IPL 2022, KKR vs PBKS highlights in tamil: 15வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்றிரவு நடந்த 8வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். இதனையடுத்து பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.
பஞ்சாப் அணியில் கேப்டன் மயங்க் அகர்வால் – ஷிகர் தவான் ஜோடி தொடக்க ஆட்டக்காரர்களாக களமாடிய நிலையில், அணிக்கு வலுவான தொடக்கம் கொடுக்க நினைத்த கேப்டன் மயங்க் அகர்வால் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த பானுகா ராஜபக்சே ஷிகர் தவானுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பானுகா 3 சிக்ஸர் 3 பவுண்டரிகளை விரட்டி 31 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அவருடன் மறுமுனையில் விளையாடி வந்த தவான் 16 ரன்னில் அவுட் ஆனார். இதனால் பஞ்சாப் அணி பவர் முடிவில் முதல் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. களத்தில் இருந்த லியாம் லிவிங்ஸ்டோன் - ராஜ் பாவா ஜோடி சிறிது நேரம் விக்கெட் சரிவை தடுத்த நிலையில், உமேஷ் யாதவ் வீசிய 8.6 வது லிவிங்ஸ்டோன் (19) கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். ராஜ் பாவா (11) அடுத்த ஓவரிலே ஆட்டமிழந்து வெளியேறினார்.
தொடர்ந்து வந்த வீரர்களில் ஃபினிஷர் ஷாருக் கான் பூஜ்ஜிய ரன்னில் நடையை கட்டினார். 1 சிக்ஸர், 1 பவுண்டரியை விளாசிய ஹர்பிரீத் பிரார் 14 ரன்னில் அவுட் ஆனார். வெயில் மழை போல் பொழிந்த ககிசோ ரபாடா 25 ரன்னில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த அர்ஷ்தீப் சிங் ரன்-அவுட் ஆன நிலையில், பஞ்சாப் அணியின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. அந்த அணி 18.2வது ஓவரிலே அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 137 ரன்கள் சேர்த்தது.
We couldn't have asked for more! Onto our batters now 👊#KKRHaiTaiyaar #KKRvPBKS #IPL2022 pic.twitter.com/c2Zlbfyx9b
— KolkataKnightRiders (@KKRiders) April 1, 2022
138 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய கொல்கத்தா அணிக்கு நல்ல தொடக்கம் கிடைக்கவில்லை. அந்த அணியின் தொடக்க வீரர்கள் வெங்கடேஷ் ஐயர் 3 ரன்னிலும், அஜிங்க்யா ரஹானே 12 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். சிறிது நேரம் நிதானமாக விளையாடி 5 பவுண்டரிகளை ஓடவிட்ட கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 26 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் வந்த நிதிஷ் ராணா பூஜ்ஜிய ரன்னில் நடையைக் கட்டினார்.
கொல்கத்தா அணி 41 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்த தருணத்தில் களம் புகுந்த ஆல்ரவுண்டர் வீரர் ஆண்ட்ரே ரசல் விக்கெட் சரிவை தடுக்க சிறிது நேரம் நிதானம் காட்டினார். பிறகு பொங்கி எழுந்த அவர் பஞ்சாப் அணியினரின் பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். சிக்கி பந்துகளையெல்லாம் பவுண்டரி கோட்டிற்கு மேல் பறக்க விட்டார். அவரின் அதிரடி ஆட்டத்தால் கொல்கத்தா அணியின் ஸ்கோர் மளமளவென உயரத்தொடங்கியது.
A 𝙕𝙊𝙍𝘿𝘼𝘼𝙍 knock 💥
Dre Russ, you the man! 💪#AndreRussell #KKRHaiTaiyaar #KKRvPBKS #IPL2022 pic.twitter.com/OXQWgCoWyE— KolkataKnightRiders (@KKRiders) April 1, 2022
இதற்கிடையில், ரசல் 26 பந்துகளில் 5 சிக்ஸர் 2 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் எடுத்து தனது அரைசதத்தை பதிவு செய்தார். இருப்பினும் தனது அதிரடியை நிறுத்தாத அவர் 14 மற்றும் 15வது ஓவர்களில் பவுண்டரி, சிக்ஸர்களை பறக்கவிட்டு அணியை வெற்றியின் பாதைக்கு அழைத்துச் சென்றார். 31 பந்துகளில் 8 சிக்ஸர் 2 பவுண்டரிகளை விளாசிய ரசல் 70 ரன்களை குவித்தார்.
