scorecardresearch

KKR vs MI Highlights: சிக்ஸர் மழை பொழிந்த கம்மின்ஸ்; மும்பையை வீழ்த்திய கொல்கத்தாவுக்கு அபார வெற்றி!

IPL 2022, Kolkata Knight Riders vs Mumbai Indians (KKR vs MI) Check Live score and live updates Tamil News: மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா அபார வெற்றி பெற்றது.

IPL 2022, KKR vs MI LIVE score

IPL 2022, KKR vs MI Highlights in tamil: 15வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் புனேயில் நேற்றிரவு நடந்த 14வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பந்துவீசுவதாக அறிவித்தார். இதனால், மும்பை அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.

மும்பை அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மா – இஷான் கிஷன் களமிறங்கிய நிலையில், கேப்டன் ரோகித் 3 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் களம் புகுந்த இளம் வீரர் டெவால்ட் ப்ரீவிஸ் 19 பந்துகளில் 2 சிக்ஸர் 2 பவுண்டரிகளை துரத்தி 29 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார்.

நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தி வந்த திலக் வர்மா – சூரியகுமார் யாதவ் ஜோடியில், 35 பந்துகளில் 2 சிக்ஸர் 5 பவுண்டரிகளை விரட்டி அரைசதம் கடந்த சூரியகுமார் யாதவ் 52 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். களத்தில் இருந்த திலக் வர்மா – பொல்லார்ட் ஜோடியில், திலக் வர்மா 38 ரன்கள் எடுத்தார். 3 சிக்ஸர்களை பறக்கவிட்ட ஆல்ரவுண்டர் வீரர் பொல்லார்ட் 5 பந்துகளில் 22 ரன்கள் சேர்த்தார்.

இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த மும்பை அணி 161 ரன்கள் சேர்த்தது. இதனால் கொல்கத்தா அணிக்கு 162 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. கொல்கத்தா அணி தரப்பில் பாட் கம்மின்ஸ் 2 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ், வருண் சர்க்கரவத்தி தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

162 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய கொல்கத்தா அணியில் தொடக்க வீரர் அஜிங்க்யா ரஹானே 7 ரன்னில் அவுட் ஆனார். பின்னர் வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 10 ரன்னிலும், 2 சிக்ஸர்களை விளாசிய சாம் பில்லிங்ஸ் 17 ரன்னிலும், தலா ஒரு சிக்ஸரை அடித்த நிதிஷ் ராணா 8 ரன்னிலும், ஆண்ட்ரே ரசல் 11 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

கொல்கத்தா வீரர்கள் அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்து இருந்தாலும் அணியின் ரன்ரேட் கீழே இறங்காமல் இருந்தது. இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் தொடக்க வீரர் வெங்கடேஷ் ஐயர். அவர் அணி விக்கெட் சரிவை சந்தித்தபோதும் சிக்ஸர், பவுண்டரிகளை விளாசி 41 பந்துகளில் 1 சிக்ஸர் 6 பவுண்டரிகளுடன் தனது அரைசத்தை பதிவு செய்திருந்தார்.

முன்னதாக, ஆண்ட்ரே ரசல் விக்கெட்டுக்கு பிறகு களத்தில் இருந்த வெங்கடேஷ் ஐயருடன் பாட் கம்மின்ஸ் ஜோடி சேர்ந்திருந்தார். களமிறங்கியது முதலே அதிரடியை தொடர்ந்த அவர், சந்தித்த முதல் பந்தையே சிக்ஸர் விளாசினார். அடுத்த பந்தை பவுண்டரி விரட்டினார். பின்னர், பும்ரா வீசிய 14.4வது ஓவரில் ஒரு சிக்ஸர், அடுத்த பந்தில் ஒரு பவுண்டரி அடித்தார்.

தொடர்ந்து டேனியல் சாம்ஸ் வீசிய 16வது ஓவரில் கம்மின்ஸ் 6,4,6,6,2,4,6 என ரன் மழை பொழிந்து வான வேடிக்கை காட்டினார். அத்துடன் ஆட்டத்தையும் முடித்து வைத்தார். அவரின் இந்த ருத்தர தாண்டவ ஆட்டத்தால் 4 ஓவர்கள் மீதமிருந்த நிலையில் இலக்கை எட்டிப்பிடித்தது கொல்கத்தா. மேலும், 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது.

