scorecardresearch

 LSG vs Dc Highlights: டி காக், படோனி அதிரடி; ‘ஹாட்ரிக்’ வெற்றியை ருசித்த லக்னோவுக்கு திரில் வெற்றி!

IPL 2022, Matchi 15, Lucknow Super Giants vs Delhi Capitals (LSG  vs DC), Check Live score and live updates Tamil News: டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திரில் வெற்றியை ருசித்தது லக்னோ.

IPL 2022 Memes tamil

IPL 2022,  LSG vs DC Highlights in tamil: 15வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பையில் நேற்றிரவு நடந்த 15வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் கேஎல் ராகுல் பந்துவீசுவதாக அறிவித்தார். இதன்படி, டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.

டெல்லி அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ப்ரித்வி ஷா – டேவிட் வார்னர் ஜோடியில், துவக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ப்ரித்வி ஷா 30 பந்துகளில் தனது அரைசதத்தை விளாசினார். தொடர்ந்து அதிரடி காட்டி வந்த அவர் 34 பந்துகளில் 2 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 61 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

மறுமுனையில் இருந்த டேவிட் வார்னர் 4 ரன்கள் சேர்த்த நிலையில், ரவி பிஷ்னோய் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். களத்தில் இருந்த ரோவ்மன் பவல் 3 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார்.

ஒரு கட்டத்தில் அதிரடியாக ரன்களை உயர்த்தி வந்த டெல்லி அணி அடுத்தடுத்த விக்கெட் இழப்புகளால் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது. அப்போது களத்தில் விளையாடி வந்த கேப்டன் பண்ட் – சர்ஃபராஸ் கான் ஜோடி அவ்வப்போது பவுண்டரி, சிக்ஸர்களை துரத்தினர். இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 3 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்களை சேர்த்தது. கேப்டன் ரிஷப் பண்ட் 39 ரன்களும் (36 பந்துகளில் 3 பவுண்டரி 2 சிக்ஸர்), சர்ஃபராஸ் கான் 36 ரன்களும் (28 பந்துகளில் 3 பவுண்டரிகள்) எடுத்தனர்.

பந்துவீச்சில் தொடர் நெருக்கடி கொடுத்த லக்னோ அணி தரப்பில் ரவி பிஷ்னோய் 2 விக்கெட்டுகளையும், கிருஷ்ணப்ப கவுதம் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

தொடர்ந்து 150 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய லக்னோ அணியில், 25 பந்துகளில் 1 சிக்ஸர் 1 பவுண்டரியை விரட்டிய கேப்டன் கேஎல் ராகுல் 24 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் வந்த எவின் லூயிஸ் 5 ரன்னிலும், தீபக் ஹூடா 11 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

இதற்கிடையில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த தொடக்க வீரர் குயின்டன் டி காக் அரைசதம் விளாசினார். தனது சிறப்பான ஆட்டத்தை தொடர்த்திருந்த அவர் 52 பந்துகளில் 9 பவுண்டரிகள் 2 சிக்ஸர்களுடன் 80 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார்.

லக்னோ அணியின் வெற்றிக்கு 12 பந்துகளில் 19 ரன்கள் தேவைப்பட்டது. முஸ்தாபிசூர் வீசிய 19வது ஹூடா ஒரு ரன் எடுத்து ஸ்ட்ரைக்கை க்ருனால் பாண்டியா வசம் கொடுத்தார். க்ருனால் ஒரு சிக்சருடன், 3 இரண்டு ரன்கள் எடுத்தார். இப்போது லக்னோவின் வெற்றிக்கு கடைசி 6 பந்துகளில் 5 ரன்கள் தேவைப்பட்டது.

