IPL 2022 LSG VS RCB Highlights IN TAMIL: 15வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை டாக்டர் டிஒய் பாட்டீல் ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்த 31-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல். ராகுல் பந்துவீசுவதாக அறிவித்தார். இதனையடுத்து பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது.
பெங்களூரு அணியில் கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் – அனுஜ் ராவத் தொடக்க வீரர்களாக களமிறங்கிய நிலையில், அனுஜ் ராவத் 3 ரன்னில் ஆட்டமிழக்க, பின்னர் வந்த விராட் கோலி பூஜ்ஜிய ரன்னில் அவுட் ஆகி நடையைக் கட்டினார். சிறிது நேரம் அதிரடி காட்டி வந்த கிளென் மேக்ஸ்வெல் 1 சிக்ஸர் 3 பவுண்டரிகளை ஓடவிட்டு 23 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
கேப்டன் டு பிளெசிஸ் உடன் ஜோடி அமைத்த வீரர்களில் 1 சிக்ஸர் அடித்த சுயாஷ் பிரபுதேசாய் 10 ரன்னிலும், 1 பவுண்டரியை விரட்டிய ஷாபாஸ் அகமது 26 ரன்னிலும் (ரன்-அவுட்) ஆட்டமிழந்து வெளியேறினர். இதற்கிடையில் தனது பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் அரைசதம் விளாசினார்.
தொடர்ந்து வந்த தினேஷ் கார்த்திக்குடன் ஜோடி சேர்ந்து மீண்டும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி கேப்டன் டு பிளெசிஸ் சதமடிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 64 பந்துகளில் 11 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் விளாசி 96 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டமிழந்தார். அவருடன் மறுமுனையில் இருந்த தினேஷ் கார்த்திக் ஒரு சிக்ஸர் அடித்து 13 ரன்கள் எடுத்தார்.
Our Top Performer from the first innings is @faf1307 for his excellent knock of 96.
— IndianPremierLeague (@IPL) April 19, 2022
A look at his batting summary here 👇👇 #TATAIPL #LSGvRCB pic.twitter.com/rIAgKgjKNe
இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த பெங்களூரு அணி 181 ரன்கள் சேர்த்தது. இதனால், முதலில் பந்துவீசிய லக்னோ அணிக்கு 182 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. லக்னோ அணி தரப்பில் ஜேசன் ஹோல்டர், துஷ்மந்த சமீரா தலா 2 விக்கெட்டுகளையும், க்ருனால் பாண்டியா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
Innings Break!
— IndianPremierLeague (@IPL) April 19, 2022
A brilliant 96 from the Skipper propels #RCB to a total of 181/6 on the board.
Scorecard – https://t.co/9Dwu1D2Lxc #LSGvRCB #TATAIPL pic.twitter.com/6O4KUFhge0
தொடர்ந்து 182 ரன்கள் வெற்றி இலக்கை துரத்திய லக்னோ அணியில் தொடக்க வீரர் குயின்டன் டி காக் 3 ரன்னிலும், பின்னர் வந்த மணீஷ் பாண்டே 6 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். மறுமுனையில் அணிக்கு நல்ல தொடக்கம் கொடுத்த கேப்டன் கே.எல். ராகுல் 30 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
பிறகு வந்த வீரர்களில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய க்ருனால் பாண்டியா 28 பந்துகளில் 2 சிக்ஸர் 5 பவுண்டரிகள் விளாசி 42 ரன்கள் எடுத்து கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்து இலக்கை எட்ட தாறுமாறி வந்த லக்னோ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனால் 18 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோவை வீழ்த்தியது பெங்களூரு. இந்த அசத்தலான வெற்றியின் மூலம் பெங்களூரு அணி புள்ளிப்பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
That's that from Match 31.@RCBTweets win by 18 runs against #LSG.