ANDRE RUSSELL. That's it. That's the tweet. 😍#AndreRussell #KKRHaiTaiyaar #KKRvPBKS #IPL2022 pic.twitter.com/nNOcYYhyrR
— KolkataKnightRiders (@KKRiders) April 1, 2022
ரசலின் மிரட்டல் அடியால் 14.3வது ஓவரிலே வெற்றி இலக்கை எட்டிபிடித்த கொல்கத்தா அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் பஞ்சாப்பை வீழ்த்தியது. மேலும், இந்த அபார வெற்றியின் மூலம் கொல்கத்தா அதன் 2வது வெற்றியை பதிவு செய்துள்ளது.
A thumping win for @KKRiders 💪 💪
The @ShreyasIyer15 -led unit returns to winning ways as they beat #PBKS by 6⃣wickets👏 👏
Scorecard ▶️ https://t.co/JEqScn6mWQ #TATAIPL | #KKRvPBKS pic.twitter.com/UtmnpIufGJ— IndianPremierLeague (@IPL) April 1, 2022
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
- 22:51 (IST) 01 Apr 2022அரைசதம் விளாசினார் ஆண்ட்ரே ரசல்!
பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 138 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் கொல்கத்தா அணியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆல்ரவுண்டர் வீரர் ஆண்ட்ரே ரசல் அரைசதம் விளாசினார். அவர் 26 பந்துகளில் 5 சிக்ஸர் 2 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் எடுத்தார்.
FIFTY!
— IndianPremierLeague (@IPL) April 1, 2022
What a half-century for @Russell12A. Full of fireworks 💥💥
Live - https://t.co/lO2arKbxgf kkrvpbks tataipl pic.twitter.com/3ODVKJGoAu - 22:49 (IST) 01 Apr 2022சிக்ஸர் மழை பொழிந்த ஆண்ட்ரே ரசல்... 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அபார வெற்றி!
பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 138 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் கொல்கத்தா அணியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஆல்ரவுண்டர் வீரர் ஆண்ட்ரே ரசல் சிக்ஸர் மழை பொழிந்து அணியை வெற்றியின் பாதைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அவரின் அதிரடி ஆட்டத்தால் 14.3வது ஓவரிலே வெற்றி இலக்கை எட்டிய கொல்கத்தா அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் பஞ்சாப்பை வீழ்த்தியுள்ளது.
- 22:09 (IST) 01 Apr 20229 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா!
பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 138 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் கொல்கத்தா அணி தற்போது வரை 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது. அந்த அணி 9 ஓவர்கள் 56 ரன்களை சேர்த்துள்ளது.
கொல்கத்தாவின் முன்னணி வீரர்களான அஜிங்க்யா ரஹானே, வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா, கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்டோர் ஆட்டமிழந்து வெளியேறியுள்ளனர்.
- 22:04 (IST) 01 Apr 2022நெருக்கடி கொடுக்கும் பஞ்சாப்; 4 விக்கெட்டுகளை பறிகொடுத்த கொல்கத்தா!
பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 138 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் கொல்கத்தா அணி தற்போது வரை 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது. அந்த அணி 7 ஓவர்கள் 51 ரன்களை சேர்த்துள்ளது.
கொல்கத்தாவின் முன்னணி வீரர்களான அஜிங்க்யா ரஹானே, வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா, கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்டோர் ஆட்டமிழந்து வெளியேறியுள்ளனர்.
- 21:34 (IST) 01 Apr 2022பந்துவீச்சில் மிரட்டிய கொல்கத்தா; பஞ்சாப் 137 ரன்களில் சுருண்டது!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 18.2 வது ஓவரிலே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 137 ரன்களை சேர்த்துள்ளது. அந்த அணியில் பானுகா ராஜபக்ச அதிகபட்சமாக 31 ரன்களை சேர்த்தார்.