இதனால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொள்ளவே, இறுதி ஓவரை “லார்ட்” தாக்கூர் வீச முதல் பந்தில் ஹூடா அவுட் ஆனார். பின்னர் வந்த படோனி அடுத்த பந்தை டாட் பால் விட்டார். இது ஆட்டத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து வீசப்பட்ட பந்தை சந்தித்த படோனி சற்றும் தயங்காமல் பந்தை பவுண்டரி கோட்டிற்கு துரத்தினார். அடுத்த பந்தை சிக்ஸருக்கு பறக்கவிட்டு ஆட்டத்தை முடித்து வைத்தார். இதனால் லக்னோ திரில் வெற்றியை ருசித்தது. மேலும் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தியது.

நடப்பு தொடரில் “ஹாட்ரிக்” வெற்றி பெற்றுள்ள லக்னோ அணி புள்ளிப்பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 2வது தோல்வியை சந்தித்துள்ள டெல்லி அணி 7வது இடத்தில் உள்ளது.

லக்னோ அணியில் 80 ரன்கள் விளாசிய தொடக்க வீரர் குயின்டன் டி காக் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.

Indian Premier League, 2022Dr. DY Patil Sports Academy, Navi Mumbai   06 June 2023

Lucknow Super Giants 155/4 (19.4)

vs

Delhi Capitals   149/3 (20.0)

Match Ended ( Day – Match 15 ) Lucknow Super Giants beat Delhi Capitals by 6 wickets

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Read More
Read Less
Live Updates
23:39 (IST) 7 Apr 2022
சிக்ஸர் அடித்து முடித்து வைத்த படோனி; லக்னோவுக்கு திரில் வெற்றி!

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 150 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வந்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் வெற்றிக்கு 4 பந்துகளில் 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், களத்தில் இருந்த இளம் வீரர் படோனி ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தார். இதனால் டெல்லியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னோ வீழ்த்தியது.

23:30 (IST) 7 Apr 2022
லக்னோவுக்கு டிக் டிக் தருணம்!

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 150 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வெற்றி பெற 5 பந்துகளில் 5 ரன்கள் தேவை.

23:12 (IST) 7 Apr 2022
டி காக் அவுட்!

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 150 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்த தொடக்க வீரர் குயின்டன் டி காக் 52 பந்துகளில் 9 பவுண்டரிகள் 2 சிக்ஸர்களை விளாசி 80 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

லக்னோ அணியின் வெற்றிக்கு 21 பந்துகளில் 25 ரன்கள் தேவை.

23:01 (IST) 7 Apr 2022
15 ஓவர்கள் முடிவில் லக்னோ!

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 150 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 15 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்களை சேர்த்துள்ளது. அந்த அணியின் வெற்றிக்கு 30 பந்துகளில் 39 ரன்கள் தேவை.

22:36 (IST) 7 Apr 2022
அரைசதம் விளாசினார் டி காக்!

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 150 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 12 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 86 ரன்களை சேர்த்துள்ளது.

தொடக்க வீரர் குயின்டன் டி காக் 35 பந்துகளில் 1 சிக்ஸர் 6 பவுண்டரியை விளாசி தனது அரைசத்தை பதிவு செய்தார்.

22:29 (IST) 7 Apr 2022
கேப்டன் ராகுல் அவுட்!

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 150 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 10 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 74 ரன்களை சேர்த்துள்ளது. 25 பந்துகளில் 1 சிக்ஸர் 1 பவுண்டரியை விளாசிய அந்த அணியின் கேப்டன் கேஎல் ராகுல் 24 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

22:07 (IST) 7 Apr 2022
பவர் பிளே முடிவில் லக்னோ அணி!

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 150 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 6 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 48 ரன்களை சேர்த்துள்ளது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் கேப்டன் கேஎல் ராகுல் (10) – குயின்டன் டி காக் (36 )ஜோடி களத்தில் உள்ளனர்.

21:19 (IST) 7 Apr 2022
அரைசதம் விளாசிய ப்ரித்வி ஷா; லக்னோ அணிக்கு 150 ரன்கள் வெற்றி இலக்கு!