ஏற்கனவே பந்துவீச்சில் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்த பாட் கம்மின்ஸ், 14 பந்துகளில் 4 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் என மிரட்டல் அடி அடித்து 56 ரன்களை குவித்தார். அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

4 ஆட்டங்களில் 3 வெற்றி ஒரு தோல்வியை பெற்றுள்ள கொல்கத்தா அணி 6 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. தொடர்ந்து 3 தோல்விகளை சந்தித்துள்ள மும்பை அணி பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது.

Indian Premier League, 2022Maharashtra Cricket Association Stadium, Pune   02 April 2023

Kolkata Knight Riders 162/5 (16.0)

vs

Mumbai Indians   161/4 (20.0)

Match Ended ( Day – Match 14 ) Kolkata Knight Riders beat Mumbai Indians by 5 wickets

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Live Updates
23:16 (IST) 6 Apr 2022
சிக்ஸர் மழை பொழிந்த கம்மின்ஸ்; மும்பையை வீழ்த்திய கொல்கத்தாவுக்கு அபார வெற்றி!

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 162 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மும்பையை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. சிக்ஸரில் வானவேடிக்கை காட்டிய கம்மின்ஸ் 14 பந்துகளில் 4 பவுண்டரி 6 சிக்ஸர்களுடன் 56 ரன்கள் குவித்தார்.

22:51 (IST) 6 Apr 2022
அரைசதம் விளாசினார் வெங்கடேஷ் ஐயர்!

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 162 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் நிதானம் கலந்த அதிரடியுடன் விளையாடி வரும் தொடக்க வீரர் வெங்கடேஷ் ஐயர் 41 பந்துகளில் 1 சிக்ஸர் 6 பவுண்டரிகளுடன் தனது அரைசத்தை பதிவு செய்தார்.

22:43 (IST) 6 Apr 2022
ஆண்ட்ரே ரசல் அவுட்!

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 162 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் அதிரடியாக விளையாடி வந்த ஆண்ட்ரே ரசல் 1 சிக்ஸர் 1 பவுண்டரியுடன் 11 ரன்கள் சேர்த்த நிலையில் அவுட் ஆனார். அவர் டைமல் மில்ஸ் வீசிய 13.1 வது ஓவரில் டெவால்ட் ப்ரீவிஸ் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்.

22:35 (IST) 6 Apr 2022
நிதிஷ் ராணா அவுட்; 12 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா!

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 162 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் அதிரடியாக விளையாடி வந்த நிதிஷ் ராணா 1 சிக்ஸர் விளாசி 8 ரன்னில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்.

தற்போது கொல்கத்தா அணி 12 ஓவர்கள் முடிவில் 89 ரன்களை சேர்த்துள்ளது. அந்த அணியின் கொல்கத்தா வெற்றிக்கு 48 பந்துகளில் 72 ரன்கள் தேவை.

22:24 (IST) 6 Apr 2022
பில்லிங்ஸ் அவுட்; 10 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா!

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 162 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் அதிரடியாக விளையாடி வந்த சாம் பில்லிங்ஸ் 2 சிக்ஸர்களுடன் 17 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

தற்போது கொல்கத்தா அணி 10 ஓவர்கள் முடிவில் 63 ரன்களை சேர்த்துள்ளது. அந்த அணியின் வெற்றிக்கு 60 பந்துகளில் 95 ரன்கள் தேவை.

22:03 (IST) 6 Apr 2022
பவர் பிளே முடிவில் கொல்கத்தா அணி!

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 162 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2 விக்கெட்டை இழந்துள்ளது. தற்போது அந்த அணி 6 ஓவர்கள் முடிவில் 35 ரன்களை சேர்த்துள்ளது.

கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 10 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

21:25 (IST) 6 Apr 2022
சூரியகுமார் அரைசதம்; பொல்லார்ட் சிக்ஸர் மழை: கொல்கத்தாவுக்கு 162 ரன்கள் வெற்றி இலக்கு!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 161 ரன்களை சேர்த்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக சூரியகுமார் அரைசதம் 52 ரன்கள் சேர்த்தார். கடை ஓவர்களில் களத்தில் இருந்த ஆல்ரவுண்டர் வீரர் பொல்லார்ட் 3 சிக்ஸர்களை பறக்கவிட்டு 5 பந்துகளில் 22 ரன்கள் சேர்த்தார்.

கொல்கத்தா அணி தரப்பில் பாட் கம்மின்ஸ் 2 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ், வருண் சர்க்கரவத்தி தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். தற்போது கொல்கத்தா அணிக்கு 162 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

21:04 (IST) 6 Apr 2022
அரைசதம் விளாசினார் சூரியகுமார் யாதவ்!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்து வரும் நிலையில், அந்த அணி வீரர் சூரியகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி அரைசதம் விளாசினார். அவர் 35 பந்துகளில் 2 சிக்ஸர் 5 பவுண்டரிகளை விரட்டி 52 ரன்கள் சேர்த்துள்ளார்.