பந்துவீச்சில் மிரட்டிய கொல்கத்தா அணி தரப்பில் உமேஷ் யாதவ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
We couldn't have asked for more! Onto our batters now 👊kkrhaitaiyaar kkrvpbks ipl2022 pic.twitter.com/c2Zlbfyx9b
— KolkataKnightRiders (@KKRiders) April 1, 2022 - 21:33 (IST) 01 Apr 2022பந்துவீச்சில் மிரட்டிய கொல்கத்தா; பஞ்சாப் 137 ரன்களில் சுருண்டது!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 18.2 வது ஓவரிலே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 137 ரன்களை சேர்த்துள்ளது. அந்த அணியில் பானுகா ராஜபக்ச அதிகபட்சமாக 31 ரன்களை சேர்த்தார்.
பந்துவீச்சில் மிரட்டிய கொல்கத்தா அணி தரப்பில் உமேஷ் யாதவ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
We couldn't have asked for more! Onto our batters now 👊kkrhaitaiyaar kkrvpbks ipl2022 pic.twitter.com/c2Zlbfyx9b
— KolkataKnightRiders (@KKRiders) April 1, 2022 - 20:58 (IST) 01 Apr 2022பந்துவீச்சில் மிரட்டும் கொல்கத்தா; 8 விக்கெட்டுகளை பறிகொடுத்த பஞ்சாப்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்து வரும் பஞ்சாப் கிங்ஸ் அணி தற்போதுவரை 8 விக்கெட்டுகளை இழந்துள்ளது. அந்த அணி 16 ஓவர்கள் முடிவில் 104 ரன்களை சேர்த்துள்ளது.
கொல்கத்தா அணி தரப்பில் பந்துவீச்சில் மிரட்டிய உமேஷ் யாதவ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
This is an Umesh Yadav appreciation tweet 😍
— KolkataKnightRiders (@KKRiders) April 1, 2022
4-1-23-4 - Figures we aren't forgetting for a long long time.kkrhaitaiyaar kkrvpbks ipl2022 pic.twitter.com/glShXnDWOt - 20:22 (IST) 01 Apr 2022அடுத்தடுத்த விக்கெட் இழப்பு; அதிரடியை தொடரும் பஞ்சாப்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்து வரும் பஞ்சாப் கிங்ஸ் அணி தற்போதுவரை 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது. அந்த அணி 9 ஓவர்கள் முடிவில் 78 ரன்களை சேர்த்துள்ளது.
- 20:10 (IST) 01 Apr 2022பவர் பிளே முடிவில் பஞ்சாப் அணி!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்து வரும் பஞ்சாப் கிங்ஸ் அணி பவர் பிளே முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 62 ரன்களை சேர்த்துள்ளது.
- 19:36 (IST) 01 Apr 2022கேப்டன் மயங்க் அகர்வால் அவுட்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்து வரும் பஞ்சாப் கிங்ஸ் அணி அதன் முதல் விக்கெட்டை இழந்துள்ளது. அந்த அணியின் கேப்டன் மயங்க் அகர்வால் 1 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
- 19:32 (IST) 01 Apr 2022ஆட்டம் இனிதே ஆரம்பம்!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்கும் 8வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. தற்போது டாஸ் சுண்டப்பட்ட நிலையில், டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
இதனையடுத்து பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியுள்ளது. அந்த அணியில் கேப்டன் மயங்க் அகர்வால் - ஷிகர் தவான் ஜோடி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கியுள்ளனர்.
- 19:15 (IST) 01 Apr 2022பஞ்சாப் கிங்ஸ் பிளேயிங் லெவன்!
மயங்க் அகர்வால் (கேப்டன்), ஷிகர் தவான், லியாம் லிவிங்ஸ்டோன், பானுகா ராஜபக்சே (விக்கெட் கீப்பர்), ஷாருக் கான், ஒடியன் ஸ்மித், ராஜ் பாவா, அர்ஷ்தீப் சிங், ஹர்பிரீத் பிரார், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர்.
Jungle mein naya 🦁 aaya hai, savdhaan raho, satark raho ⚠️shersquad, Rabada nu best wishes bhej do 👇saddapunjab kkrvpbks ipl2022 punjabkings ਾਡਾਪੰਜਾਬ pic.twitter.com/TGdYH9sOH4
— Punjab Kings (@PunjabKingsIPL) April 1, 2022 - 19:13 (IST) 01 Apr 2022கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பிளேயிங் லெவன்!
