scorecardresearch

GT vs SRH Highlights: சிக்ஸர் மழை பொழிந்த ரஷீத் கான்; ஐதராபாத்தை பந்தாடிய குஜராத்துக்கு திரில் வெற்றி!

Gujarat Titans vs SunRisers Hyderabad, IPL 2022, Match 40, (GT vs SRH) Check match highlights in tamil: சாஹாவின் அரைசதம், சிக்ஸர் மழை பொழிந்த ரஷித் கானின் அதிரடியுடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை 5 விக்கெட்டுகள் வீழ்த்திய குஜராத் டைட்டன்ஸ் திரில் வெற்றியை ருசித்தது.

GT vs SRH IPL 2022, குஜராத் டைட்டன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
GT vs SRH IPL 2022 live updates

IPL 2022 GT vs SRH Highlights in tamil: 15வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்றிரவு நடந்த 40வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீசுவதாக அறிவித்தார். இதன்படி, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் அபிஷேக் சர்மா – கேப்டன் கேன் வில்லியம்சன் தொடக்க வீரர்களாக களமிறங்கிய நிலையில், ஒரு பவுண்டரியை துரத்திய கேப்டன் வில்லியம்சன் 5 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் வந்த ராகுல் திரிபாதி 16 ரன்னில் அவுட் ஆனார். தொடர்ந்து வந்த ஐடன் மார்க்ரம் உடன் ஜோடி அமைத்த தொடக்க வீரர் அபிஷேக் சர்மா தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் விளாசினார்.

அபிஷேக் சர்மா 42 பந்துகளில் 3 சிக்ஸர் 6 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் சேர்த்த நிலையில் , அல்ஜாரி ஜோசப் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். களத்தில் அதிரடியை தொடர்த்திருந்த ஐடன் மார்க்ரம் அரைசதம் விளாசி 56 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். கடைசி ஓவரிகளில் பட்டைய கிளப்பிய ஷஷாங்க் சிங் 3 சிக்ஸர் ஒரு பவுண்டரியுடன் 25 ரன்கள் எடுத்தார்.

இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்களை இழந்த ஐதராபாத் அணி 195 ரன்களை சேர்த்தது. இதனால் குஜராத் அணிக்கு 196 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. டாஸ் வென்று முதலில் பந்துவீசிய குஜராத் டைட்டன்ஸ் அணி தரப்பில் முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும், அல்ஜாரி ஜோசப், யாஷ் தயால் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

தொடர்ந்து 196 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய குஜராத் டைட்டன்ஸ் அணியில் 1 சிக்ஸர், 1 பவுண்டரி அடித்த தொடக்க வீரர் ஷுப்மான் கில் 22 ரன்னிலும், பின்னர் வந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா 10 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். இவர்களுடன் மறுமுனையில் இருந்து அதிரடி கலந்த நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த தொடக்க வீரர் விருத்திமான் சாஹா அரைசதம் விளாசினார்.

விருத்திமான் சாஹா 38 பந்துகளில் 11 பவுண்டரிகள் 1 சிக்ஸருடன் 68 ரன்கள் எடுத்து நிலையில், உம்ரன் மாலிக் பந்துவீச்சில் க்ளீன் போல்ட் ஆகி வெளியேறினார். அவருடன் மறுமுனையில் இருந்த டேவிட் மில்லர் (17 ரன்கள்), பின்னர் வந்த அபினவ் மனோகர் (0) உம்ரன் மாலிக்கின் 16வது ஓவரில் போல்ட்-அவுட் ஆகி ஆட்டமிழந்தனர்.

