IPL 2022, GT vs DC Highlights in tamil: 15வது ஐபிஎல் நேற்றிரவு 7:30 மணிக்கு நடைபெற்ற 10 -வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் -டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். இதன்படி பேட்டிங் செய்த குஜராத் அணியில், தொடக்க வீரர் மேத்யூ வேட் 1 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
தொடர்ந்து வந்த வீரர்களில் விஜய் சங்கர் 13 ரன்னிலும், ஹர்திக் பாண்டியா 31 ரன்னிலும் அவுட் ஆனார்கள். மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்த தொடக்க வீரர் சுப்மன் கில் 84 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் குஜராத் டைட்டன்ஸ் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 171 ரன்கள் சேர்த்தது. இதனால், டெல்லி அணிக்கு 172 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
பந்துவீச்சில் நெருக்கடி கொடுத்த டெல்லி அணி தரப்பில் அதிகபட்சமாக முஸ்தபிசுர் ரஹ்மான் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
தொடர்ந்து 172 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய டெல்லி அணிக்கு வலுவான தொடக்கம் கிடைக்கவில்லை. 7 பவுண்டரிகளை விளாசிய அந்த அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் அதிகபட்சமாக 43 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து ரன்களை சேர்க்க தடுமாறி வந்த டெல்லி அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157 ரன்னில் சுருண்டது. இதனால் குஜராத் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.
குஜராத் டைட்டன்ஸ் அணி சார்பில், தரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய லாக்கி பெர்குசன் 4 விக்கெட்டுகளையும், முகமது ஷமி 2 விக்கெட்டுகளையும், கேப்டன் ஹர்டிக் பாண்டியா மற்றும் ரஷீத் கான் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
தொடர்ந்து 2 வெற்றிகளை பதிவு செய்துள்ள குஜராத் அணி 4 புள்ளிகளுடன் 3வது இடத்திலும், ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் உள்ள டெல்லி அணி 4வது இடத்திலும் உள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
- 23:29 (IST) 02 Apr 2022பந்துவீச்சில் மிரட்டிய குஜராத்; 14 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தியது!
172 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய டெல்லி அணி 157 ரன்னில் சுருண்டது. இதனால் குஜராத் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தியது.
- 23:18 (IST) 02 Apr 20229 விக்கெட்டுகளை பறிகொடுத்த டெல்லி; வெற்றியை நோக்கி குஜராத்!
172 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் டெல்லி அணி 9 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. அந்த அணி 18 ஓவர்கள் முடிவில் 145 ரன்களை சேர்த்துள்ளது.
டெல்லி அணி 9 விக்கெட்டுகளை இழந்துள்ள நிலையில், குஜராத் அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசாகியுள்ளது.
- 23:03 (IST) 02 Apr 2022பந்துவீச்சில் மிரட்டும் குஜராத்; தடுமாறும் டெல்லி!
172 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் டெல்லி அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து நிதானமாக விளையாடி வருகிறது. அந்த அணி 15 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 126 ரன்களை சேர்த்துள்ளது.
டெல்லி அணியின் வெற்றிக்கு 30 பந்துகளில் 46 ரன்கள் தேவை
- 22:28 (IST) 02 Apr 202210 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி!
172 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் டெல்லி அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து நிதானமாக விளையாடி வருகிறது. அந்த அணி 10 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 79 ரன்கள் சேர்த்துள்ளது.
ரிஷப் பண்ட் (24) - லலித் யாதவ் (20) ஜோடி களத்தில் உள்ளது.
- 22:07 (IST) 02 Apr 2022அடுத்தடுத்த விக்கெட் இழப்பு; தடுமாறும் டெல்லி அணி!
172 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் டெல்லி அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. அந்த அணி பவர் பிளே முடிவில் ப்ரித்வி ஷா, டிம் சீஃபர்ட், மன்தீப் சிங் மூவரின் விக்கெட்டுகளை இழந்து 43 ரன்களை சேர்த்துள்ளது.
ரிஷப் பண்ட் (2) - லலித் யாதவ் (8) ஜோடி களத்தில் உள்ளது.
- 21:20 (IST) 02 Apr 2022ஷுப்மன் கில் அரைசதம்; பந்துவீச்சில் நெருக்கடி கொடுத்த டெல்லிக்கு 172 ரன்கள் இலக்கு!
டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் சேர்த்துள்ளது. அந்த அணி சார்பில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷுப்மன் கில் 84 ரன்கள் சேர்த்தார்.