— IndianPremierLeague (@IPL) April 19, 2022
Scorecard – https://t.co/9Dwu1D2Lxc #LSGvRCB #TATAIPL pic.twitter.com/oSxJ4fAukI
பந்துவீச்சில் மிரட்டி எடுத்த பெங்களூரு அணியில் ஜோஷ் ஹேசில்வுட் 4 விக்கெட்டுகளையும், ஹர்சல் படேல் 2 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ், கிளென் மேக்ஸ்வெல் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
3️⃣ runs and a wicket in the 1️⃣9️⃣th over. 🔥🔥
— Royal Challengers Bangalore (@RCBTweets) April 19, 2022
What. A. Spell. 🤜🏻🤛🏻#PlayBold #WeAreChallengers #IPL2022 #Mission2022 #RCB #ನಮ್ಮRCB #LSGvRCB pic.twitter.com/MinVVHnxBf
Our Top Performer from the second innings is Josh Hazlewood for his brilliant contribution with the ball and figures of 4/25.#TATAIPL #LSGvRCB pic.twitter.com/98QNbg5H20
— IndianPremierLeague (@IPL) April 19, 2022
Indian Premier League, 2022Dr. DY Patil Sports Academy, Navi Mumbai 20 May 2022
Lucknow Super Giants 163/8 (20.0)
Royal Challengers Bangalore 181/6 (20.0)
Match Ended ( Day – Match 31 ) Royal Challengers Bangalore beat Lucknow Super Giants by 18 runs
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 182 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை பறிகொடுத்து 163 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனால் 18 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோவை வீழ்த்தியது பெங்களூரு.
பந்துவீச்சில் மிரட்டிய அந்த அணியில் அதிகபட்சமாக ஜோஷ் ஹேசில்வுட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
3️⃣ runs and a wicket in the 1️⃣9️⃣th over. 🔥🔥What. A. Spell. 🤜🏻🤛🏻#playbold #wearechallengers #ipl2022 #mission2022 #rcb ್ಮRCB #lsgvrcb pic.twitter.com/MinVVHnxBf
— Royal Challengers Bangalore (@RCBTweets) April 19, 2022
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 182 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 7 விக்கெட்டுகளை பறிகொடுத்து ரன் சேர்க்க தடுமாறி வருகிறது. லக்னோ அணியின் வெற்றிக்கு லக்னோ அணியின் வெற்றிக்கு 6 பந்துகளில் 31 ரன்கள் தேவை.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 182 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 7 விக்கெட்டுகளை பறிகொடுத்து ரன் சேர்க்க தடுமாறி வருகிறது. லக்னோ அணியின் வெற்றிக்கு 10 பந்துகளில் 34 ரன்கள் தேவை.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 182 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் நிதான வெளிப்படுத்தி மட்டையை சுழற்றிய ஆயுஷ் படோனி 13 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார்.
லக்னோ அணியின் வெற்றிக்கு 20 பந்துகளில் 47 ரன்கள் தேவை.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 182 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 15 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 117 ரன்களை சேர்த்துள்ளது.
லக்னோ அணி 14 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 110 ரன்களை சேர்த்துள்ளது.
லக்னோ அணியின் வெற்றிக்கு 30 பந்துகளில் 65 ரன்கள் தேவை.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 182 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த க்ருனால் பாண்டியா கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 28 பந்துகளில் 2 சிக்ஸர் 5 பவுண்டரிகள் விளாசி 42 ரன்கள் எடுத்திருந்தார்.
லக்னோ அணி 14 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 110 ரன்களை சேர்த்துள்ளது.
லக்னோ அணியின் வெற்றிக்கு 36 பந்துகளில் 72 ரன்கள் தேவை.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 182 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் ஒரு பவுண்டரியை விரட்டிய தீபக் ஹூடா 13 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
லக்னோ அணி 13 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 104 ரன்களை சேர்த்துள்ளது.
லக்னோ அணியின் வெற்றிக்கு 42 பந்துகளில் 78 ரன்கள் தேவை.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 182 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 11 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 88 ரன்களை சேர்த்துள்ளது.
லக்னோ அணியின் வெற்றிக்கு 54 பந்துகளில் 94 ரன்கள் தேவை.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 182 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் கே.எல். ராகுல் 30 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
லக்னோ அணி 8 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 64 ரன்களை சேர்த்துள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 182 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு நல்ல தொடக்கம் கிடைத்துள்ளது. அந்த அணி 6 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு ரன்களை சேர்த்துள்ளது.
லக்னோ அணியில் தொடக்க வீரர் குயின்டன் டி காக் 3 ரன்னிலும், பின்னர் வந்த மணீஷ் பாண்டே 6 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் அரைசதம் விளாசினார். தனது அதிரடியான ஆட்டத்தை தொடர்ந்திருந்த அவர் சதமடிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 64 பந்துகளில் 11 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் விளாசி 96 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டமிழந்தார்.