ஐதராபாத் அணியில் தரமான பந்துவீச்சை வெளிப்படுத்தி இருந்த வேகப்பந்துவீச்சாளர் உம்ரன் மாலிக் அதுவரை வீழ்ந்த 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தி இருந்தார். இந்த 5 விக்கெட்டுகளில் 4 விக்கெட்டுகளை கிளீன் போல்ட் -அவுட் செய்தும் இருந்தார். குஜராத் அணிக்கு இந்த அடுத்தடுத்த விக்கெட் இழப்பு அந்த அணி வெற்றி இலக்கை அடைய பெரும் பின்னடைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், நடராஜன் வீசிய 19வது ஓவரை சந்தித்த ராகுல் தெவாடியா ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸரை பறக்கவிட அணிக்கு வெற்றி முகம் எட்டிப்பார்த்தது. அந்த தருணத்தில் குஜராத்தின் வெற்றிக்கு 6 பந்துகளில் 22 ரன்கள் தேவைப்பட்டது. மார்கோ ஜான்சன் வீசிய 20 ஓவரின் முதல் பந்தை தெவாடியா சிக்ஸர் விளாச, 5 பந்துகளுக்கு 16 ரன்கள் என்று ஆனாது. 2வது பந்தில் ஒரு ரன் எடுத்து ஸ்ட்ரைக்கை ரஷித் கான் வசம் கொடுத்தார் தெவாடியா.

3வது பந்தை சிக்ஸர் அடித்த ரஷித் கான் 4வது பந்தை டாட் பால் விட்டார். மீண்டும் 5வது பந்தில் அவர் சிக்ஸர் பறக்க விட, குஜராத் வெற்றிக்கு கடைசி ஒரு பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்டது. பலரும் அவர் பவுண்டரிக்கு விரட்டுவார் என எதிர்பார்த்த நிலையில், லெக் சைடில் சிக்ஸர் அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தார் ரஷித் கான். 11 பந்துகளில் 31 ரன்கள் எடுத்திருந்த அவர் கடைசி 5 பந்துகளில் மட்டும் 25 ரன்கள் சேர்த்து இருந்தார்.

தொடக்க வீரர் விருத்திமான் சாஹாவின் அரைசதம், சிக்ஸர் மழை பொழிந்த ரஷித் கானின் அதிரடியுடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை 5 விக்கெட்டுகள் வீழ்த்திய குஜராத் டைட்டன்ஸ் திரில் வெற்றியை ருசித்தது .இந்த அசத்தலான வெற்றியின் மூலம் அந்த அணி தற்போது 14 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. தோல்வி கண்ட சன்ரைசர்ஸ் ஐதராபாத் 3வது இடத்திலே நீடிக்கிறது.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் பிளேயிங் லெவன்:

அபிஷேக் சர்மா, கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), ஷஷாங்க் சிங், வாஷிங்டன் சுந்தர், மார்கோ ஜான்சன், புவனேஷ்வர் குமார், உம்ரான் மாலிக், டி நடராஜன்

குஜராத் டைட்டன்ஸ் பிளேயிங் லெவன்:

விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), ஷுப்மான் கில், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), அபினவ் மனோகர், டேவிட் மில்லர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், அல்ஜாரி ஜோசப், லாக்கி பெர்குசன், யாஷ் தயால், முகமது ஷமி.

Indian Premier League, 2022Wankhede Stadium, Mumbai   29 March 2023

Gujarat Titans 199/5 (20.0)

vs

Sunrisers Hyderabad   195/6 (20.0)

Match Ended ( Day – Match 40 ) Gujarat Titans beat Sunrisers Hyderabad by 5 wickets

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Live Updates
23:17 (IST) 27 Apr 2022
குஜராத் அணியின் வெற்றிக்கு 6 பந்துகளில் 22 ரன்கள் தேவை!

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 196 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்ததி வரும் குஜராத் டைட்டன்ஸ் அணி 19 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 174 ரன்களை சேர்த்துள்ளது.

தற்போது குஜராத் அணியின் வெற்றிக்கு 6 பந்துகளில் 22 ரன்கள் தேவை.

23:13 (IST) 27 Apr 2022
குஜராத் அணியின் வெற்றிக்கு 12 பந்துகளில் 35 ரன்கள் தேவை!

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 196 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்ததி வரும் குஜராத் டைட்டன்ஸ் அணி 18 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 161 ரன்களை சேர்த்துள்ளது.