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்களை சேர்த்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் ப்ரித்வி ஷா 61 ரன்கள் சேர்த்தார்.

பந்துவீச்சில் நெருக்கடி கொடுத்த லக்னோ அணி தரப்பில் அதிகபட்சமாக ரவி பிஷ்னோய் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

20:46 (IST) 7 Apr 2022
15 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி!

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது. இந்நிலையில், டெல்லி அணி 15 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 93 ரன்களை சேர்த்துள்ளது.

கேப்டன் ரிஷப் பண்ட் 12 ரன்களுடனும் சர்ஃபராஸ் கான் 16 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

20:28 (IST) 7 Apr 2022
3 விக்கெட்டுகளை பறிகொடுத்த டெல்லி!

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது. இந்நிலையில், அந்த அணியின் தொடக்க வீரர்கள் டேவிட் வார்னர் (4), ப்ரித்வி ஷா (61), தொடர்ந்து வந்த ரோவ்மன் பவல் (3) ஆட்டமிழந்து வெளியேறியுள்ளனர்.

டெல்லி அணி 12 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 80 ரன்களை சேர்த்துள்ளது.

20:15 (IST) 7 Apr 2022
வார்னர் அவுட்!

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் 4 ரன்கள் சேர்ந்திருந்த நிலையில், ரவி பிஷ்னோய் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

20:08 (IST) 7 Apr 2022
ப்ரித்வி ஷா அவுட்!

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணியின் தொடக்க வீரர் ப்ரித்வி ஷா அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்து அரைசதம் விளாசிய நிலையில், 34 பந்துகளில் 2 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 61 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்து வெளியேறினார்.

டெல்லி அணி 8 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 68 ரன்களை சேர்த்துள்ளது.

20:01 (IST) 7 Apr 2022
பவர் பிளே முடிவில் டெல்லி அணி!

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணி 6 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 52 ரன்களை சேர்த்துள்ளது.

தொடக்க வீரர்கள் ப்ரித்வி ஷா (47) – டேவிட் வார்னர் (3) களத்தில் உள்ளனர்.

19:56 (IST) 7 Apr 2022
அதிரடி காட்டும் ப்ரித்வி ஷா!

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணியின் தொடக்க வீரர் ப்ரித்வி ஷா அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்து வருகிறார். அவேஷ் கான் ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரியை ஓட விட்ட அவர் 23 பந்துகளில் 1 சிக்ஸர் 7 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் குவித்துள்ளார்.

டெல்லி அணி 5 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 45 ரன்களை சேர்த்துள்ளது.

19:17 (IST) 7 Apr 2022
டெல்லி அணியில் 3 மாற்றங்கள்!

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்ய களமிறங்க உள்ள டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் 4 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, அந்த அணியின் வீரர்கள் சீஃபர்ட், மன்தீப் மற்றும் கலீல் ஆகியோருக்கு பதிலாக வார்னர், சர்ஃபராஸ் மற்றும் நார்ட்ஜே ஆகியோர் களமாடுகின்றனர்.

19:11 (IST) 7 Apr 2022
டெல்லி கேப்பிடல்ஸ் பிளேயிங் லெவன்!

ப்ரித்வி ஷா, டேவிட் வார்னர், ரிஷப் பண்ட் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), ரோவ்மன் பவல், சர்ஃபராஸ் கான், லலித் யாதவ், அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், முஸ்தபிசுர் ரஹ்மான், அன்ரிச் நார்ட்ஜே

19:11 (IST) 7 Apr 2022
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் பிளேயிங் லெவன்!

கேஎல் ராகுல்(கேப்டன்), குயின்டன் டி காக்(விக்கெட் கீப்பர்), எவின் லூயிஸ், தீபக் ஹூடா, ஆயுஷ் படோனி, க்ருனால் பாண்டியா, ஜேசன் ஹோல்டர், கிருஷ்ணப்ப கவுதம், ஆண்ட்ரூ டை, ரவி பிஷ்னோய், அவேஷ் கான்

19:10 (IST) 7 Apr 2022
டாஸ் வென்ற லக்னோ பந்துவீச்சு தேர்வு; டெல்லி முதலில் பேட்டிங்!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பையில் இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்கும் 15வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. தற்போது டாஸ் சுண்டப்பட்ட நிலையில், டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. எனவே, டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கும்.