பந்துவீச்சில் தொடர் நெருக்கடி கொடுத்து வந்த டெல்லி அணி தரப்பில் அதிகபட்சமாக முஸ்தாபிசுர் ரஹ்மான் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
- 20:58 (IST) 02 Apr 2022ஷுப்மன் கில் அவுட்!
டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்து வரும் குஜராத் டைட்டன்ஸ் அணியில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த தொடக்க வீரர் ஷுப்மன் கில் 46 பந்துகளில் 4 சிக்ஸர் 6 பவுண்டரிகளுடன் 84 ரன்கள் சேர்ந்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.
- 20:44 (IST) 02 Apr 202215 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி!
டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்து வரும் குஜராத் டைட்டன்ஸ் அணி 15 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 120 ரன்கள் எடுத்துள்ளது.
- 20:43 (IST) 02 Apr 202215 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி!
டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்து வரும் குஜராத் டைட்டன்ஸ் அணி 15 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 120 ரன்கள் எடுத்துள்ளது.
- 20:40 (IST) 02 Apr 2022கேப்டன் பாண்டியா அவுட்!
டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்து வரும் குஜராத் டைட்டன்ஸ் அணி அதன் 3வது விக்கெட்டை இழந்துள்ளது. அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா 31 ரன்கள் சேர்த்த நிலையில் அவுட் ஆனார்.
- 20:33 (IST) 02 Apr 2022அரைசதம் விளாசினார் ஷுப்மன் கில்!
டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்து வரும் குஜராத் டைட்டன்ஸ் அணியில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் தொடக்க வீரர் ஷுப்மன் கில் 32 பந்துகளில் 1 சிக்ஸர் 4 பவுண்டரிகளுடன் தனது அரைசத்தை பதிவு செய்துள்ளார்.
குஜராத் அணி 13 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 98 ரன்கள் எடுத்துள்ளது.
- 20:29 (IST) 02 Apr 202210 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி!
டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்து வரும் குஜராத் டைட்டன்ஸ் அணி தற்போதுவரை 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது. அந்த அணி 10 ஓவர்கள் முடிவில் 56 ரன்களை சேர்த்துள்ளது.
- 20:01 (IST) 02 Apr 2022பவர் பிளே முடிவில் குஜராத் அணி!
டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்து வரும் குஜராத் டைட்டன்ஸ் அணி அதன் முதல் விக்கெட்டை இழந்துள்ளது. அந்த அணி 6 ஓவர்கள் முடிவில் 44 ரன்களை சேர்த்துள்ளது.
- 19:38 (IST) 02 Apr 2022வேட் அவுட்!
டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்து வரும் குஜராத் டைட்டன்ஸ் அணி அதன் முதல் விக்கெட்டை இழந்துள்ளது. அந்த அணியின் தொடக்க வீரர் மேத்யூ வேட் 1 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறியுள்ளார்.
- 19:36 (IST) 02 Apr 2022ஆட்டம் இனிதே ஆரம்பம்!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் புனேயில் இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்கும் 10வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. தற்போது டாஸ் சுண்டப்பட்ட நிலையில், டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியுள்ளது.
- 19:14 (IST) 02 Apr 2022டெல்லி கேபிடல்ஸ் பிளேயிங் லெவன்!
ப்ரித்வி ஷா, டிம் சீஃபர்ட், மன்தீப் சிங், ரிஷப் பண்ட்(கேப்டன் / விக்கெட் கீப்பர்), லலித் யாதவ், ரோவ்மன் பவல், ஷர்துல் தாக்கூர், அக்சர் படேல், குல்தீப் யாதவ், கலீல் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான்
The Fizz is IN 🔥
— Delhi Capitals (@DelhiCapitals) April 2, 2022
Presenting to you our Playing XI for gtvdc 💪🏼yehhainayidilli | ipl2022 | @Dream11 | tataipl | ipl |delhicapitals pic.twitter.com/E3aZA5MpQg - 19:12 (IST) 02 Apr 2022குஜராத் டைட்டன்ஸ் பிளேயிங் லெவன்!