தற்போது குஜராத் அணியின் வெற்றிக்கு 12 பந்துகளில் 35 ரன்கள் தேவை.

23:05 (IST) 27 Apr 2022
பந்துவீச்சில் மிரட்டும் உம்ரன் மாலிக்; கதிகலங்கிய குஜராத் வீரர்கள்!

196 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்ததி வரும் குஜராத் டைட்டன்ஸ் அணியை பந்துவீச்சில் மிரட்டி வரும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இதுவரை வீழ்ந்த 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார் வேகப்பந்துவீச்சாளர் உம்ரன் மாலிக். இந்த 5 விக்கெட்டுகளில் 4 விக்கெட்டுகளை கிளீன் போல்ட் -அவுட் செய்துள்ளார்.

22:51 (IST) 27 Apr 2022
குஜராத் அணியின் வெற்றிக்கு 30 பந்துகளில் 61 ரன்கள் தேவை!

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 196 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்ததி வரும் குஜராத் டைட்டன்ஸ் அணி 14 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 135 ரன்களை சேர்த்துள்ளது.

தற்போது குஜராத் அணியின் வெற்றிக்கு 30 பந்துகளில் 61 ரன்கள் தேவை.

22:49 (IST) 27 Apr 2022
அரைசதம் அடித்த சாஹா அவுட்; 14 ஓவர்கள் முடிவில் குஜராத்!

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 196 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்ததி வரும் குஜராத் டைட்டன்ஸ் அணி 14 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 127 ரன்களை சேர்த்துள்ளது.

அந்த அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்த தொடக்க வீரர் விருத்திமான் சாஹா, 38 பந்துகளில் 11 பவுண்டரிகள் 1 சிக்ஸருடன் 68 ரன்கள் எடுத்து நிலையில், உம்ரன் மாலிக் பந்துவீச்சில் க்ளீன் போல்ட் ஆகி வெளியேறினார்.

22:30 (IST) 27 Apr 2022
சாஹா அரைசதம்; வலுவான நிலையில் குஜராத்!

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 196 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்ததி வரும் குஜராத் டைட்டன்ஸ் அணியில் தொடக்க வீரர் விருத்திமான் சாஹா அரைசதம் அடித்துள்ளார். அவர் 30 பந்துகளில் 8 பவுண்டரிகள் 1 சிக்ஸருடன் 52 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார்.

தற்போது குஜராத் அணியின் வெற்றிக்கு 54 பந்துகளில் 100 ரன்கள் தேவை.

22:26 (IST) 27 Apr 2022
2 விக்கெட்டுகளை இழந்த குஜராத்துக்கு சிறப்பான தொடக்கம்!

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 196 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்ததி வரும் குஜராத் டைட்டன்ஸ் அணி 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 92 ரன்களை சேர்த்துள்ளது.

அந்த அணியின் தொடக்க வீரர் ஷுப்மான் கில் 22 ரன்னிலும் கேப்டன் ஹர்திக் பாண்டியா 10 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

21:36 (IST) 27 Apr 2022
அபிஷேக், மார்க்ரம் அரைசதம்; குஜராத்துக்கு 196 ரன்கள் இலக்கு!

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 195 ரன்களை சேர்த்துள்ளது. அந்த அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தொடக்க வீரர் அபிஷேக் சர்மா (65), ஐடன் மார்க்ரம் (56) அரைசதம் விளாசினர். கடைசி ஓவர்களில் அதிரடியாக விளையாடி வந்த ஷஷாங்க் சிங் 3 சிக்ஸர் ஒரு பவுண்டரியுடன் 25 ரன்கள் எடுத்தார்.

டாஸ் வென்று முதலில் பந்துவீசிய குஜராத் டைட்டன்ஸ் அணி தரப்பில் முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும், அல்ஜாரி ஜோசப், யாஷ் தயால் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். தற்போது 96 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்த குஜராத் களமிறங்கியுள்ளது.

