IPL 2022, LSG vs CSK score updates in tamil: 15வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பையில் உள்ள பிரபோர்ன் மைதானத்தில் நேற்றிரவு நடந்த 7வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் - அறிமுக அணியான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். இதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.
சென்னை அணி சார்பில் ருதுராஜ் கெய்க்வாட் - ராபின் உத்தப்பா ஜோடி தொடக்க வீரர்களாக களமிறங்கிய நிலையில், நல்ல தொடக்கம் கிடைக்காத தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 1 ரன் சேர்த்த நிலையில் ரன் -அவுட் ஆகி வெளியேறினார். ஆனால், மற்றொரு தொடக்க வீரரான உத்தப்பா தொடக்கம் முதலே அதிரடியாக விளையாட ஆரம்பித்தார். அவருடன் ஜோடி சேர்ந்த மொயீன் அலியும் அதிரடி காட்ட அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.
இந்த ஜோடியில் 26 பந்துகளில் 1 சிக்ஸர் 8 பவுண்டரிகளை விரட்டி அரைசதம் கடந்து அசத்திய உத்தப்பா 50 ரன்கள் சேர்ந்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த சிவம் டுபேவுடன் ஜோடி சேர்ந்த மொயீன் அலி தனது அதிரடியை இடைநிறுத்தாமல் தொடர்ந்திருந்தார். சிக்கிய பந்துகளையெல்லாம் சிதறடித்த அவர் 22 பந்துகளில் 4 பவுண்டரிகள் 2 சிக்ஸர்களை பறக்கவிட்டு 35 ரன்னில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து வந்த அம்பதி ராயுடு 2 சிக்ஸர் 2 பவுண்டரிகளுடன் 27 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். லக்னோ அணியின் பந்துவீச்சை வெளுத்து வாங்கிய சிவம் துபே அரைசதம் அடிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 49 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். 3 பவுண்டரிகளை துரத்திய கேப்டன் ஜடேஜா 17 ரன்னில் ஆட்டமிழந்தார்.
சிக்ஸருடன் ஆட்டத்தை தொடங்கிய முன்னாள் கேப்டன் தோனி 2 பவுண்டரிகளுடன் 16 ரன்கள் சேர்த்தார். இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் குவித்தது. இதனையடுத்து, லக்னோ அணிக்கு 211 ரன்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணையிக்கப்பட்டது.
தொடர்ந்து விளையாடிய லக்னோ அணியில் கேப்டன் கேஎல் ராகுல் - குயின்டன் டி காக் ஜோடி அணிக்கு வலுவான அடித்தளத்தை அமைத்தது. இந்த ஜோடியில் ராகுல் 40 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் வந்த மனிஷ் பாண்டே 5 ரன்னில் ஆட்டமிழக்க, குயின்டன் டி காக் ஜோடி சேர்ந்தார் எவின் லூயிஸ். நிலைத்து நின்று ஆடிய இந்த ஜோடியில் 61 ரன்னில் டி காக் அவுட் ஆனார்.
தொடர்ந்து வந்த தீபக் ஹூடா (13), ஆயுஷ் படோனி (19) ஜோடி சேர்ந்து விளையாடி எவின் லூயிஸ் அந்த அணி வெற்றி இலக்கை எளிதில் அடைய உதவினார். அவ்வப்போது விக்கெட் இழப்பு இருந்தாலும் ரன் ரேட்டை சரிய விடாமல் விளையாடி லக்னோ அணி 19.3 ஓவரில் இலக்கை எட்டிப்பிடித்தது. மேலும், சென்னை அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த அசத்தல் வெற்றியின் மூலம் அந்த அணி தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. சென்னை அணிக்கு இது 2வது தோல்வியாகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
- 23:24 (IST) 31 Mar 2022பிராவோ புதிய மைல்கல்!
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் டுவைன் பிராவோ முதலிடத்தை பிடித்துள்ளார். அவர் தற்போதுவரை 170 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
- 23:19 (IST) 31 Mar 2022தீபக் ஹூடா அவுட்!
சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 211 ரன்கள் வெற்றி இலக்கை துரத்தி வரும் லக்னோ அணி மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. லக்னோ அணியின் வெற்றிக்கு 16 பந்துகளில் 40 ரன்கள் தேவை!
இந்நிலையில், 13 ரன்கள் சேர்த்த தீபக் ஹூடா கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்.
- 23:03 (IST) 31 Mar 202215 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி!
சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ அணிக்கு 211 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த அணி 15 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் சேர்த்துள்ளது.
