IPL 2022 DC vs RR Highlights in tamil: 15வது ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்றிரவு நடந்த 34வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அரங்கேறிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பந்துவீசுவதாக அறிவித்தார். இதன்படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஜோஸ் பட்லர் - தேவ்தத் படிக்கல் ஜோடி அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்து வலுவான அடித்தளத்தை அமைத்தது. இந்த ஜோடியில் நிதானம் கலந்த அதிரடி காட்டிய தொடக்க வீரர் தேவ்தத் படிக்கல் அரைசதம் விளாசி, 35 பந்துகளில் 2 சிக்ஸர் 7 பவுண்டரிகளுடன் 54 எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
மறுமுனையில் தொடக்க முதலே அதிரடியாக விளையாடி அணிக்கு வலுவான தொடக்கம் மற்றும் சிறப்பான ஜோடி அமைத்த பட்லர் சதம் விளாசி மிரட்டினார். நடப்பு தொடரில் 3வது சதத்தை பதிவு செய்த அவர் 66 பந்துகளில் 9 சிக்ஸர் 9 பவுண்டரிகளை பறக்கவிட்டு 116 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டமிழந்தார்.
J.O.S B.U.T.T.L.E.R 🤯🙀 #TATAIPL #DCvRR pic.twitter.com/5UwbLn6qvx
— IndianPremierLeague (@IPL) April 22, 2022
Third 💯 of #TATAIPL 2022 for @josbuttler 👏👏 pic.twitter.com/nPBIWxw8PA
— IndianPremierLeague (@IPL) April 22, 2022
களத்தில் இருந்த வீரர்களில் அதிகபட்சமாக கேப்டன் சஞ்சு சாம்சன் 46 ரன்கள் எடுத்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 222 ரன்களை குவித்தது. இதனால் டெல்லி அணிக்கு 223 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தொடக்கம் முதல் விக்கெட் வீழ்த்த திணறி வந்த டெல்லி அணியில் கலீல் அகமது, முஸ்தபிசுர் ரஹ்மான் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
222-2!
Highest score in #TATAIPL this season.
Some serious hitting there by @rajasthanroyals as they posts a total of 222/2 on the board.
Scorecard - https://t.co/IOIoa87Os8 #DCvRR #TATAIPL pic.twitter.com/qlDoYc6MFM— IndianPremierLeague (@IPL) April 22, 2022
Jos Buttler is our Top Performer from the first innings for his stupendous knock of 116 off 65 deliveries.
A look at his batting summary here 👇👇#TATAIPL #DCvRR pic.twitter.com/QMvRrANLkr— IndianPremierLeague (@IPL) April 22, 2022
தொடர்ந்து 223 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய டெல்லி அணியில், 5 பவுண்டரிகள் 1 சிக்ஸரை பறக்கவிட்ட தொடக்க வீரர் டேவிட் வார்னர் 28 ரன்களிலும், பின்னர் வந்த சர்ஃபராஸ் கான் 1 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
பிறகு களமிறங்கிய கேப்டன் ரிஷப் பண்ட் உடன் ஜோடி சேர்ந்த தொடக்க வீரர் பிருத்வி ஷா 27 பந்துகளில் 5 பவுண்டரிகள் 1 சிக்ஸருடன் 37 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார். களத்தில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் பண்ட் 44 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
தொடர்ந்து வந்த அக்சர் படேல் 1 ரன்னிலும், ஷர்துல் தாக்கூர் 10 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். இவர்களுடன் ஜோடி அமைத்த லலித் யாதவ் 37 ரன்களில் ஆட்டமிழந்தார். டெல்லி அணியின் வெற்றிக்கு கடைசி 6 பந்துகளில் 36 ரன்கள் தேவைப்பட்டது.
அப்போது களத்தில் இருந்த ரோவ்மன் பவல் ஓபேட் மெக்காய் வீசிய 20வது ஹாட்ரிக் சிக்ஸர் அடித்து மிரட்டினார். மெக்காய் வீசிய 3வது பந்து ஃபுல் டாஸாக வீசப்பட்ட நிலையில், களத்தில் இருந்த ரோவ்மன் பவல் முதல் டக்-அவுட்டில் இருந்த அணியினர் வரை நோ-பால் கொடுக்க வேண்டும் என நடுவர்களிடம் வாதாடினர். இதனால், களத்தில் சில நிமிடங்கக்ளுக்கு பரபபரப்பு தொற்றிக்கொண்டது.