21:07 (IST) 27 Apr 2022
அரைசதம் அடித்த ஐடன் மார்க்ரம் அவுட்!

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்து வரும் ஐதராபாத் அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மிடில் – ஆடர் வீரர் ஐடன் மார்க்ரம் அரைசதம் அடித்து ஆட்டமிழந்து வெளியேறினார். அவர் 40 பந்துகளில் 3 சிக்ஸர் 2 பவுண்டரிகளை துரத்தி 56 ரன்கள் எடுத்தார்.

தற்போது ஐதராபாத் அணி 18 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 161 ரன்களை சேர்த்துள்ளது.

20:53 (IST) 27 Apr 2022
அரைசதம் அடித்த அபிஷேக் சர்மா அவுட்!

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்து வரும் ஐதராபாத் அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த தொடக்க வீரர் அபிஷேக் சர்மா ஆட்டமிழந்து வெளியேறினார். அவர் 42 பந்துகளில் 3 சிக்ஸர் 6 பவுண்டரிகளை துரத்தி 65 ரன்கள் சேர்த்தார்.

20:43 (IST) 27 Apr 2022
அரைசதம் அடித்த அபிஷேக் சர்மா; வலுவான நிலையில் ஐதராபாத்!

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி பேட்டிங் செய்து வருகிறது. தற்போது அந்த அணி 13 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்கள் இழப்பிற்கு 115 ரன்களை சேர்த்துள்ளது.

ஐதராபாத் அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா 35 பந்துகளில் 3 சிக்ஸர் 4 பவுண்டரிகளுடன் அரைசதம் அடித்தார். அவர் தற்போது 52 ரன்களுடனும், ஐடன் மார்க்ரம் 29 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

20:28 (IST) 27 Apr 2022
10 ஓவர்கள் முடிவில் ஐதராபாத்!

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி பேட்டிங் செய்து வருகிறது. தற்போது அந்த அணி 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்கள் இழப்பிற்கு 84 ரன்களை சேர்த்துள்ளது.

ஐதராபாத் அணியில் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா 36 ரன்களுடனும், ஐடன் மார்க்ரம் 14 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

20:08 (IST) 27 Apr 2022
பவர்பிளே முடிவில் ஐதராபாத்!

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி பேட்டிங் செய்து வருகிறது. தற்போது அந்த அணி 6 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்கள் இழப்பிற்கு 53 ரன்களை சேர்த்துள்ளது.

ஐதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் 5 ரன்னிலும், பின்னர் வந்த , ராகுல் திரிபாதி 16 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

19:48 (IST) 27 Apr 2022
கேப்டன் வில்லியம்சன் அவுட்!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்கும் 40வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதன்படி, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் அபிஷேக் சர்மா – கேப்டன் கேன் வில்லியம்சன் ஜோடி தொடக்க வீரர்களாக களமிறங்கிய நிலையில், கேப்டன் கேன் வில்லியம்சன் 6 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

19:18 (IST) 27 Apr 2022
குஜராத் டைட்டன்ஸ் பிளேயிங் லெவன்!

விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), ஷுப்மான் கில், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), அபினவ் மனோகர், டேவிட் மில்லர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், அல்ஜாரி ஜோசப், லாக்கி பெர்குசன், யாஷ் தயால், முகமது ஷமி.

19:17 (IST) 27 Apr 2022
சன்ரைசர்ஸ் ஐதராபாத் பிளேயிங் லெவன்!

அபிஷேக் சர்மா, கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), ஷஷாங்க் சிங், வாஷிங்டன் சுந்தர், மார்கோ ஜான்சன், புவனேஷ்வர் குமார், உம்ரான் மாலிக், டி நடராஜன்

19:17 (IST) 27 Apr 2022
டாஸ் வென்ற குஜராத் பந்துவீச்சு தேர்வு; ஐதராபாத் முதலில் பேட்டிங்!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்கும் 40வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்திற்கான டாஸ் தற்போது சுண்டப்பட்ட நிலையில், டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதன்படி, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கும்.