அஜிங்க்யா ரஹானே, வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா, ஸ்ரேயாஸ் ஐயர்(கேப்டன்), சாம் பில்லிங்ஸ்(விக்கெட் கீப்பர்), ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன், டிம் சவுத்தி, உமேஷ் யாதவ், சிவம் மாவி, வருண் சக்கரவர்த்தி
Here's how we line up for kkrvpbks! 💪
— KolkataKnightRiders (@KKRiders) April 1, 2022
Sheldon makes way for Shivam Mavi.@winzoofficial kkrhaitaiyaar ipl2022 pic.twitter.com/OZ8eBviRxJ - 19:11 (IST) 01 Apr 2022டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சு தேர்வு; பஞ்சாப் முதலில் பேட்டிங்!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்கும் 8வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. தற்போது டாஸ் சுண்டப்பட்ட நிலையில், டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதனால், பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கும்.
kkr have won the toss and they will bowl first at the Wankhede.
— IndianPremierLeague (@IPL) April 1, 2022
Live - https://t.co/lO2arKbxgf kkrvpbks tataipl pic.twitter.com/cbGB5lfT5s - 18:52 (IST) 01 Apr 2022ஹெட் டு ஹெட் ரெக்கார்ட்ஸ்: கேகேஆர் vs பிபிகேஎஸ் - நேருக்கு நேர்!
ஐபிஎல் வரலாற்றில் இந்த இரு அணிகளும் ஒன்றுக்கொன்று எதிராக 29 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 19 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது, பஞ்சாப் கிங்ஸ் 10 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
இந்தியாவில் விளையாடிய போட்டி: 23 (கேகேஆர் 17, பிபிகேஎஸ் 6)
இந்தியாவுக்கு வெளியே விளையாடிய போட்டிகள்: 5 (கேகேஆர் 2, பிபிகேஎஸ் 3)
கேகேஆர் vs பிபிகேஎஸ் இடையேயான ஆட்டங்களில் அதிக ரன்கள் எடுத்த வீரர் கௌதம் கம்பீர்- 492
கேகேஆர் vs பிபிகேஎஸ் இடையேயான ஆட்டங்களில் அதிக விக்கெட்டுகள் – சுனில் நரைன் -31
கடைசியாக நடந்த 5 போட்டிகளில் கொல்கத்தா 3ல் வெற்றி, பஞ்சாப் 2ல் வெற்றி.
வான்கடே மைதானத்தில் இவ்விரு அணிகளும் முதல்முறையாக நேருக்கு நேர் சந்திக்கின்றன.
கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றன.
𝗦𝗵𝗲𝗿 𝗵𝗮𝗶𝗻 𝘁𝗮𝗶𝘆𝗮𝗮𝗿 𝗳𝗼𝗿 kkrvpbks 👊saddapunjab ipl2022 punjabkings ਾਡਾਪੰਜਾਬ pic.twitter.com/ZHJyWN93kS
— Punjab Kings (@PunjabKingsIPL) April 1, 2022"𝙏𝙞𝙜𝙚𝙧 𝙠𝙖𝙧𝙚𝙜𝙖 𝙨𝙝𝙞𝙠𝙖𝙖𝙧!" 🐅kkrhaitaiyaar kkrvpbks ipl2022 pic.twitter.com/UFqDoVaRbY
— KolkataKnightRiders (@KKRiders) April 1, 2022 - 18:45 (IST) 01 Apr 2022வான்கடே எப்படி?
வான்கடே ஸ்டேடியத்தில் உள்ள ஆடுகளம் எப்போதும் பேட்டிங்கிற்கு சிறந்தது. ஆனால், சற்று பவுன்ஸ் இருக்கும். அதேவேளையில், குறுகிய பவுண்டரிகள் பேட்டர்களுக்கு கூடுதல் ரன் சேர்க்க உதவும்.
இங்கு மிகப்பெரிய பின்னடைவு பனிப்பொழிவு தான். எனவே, டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீசவே நினைக்கும். தொடரில் இதுவரை நடந்த 7 போட்டிகளில் டாஸ் வென்ற அணியே வெற்றி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- 18:35 (IST) 01 Apr 2022கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வீரர்கள் பட்டியல்!
