IPL 2022 MI vs PBKS Highlights in tamil: 15வது ஐ.பி எல். கிரிக்கெட் தொடரில் புனேயில் நேற்றிரவு நடந்த 23வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – பஞ்சாப் கிங்க்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீசுவதாக அறிவித்தார். இதன்படி, பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.
பஞ்சாப் கிங்ஸ் அணியில் கேப்டன் மயங்க் அகர்வால் – ஷிகர் தவான் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். அணிக்கு வலுவான தொடக்கம் இந்த ஜோடியில் அரைசதம் விளாசிய கேப்டன் மயங்க் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். களத்தில் தனது சிறப்பான ஆட்டத்தை தொடர்த்திருந்த ஷிகர் தவான் அரைசதம் விளாசினார். அவர் 50 பந்துகளில் 5 பவுண்டரிகள் 3 சிக்ஸர்களுடன் 70 ரன்கள் குவித்த நிலையில் பொலார்ட் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
.@SDhawan25 joins the party with a fine half-century.
— IndianPremierLeague (@IPL) April 13, 2022
His 45th in #TATAIPL.
Live – https://t.co/emgSkWA94g #MIvPBKS #TATAIPL pic.twitter.com/aI6qNOGKta
தொடர்ந்து வந்த வீரர்களில் தலா 2 சிக்ஸர்களை பறக்கவிட்ட ஜிதேஷ் சர்மா, ஷாருக் கான் 30 மற்றும் 15 ரன்கள் எடுத்தனர். இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 198 ரன்களை குவித்தது. இதனால், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 199 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. மும்பை தரப்பில் பசில் தம்பி அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Innings Break!
— IndianPremierLeague (@IPL) April 13, 2022
Half-centuries from Dhawan (70) and Mayank (52) guide #PBKS to a total of 198/5 on the board.#MumbaiIndians chase coming up shortly. Stay tuned!
Scorecard – https://t.co/emgSkWA94g #MIvPBKS #TATAIPL pic.twitter.com/hiYBoQqSvB
தொடர்ந்து 199 ரன்கள் கொண்ட இலக்கை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா வலுவான தொடக்க கொடுத்தார். மேலும் அவர் டி20 கிரிக்கெட்டில் 10,000 ரன்களை கடந்த 2 வது இந்திய பேட்ஸ்மேன் என்கிற சாதனையை நிகழ்த்தினார். முன்னதாக முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலி இந்த சாதனையை படைத்த முதல் இந்திய வீரராக உள்ளார்.
1⃣0️⃣,0️⃣0️⃣0️⃣ T20 runs 🔥
— Mumbai Indians (@mipaltan) April 13, 2022
7⃣th man to do it in history 😎
1⃣ ℂ𝔸ℙ𝕋𝔸𝕀ℕ ℍ𝕀𝕋𝕄𝔸ℕ 💙#OneFamily #DilKholKe #MumbaiIndians #MIvPBKS @ImRo45 pic.twitter.com/dhvUo1jNWP
தனது சிறப்பான துவக்க ஆட்டத்தை தொடர்த்திருந்த கேப்டன் ரோகித் 17 பந்துகளில் 3 பவுண்டரி 2 சிக்ஸர்களை பறக்கவிட்டு 28 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். அவருடன் மறுமுனையில் களமிறங்கிய தொடக்க வீரர் இஷான் கிஷன் 3 ரன்னில் நடையை கட்டினார்.
அடுத்தடுத்த விக்கெட் இழப்பை சந்தித்த மும்பை அணிக்கு களத்தில் இருந்த டெவால்ட் ப்ரீவிஸ் – திலக் வர்மா ஜோடி உத்வேகம் கொடுத்தது. இந்த ஜோடியில் பஞ்சாப்பின் ராகுல் சாஹர் வீசிய 9வது ஓவரில் ‘ஹாட்ரிக்’ சிக்ஸர்களை பறக்க விட்ட டெவால்ட் ப்ரீவிஸ் 25 பந்துகளில் 4 பவுண்டரிகள் 5 சிக்ஸர்களை விளாசி 49 ரன்னில் அவுட் ஆனார். 20 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 36 ரன்கள் எடுத்த திலக் வர்மார் ரன்-அவுட் ஆகி வெளியேறினார்.
6. 6. 6. 6 – Dewald Brevis, you beauty! 👏👏
— IndianPremierLeague (@IPL) April 13, 2022
Live – https://t.co/emgSkWA94g #MIvPBKS #TATAIPL pic.twitter.com/Hvj1JVzD0h
களத்தில் அணியின் வெற்றிக்காக மட்டையை சுழற்றி வந்த சூர்யகுமார் யாதவ் – கீரன் பொல்லார்ட் ஜோடியில், ஒரு பவுண்டரியை துரத்திய பொல்லார்ட் ரன்-அவுட் ஆகி வெளியேறினார். மறுமுனையில் இருந்த சூர்யகுமார் யாதவ் வைபவ் அரோரா வீசிய 17வது ஓவரின் கடைசி 2 பந்துகளில் 2 சிக்ஸர்களை பறக்கவிட்டு அணியின் வெற்றிக் கனவை உயிர்ப்புடன் வைத்திருந்தார்.