டெல்லி அணியின் பயிற்சியாளர் ஒருவர் களம்புகுந்து நடுவரிடம் நோ-பால் கொடுக்க சொல்லி வாதாடினார். முன்னதாக டக்-அவுட்டில் இருந்த கேப்டன் பண்ட் டெல்லி வீரர்களை களத்திற்கு வெளியே வர சொல்லி அழைத்தார். அவரை அணியினர் சமாளித்து அமர வைத்தனர். கள நடுவர்களும், மூன்றாவது நடுவரும் கடைசி வரை அந்த பந்திற்கு ரிவியூ கொடுக்கவில்லை.
Crazy moments in #IPL2022. pic.twitter.com/MOaU8gl9zU
— Johns. (@CricCrazyJohns) April 22, 2022
இந்த பரபரப்பு அடங்கிய பிறகு வீசப்பட்ட 4வது பந்தை ரோவ்மன் பவல் டாட் பால் விட்டார். அடுத்த பந்தில் 2 ரன் எடுத்து, கடைசி பந்தில் மட்டையை வேகமாக சுழற்றி கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த டெல்லி அணி 207 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், பந்துவீச்சிலும் மிரட்டி எடுத்த ராஜஸ்தான் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தியது.
That's that from Match 34. @rajasthanroyals take this home by a 15-run win.
Scorecard - https://t.co/IOIoa87Os8 #DCvRR #TATAIPL pic.twitter.com/D2JXBfMTSp— IndianPremierLeague (@IPL) April 22, 2022
இந்த அசத்தலான வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. பந்துவீச்சில் மிரட்டிய அந்த அணியில் பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டுகளையும், 2 அஷ்வின் விக்கெட்டுகளையும், ஓபேட் மெக்காய், யுஸ்வேந்திர சாஹல் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன் விருதை சதம் விளாசிய ஜோஸ் பட்லர் தட்டிச்சென்றார்.
Buttler bags another Player of the Match award for his excellent knock of 116 as @rajasthanroyals win by 15 runs.#TATAIPL #DCvRR pic.twitter.com/3V37XM1n6A
— IndianPremierLeague (@IPL) April 22, 2022
நடப்பு தொடரில் 3 சதங்களுடன் 491 ரன்கள் குவித்துள்ள பட்லர் ஆரஞ்சு தொப்பியை வசப்படுத்தியுள்ளார். 18 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ள சாஹல் ஊதா நிற தொப்பியை வசப்படுத்தி இருக்கிறார்.
Social distancing by Jos Bhai. pic.twitter.com/LRZ1NHBDbd
— Johns. (@CricCrazyJohns) April 22, 2022
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
- 23:40 (IST) 22 Apr 2022பந்துவீச்சிலும் மிரட்டிய ராஜஸ்தான்; 15 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தியது!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 223 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய டெல்லி கேபிடல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்கள் சேர்த்தது. பந்துவீச்சிலும் மிரட்டிய ராஜஸ்தான் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தியது
- 23:24 (IST) 22 Apr 2022டெல்லி அணியின் வெற்றிக்கு 6 பந்துகளில் 36 ரன்கள் தேவை!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 223 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் டெல்லி கேபிடல்ஸ் அணி 18 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் சேர்த்துள்ளது.
தற்போது டெல்லி அணியின் வெற்றிக்கு 6 பந்துகளில் 36 ரன்கள் தேவை.
- 23:22 (IST) 22 Apr 2022லலித் யாதவ் அவுட்!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 223 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் டெல்லி கேபிடல்ஸ் அணி 7 விக்கெட்டுகளை பறிகொடுத்து நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைய தடுமாறி வருகிறது.
37 ரன்கள் எடுத்த லலித் யாதவ் கேட்ச் கொடுத்து அவுட் ஆகி வெளியேறியுள்ளார்.
- 23:17 (IST) 22 Apr 2022டெல்லி அணியின் வெற்றிக்கு 12 பந்துகளில் 36 ரன்கள் தேவை!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 223 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் டெல்லி கேபிடல்ஸ் அணி 18 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் சேர்த்துள்ளது.
தற்போது டெல்லி அணியின் வெற்றிக்கு 12 பந்துகளில் 36 ரன்கள் தேவை.
- 23:12 (IST) 22 Apr 2022டெல்லி அணியின் வெற்றிக்கு 18 பந்துகளில் 51 ரன்கள் தேவை!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 223 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் டெல்லி கேபிடல்ஸ் அணி 17 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் சேர்த்துள்ளது.
தற்போது டெல்லி அணியின் வெற்றிக்கு 18 பந்துகளில் 51 ரன்கள் தேவை.