20:49 (IST) 6 Apr 2022
15 ஓவர்கள் முடிவில் மும்பை அணி!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது. தற்போது அந்த அணி 15 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 85 ரன்களை சேர்த்துள்ளது.

மும்பை அணி 3 விக்கெட்டுகளை பறிகொடுத்துள்ள நிலையில் களத்தில் உள்ள சூரியகுமார் – திலக் வர்மா ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

20:21 (IST) 6 Apr 2022
2 விக்கெட்டுகளை பறிகொடுத்த மும்பை; நிதானம் ஆட்டம்!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது. தற்போது அந்த அணி 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 54 ரன்களை சேர்த்துள்ளது.

மும்பை அணி 2 விக்கெட்டுகளை பறிகொடுத்துள்ள நிலையில் களத்தில் உள்ள சூரியகுமார் – இஷான் கிஷன் ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

20:10 (IST) 6 Apr 2022
அதிரடி காட்டிய இளம் வீரர் அவுட்!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணியில் கேப்டன் ரோகித் விக்கெட்டுக்கு பின்னர் களம் புகுந்த இளம் வீரர் டெவால்ட் ப்ரீவிஸ் 19 பந்துகளில் 2 சிக்ஸர் 2 பவுண்டரிகளை துரத்தி 29 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார்.

தற்போது மும்பை அணி 8 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 48 ரன்களை சேர்த்துள்ளது.

20:06 (IST) 6 Apr 2022
பவர் பிளே முடிவில் மும்பை அணி!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது. தற்போது 6 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 35 ரன்களை சேர்த்துள்ளது. அந்த அணியின் கேப்டன் ரோகித் சர்மா 3 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

19:47 (IST) 6 Apr 2022
கேப்டன் ரோகித் அவுட்!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்து வரும் நிலையில், அந்த அணியின் கேப்டன் ரோகித் சர்மா 3 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

19:40 (IST) 6 Apr 2022
ஆட்டம் இனிதே ஆரம்பம்!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் டாஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதனால், மும்பை அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியுள்ளது.

மும்பை அணியில் தொடக்க வீரர்களாக இஷான் கிஷன் – கேப்டன் ரோகித் ஜோடி களமிறங்கியுள்ளனர்.

19:10 (IST) 6 Apr 2022
மும்பை இந்தியன்ஸ் பிளேயிங் லெவன்!

இஷான் கிஷன்(விக்கெட் கீப்பர்), ரோஹித் சர்மா(கேப்டன்), சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, கீரன் பொல்லார்ட், டேனியல் சாம்ஸ், டெவால்ட் ப்ரீவிஸ், முருகன் அஷ்வின், ஜஸ்பிரிட் பும்ரா, டைமல் மில்ஸ், பசில் தம்பி

19:09 (IST) 6 Apr 2022
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பிளேயிங் லெவன்!

அஜிங்க்யா ரஹானே, வெங்கடேஷ் ஐயர், ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), சாம் பில்லிங்ஸ் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் ராணா, ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன், பாட் கம்மின்ஸ், உமேஷ் யாதவ், ரசிக் சலாம், வருண் சக்கரவர்த்தி

19:06 (IST) 6 Apr 2022
டாஸ் வென்ற கொல்கத்தா பந்துவீச்சு தேர்வு; மும்பை முதலில் பேட்டிங்!

15வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் புனேயில் இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்கும் 14வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. தற்போது டாஸ் சுண்டப்பட்ட நிலையில், டாஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதனால், மும்பை அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கும்.

18:53 (IST) 6 Apr 2022
கொல்கத்தா – மும்பை அணிகள் நேருக்கு நேர் (KKR vs MI – ஹெட்-டு-ஹெட்)!

மொத்த ஆட்டங்கள் – 29

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வென்ற போட்டிகள் – 7

மும்பை இந்தியன்ஸ் வென்ற போட்டிகள் – 22

கொல்கத்தா – மும்பை அணிகளின் முந்தைய ஆட்டம்:

ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி ஷேக் சயீத் ஸ்டேடியத்தில் நடந்த கடைசி ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது.

கடைசியாக நடந்த ஐந்து ஆட்டங்களின் முடிவுகள்:

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

மும்பை இந்தியன்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

மும்பை இந்தியன்ஸ் அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

18:49 (IST) 6 Apr 2022
புனே மைதான வானிலை நிலவரம்!

