IPL 2022, DC vs RCB Highlights in tamil: 15-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்றிரவு 7:30 மணிக்கு தொடங்கிய 27வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பந்துவீசுவதாக அறிவித்தார். இதனபடி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்தது.
பெங்களூரு அணியில் கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் – அனுஜ் ராவத் ஜோடி தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் அனுஜ் ராவத் ஷர்துல் தாக்கூர் வீசிய 1.1வது ஓவரில் அவுட் ஆகி பூஜ்ஜிய ரன்னுடன் நடையை கட்டினார். 8 ரன்கள் சேர்த்த கேப்டன் டு பிளெசிஸ் அடுத்த ஓவரிலே ஆட்டமிழந்து வெளியேறினார். களத்தில் இருந்த முன்னாள் கேப்டன் கோலி 12 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார்.
சுயாஷ் பிரபுதேசாய் 6 ரன்னில் வெளியேறிய நிலையில், களத்தில் இருந்த கிளென் மேக்ஸ்வெல் – ஷாபாஸ் அகமது ஜோடி அணியின் விக்கெட் சரிவை மீட்டது. இந்த ஜோடியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மேக்ஸ்வெல் அரைசதம் விளாசினார். அவர் 34 பந்துகளில் 2 சிக்ஸர் 7 பவுண்டரிகளுடன் 55 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார்.
களத்தில் கடைசி வரை இருந்து மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷாபாஸ் அகமது – தினேஷ் கார்த்திக் ஜோடியில், 34 பந்துகளில் 5 சிக்ஸர் 5 பவுண்டரிகள் என அதிரடி ஆட்டம் காட்டிய தினேஷ் கார்த்திக் 66 ரன்களும், 1 சிக்ஸர் 3 பவுண்டரியை ஓடவிட்ட ஷாபாஸ் 32 ரன்களும் எடுத்தனர். இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 189 ரன்கள் குவித்தது.
டெல்லி அணி தரப்பில் அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், கலீல் அகமது தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
.@DineshKarthik scored a sensational 6⃣6⃣* and was our top performer from the first innings of the #DCvRCB clash in the #TATAIPL 2022. 👌 👌
— IndianPremierLeague (@IPL) April 16, 2022
Scorecard 👉 https://t.co/Kp3DueRxD0
A summary of his innings 🔽 pic.twitter.com/YLoAhypuY2
Innings Break!@DineshKarthik & @Gmaxi_32 scored stunning half-centuries and Shahbaz Ahmed scored a handy 32* as @RCBTweets posted 189/5 on the board. 👏 👏
— IndianPremierLeague (@IPL) April 16, 2022
The @DelhiCapitals chase to commence shortly. 👍 👍
Scorecard 👉 https://t.co/Kp3DueRxD0#TATAIPL | #DCvRCB pic.twitter.com/qDAmQ48CWT
தொடர்ந்து 190 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய டெல்லி அணியில் தொடக்க வீரர் பிரித்வி ஷா 16 ரன்னில் அவுட் ஆனார். எனினும் மறுமுனையில் இருந்த வார்னர் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் விளாசினார். அவர் 38 பந்துகளில் 5 சிக்ஸர்கள் 4 பவுண்டரிகள் அடித்து 66 ரன்கள் சேர்த்த நிலையில் அவுட் ஆனார்.
தொடர்ந்து வந்த வீரர்களில் அதிகபட்சமாக கேப்டன் ரிஷப் பண்ட் 34 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறி ஏமாற்றம் அளித்தனர். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 173 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனால் 16 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு டெல்லியை வீழ்த்தியது.
மிரட்டலான பந்துவீச்சு தாக்குதலை தொடுத்த பெங்களூரு அணியில் ஆட்டத்தில் திருமுனையை ஏற்படுத்திய ஜோஷ் ஹேசில்வுட் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். முகமது சிராஜ் 2 விக்கெட்டுகளையும், வனிந்து ஹசரங்கா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்.
Back to winning ways. 🙌🏻
— Royal Challengers Bangalore (@RCBTweets) April 16, 2022
Important 2️⃣ points secured. ✅
We look ahead to our next challenge now! 👊🏻#PlayBold #WeAreChallengers #IPL2022 #Mission2022 #RCB #ನಮ್ಮRCB #DCvRCB pic.twitter.com/bPzMfO2lPg
Indian Premier League, 2022Wankhede Stadium, Mumbai 26 May 2022
Delhi Capitals 173/7 (20.0)
Royal Challengers Bangalore 189/5 (20.0)
Match Ended ( Day – Match 27 ) Royal Challengers Bangalore beat Delhi Capitals by 16 runs
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 190 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் டெல்லி கேபிடல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 173 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனால், பெங்களூரூ அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தியது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 190 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் டெல்லி கேபிடல்ஸ் அணியில் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்த கேப்டன் ரிஷப் பண்ட் 34 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார்.