Another mix up out there in the middle and Pollard is run-out for 10 runs.
— IndianPremierLeague (@IPL) April 13, 2022
Live – https://t.co/vxAO1vUeis #MIvPBKS #TATAIPL pic.twitter.com/i1Uys2dMLZ
மும்பை அணியின் வெற்றிக்கு 12 பந்துகளில் 28 ரன்கள் தேவைப்பட்ட நேரத்தில், ரபாட வீசிய 19வது ஓவரை சந்தித்த சூர்யகுமார் முதலிரண்டு பந்துகளில் 4, 2 என 6 ரன்கள் எடுத்தார். ஆனால், அடுத்த பந்தில் கேட்ச் கொடுத்து 43 ரன்னில் அவுட் ஆனார். மும்பையின் வெற்றிக்கு கடைசி 6 பந்தில் 22 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஒடியன் ஸ்மித் வீசிய 20 ஓவரின் முதல் பந்தில் உனட்கட் சிக்ஸர் அடித்தார்.
இது மும்பை அணிக்கு திருப்புமுனையை ஏற்படுத்துமா? என எதிர்பார்க்கப்பட்ட தருணத்தில், அடுத்த பந்தில் 2 ரன்கள் எடுத்து 3வது பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் வந்த பும்ரா 4வது பந்தில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். கடைசி பந்தை சந்தித்த மில்ஸ் கேப்டன் மயங் வசம் கேட்ச் கொடுத்தார். இதனால், தொடர் போராட்டத்தை தொடர்த்திருந்த மும்பையின் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை பறிகொடுத்த மும்பை அணி 186 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், பஞ்சாப் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றியை ருசித்தது. இந்த அசத்தலான வெற்றியின் மூலம் நடப்பு தொடரில் 3வது வெற்றியை பதிவு செய்துள்ள பஞ்சாப் அணி புள்ளிப்பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 5வது தோல்வி கண்ட மும்பை பட்டியலில் கடைசி இடத்திலே நீடிக்கிறது.
Punjab Kings return to winning ways! 👏 👏
— IndianPremierLeague (@IPL) April 13, 2022
The Mayank Agarwal-led unit register their third win of the #TATAIPL 2022 as they beat Mumbai Indians by 12 runs. 👍 👍
Scorecard ▶️ https://t.co/emgSkWA94g#TATAIPL | #MIvPBKS pic.twitter.com/fupx2xD2dr
Leading from the front, @mayankcricket laid the foundation to Punjab Kings innings and bagged the Player of the Match award as #PBKS beat #MI. 👏 👏#TATAIPL | #MIvPBKS pic.twitter.com/iBruxrRTSM
— IndianPremierLeague (@IPL) April 13, 2022
Indian Premier League, 2022Maharashtra Cricket Association Stadium, Pune 30 May 2023
Mumbai Indians 186/9 (20.0)
Punjab Kings 198/5 (20.0)
Match Ended ( Day – Match 23 ) Punjab Kings beat Mumbai Indians by 12 runs
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 199 ரன்கள் கொண்ட இலக்கை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணியின் போராட்டம் முடிவுக்கு வந்தது. அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை பறிகொடுத்து 186 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனால், பஞ்சாப் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 199 ரன்கள் கொண்ட இலக்கை துரத்திய வரும் மும்பை இந்தியன்ஸ் அணியில் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்து வந்த சூர்யகுமார் யாதவ் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்.
தற்போது மும்பை அணியின் வெற்றிக்கு 6 பந்துகளில் 22 ரன்கள் தேவை.
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 199 ரன்கள் கொண்ட இலக்கை மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிக்கு 12 பந்துகளில் 28 ரன்கள் தேவை. களத்தில் சூரியகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி வருகிறார்.
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 199 ரன்கள் கொண்ட இலக்கை மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிக்கு 18 பந்துகளில் 33 ரன்கள் தேவை.
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 199 ரன்கள் கொண்ட இலக்கை மும்பை இந்தியன்ஸ் அணி துரத்தி வருகிறது. மும்பை அணியில் அதிரடியாக விளையாடி அணியின் ரன் ரேட்டை உயர்த்தி வந்த டெவால்ட் ப்ரீவிஸ் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஹாட்ரிக் சிக்ஸர்களை பறக்க விட்ட அவர் 25 பந்துகளில் 4 பவுண்டரிகள் 5 சிக்ஸர்களை விளாசி 49 ரன்னில் அவுட் ஆனார்.