ஷுப்மன் கில், மேத்யூ வேட்(விக்கெட் கீப்பர்), விஜய் சங்கர், ஹர்திக் பாண்டியா(கேப்டன்), டேவிட் மில்லர், ராகுல் தெவாடியா, அபினவ் மனோகர் சதராங்கனி, ரஷித் கான், லாக்கி பெர்குசன், வருண் ஆரோன், முகமது ஷமி
- 19:04 (IST) 02 Apr 2022டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சு தேர்வு; குஜராத் அணி முதலில் பேட்டிங்!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் புனேயில் இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்கும் 10வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. தற்போது டாஸ் சுண்டப்பட்ட நிலையில், டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதனால், குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கும்.
- 19:01 (IST) 02 Apr 2022டெல்லி கேபிடல்ஸ் உத்தேச வீரர்கள் பட்டியல்!
பிருத்வி ஷா, டிம் சீஃபர்ட், சர்பராஸ் கான், ரிஷப் பந்த் (கேப்டன்), ரோவ்மன் பவல், லலித் யாதவ், ஷர்துல் தாக்கூர், அக்சர் படேல், குல்தீப் யாதவ், லுங்கி என்கிடி, முஸ்தாபிசுர் ரஹ்மான்
- 19:00 (IST) 02 Apr 2022குஜராத் டைட்டன்ஸ் உத்தேச வீரர்கள் பட்டியல்!
லெவன்: ஷுப்மான் கில், மேத்யூ வேட், விஜய் சங்கர், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டேவிட் மில்லர், ராகுல் தெவாடியா, அபினவ் மனோகர், ரஷித் கான், லாக்கி பெர்குசன், முகமது ஷமி, வருண் ஆரோன்.
- 18:42 (IST) 02 Apr 2022டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் வீரர்கள் பட்டியல்!
ரிஷப் பண்ட் (கேப்டன்), அக்சர் படேல், டிம் சீஃபர்ட், பிருத்வி ஷா, அன்ரிச் நார்ட்ஜே, டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஷர்துல் தாக்கூர், முஸ்தபிசுர் ரஹ்மான், குல்தீப் யாதவ், அஷ்வின் ஹெப்பர், அபிஷேக் சர்மா, கமலேஷ் பாரத் நாகர்கோட்டி, கே.எஸ். , கலீல் அகமது, சேத்தன் சகாரியா, லலித் யாதவ், ரிபால் படேல், யாஷ் துல், ரோவ்மேன் பவல், பிரவின் துபே, லுங்கி என்கிடி, விக்கி ஓஸ்ட்வால், சர்பராஸ் கான்.
— Delhi Capitals (@DelhiCapitals) April 2, 2022
- 18:42 (IST) 02 Apr 2022குஜராத் டைட்டன்ஸ் அணியின் வீரர்கள் பட்டியல்!
ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ரஷித் கான், ஷுப்மான் கில், முகமது ஷமி, லாக்கி பெர்குசன், அபினவ் சதராங்கனி, ராகுல் தெவாடியா, நூர் அகமது, சாய் கிஷோர், விஜய் சங்கர், ஜெயந்த் யாதவ், டொமினிக் டிரேக்ஸ், தர்ஷன் நல்கண்டே, அல்ஸ் தயாள், அல்ஸ் தயாள், , பிரதீப் சங்வான், டேவிட் மில்லர், விருத்திமான் சாஹா, மேத்யூ வேட், வருண் ஆரோன், பி சாய் சுதர்ஷன்.
Ready. Set. Go 🚀
— Gujarat Titans (@gujarat_titans) April 2, 2022
Our Titans are on their way for the Dilli challenge 💪seasonoffirsts aavade gtvdc pic.twitter.com/WQ5JaqmFXx - 18:39 (IST) 02 Apr 20227:30 மணிக்கு தொடங்கும் ஆட்டம்!
15வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் புனேயில் இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்கும் 10வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.
📹 | Ahead of gtvdc, we caught up with our DC stars to get their thoughts on the prep and our first ipl2022 game at the MCA Stadium 🏟️🤩yehhainayidilli | ipl | delhicapitals |capitalsunplugged | octaroarsfordc | @mandeeps12 | @imK_Ahmed13 | @Ravipowell26 | @LalitYadav03 pic.twitter.com/zaUfwC3IyO
— Delhi Capitals (@DelhiCapitals) April 2, 2022 - 18:37 (IST) 02 Apr 2022‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ லைவ் பிளாக்கு - க்கு அன்புடன் வரவேற்கிறோம்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் குஜராத் – டெல்லி அணிகளுக்கு இடையிலான ஆட்டம் குறித்து உடனுக்குடன் தெரிந்துகொள்ள ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ லைவ் பிளாக்குடன் இணைந்திருங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.