- 23:10 (IST) 22 Apr 2022டெல்லி அணியின் வெற்றிக்கு 24 பந்துகளில் 61 ரன்கள் தேவை!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 223 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் டெல்லி கேபிடல்ஸ் அணி 16 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் சேர்த்துள்ளது.
தற்போது டெல்லி அணியின் வெற்றிக்கு 24 பந்துகளில் 61 ரன்கள் தேவை.
- 23:09 (IST) 22 Apr 2022அடுத்தடுத்த விக்கெட் இழப்பு; ரன் சேர்க்க திணறும் டெல்லி!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 223 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் டெல்லி கேபிடல்ஸ் அணி 6 விக்கெட்டுகளை பறிகொடுத்து நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைய தடுமாறி வருகிறது.
10 ரன்கள் எடுத்த ஷர்துல் தாக்கூர் ரன்-அவுட் ஆகி வெளியேறியுள்ளார்.
- 22:37 (IST) 22 Apr 202210 ஓவர்கள் முடிவில் டெல்லி!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 223 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் டெல்லி கேபிடல்ஸ் அணி 10 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 99 ரன்கள் சேர்த்துள்ளது.
27 பந்துகளில் 5 பவுண்டரிகள் 1 சிக்ஸரை பறக்கவிட்ட தொடக்க வீரர் பிருத்வி ஷா 37 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
- 22:15 (IST) 22 Apr 20222 விக்கெட்டுகளை பறிகொடுத்த டெல்லி; பவர் பிளே முடிவில்!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 223 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் டெல்லி கேபிடல்ஸ் அணி 6 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 59 ரன்கள் சேர்த்துள்ளது.
5 பவுண்டரிகள் 1 சிக்ஸரை பறக்கவிட்ட தொடக்க வீரர் டேவிட் வார்னர் 28 ரன்களிலும், சர்ஃபராஸ் கான் 1 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறியுள்ளனர்.
- 21:33 (IST) 22 Apr 2022பட்லர் சதம்...ரன் மழை பொழிந்த ராஜஸ்தான்; டெல்லிக்கு 223 ரன்கள் வெற்றி இலக்கு!
டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஜோஸ் பட்லர் - தேவ்தத் படிக்கல் தொடக்க வீரரர்கள் சிறப்பான ஜோடி அமைத்தனர். நிதானம் கலந்த அதிரடி காட்டிய தொடக்க வீரர் தேவ்தத் படிக்கல் அரைசதம் விளாசி, 35 பந்துகளில் 2 சிக்ஸர் 7 பவுண்டரிகளை துரத்தி 54 எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
தொடக்க முதலே அதிரடியாக விளையாடி அணிக்கு வலுவான தொடக்கம் மற்றும் சிறப்பான ஜோடி அமைத்த பட்லர் சதம் விளாசி இருந்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார். நடப்பு தொடரில் 3வது சதத்தை பதிவு செய்த அவர் 66 பந்துகளில் 9 சிக்ஸர் 9 பவுண்டரிகளை பறக்கவிட்டு 116 ரன்கள் குவித்தார்.
46 ரன்கள் எடுத்த கேப்டன் சஞ்சு சாம்சன், ஒரு ரன் எடுத்த ஷிம்ரோன் ஹெட்மியருடன் களத்தில் இருந்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 222 ரன்களை குவித்துள்ளது. இதனால் டெல்லி அணிக்கு 223 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தொடக்கம் முதல் விக்கெட் எடுக்க திணறி வந்த டெல்லி அணியில் கலீல் அகமது, , முஸ்தபிசுர் ரஹ்மான் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
222-2!
— IndianPremierLeague (@IPL) April 22, 2022
Highest score in tataipl this season.
Some serious hitting there by @rajasthanroyals as they posts a total of 222/2 on the board.
Scorecard - https://t.co/IOIoa87Os8 dcvrr tataipl pic.twitter.com/qlDoYc6MFM - 21:00 (IST) 22 Apr 2022சதமடித்த பட்லர்!
டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்து வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தொடக்க வீரராக களமிறங்கி அணிக்கு வலுவான தொடக்கம் மற்றும் சிறப்பான ஜோடி அமைத்த பட்லர் சதம் விளாசியுள்ளார். நடப்பு தொடரில் 3வது சதத்தை பதிவு செய்த அவர் 57 பந்துகளில் 8 சிக்ஸர் 8 பவுண்டரிகளை ஓடவிட்டு 101 ரன்கள் சேர்த்த நிலையில் விளையாடி வருகிறார்.