The Dewald Brevis show comes to an end here in Pune as he falls for 49.What a knock that was from the youngster 👏👏Live – https://t.co/QpRklNl6wU #mivpbks #tataipl pic.twitter.com/cP6nZlCC4X
— IndianPremierLeague (@IPL) April 13, 2022
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 199 ரன்கள் கொண்ட இலக்கை மும்பை இந்தியன்ஸ் அணி துரத்தி வருகிறது. அந்த அணி 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்கள் இழப்பிற்கு 105 ரன்களை சேர்த்துள்ளது.
மும்பை அணியின் தொடக்க வீரர்களில் இஷான் கிஷன் 3 ரன்னுடனும், கேப்டன் ரோகித் 28 ரன்னுடனும் (17 பந்துகள் 3 பவுண்டரி 2 சிக்ஸர்) ஆட்டமிழந்து வெளியேறிய நிலையில், களத்தில் உள்ள திலக் வர்மா (27) – டெவால்ட் ப்ரீவிஸ் (45) சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 199 ரன்கள் கொண்ட இலக்கை மும்பை இந்தியன்ஸ் அணி துரத்தி வருகிறது. அந்த அணி 6 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்கள் இழப்பிற்கு 42 ரன்களை சேர்த்துள்ளது.
மும்பை அணியின் தொடக்க வீரர்களில் இஷான் கிஷன் 3 ரன்னுடனும், கேப்டன் ரோகித் 28 ரன்னுடனும் (17 பந்துகள் 3 பவுண்டரி 2 சிக்ஸர்) ஆட்டமிழந்து வெளியேறினர்.
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 199 ரன்கள் கொண்ட இலக்கை மும்பை இந்தியன்ஸ் அணி துரத்தி வருகிறது. தற்போது அந்த அணியின் கேப்டன் ரோகித் சர்மா புதிய மைல்கல்லை எட்டிப்பிடித்துள்ளார்.
அவர் டி20 கிரிக்கெட் தொடரில் 10,000 ரன்களை கடந்த 2 வது இந்திய பேட்ஸ்மேன் என்கிற சாதனையை நிகழ்த்தியுள்ளார். முன்னதாக முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலி இந்த சாதனையை படைத்த முதல் இந்தியராக உள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்க்ஸ் அணியினர் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அந்த அணியில் கேப்டன் மயங்க் அகர்வால் அரைசதம் விளாசினார். 50 பந்துகளில் 5 பவுண்டரிகள் 3 சிக்ஸர்களை பறக்கவிட்டதொடக்க வீரர் ஷிகர் தவான் 70 ரன்கள் குவித்தார்.
இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 198 ரன்களை குவித்துள்ளது. இதனால் மும்பை அணிக்கு 199 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மும்பை அணி தரப்பில் பசில் தம்பி அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Innings Break!Half-centuries from Dhawan (70) and Mayank (52) guide #pbks to a total of 198/5 on the board.#mumbaiindians chase coming up shortly. Stay tuned!Scorecard – https://t.co/emgSkWA94g #mivpbks #tataipl pic.twitter.com/hiYBoQqSvB
— IndianPremierLeague (@IPL) April 13, 2022
Our Top Performer from the first innings is @SDhawan25 for his knock of 70 off 50 deliveries.A look at his batting summary here 👇👇 #tataipl pic.twitter.com/XNyK6DutTL
— IndianPremierLeague (@IPL) April 13, 2022
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்து வரும் பஞ்சாப் கிங்க்ஸ் அணியில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 50 பந்துகளில் 5 பவுண்டரிகள் 3 சிக்ஸர்களை பறக்கவிட்டு 70 ரன்கள் குவித்த தொடக்க வீரர் ஷிகர் தவான் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்.
மும்பை இந்தியன்ஸ் – பஞ்சாப் கிங்க்ஸ் அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீசுவதாக அறிவித்துள்ளார். இதன்படி, பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
இந்நிலையில், பஞ்சாப் அணி தற்போது 15 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 132 ரன்களை சேர்த்துள்ளது. முன்னதாக அரைசதம் விளாசிய கேப்டன் மயங்க் அகர்வால் 52 ரன்னில் அவுட் ஆனா நிலையில், களத்தில் இருந்த ஷிகர் தவான் தனது அரைசதத்தை பதிவு செய்துள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் – பஞ்சாப் கிங்க்ஸ் அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீசுவதாக அறிவித்துள்ளார். இதன்படி, பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
பஞ்சாப் கிங்ஸ் அணியில் கேப்டன் மயங்க் அகர்வால் – ஷிகர் தவான் ஜோடி தொடக்க வீரர்களாக களமிறங்கிய நிலையில், இந்த ஜோடி அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்துள்ளது.