பெங்களுரு அணியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய கிளென் மேக்ஸ்வெல் 23 ரன்னிலும், ஷாபாஸ் அகமது 26 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். தற்போது 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 181 ரன்களை சேர்த்துள்ளது. இதனால், பந்துவீசிய லக்னோ அணிக்கு 182 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
லக்னோ அணி தரப்பில் அதிகபட்சமாக ஜேசன் ஹோல்டர், துஷ்மந்த சமீரா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
Innings Break!A brilliant 96 from the Skipper propels #rcb to a total of 181/6 on the board.Scorecard – https://t.co/9Dwu1D2Lxc #lsgvrcb #tataipl pic.twitter.com/6O4KUFhge0
— IndianPremierLeague (@IPL) April 19, 2022
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்து வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் கேப்டன் ஃபாஃப் டு பிளெசியுடன் சிறப்பான ஜோடி அமைத்த ஷாபாஸ் அகமது 26 ரன்கள் சேர்த்த நிலையில் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்து வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் அரைசதம் விளாசியுள்ளார்.
தற்போது 15 ஓவர்கள் முடிவில் அந்த அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 130 ரன்களை சேர்த்துள்ளது. கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் 61 ரன்களுடனும், ஷாபாஸ் அகமது 25 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்து வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 4 விக்கெட்டுகளை பறிகொடுத்துள்ளது. தற்போது 9 ஓவர்கள் முடிவில் அந்த அணி 4விக்கெட்டுகள் இழப்பிற்கு 79 ரன்களை சேர்த்துள்ளது.
களத்தில் உள்ள கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் – ஷாபாஸ் அகமது நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பேட்டிங் செய்து வருகிறது. தற்போது 6 ஓவர்கள் முடிவில் அந்த அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 47 ரன்களை சேர்த்துள்ளது.
தொடக்க வீரர் அனுஜ் ராவத் 3 ரன்னில் ஆட்டமிழக்க, பின்னர் வந்த விராட் கோலி பூஜ்ஜிய ரன்னில் அவுட் ஆகி நடையைக் கட்டினார். சிறிது நேரம் அதிரடி காட்டி வந்த கிளென் மேக்ஸ்வெல் 1 சிக்ஸர் 3 பவுண்டரிகளை ஓடவிட்டு 23 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
கே.எல். ராகுல் (கேப்டன்), குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), மணீஷ் பாண்டே, மார்கஸ் ஸ்டோனிஸ், தீபக் ஹூடா, ஆயுஷ் படோனி, க்ருனால் பாண்டியா, ஜேசன் ஹோல்டர், துஷ்மந்த சமீரா, அவேஷ் கான், ரவி பிஷ்னாய்.
A look at the Playing XI for #lsgvrcb Live – https://t.co/9Dwu1D2dHE #lsgvrcb #tataipl https://t.co/e7niflFUFT pic.twitter.com/4EHAtC3rvt
— IndianPremierLeague (@IPL) April 19, 2022
ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), அனுஜ் ராவத், விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல், சுயாஷ் பிரபுதேசாய், ஷாபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), வனிந்து ஹசரங்கா, ஹர்சல் படேல், ஜோஷ் ஹேசில்வுட், முகமது சிராஜ்.
15வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை டாக்டர் டிஒய் பாட்டீல் ஸ்டேடியத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்கும் 31-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. தற்போது டாஸ் சுண்டப்பட்ட நிலையில், டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கும்.
#lsg have won the toss and they will bowl first against #rcb.Live – https://t.co/9Dwu1D2dHE #lsgvrcb #tataipl pic.twitter.com/yt6MktHPyt
— IndianPremierLeague (@IPL) April 19, 2022
பெங்களூரு அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் கேஎல் ராகுல் முதலிடத்தில் உள்ளார். அந்த அணிக்கு எதிராக 501 ரன்கள் வரை குவித்துள்ள அவர் 83.50 புள்ளிகளை சராசரியாக வைத்துள்ளார். ஐபிஎல்லில் எதிரணிக்கு எதிராக ஒரு வீரரின் அதிகபட்ச சராசரி இதுவாகும் (குறைந்தபட்சம் 400 ரன்கள்). மும்பை அணிக்கு எதிராக ஜோஸ் பட்லரின் சராசரி 80 அடுத்த சிறந்ததாகும்.