டெல்லி அணியின் வெற்றிக்கு 18 பந்துகளில் 45 ரன்கள் தேவை.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 190 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் டெல்லி கேபிடல்ஸ் அணி 15 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 134 ரன்களை சேர்த்துள்ளது.
டெல்லி அணியின் வெற்றிக்கு 24 பந்துகளில் 56 ரன்கள் தேவை.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 190 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் டெல்லி கேபிடல்ஸ் அணி 15 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 115 ரன்களை சேர்த்துள்ளது.
அந்த அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் 15 ரன்களுடன் களத்தில் உள்ளார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 190 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் டெல்லி கேபிடல்ஸ் அணியில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் விளாசிய தொடக்க வீரர் டேவிட் வார்னர் 66 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 190 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் டெல்லி கேபிடல்ஸ் அணி 10 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு ரன்களை சேர்த்துள்ளது.
அந்த அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் 54 ரன்களுடனும் மிட்செல் மார்ஷ் 7 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 190 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் டெல்லி கேபிடல்ஸ் அணி 9 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 75 ரன்களை சேர்த்துள்ளது.
அந்த அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் 30 பந்துகளில் 3 பவுண்டரி, 4 சிக்ஸர்களுடன் தனது அரைசத்தை பதிவு செய்துள்ளார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 190 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் டெல்லி கேபிடல்ஸ் அணி 6 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 57 ரன்களை சேர்த்துள்ளது.
தொடக்க வீரர் பிரித்வி ஷா 16 ரன்னில் ஆட்டமிழந்த நிலையில், தொடக்க வீரர் டேவிட் வார்னர் 38 ரன்களுடனும், மிட்செல் மார்ஷ் 1 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 189 ரன்களை சேர்த்துள்ளது. அந்த அணியில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கிளென் மேக்ஸ்வெல் அரைசதம் விளாசி 34 பந்துகளில் 2 சிக்ஸர் 7 பவுண்டரிகளுடன் 55 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார்.
களத்தில் கடைசி வரை இருந்து மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷாபாஸ் அகமது – தினேஷ் கார்த்திக் ஜோடியில், 34 பந்துகளில் 5 சிக்ஸர் 5 பவுண்டரிகள் என அதிரடி ஆட்டம் காட்டிய தினேஷ் கார்த்திக் 66 ரன்களும், 1 சிக்ஸர் 3 பவுண்டரியை ஓடவிட்ட ஷாபாஸ் 32 ரன்களும் எடுத்தனர்.
டெல்லி அணி தரப்பில் அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், கலீல் அகமது தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
.@DineshKarthik scored a sensational 6⃣6⃣* and was our top performer from the first innings of the #dcvrcb clash in the #tataipl 2022. 👌 👌Scorecard 👉 https://t.co/Kp3DueRxD0A summary of his innings 🔽 pic.twitter.com/YLoAhypuY2
— IndianPremierLeague (@IPL) April 16, 2022
Innings Break!@DineshKarthik & @Gmaxi_32 scored stunning half-centuries and Shahbaz Ahmed scored a handy 32* as @RCBTweets posted 189/5 on the board. 👏 👏The @DelhiCapitals chase to commence shortly. 👍 👍Scorecard 👉 https://t.co/Kp3DueRxD0#tataipl | #dcvrcb pic.twitter.com/qDAmQ48CWT
— IndianPremierLeague (@IPL) April 16, 2022
டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பேட்டிங் செய்து வருகிறது. தற்போது அந்த அணி 15 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 115 ரன்களை சேர்த்துள்ளது.
டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணியில் அதிரடியாக விளையாடி வந்த மிடில்-ஆடர் வீரர் கிளென் மேக்ஸ்வெல் அரைசதம் விளாசி இருந்த நிலையில், 34 பந்துகளில் 2 சிக்ஸர் 7 பவுண்டரிகளுடன் 55 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
Big Show alert 🔥🔥A cracking half-century from @Gmaxi_32! Follow the match 👉 https://t.co/Kp3DueRxD0#tataipl | #dcvrcb pic.twitter.com/Ueg0tZdBY9
— IndianPremierLeague (@IPL) April 16, 2022
டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பேட்டிங் செய்து வருகிறது. தற்போது அந்த அணி 10 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 82 ரன்களை சேர்த்துள்ளது. அதிரடியாக விளையாடி வரும் கிளென் மேக்ஸ்வெல் 49 ரன்கள் சேர்த்துள்ளார்.
டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பேட்டிங் செய்து வருகிறது. தற்போது அந்த அணி 6 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 40 ரன்களை சேர்த்துள்ளது.
டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணியின் தொடக்க வீரர் அனுஜ் ராவத் அவுட் ஆகி பூஜ்ஜிய ரன்னுடன் நடையை கட்டிய நிலையில், தற்போது மற்றொரு தொடக்க வீரரான கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் 8 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறியுள்ளார்.
