IPL 2022 GT vs RCB highlights in tamil: 15-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை பிராபோர்ன் மைதானத்தில் இன்று மாலை 3:30 மணிக்கு தொடங்கிய 43-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் பெங்களூரு அணியின் கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதன்படி பேட்டிங் செய்த பெங்களூரு அணியில் தொடக்க வீரர்களாக கேப்டன் டு பிளஸ்சிஸ் ,விராட் கோலி களமிறங்கினர்.
அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுக்க முயற்சித்த இந்த ஜோடியில் கேப்டன் டு பிளெசிஸ் பூஜ்ஜிய ரன்னில் அவுட் ஆகி பெவிலியன் நோக்கி நடையைக் கட்டினார். பின்னர் வந்த ரஜத் படிதார் உடன் ஜோடி அமைத்த விராட் கோலி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரும் இணைந்து பந்துகளை சிக்ஸர் ,பவுண்டரிக்கு விரட்டவே, விராட் கோலி 45 பந்துகளிலும் ,ரஜத் படிதார் 29 பந்துகளிலும் அரைசதம் விளாசினார்.
பெங்களூருக்கு அணிக்கு வலுவான ரன்களை சேர்த்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடியில், ரஜத் படிதார் 52 ரன்களிலும், விராட் கோலி 58 ரன்களிலும் விக்கெட்டை பறிகொடுத்தனர். தொடர்ந்து வந்த வீரர்களில் அதிரடியாக விளையாடிய கிளென் மேக்ஸ்வெல் 18 பந்துகளில் 33 ரன்கள் அவுட் ஆனார்.
இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்களை இழந்த பெங்களூரு அணி 170 ரன்கள் சேர்த்தது. இதனால், குஜராத் அணிக்கு 171 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. குஜராத் அணி தரப்பில் பிரதீப் சங்வான் 2 விக்கெட்டுகளையும், அல்சாரி ஜோசப், லாக்கி பெர்குசன், முகமது ஷமி, ரஷித் கான் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
Half-centuries from Virat Kohli and Rajat Patidar guide #RCB to 170/6 👌#GT's chase coming up shortly 👍
— IndianPremierLeague (@IPL) April 30, 2022
Follow the match ▶️ https://t.co/FVnv8ovvEQ #TATAIPL | #GTvRCB pic.twitter.com/i6p7kp25ez
For his fine opening act of 5⃣8⃣, @imVkohli is our Top Performer from the first innings 👌👌
— IndianPremierLeague (@IPL) April 30, 2022
A look at his batting summary 👇#TATAIPL | #GTvRCB pic.twitter.com/DhI1idTv1y
தொடர்ந்து 171 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய குஜராத் அணிக்கு நல்ல தொடக்க கிடைத்தது. அணிக்கு நல்ல அடித்தளம் அமைத்த ஷுப்மான் கில் – விருத்திமான் சாஹா ஜோடியில், சாஹா 29 ரன்னிலும், கில் 31 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். தொடர்ந்து வந்த கேப்டன் பாண்டியா 3 ரன்னிலும், 2 பவுண்டரியை விரட்டிய சாய் சுதர்சன் 20 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
களத்தில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டேவிட் மில்லர் – ராகுல் டெவாடியா ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது. இந்த ஜோடியில் மில்லர் 1 சிக்ஸர் 4 பவுண்டரிகளுடன் 39 ரன்களும், டெவாடியா 2 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 43 ரன்களும் எடுத்தனர். இறுதியில், 171 ரன்கள் வெற்றி இலக்கை விரட்டிய குஜராத் அணி 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 19.3 வது ஓவரிலே வெற்றி இலக்கை எட்டிப்பிடித்து, பெங்களூருவை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
நடப்பு தொடரில் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடர் வெற்றியை பதிவு செய்துவரும் குஜராத், பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் பெற்ற அசத்தலான வெற்றியின் மூலம் 16 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தை தக்கவைத்துள்ளது. தோல்வி கண்ட பெங்களூரு 5வது இடத்திலே நீடிக்கிறது.
Tewatia and Miller do it again! 🔥🔥#GT chase down the target in the final over 👏👏#TATAIPL #GTvRCB pic.twitter.com/kMGj8UrJ8m
— IndianPremierLeague (@IPL) April 30, 2022
Aapde GT gaya 😁#AavaDe #GTvRCB #SeasonOfFirsts pic.twitter.com/66yMc0BlMy
— Gujarat Titans (@gujarat_titans) April 30, 2022
குஜராத் டைட்டன்ஸ் பிளேயிங் லெவன்:
ஷுப்மான் கில், விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), சாய் சுதர்சன், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டேவிட் மில்லர், ராகுல் டெவாடியா, ரஷித் கான், பிரதீப் சங்வான், அல்சாரி ஜோசப், லாக்கி பெர்குசன், முகமது ஷமி
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பிளேயிங் லெவன்:
ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), விராட் கோலி, ரஜத் படிதார், கிளென் மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஷாபாஸ் அகமது, மஹிபால் லோம்ரோர், வனிந்து ஹசரங்கா, ஹர்ஷல் படேல், முகமது சிராஜ், ஜோஷ் ஹேசில்வுட்
Indian Premier League, 2022Brabourne Stadium, Mumbai 06 February 2023
Gujarat Titans 174/4 (19.3)
Royal Challengers Bangalore 170/6 (20.0)
Match Ended ( Day – Match 43 ) Gujarat Titans beat Royal Challengers Bangalore by 6 wickets
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“