J.O.S B.U.T.T.L.E.R 🤯🙀 tataipl dcvrr pic.twitter.com/5UwbLn6qvx
— IndianPremierLeague (@IPL) April 22, 2022 - 20:51 (IST) 22 Apr 2022அரைசதம் விளாசிய படிக்கல் அவுட்!
டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்து அதிரடியாக விளையாடிய தொடக்க வீரர் தேவ்தத் படிக்கல் அரைசதம் விளாசி, 35 பந்துகளில் 2 சிக்ஸர் 7 பவுண்டரிகளை துரத்தி 54 எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
தற்போது ராஜஸ்தான் அணி 15.1 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 155 ரன்களை சேர்த்துள்ளது.
- 20:42 (IST) 22 Apr 2022படிக்கல் அரைசதம்!
டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்து அதிரடியாக விளையாடி வரும் தொடக்க வீரர் தேவ்தத் படிக்கல் அரைசதம் விளாசியுள்ளார். அவர் 33 பந்துகளில் 2 சிக்ஸர் 7 பவுண்டரிகளை பறக்கவிட்டு 53 எடுத்து விளையாடி வருகிறார்.
தற்போது ராஜஸ்தான் அணி 14 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 137 ரன்களை சேர்த்துள்ளது.
- 20:26 (IST) 22 Apr 2022அரைசதம் விளாசிய பட்லர்!
டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்து அதிரடியாக விளையாடி வரும் தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் அரைசதம் விளாசியுள்ளார். அவர் 36 பந்துகளில் 4 சிக்ஸர் 4 பவுண்டரிகளை பறக்கவிட்டு 54 எடுத்து விளையாடி வருகிறார்.
- 20:22 (IST) 22 Apr 2022ராஜஸ்தானுக்கு சிறப்பான தொடக்கம்; விக்கெட் எடுக்க திணறும் டெல்லி!
டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் ஜோஸ் பட்லர் - தேவ்தத் படிக்கல் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில், டெல்லி அணி விக்கெட் வீழ்த்த திணறி வருகிறது. தற்போது 10 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 87 ரன்களை சேர்த்துள்ளது.
ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர்களாகக் களமிறங்கியுள்ள ஜோஸ் பட்லர் 49 ரன்களும், தேவ்தத் படிக்கல் 36 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர்.
- 20:10 (IST) 22 Apr 2022பவர் பிளே முடிவில் ராஜஸ்தான்!
டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது. சிறப்பான ஆட்டத்தை துவங்கியுள்ள அந்த அணிக்கு நல்ல தொடக்கம் கிடைத்துள்ளது. தற்போது 6 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 44 ரன்களை சேர்த்துள்ளது.
ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர்களாகக் களமிறங்கியுள்ள ஜோஸ் பட்லர் 26 ரன்களும், தேவ்தத் படிக்கல் 17 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர்.
- 19:33 (IST) 22 Apr 2022ஆட்டம் இனிதே ஆரம்பம்!
டெல்லி கேபிடல்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியுள்ளது
ராஜஸ்தான் அணியில் ஜோஸ் பட்லர் - தேவ்தத் படிக்கல் தொடக்க வீரர்களாகக் களமிறங்கியுள்ளனர்.
- 19:24 (IST) 22 Apr 2022டெல்லி கேப்பிடல்ஸ் பிளேயிங் லெவன்!
பிருத்வி ஷா, டேவிட் வார்னர், ரிஷப் பண்ட் (கேப்டன்/ விக்கெட் கீப்பர்), ரோவ்மன் பவல், சர்ஃபராஸ் கான், லலித் யாதவ், அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், முஸ்தபிசுர் ரஹ்மான், கலீல் அகமது
🚨 Team News 🚨@DelhiCapitals & @rajasthanroyals remain unchanged.
— IndianPremierLeague (@IPL) April 22, 2022
Follow the match ▶️ https://t.co/IOIoa87Os8tataipl | dcvrr
A look at the Playing XIs 🔽 pic.twitter.com/Up4fT6L7iu - 19:23 (IST) 22 Apr 2022டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சு தேர்வு; ராஜஸ்தான் முதலில் பேட்டிங்!
15வது ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்கும் 34வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. தற்போது டாஸ் சுண்டப்பட்ட நிலையில், டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கும்.
Delhi Capitals have won the toss and they will bowl first against rr.