- 23:01 (IST) 31 Mar 2022குயின்டன் டி காக் அவுட்!
சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 211 ரன்கள் வெற்றி இலக்கை துரத்தி வரும் லக்னோ அணி மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இந்நிலையில், அரைசதம் கடந்து அசத்திய தொடக்க வீரர் குயின்டன் டி காக் 61 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
- 22:42 (IST) 31 Mar 2022மனிஷ் பாண்டே அவுட்!
சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 211 ரன்கள் வெற்றி இலக்கை துரத்தி வரும் லக்னோ அணி மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இந்நிலையில், கேப்டன் கேஎல் ராகுல் விக்கெட்டுக்கு பிறகு களமிறங்கிய மனிஷ் பாண்டே 5 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
- 22:35 (IST) 31 Mar 2022கேஎல் ராகுல் அவுட்!
சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 211 ரன்கள் வெற்றி இலக்கை துரத்தி வரும் லக்னோ அணியில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் கேஎல் ராகுல் 40 ரன்கள் சேர்ந்திருந்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
- 22:32 (IST) 31 Mar 2022குயின்டன் டி காக் அரைசதம்!
சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 211 ரன்கள் வெற்றி இலக்கை துரத்தி வரும் லக்னோ அணியில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் தொடக்க வீரர் குயின்டன் டி காக் 34 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் தனது அரைசத்தை பதிவு செய்துள்ளார்.
- 22:14 (IST) 31 Mar 2022பவர் பிளே முடிவில் லக்னோ!
சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ அணிக்கு 211 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த அணி விக்கெட் இழப்பின்றி தற்போதுவரை விளையாடி வருகிறது. தற்போது பவர் பிளே முடிவில் லக்னோ அணி 55 ரன்கள் சேர்த்துள்ளது.
லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் - குயின்டன் டி காக் ஜோடி அணிக்கு வலுவான தொடக்கம் கொடுத்துள்ளது.
- 21:32 (IST) 31 Mar 2022ரன்மழை பொழிந்த சென்னை; லக்னோவுக்கு 211 ரன்கள் வெற்றி இலக்கு!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்துள்ளது. அந்த அணியில் களமிறங்கிய வீரர்கள் அனைவரும் அதிரடியாக விளையாடி பவுண்டரி சிக்ஸர்கள் என வான வேடிக்கை காட்டினார். அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் ராபின் உத்தப்பா 50 ரன்களும், சிவம் துபே 49 ரன்களும் சேர்த்தனர்.
இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 210 ரன்களை சேர்த்துள்ளது. இதனால், லக்னோ அணிக்கு 211 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Uth🆙A 💪🏻💥
— Chennai Super Kings (@ChennaiIPL) March 31, 2022
⌨️ One word for the Super knock 👇lsgvcsk yellove whistlepodu 🦁💛 pic.twitter.com/7MFM5uNBqNBae DuBae Shivam 💛lsgvcsk whistlepodu yellove 🦁 pic.twitter.com/uX3y8Ka8nI
— Chennai Super Kings (@ChennaiIPL) March 31, 2022Innings Break!
— IndianPremierLeague (@IPL) March 31, 2022
A cracking batting performance from @ChennaiIPL as they post 210/7 on the board! 💪 💪
The @LucknowIPL chase will begin shortly. 👍 👍
Scorecard ▶️ https://t.co/uEhq27KiBBtataipl | lsgvcsk pic.twitter.com/i3vrkIU0e4 - 21:31 (IST) 31 Mar 2022ரன்மழை பொழிந்த சென்னை; லக்னோவுக்கு 211 ரன்கள் வெற்றி இலக்கு!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்துள்ளது. அந்த அணியில் களமிறங்கிய வீரர்கள் அனைவரும் அதிரடியாக விளையாடி பவுண்டரி சிக்ஸர்கள் என வான வேடிக்கை காட்டினார். அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் ராபின் உத்தப்பா 50 ரன்களும், சிவம் துபே 49 ரன்களும் சேர்த்தனர்.
இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 210 ரன்களை சேர்த்துள்ளது. இதனால், லக்னோ அணிக்கு 211 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Innings Break!
— IndianPremierLeague (@IPL) March 31, 2022
A cracking batting performance from @ChennaiIPL as they post 210/7 on the board! 💪 💪
The @LucknowIPL chase will begin shortly. 👍 👍
Scorecard ▶️ https://t.co/uEhq27KiBBtataipl | lsgvcsk pic.twitter.com/i3vrkIU0e4 - 21:11 (IST) 31 Mar 2022ஷிவம் துபே அவுட்!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்து வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 30 பந்துகளில் 5 பவுண்டரிகள் 2 சிக்ஸர்களை விளாசி இளம் வீரர் ஷிவம் துபே 49 ரன்களை சேர்த்த நிலையில் அவுட் ஆனார்.