இன் படி, வானிலை ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் மற்றும் மிகவும் சூடாக இருக்கும். மாலையில் வெப்பநிலை 26 டிகிரி மற்றும் 55 சதவீத ஈரப்பதத்துடன் இருக்கும். விளையாட்டில் பனி ஒரு முக்கிய காரணியாக இருக்கும் மற்றும் பனி சதவீதம் 20 சதவீதத்திற்கு அருகில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆட்டத்தின் போது மழை குறுக்கீட வாய்ப்பு இல்லை.

18:49 (IST) 6 Apr 2022
புனே மைதானம் எப்படி?

மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியமான புனே பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்து வருகிறது. எனினும், இரண்டாவது இன்னிங்ஸில் அப்படி அமையவில்லை. இங்கு தற்போதுவரை பனி அதிக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. எனவே டாஸ் வென்ற அணி முதலில் பேட்டிங் செய்யும் என எதிர்பார்க்கலாம்.

18:33 (IST) 6 Apr 2022
மும்பை இந்தியன்ஸ் அணியின் உத்தேச வீரர்கள் பட்டியல்!

ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), அன்மோல்ப்ரீத் சிங் அல்லது சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, கீரன் பொல்லார்ட், டிம் டேவிட், டேனியல் சாம்ஸ், முருகன் அஷ்வின், ஜஸ்பிரித் பும்ரா, டைமல் மில்ஸ், பாசில் தம்பி.

18:32 (IST) 6 Apr 2022
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உத்தேச வீரர்கள் பட்டியல்!

அஜிங்க்யா ரஹானே, வெங்கடேஷ் ஐயர், ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), நிதிஷ் ராணா, சாம் பில்லிங்ஸ் (விக்கெட் கீப்பர்), ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன், டிம் சவுத்தி/பாட் கம்மின்ஸ், சிவம் மாவி, உமேஷ் யாதவ், வருண் சக்ரவர்த்தி.

18:27 (IST) 6 Apr 2022
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள் பட்டியல்!

ஆரோன் பின்ச், அபிஜீத் தோமர், அஜிங்க்யா ரஹானே, பாபா இந்திரஜித், நிதிஷ் ராணா, பிரதம் சிங், ரிங்கு சிங், ஷ்ரேயாஸ் ஐயர்(கேப்டன்), அசோக் சர்மா, பாட் கம்மின்ஸ், ரசிக் தார், சிவம் மவி, டிம் சவுத்தி, உமேஷ் சக்கரவர்த்தி, வருண் சக்கரவர்த்தி, அமன் கான், ஆண்ட்ரே ரஸ்ஸல், அனுகுல் ராய், சமிகா கருணாரத்னே, முகமது நபி, ரமேஷ் குமார், சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர், சாம் பில்லிங்ஸ், ஷெல்டன் ஜாக்சன்

18:27 (IST) 6 Apr 2022
மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் பட்டியல்!

ரோஹித் சர்மா (கேப்டன்), அன்மோல்பிரீத் சிங், ராகுல் புத்தி, ராமன்தீப் சிங், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, டிம் டேவிட், அர்ஜுன் டெண்டுல்கர், பாசில் தம்பி, ஹிருத்திக் ஷோக்கீன், ஜஸ்பிரித் பும்ரா, ஜெய்தேவ் உனட்கட், ஜோப்ரா ஆர்ச்சர், மயங்க் மார்கண்டே , ரிலே மெரிடித், டைமல் மில்ஸ், அர்ஷத் கான், டேனியல் சாம்ஸ், டெவால்ட் ப்ரீவிஸ், ஃபேபியன் ஆலன், கீரன் பொல்லார்ட், சஞ்சய் யாதவ், ஆர்யன் ஜூயல் மற்றும் இஷான் கிஷன்

18:26 (IST) 6 Apr 2022
7:30 மணிக்கு தொடங்கும் ஆட்டம்!

15வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் புனேயில் இன்று இரவு தொடங்கும் 14வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

18:16 (IST) 6 Apr 2022
‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ லைவ் பிளாக்கு – க்கு அன்புடன் வரவேற்கிறோம்!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் கொல்கத்தா – மும்பை அணிகளுக்கு இடையிலான ஆட்டம் குறித்து உடனுக்குடன் தெரிந்துகொள்ள 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்' லைவ் பிளாக்குடன் இணைந்திருங்கள்.

Web Title: Ipl 2022 kkr vs mi live score