— IndianPremierLeague (@IPL) April 22, 2022
Live - https://t.co/IOIoa87Os8 dcvrr tataipl pic.twitter.com/81U0oOwrFO - 19:21 (IST) 22 Apr 2022டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சு தேர்வு; ராஜஸ்தான் முதலில் பேட்டிங்!
15வது ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்கும் 34வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. தற்போது டாஸ் சுண்டப்பட்ட நிலையில், டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கும்.
- 19:16 (IST) 22 Apr 2022ராஜஸ்தான் ராயல்ஸ் பிளேயிங் லெவன்!
ஜோஸ் பட்லர், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), ஷிம்ரோன் ஹெட்மியர், கருண் நாயர், ரியான் பராக், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரென்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா, ஓபேட் மெக்காய், யுஸ்வேந்திர சாஹல்
- 18:56 (IST) 22 Apr 2022நேருக்கு நேர்; ஹெட்-டு-ஹெட்!
டெல்லி கேபிடல்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இதுவரை 24 ஆட்டங்களில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் இரு அணிகளும் 12 முறை வென்றுள்ளன.
முந்தைய ஆட்டம்
ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி ஷேக் சயீத் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது.
கடைசி ஐந்து ஆட்டங்களின் முடிவுகள்:
டெல்லி கேபிடல்ஸ் 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
ராஜஸ்தான் ராயல்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
டெல்லி கேப்பிடல்ஸ் 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
டெல்லி கேபிடல்ஸ் 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
டெல்லி கேப்பிடல்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Hello and welcome to Match 34 of tataipl @RishabhPant17 led delhicapitals will take on @IamSanjuSamson's rr.
— IndianPremierLeague (@IPL) April 22, 2022
Who are you rooting for ?dcvrr pic.twitter.com/M67Ff9kM4J - 18:44 (IST) 22 Apr 2022ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உத்தேச வீரர்கள் பட்டியல்!
ஜோஸ் பட்லர், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), ஷிம்ரோன் ஹெட்மியர், ரியான் பராக், கருண் நாயர், ஆர் அஷ்வின், ஓபேட் மெக்காய், ட்ரெண்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா, யுஸ்வேந்திர சாஹல்
- 18:43 (IST) 22 Apr 2022டெல்லி கேபிடல்ஸ் அணியின் உத்தேச வீரர்கள் பட்டியல்!
பிருத்வி ஷா, டேவிட் வார்னர், சர்பராஸ் கான், ரிஷப் பண்ட் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), லலித் யாதவ், ரோவ்மன் பவல், அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், முஸ்தாபிசுர் ரஹ்மான், குல்தீப் யாதவ், கலீல் அகமது
- 18:41 (IST) 22 Apr 2022ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் பட்டியல்!
ஜோஸ் பட்லர், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), ஷிம்ரோன் ஹெட்மியர், ரியான் பராக், கருண் நாயர், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரென்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா, ஓபேட் மெக்காய், யுஸ்வேந்திர சாஹல், நவ்தீப் சைனி, கே.சி கரியப்பா, டேரில் மிட்செல்லப்பா, , ஜேம்ஸ் நீஷம், ரஸ்ஸி வான் டெர் டுசென், தேஜஸ் பரோகா, குல்தீப் யாதவ், யஷஸ்வி ஜெய்ஸ்வால், அனுனய் சிங், குல்தீப் சென், துருவ் ஜூரல், ஷுபம் கர்வால்.
- 18:41 (IST) 22 Apr 2022டெல்லி கேபிடல்ஸ் அணி வீரர்கள் பட்டியல்!
பிருத்வி ஷா, டேவிட் வார்னர், ரிஷப் பந்த் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), ரோவ்மன் பவல், சர்பராஸ் கான், லலித் யாதவ், அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், முஸ்தாபிசுர் ரஹ்மான், கலீல் அகமது, மந்தீப் சிங், ஸ்ரீகர் பாரத், லுங்கி என்கிடி , அஷ்வின் ஹெப்பர், பிரவீன் துபே, அன்ரிச் நார்ட்ஜே, கமலேஷ் நாகர்கோடி, சேத்தன் சகாரியா, ரிபால் பட்டேல், யாஷ் துல், விக்கி ஓஸ்ட்வால்
- 18:28 (IST) 22 Apr 2022‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ லைவ் பிளாக்கு - க்கு அன்புடன் வரவேற்கிறோம்!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் டெல்லி - ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் குறித்து உடனுக்குடன் தெரிந்துகொள்ள 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்' லைவ் பிளாக்குடன் இணைந்திருங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.