- 21:08 (IST) 31 Mar 2022200 ரன்களை நோக்கி சென்னை அணி!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்து வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்து வருகிறது. தற்போது 18 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 188 ரன்களை சேர்த்துள்ளது. 20 ஓவர்கள் முடிய இன்னும் 2 ஓவர்கள் உள்ள நிலையில் சென்னை அணி 200 ரன்களை நோக்கி மட்டையை சுழற்றி வருகிறது.
- 20:50 (IST) 31 Mar 202215 ஓவர்கள் முடிவில் சென்னை அணி!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்து வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்து வருகிறது. தற்போது 15 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டை இழந்து 147 ரன்களை சேர்த்துள்ளனர்.
- 20:29 (IST) 31 Mar 202211 ஓவர்கள் முடிவில் சென்னை அணி!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்து வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 11 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 112 ரன்களை சேர்த்துள்ளது.
- 20:26 (IST) 31 Mar 2022மொயீன் அலி அவுட்!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்து வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முதல் விக்கெட்டுக்கு களமிறங்கி அதிரடியாக ரன்களை சேர்த்து வந்த மொயீன் அலி 35 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார்.
- 20:14 (IST) 31 Mar 2022அரைசதம் விளாசிய ராபின் உத்தப்பா அவுட்!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்து வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய ராபின் உத்தப்பா அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தார். அவர் 27 பந்துகளில் 8 பவுண்டர்கள் 1 சிக்ஸரை பறக்கவிட்டு 50 ரன்கள் சேர்ந்திருந்த நிலையில் அவுட் ஆனார்.
- 20:05 (IST) 31 Mar 2022ரன் மழை பொழியும் சென்னை; பந்துவீச திணறும் லக்னோ!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்து வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்து வருகிறது. தற்போது 6 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட்டை இழந்து 73 ரன்களை சேர்த்துள்ளனர்.
- 19:45 (IST) 31 Mar 2022ருதுராஜ் ரன்-அவுட்!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்து வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 1 ரன் சேர்த்த நிலையில் ரன் -அவுட் ஆகி வெளியேறினார்.
- 19:36 (IST) 31 Mar 2022சென்னை அணி அதிரடி தொடக்கம்!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்து வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர் ராபின் உத்தப்பா முதலாவது ஓவரில் 3 பவுண்டரிகளை விரட்டி அணிக்கு அதிரடி தொடக்கம் கொடுத்துள்ளார்.
- 19:31 (IST) 31 Mar 2022ஆட்டம் இனிதே ஆரம்பம்!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பையில் உள்ள பிரபோர்ன் மைதானத்தில் இன்று 7வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அறிமுக அணியான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்ட நிலையில், டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதனால் சென்னை அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியுள்ளது.
சென்னை அணியில் ருதுராஜ் கெய்க்வாட் - ராபின் உத்தப்பா ஜோடி தொடக்க வீரர்களாக களமிறங்கியுள்ளனர்.
- 19:14 (IST) 31 Mar 2022லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் பிளேயிங் லெவன் பட்டியல்!
கேஎல் ராகுல்(கேப்டன்), குயின்டன் டி காக்(விக்கெட் கீப்பர்), எவின் லூயிஸ், மனிஷ் பாண்டே, தீபக் ஹூடா, ஆயுஷ் படோனி, க்ருனால் பாண்டியா, துஷ்மந்த சமீரா, ஆண்ட்ரூ டை, ரவி பிஷ்னோய், அவேஷ் கான்
.@aj191 set for his @LucknowIPL debut. 👏 👏tataipl | lsgvcsk pic.twitter.com/QyUnaxEyxx
— IndianPremierLeague (@IPL) March 31, 2022 - 19:13 (IST) 31 Mar 2022சென்னை சூப்பர் கிங்ஸ் பிளேயிங் லெவன் பட்டியல்!
ருதுராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா, மொயீன் அலி, அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா(கேப்டன்), எம்எஸ் தோனி(விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, டுவைன் பிராவோ, டுவைன் பிரிட்டோரியஸ், முகேஷ் சவுத்ரி, துஷார் தேஷ்பாண்டே
Super Debuts
— Chennai Super Kings (@ChennaiIPL) March 31, 2022
Mukesh Choudhary 🦁
Dwaine Pretorius 🦁whistlepodu yellove lsgvcsk 🦁💛 - 19:13 (IST) 31 Mar 2022டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சு தேர்வு; சென்னை முதலில் பேட்டிங்!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பையில் உள்ள பிரபோர்ன் மைதானத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்கும் 7வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அறிமுக அணியான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்திற்கான டாஸ் தற்போது சுண்டப்பட்ட நிலையில், டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதனால் சென்னை அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கும்.
🚨 Toss Update 🚨@klrahul11 has won the toss & @LucknowIPL have elected to bowl against @ChennaiIPL.
— IndianPremierLeague (@IPL) March 31, 2022
Follow the match ▶️ https://t.co/uEhq27KiBBtataipl | lsgvcsk pic.twitter.com/mzmN4GPoZE - 18:58 (IST) 31 Mar 2022முக்கியத்துவம் பெறும் டாஸ் காரணி!
15வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இதுவரை நடந்துள்ள 6 ஆட்டடங்களில் 5ல் டாஸ் வென்ற அணியே வென்றுள்ளது. எனவே, இன்றைய ஆட்டத்திலும் டாஸ் ஒரு முக்கிய காரணியாக இருக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
- 18:55 (IST) 31 Mar 2022ஆட்டத்திற்கு தயாராகும் சென்னை!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அறிமுகமாகியுள்ள லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் முறையாக எதிர்கொள்கிறது. லக்னோ அணி ஏற்கனேவே நடந்த தொடக்க ஆட்டத்தில் குஜராத்திடம் தோல்விகண்டுள்ளது. இதேபோல் சென்னை அணி தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தாவிடம் தோல்வியுற்றது. தலா ஒரு தோல்வியுடன் களமிறங்கும் இந்த அணிகளில் எந்த அணி வெற்றியை ருசிக்கும் என்பதை காண ரசிர்கள் ஆவலோடு உள்ளனர்.
🦁 on board! Brabourne Bound!lsgvcsk whistlepodu yellove 💛 pic.twitter.com/w55t6R8Ccj
— Chennai Super Kings (@ChennaiIPL) March 31, 2022 - 18:22 (IST) 31 Mar 2022சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உத்தேச வீரர்கள் பட்டியல்!
ருதுராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா, மொயின் அலி, அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா (கேப்டன்), எம்எஸ் தோனி (விக்கெட் கீப்பர்), டுவைன் பிராவோ, மிட்செல் சான்ட்னர், துஷார் தேஷ்பாண்டே, ஆடம் மில்னே
- 18:22 (IST) 31 Mar 2022லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் உத்தேச வீரர்கள் பட்டியல்!
கே.எல். ராகுல் (கேப்டன்), எவின் லூயிஸ், குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), மணீஷ் பாண்டே, தீபக் ஹூடா, க்ருனால் பாண்டியா, மொஹ்சின் கான், ஆயுஷ் படோனி, துஷ்மந்த சமீரா, ரவி பிஷ்னோய், அவேஷ் கான்
- 18:06 (IST) 31 Mar 2022சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் பட்டியல்!
ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, ராபின் உத்தப்பா, அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா(கேப்டன்), ஷிவம் துபே, எம்எஸ் தோனி(விக்கெட் கீப்பர்), டுவைன் பிராவோ, மிட்செல் சான்ட்னர், ஆடம் மில்னே, துஷார் தேஷ்பாண்டே, கிறிஸ் ஜோர்டான், ராஜ்வர்தன் ஹங்கர்கே மகேஷ் தீக்ஷனா, ஹரி நிஷாந்த், என் ஜெகதீசன், சுப்ரான்சு சேனாபதி, பிரசாந்த் சோலங்கி, முகேஷ் சவுத்ரி, கே.எம். ஆசிப், சிமர்ஜீத் சிங், பகத் வர்மா, மொயின் அலி, டுவைன் பிரிட்டோரியஸ்.
The Twin Dwainamite! 💪lsgvcsk yellove whistlepodu 🦁💛 pic.twitter.com/hPFRJhh7Y3
— Chennai Super Kings (@ChennaiIPL) March 31, 2022 - 18:02 (IST) 31 Mar 2022‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ லைவ் பிளாக்கு - க்கு அன்புடன் வரவேற்கிறோம்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் - அணியான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் குறித்து உடனுக்குடன் தெரிந்துகொள்ள 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்' லைவ் பிளாக்குடன் இணைந்திருங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.