லக்னோ அணியின் கேப்டன் ராகுல் மற்றும் தொடக்க வீரர் குயின்டன் டி காக் பெங்களூரு அணிக்கு எதிராக தலா ஒரு சதம் மற்றும் 2 அரைசதங்களுடன் 863 ரன்கள் எடுத்துள்ளனர்.
டெத் ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்தும் திறன்படைத்த வீரரான பெங்களூரு அணியின் வேகப்பந்துவீச்சாளார் ஹர்ஷல் படேல் நடப்பு தொடரில் அவர் இன்னும் ஒரு விக்கெட்டை கூட எடுக்கவில்லை. முந்தைய சீசனில் அவர் 21 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.
Dilwaalon ke dil ka karaar lootne, hum aaye hain IPL mein भौकाल machaane 💪🏼#abapnibaarihai💪#ipl2022 🏆 #bhaukaalmachadenge #lsg #lucknowsupergiants #t20 #tataipl #lucknow #uttarpradesh #lsg2022 pic.twitter.com/o5mCRKZFKo
— Lucknow Super Giants (@LucknowIPL) April 19, 2022
ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), அனுஜ் ராவத், விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல், ஷாபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), சுயாஷ் பிரபுதேசாய், வனிந்து ஹசரங்க, ஹர்ஷல் படேல், ஜோஷ் ஹேசில்வுட், முகமது சிராஜ்.
.@MuthootIndia 𝐌𝐨𝐦𝐞𝐧𝐭 𝐨𝐟 𝐭𝐡𝐞 𝐃𝐚𝐲 😎Spirits are high as our team heads to the DY Patil Stadium for our clash against LSG. 🤩🥳#playbold #wearechallengers #ipl2022 #mission2022 #rcb ್ಮRCB #lsgvrcb pic.twitter.com/S67EfN9G8N
— Royal Challengers Bangalore (@RCBTweets) April 19, 2022
கேஎல் ராகுல் (கேப்டன்), குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), மனிஷ் பாண்டே, தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோனிஸ், ஆயுஷ் படோனி, க்ருனால் பாண்டியா, ஜேசன் ஹோல்டர், துஷ்மந்த சமீரா, அவேஷ் கான், ரவி பிஷ்னோய்.
Hoga tagda muqabla, jab aapke #supergiants milenge @RCBTweets se!#abapnibaarihai💪#ipl2022 🏆 #bhaukaalmachadenge #lsg #lucknowsupergiants #t20 #tataipl #lucknow #uttarpradesh #lsg2022 pic.twitter.com/5del5mXNJT
— Lucknow Super Giants (@LucknowIPL) April 19, 2022
ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ் (கேப்டன்), அனுஜ் ராவத், விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல், சுயாஷ் பிரபுதேசாய், ஷாபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), வனிந்து ஹசரங்கா, ஹர்சல் படேல், ஜோஷ் ஹேசில்வுட், முகமது சிராஜ், கர்ன் ஷர்மா, டேவிட் , ஆகாஷ் தீப், சித்தார்த் கவுல், ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், சாமா வி மிலிந்த், ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், ஃபின் ஆலன், அனீஸ்வர் கவுதம், மஹிபால் லோம்ரோர், ரஜத் படிதார்
கேஎல் ராகுல்(கேப்டன்), குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), மணீஷ் பாண்டே, மார்கஸ் ஸ்டோனிஸ், தீபக் ஹூடா, ஆயுஷ் படோனி, க்ருனால் பாண்டியா, ஜேசன் ஹோல்டர், துஷ்மந்த சமீரா, அவேஷ் கான், ரவி பிஷ்னோய், மனன் வோஹ்ரா, ஷாபாஸ் நதீம் , கைல் மேயர்ஸ், எவின் லூயிஸ், அங்கித் ராஜ்பூத், கிருஷ்ணப்பா கௌதம், ஆண்ட்ரூ டை, மொஹ்சின் கான், கரண் ஷர்மா, மயங்க் யாதவ்
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை டாக்டர் டிஒய் பாட்டீல் ஸ்டேடியத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்கும் 31-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் லக்னோ – பெங்களூரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் குறித்து உடனுக்குடன் தெரிந்துகொள்ள ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ லைவ் பிளாக்குடன் இணைந்திருங்கள்.