IPL 2022, MI vs LSG Highlights in tamil: 15வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை பிரபோர்ன் ஸ்டேடியத்தில் இன்று மாலை 3:30 மணிக்கு தொடங்கிய 26வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீசுவதாக அறிவித்தார். இதன்படி, லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்தது.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் தொடக்க வீரர்களாக கேப்டன் கேஎல் ராகுல் - குயின்டன் டி காக் களமிறங்கினர். அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்த இந்த ஜோடியில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 24 ரன்கள் எடுத்த டி காக் ஃபேபியன் ஆலன் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் வந்த வீரர்களில் மணீஷ் பாண்டே 38 ரன்களிலும், மார்கஸ் ஸ்டோனிஸ் 10 ரன்களிலும், தீபக் ஹூடா 15 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
தொடக்க வீரராக களமிறங்கி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் கே.எல். ராகுல் சதம் விளாசினார். 60 பந்துகளில் 9 பவுண்டரிகள் 5 சிக்ஸர்கள் என அதிரடி காட்டிய அவர் 103 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். அவரின் அசத்தலான ஆட்டத்தால் லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 199 ரன்கள் குவித்தது. இதனால் மும்பை அணிக்கு 200 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
.@LucknowIPL captain @klrahul11 scored a magnificent TON and became our top performer from the first innings of the #MIvLSG clash. 👏 👏 #TATAIPL
Scorecard ▶️ https://t.co/8aLz0owuM1
A summary of his knock 🔽 pic.twitter.com/7th81RB68c— IndianPremierLeague (@IPL) April 16, 2022
Innings Break! @klrahul11 led the charge with the bat with an unbeaten hundred as @LucknowIPL posted 199/4 on the board. 👏 👏
The @mipaltan chase to begin soon. 👍 👍
Scorecard ▶️ https://t.co/8aLz0owuM1#TATAIPL | #MIvLSG pic.twitter.com/YtW2jaoqFl— IndianPremierLeague (@IPL) April 16, 2022
மும்பை அணி தரப்பில் அதிகபட்சமாக உனட்கட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தொடர்ந்து மும்பை அணி 200 ரன்கள் கொண்ட இலக்கை துரத்திய மும்பை அணிக்கு நல்ல தொடக்கம் கிடைக்கவில்லை. அந்த அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் ரோகித் சர்மா 6 ரன்னிலும், இஷான் கிஷன் 13 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். இதற்கிடையில் 1 சிக்ஸர் 6 பவுண்டரிகளை ஓடவிட்ட இளம் வீரர் டெவால்ட் ப்ரீவிஸ் 31 ரன்னில் அவுட் ஆனார்.
சிறிது நேரம் விக்கெட் சரிவை தடுத்து நிறுத்திய சூர்யகுமார் யாதவ் - திலக் வர்மா ஜோடியில் திலக் வர்மா 26 ரன்களிலும், சூர்யகுமார் யாதவ் 37 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஃபேபியன் ஆலன் 8 ரன்னிலும், 1 சிக்ஸர் 2 பவுண்டரியை துரத்திய ஜெய்தேவ் உனட்கட் 14 ரன்னிலும் அவுட் ஆகினர். தனி ஒருவரான போராடிய கீரன் பொல்லார்ட் 2 சிக்ஸர், 1 பவுண்டரி என 24 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை பறிகொடுத்த மும்பை அணி 181 ரன்கள் மட்டும் சேர்த்தது. இதனால், லக்னோ 18 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது. இந்த அசத்தலான வெற்றியின் மூலம் லக்னோ அணி 8 புள்ளிகளுடன் 2 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. தொடர்ந்து 6 வது தோல்வியை சந்தித்ததுள்ள மும்பை அணி 10 வது இடத்திலே நீடிக்கிறது.
மிரட்டலான பந்துவீச்சை வெளிப்படுத்திய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் அவேஷ் கான் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். மார்கஸ் ஸ்டோனிஸ், ஜேசன் ஹோல்டர், துஷ்மந்த சமீரா, அவேஷ் கான், ரவி பிஷ்னோய் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
A return to winning ways for @LucknowIPL! 👏 👏
The @klrahul11-led unit beat #MI by 18 runs and register their 4th win of the #TATAIPL 2022. 👍 👍 #MIvLSG
Scorecard ▶️ https://t.co/8aLz0owuM1 pic.twitter.com/sNTUkJNNYB— IndianPremierLeague (@IPL) April 16, 2022
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.