18:40 (IST) 27 Apr 2022
போட்டி கணிப்புகள்!

1:

குஜராத் டைட்டன்ஸ் அணி டாஸ் வென்றால் முதலில் பந்துவீசும்

பவர்பிளே ஸ்கோர்: 45-50 ஆக இருக்கும்.

ஐதராபாத் அணி 160-170 ரன்கள் சேர்க்க வாய்ப்பு

2:

ஐதராபாத் டாஸ் வென்று முதலில் பந்துவீசும்

பவர்பிளே ஸ்கோர்: 50-55 ஆக இருக்கும்.

குஜராத் டைட்டன்ஸ் அணி 170-180 ரன்கள் சேர்க்க வாய்ப்பு

இன்றைய ஆட்டத்தில் இரண்டாவது பேட்டிங் செய்யும் அணியே பெற அதிக வாய்ப்பு.

18:28 (IST) 27 Apr 2022
குஜராத் டைட்டன்ஸ் அணியின் உத்தேச வீரர்கள் பட்டியல்!

மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), ஷுப்மன் கில், விஜய் சங்கர், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டேவிட் மில்லர், அபினவ் மனோகர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், லாக்கி பெர்குசன், முகமது ஷமி, யாஷ் தயாள்.

18:27 (IST) 27 Apr 2022
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் உத்தேச வீரர்கள் பட்டியல்!

அபிஷேக் சர்மா, கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), ஷஷாங்க் சிங், ஜே சுசித், புவனேஷ்வர் குமார், மார்கோ ஜான்சன், உம்ரான் மாலிக், டி நடராஜன்.

18:18 (IST) 27 Apr 2022
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் வீரர்கள் பட்டியல்!

அபிஷேக் சர்மா, கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராகுல் திரிபாதி, நிக்கோலஸ் பூரன்(விக்கெட் கீப்பர்), ஐடன் மார்க்ரம், ஷஷாங்க் சிங், ஜகதீஷா சுசித், புவனேஷ்வர் குமார், மார்கோ ஜான்சன், உம்ரான் மாலிக், டி நடராஜன், சீன் அபோட், ரவிக்குமார் சமர்த், ஸ்ரேயாஸ் கோபால், க்ளென் பிலிப்ஸ், விஷ்ணு வினோத், பிரியம் கார்க், கார்த்திக் தியாகி, ரொமாரியோ ஷெப்பர்ட், ஃபசல்ஹாக் ஃபரூக்கி, அப்துல் சமத், சவுரப் துபே.

18:18 (IST) 27 Apr 2022
குஜராத் டைட்டன்ஸ் அணியின் வீரர்கள் பட்டியல்!

மேத்யூ வேட்(விக்கெட் கீப்பர்), ஷுப்மன் கில், சாய் சுதர்சன், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டேவிட் மில்லர், அபினவ் மனோகர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், லாக்கி பெர்குசன், முகமது ஷமி, தர்ஷன் நல்கண்டே, விருத்திமான் சாஹா, பிரதீப் சங்வான், பிரதீப் சங்வான் ஆரோன், ஜெயந்த் யாதவ், விஜய் சங்கர், குர்கீரத் சிங் மான், அல்சாரி ஜோசப், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், ரஹ்மானுல்லா குர்பாஸ், டொமினிக் டிரேக்ஸ், யாஷ் தயாள், நூர் அகமது.

18:15 (IST) 27 Apr 2022
7:30 மணிக்கு தொடங்கும் ஆட்டம்!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்கும் 40வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

18:15 (IST) 27 Apr 2022
‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ லைவ் பிளாக்கு – க்கு அன்புடன் வரவேற்கிறோம்!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் குஜராத் – ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் குறித்து உடனுக்குடன் தெரிந்துகொள்ள ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ லைவ் பிளாக்குடன் இணைந்திருங்கள்.

Web Title: Ipl 2022 gt vs srh live score online