18:17 (IST) 7 Apr 2022
டெல்லி கேபிடல்ஸ் அணியின் உத்தேச வீரர்கள் பட்டியல்!

டேவிட் வார்னர், பிரித்வி ஷா, மன்தீப் சிங், ரிஷப் பந்த் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), லலித் யாதவ், ஷர்துல் தாக்கூர், அக்சர் படேல், குல்தீப் யாதவ், முஸ்தாபிசுர் ரஹ்மான், அன்ரிச் நார்ட்ஜே, கலீல் அகமது.

18:16 (IST) 7 Apr 2022
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் உத்தேச வீரர்கள் பட்டியல்!

கேஎல் ராகுல் (கேப்டன்), குயின்டன் டி காக், எவின் லூயிஸ், மார்கஸ் ஸ்டோனிஸ், தீபக் ஹூடா, ஆயுஷ் படோனி, ஜேசன் ஹோல்டர், க்ருனால் பாண்டியா, ரவி பிஷ்னோய், அவேஷ் கான், அங்கித் ராஜ்பூத்.

18:15 (IST) 7 Apr 2022
டெல்லி கேபிடல்ஸ் அணி வீரர்கள் பட்டியல்!

ரிஷப் பந்த் (கேப்டன்), அஷ்வின் ஹெப்பர், டேவிட் வார்னர், மன்தீப் சிங், பிரித்வி ஷா, ரோவ்மன் பவல், அன்ரிச் நார்ட்ஜே, சேத்தன் சகாரியா, கலீல் அகமது, குல்தீப் யாதவ், லுங்கி என்கிடி, முஸ்தாபிசுர் ரஹ்மான், ஷர்துல் தாகூர், காம்சர் படேல், காம்சர் படேல் , லலித் யாதவ், மிட்செல் மார்ஷ், பிரவின் துபே, ரிபால் பட்டேல், சர்ஃபராஸ் கான், விக்கி ஓஸ்ட்வால், யாஷ் துல், கேஎஸ் பாரத் மற்றும் டிம் சீஃபர்ட்.

18:15 (IST) 7 Apr 2022
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வீரர்கள் பட்டியல்!

கேஎல் ராகுல் (கேப்டன்), மனன் வோஹ்ரா, எவின் லூயிஸ், மனிஷ் பாண்டே, குயின்டன் டி காக், ரவி பிஷ்னோய், துஷ்மந்த சமீரா, ஷாபாஸ் நதீம், மொஹ்சின் கான், மயங்க் யாதவ், அங்கித் ராஜ்பூட், அவேஷ் கான், ஆண்ட்ரூ டை, மார்கஸ் ஸ்டோனிஸ் கைல் மேயர்ஸ், கரண் சர்மா, கிருஷ்ணப்ப கவுதம், ஆயுஷ் படோனி, தீபக் ஹூடா, க்ருனால் பாண்டியா. ஜேசன் ஹோல்டர்.

18:14 (IST) 7 Apr 2022
7:30 மணிக்கு தொடங்கும் ஆட்டம்!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 15வது லீக்ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த மும்பை டாக்டர் டிஒய் பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமி மைதானத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்குகிறது.

18:12 (IST) 7 Apr 2022
‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ லைவ் பிளாக்கு – க்கு அன்புடன் வரவேற்கிறோம்!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் குறித்து உடனுக்குடன் தெரிந்துகொள்ள 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்' லைவ் பிளாக்குடன் இணைந்திருங்கள்.

Web Title: Ipl 2022 lsg vs dc live score updates

Best of Express