டெல்லி கேபிடல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதனால், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணியில் கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் – அனுஜ் ராவத் ஜோடி தொடக்க வீரர்களாக களமிறங்கிய நிலையில், அனுஜ் ராவத் தாக்கூர் வீசிய 1.1வது ஓவரில் அவுட் ஆகி பூஜ்ஜிய ரன்னுடன் நடையை கட்டினார்.
பிரித்வி ஷா, டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ரிஷப் பண்ட்(கேப்டன் / விக்கெட் கீப்பர்), ரோவ்மன் பவல், லலித் யாதவ், அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், முஸ்தாபிசுர் ரஹ்மான், கலீல் அகமது.
A look at the Playing XIs 🔽Follow the match 👉 https://t.co/Kp3DueRxD0#tataipl | #dcvrcb pic.twitter.com/tToC2O3eJK
— IndianPremierLeague (@IPL) April 16, 2022
ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), அனுஜ் ராவத், விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல், ஷாபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), சுயாஷ் பிரபுதேசாய், வனிந்து ஹசரங்கா, ஹர்ஷல் படேல், ஜோஷ் ஹேசில்வுட், முகமது சிராஜ்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்கும் 27வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. தற்போது டாஸ் சுண்டப்பட்ட நிலையில், டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதனால், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கும்.
🚨 Toss Update from Wankhede 🚨@DelhiCapitals have elected to bowl against @RCBTweets. Follow the match 👉 https://t.co/Kp3DueRxD0#tataipl | #dcvrcb pic.twitter.com/2mcASylgKe
— IndianPremierLeague (@IPL) April 16, 2022
டெல்லி கேபிடல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மொத்தம் 28 ஆட்டங்களில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் டெல்லி அணி 10 முறையும், பெங்களூரு அணி 17 முறையும் வென்றுள்ளன.
முந்தைய ஆட்ட நிலவரம்!
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்த இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தியது.
கடைசி ஐந்து ஆட்டங்களின் முடிவுகள்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
டெல்லி கேப்பிடல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
டெல்லி கேப்பிடல்ஸ் 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
டெல்லி கேப்பிடல்ஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் 2022ல் வான்கடே மைதானத்தில் நடந்த ஐந்து ஆட்டங்களில் நான்கில் சேஸிங் செய்த அணிகளே வெற்றி பெற்றுள்ளன. இங்கு முதல் இன்னிங்ஸின் ஆரம்பத்தில், சீமர்களுக்கு ஆடுகளம் உதவும் வகையில் உள்ளது. 190 ரன்கள் என்பது ஒரு நல்ல ஸ்கோர் ஆகும்.
ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), அனுஜ் ராவத், விராட் கோலி, ஷாபாஸ் அகமது, கிளென் மேக்ஸ்வெல், சுயாஷ் பிரபுதேசாய், தினேஷ் கார்த்திக், வனிந்து ஹசரங்கா, ஹர்ஷல் படேல், முகமது சிராஜ், ஜோஷ் ஹேசில்வுட்
டேவிட் வார்னர், பிருத்வி ஷா, மிட்செல் மார்ஷ், ரிஷப் பந்த் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), ரோவ்மன் பவல், லலித் யாதவ், அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், முஸ்தாபிசுர் ரஹ்மான், கலீல் அகமது
ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), அனுஜ் ராவத், விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல், ஷாபாஸ் அகமது, சுயாஷ் பிரபுதேசாய், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), வனிந்து ஹசரங்கா, ஆகாஷ் தீப், முகமது சிராஜ், ஜோஷ் ஹேசில்வுட், சித்தார்த் கவுல் , ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட், கர்ன் ஷர்மா, ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், சாமா வி மிலிந்த், ரஜத் படிதார், மஹிபால் லோம்ரோர், ஃபின் ஆலன், அனீஸ்வர் கௌதம்
பிருத்வி ஷா, டேவிட் வார்னர், ரிஷப் பந்த்(கேப்டன் / விக்கெட் கீப்பர்), லலித் யாதவ், ரோவ்மன் பவல், அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், சர்பராஸ் கான், குல்தீப் யாதவ், முஸ்தபிசுர் ரஹ்மான், கலீல் அகமது, மந்தீப் சிங், ஸ்ரீகர் பாரத், டிம் சீஃபர்ட் , லுங்கி என்கிடி, அஷ்வின் ஹெப்பர், மிட்செல் மார்ஷ், பிரவீன் துபே, அன்ரிச் நார்ட்ஜே, கமலேஷ் நாகர்கோடி, சேத்தன் சகாரியா, ரிபால் பட்டேல், யாஷ் துல், விக்கி ஓஸ்ட்வால்
15-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7:30 மணிக்கு வான்கடே மைதானத்தில் நடைபெறும் 27வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் டெல்லி – பெங்களூரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் குறித்து உடனுக்குடன் தெரிந்துகொள்ள ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ லைவ் பிளாக்குடன் இணைந்திருங்கள்.