அஜிங்க்யா ரஹானே, வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா, ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), சாம் பில்லிங்ஸ், ஷெல்டன் ஜாக்சன், ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன், டிம் சவுத்தி, உமேஷ் யாதவ், வருண் சக்கரவர்த்தி.
- 18:35 (IST) 01 Apr 2022பஞ்சாப் கிங்ஸ் அணியின் உத்தேச வீரர்கள் பட்டியல்!
ஷிகர் தவான், மயங்க் அகர்வால் (கேப்டன்), பானுகா ராஜபக்சே, லியாம் லிவிங்ஸ்டோன், ஷாருக் கான், ராஜ் அங்கத் பாவா, ஒடியன் ஸ்மித், ஹர்பிரீத் ப்ரார், ககிசோ ரபாடா, அர்ஷ்தீப் சிங், சந்தீப் சர்மா.
- 18:35 (IST) 01 Apr 2022கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வீரர்கள் பட்டியல்!
ஆரோன் பின்ச், அபிஜீத் தோமர், அஜிங்க்யா ரஹானே, பாபா இந்திரஜித், நிதிஷ் ராணா, பிரதம் சிங், ரிங்கு சிங், ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), அசோக் ஷர்மா, பாட் கம்மின்ஸ், ரசிக் தார், சிவம் மவி, டிம் சவுத்தி, உமேஷ் சக்கரவர்த்தி, வருண் சக்கரவர்த்தி, ஏ. கான், ஆண்ட்ரே ரஸ்ஸல், அனுகுல் ராய், சமிகா கருணாரத்னே, முகமது நபி, ரமேஷ் குமார், சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர், சாம் பில்லிங்ஸ், ஷெல்டன் ஜாக்சன்.
"𝘐𝘵'𝘴 𝘥𝘦𝘧𝘪𝘯𝘪𝘵𝘦𝘭𝘺 𝘢 𝘥𝘳𝘦𝘢𝘮 𝘤𝘰𝘮𝘦𝘣𝘢𝘤𝘬 𝘧𝘰𝘳 𝘮𝘦" 💜
— KolkataKnightRiders (@KKRiders) April 1, 2022
Charged up for yet another 𝙕𝙊𝙍𝘿𝘼𝘼𝙍 performance today! 👊@y_umesh • knightstv presented by @glancescreen I kkrhaitaiyaar kkrvpbks ipl2022 pic.twitter.com/OUhApWuIHw - 18:22 (IST) 01 Apr 2022பஞ்சாப் கிங்ஸ் அணியின் வீரர்கள் பட்டியல்!
ஷிகர் தவான், மயங்க் அகர்வால்(கேப்டன்), அர்ஷ்தீப் சிங், ககிசோ ரபாடா, ஜானி பேர்ஸ்டோ, ராகுல் சாஹர், ஹர்ப்ரீத் ப்ரார், ஷாருக் கான், பிரப்சிம்ரன் சிங், ஜிதேஷ் சர்மா, இஷான் போரல், லியாம் லிவிங்ஸ்டோன், ஒடியன் ஸ்மித், சந்தீப் சர்மா, ராஜ் அங்கத் பாவா தவான், பிரேரக் மன்காட், வைபவ் அரோரா, ரிட்டிக் சட்டர்ஜி, பால்தேஜ் தண்டா, அன்ஷ் படேல், நாதன் எல்லிஸ், அதர்வா டைடே, பானுகா ராஜபக்சே, பென்னி ஹோவெல்.
Shers ready to ride 😉 saddapunjab kkrvpbks ipl2022 punjabkings ਾਡਾਪੰਜਾਬ pic.twitter.com/wHY2w6sRzw
— Punjab Kings (@PunjabKingsIPL) April 1, 2022 - 18:21 (IST) 01 Apr 2022‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ லைவ் பிளாக்கு - க்கு அன்புடன் வரவேற்கிறோம்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்கும் 8வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
Hello & welcome from the Wankhede Stadium for Match 8⃣ of the tataipl 2022 👋
— IndianPremierLeague (@IPL) April 1, 2022
The @ShreyasIyer15-led @KKRiders takes on @mayankcricket's @PunjabKingsIPL tonight. 👏 👏 kkrvpbks
Which team are you rooting for? 🤔 🤔 pic.twitter.com/IX6JXd3APJ
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.