்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.
பஞ்சாப் அணியில் கேப்டன் மயங்க் அகர்வால் – ஷிகர் தவான் ஜோடி தொடக்க வீரர்களாக களமிறங்கிய நிலையில், தவான் 4 ரன்னிலும், 4 பவுண்டரியை விரட்டிய கேப்டன் மயங்க் 24 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். பின்னர் வந்த வீரர்களில் 5 பவுண்டரி அடித்த ஜிதேஷ் சர்மா 32 ரன்களிலும், 1 பவுண்டரி, சிக்ஸர் அடித்த ராகுல் சாஹர் 12 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
அணியில் மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் அவுட் ஆகி வெளியேறிவே, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்த பஞ்சாப் 115 ரன்கள் எடுத்தது. இதனால் டெல்லி அணிக்கு 116 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பந்துவீச்சில் தொடர் தாக்குதல் தொடுத்த டெல்லி அணியில் கலீல் அகமது, லலித் யாதவ், ஷர்துல் தாக்கூர், அக்சர் படேல், மற்றும் குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளையும், முஸ்தாபிசுர் ரஹ்மான் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
Innings Break!
— IndianPremierLeague (@IPL) April 20, 2022
An excellent performance with the ball from @DelhiCapitals as they bowl out #PBKS for 115. 👏 👏
The #DC chase will begin soon. 👍 👍
Scorecard ▶️ https://t.co/3MYNGBm7Dg#TATAIPL | #DCvPBKS pic.twitter.com/lxMfK0aQbs
தொடர்ந்து 116 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய டெல்லி அணிக்கு சிறப்பான தொடக்கம் கிடைத்தது. ஒரு சிக்ஸர் 7 பவுண்டரிகள் என அதிரடி காட்டிய தொடக்க வீரர் பிருத்வி ஷா 41 ரன்னில் ஆட்டமிழந்தார். எனினும், பின்னர் வந்த சர்பராஸ் கானுடன் ஜோடி அமைத்த தொடக்க வீரர் டேவிட் வார்னர் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். தனது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் அரைசதம் விளாசி 30 பந்துகளில் ஒரு சிக்ஸர், 10 பவுண்டரிகளை ஓட விட்டு 60 ரன்கள் குவித்தார். சர்பராஸ் கான் ஒரு பவுண்டரியுடன் 12 ரன்கள் எடுத்தார்.
116 ரன்கள் கொண்ட எளிய இலக்கை துரத்திய டெல்லி அணி ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. நடப்பு தொடரில் 6 ஆட்டங்களில் 3ல் வெற்றி, 3ல் தோல்வி கண்டுள்ள டெல்லி அணி புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. 7 ஆட்டங்களில் 3ல் வெற்றி, 4ல் தோல்வி கண்டுள்ள பஞ்சாப் அணி 8வது இடத்தில் உள்ளது.
A look at the Points Table after Match 3⃣2⃣ of the #TATAIPL 2022 🔽 #DCvPBKS pic.twitter.com/ijVOMb6YBq
— IndianPremierLeague (@IPL) April 20, 2022
.@imkuldeep18 continued his fine run of form & bagged the Player of the Match award as @DelhiCapitals beat #PBKS. 👏 👏 #TATAIPL | #DCvPBKS
— IndianPremierLeague (@IPL) April 20, 2022
Scorecard ▶️ https://t.co/3MYNGBm7Dg pic.twitter.com/KXRCJQHMGc
.@davidwarner31 set the stage on fire with the bat in the chase & was our top performer from the second innings of the #DCvPBKS game. 👌 👌 #TATAIPL | @DelhiCapitals
— IndianPremierLeague (@IPL) April 20, 2022
A look at the summary of his knock 🔽 pic.twitter.com/8rqAgYGeH0
What a way to return to winning ways! 👏 👏@DelhiCapitals put up a dominant show & sealed a clinical 9⃣-wicket win over #PBKS. 👌 👌
— IndianPremierLeague (@IPL) April 20, 2022
Scorecard ▶️ https://t.co/3MYNGBm7Dg#TATAIPL | #DCvPBKS pic.twitter.com/6YpYU4bh18
Indian Premier League, 2022Brabourne Stadium, Mumbai 06 February 2023
Delhi Capitals 119/1 (10.3)
Punjab Kings 115 (20.0)
Match Ended ( Day – Match 32 ) Delhi Capitals beat Punjab Kings by 9 wickets
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“