தற்போது பஞ்சாப் அணி 6 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 65 ரன்களை சேர்த்துள்ளது. கேப்டன் மயங்க் அகர்வால் 38 ரன்களுடனும், ஷிகர் தவான் 18 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா இன்னும் 25 ரன்கள் எடுத்தால் டி20 அரங்கில் 10 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைப்பார். அதன் மூலம் இந்த சாதனையை நிகழ்த்திய விராட் கோலியை தொடர்ந்து இரண்டாவது இந்தியராகவும், ஒட்டுமொத்தத்தில் ஏழாவது வீரர் என்ற பெருமையை பெறுவார்.
மயங்க் அகர்வால் (கேப்டன்), ஷிகர் தவான், ஜானி பேர்ஸ்டோ (விக்கெட் கீப்பர்), லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா, ஒடியன் ஸ்மித், ஷாருக் கான், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், வைபவ் அரோரா, அர்ஷ்தீப் சிங்
ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), டெவால்ட் ப்ரீவிஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, கீரன் பொல்லார்ட், ஜெய்தேவ் உனட்கட், முருகன் அஷ்வின், ஜஸ்பிரித் பும்ரா, டைமல் மில்ஸ், பாசில் தம்பி
ஐ.பி எல். கிரிக்கெட் தொடரில் புனேயில் இன்று இரவு நடைபெறும் 23வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – பஞ்சாப் கிங்க்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீசுவதாக அறிவித்தார். இதன்படி, பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கும்.
Captain Rohit Sharma wins the toss and #mumbaiindians will bowl first against #pbks.Live – https://t.co/QpRklNl6wU #mivpbks #tataipl pic.twitter.com/mtE46j57TP
— IndianPremierLeague (@IPL) April 13, 2022
மும்பை இந்தியன்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மொத்தம் 28 ஆட்டங்களில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் மும்பை 15 ஆட்டங்களிலும், பஞ்சாப் 12 ஆட்டங்களிலும் வென்றுள்ள. ட்ரா ஆனா ஒரு ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் பஞ்சாப் வெற்றி பெற்றது.
முந்தைய ஆட்டம்
ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி ஷேக் சயீத் ஸ்டேடியத்தில் இவ்விரு அணிகளுக்கு இடையேயான கடைசி ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தியது.
கடைசி ஐந்து ஆட்டங்களின் முடிவுகள்:
மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
பஞ்சாப் கிங்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
சூப்பர் ஓவரில் பஞ்சாப் கிங்ஸ் வெற்றி பெற்றது
மும்பை இந்தியன்ஸ் அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
மும்பை இந்தியன்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
ரோகித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), டெவால்ட் ப்ரீவிஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, கீரன் பொல்லார்ட், ராமன்தீப் சிங், முருகன் அஷ்வின், ஜெய்தேவ் உனத்கட், ஜஸ்பிரித் பும்ரா, பாசில் தம்பி
மயங்க் அகர்வால் (கேப்டன்), ஷிகர் தவான், லியாம் லிவிங்ஸ்டோன், ஜானி பேர்ஸ்டோவ் (விக்கெட் கீப்பர்), ஜிதேஷ் சர்மா, ஷாருக் கான், ஒடியன் ஸ்மித், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், வைபவ் அரோரா, அர்ஷ்தீப் சிங்
ஷிகர் தவான், மயங்க் அகர்வால்(கேப்டன்), அர்ஷ்தீப் சிங், ககிசோ ரபாடா, ஜானி பேர்ஸ்டோ, ராகுல் சாஹர், ஹர்ப்ரீத் ப்ரார், ஷாருக் கான், பிரப்சிம்ரன் சிங், ஜிதேஷ் சர்மா, இஷான் போரல், லியாம் லிவிங்ஸ்டோன், ஒடியன் ஸ்மித், சந்தீப் சர்மா, ராஜ் அங்கத் பாவா தவான், பிரேரக் மன்காட், வைபவ் அரோரா, ரிட்டிக் சாட்டர்ஜி, பால்தேஜ் தண்டா, அன்ஷ் படேல், நாதன் எல்லிஸ், அதர்வா டைடே, பானுகா ராஜபக்சே, பென்னி ஹோவெல்.
ரோகித் சர்மா (கேப்டன்), அன்மோல்பிரீத் சிங், ராகுல் புத்தி, ராமன்தீப் சிங், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, டிம் டேவிட், அர்ஜுன் டெண்டுல்கர், பாசில் தம்பி, ஹிருத்திக் ஷோக்கீன், ஜஸ்பிரித் பும்ரா, ஜெய்தேவ் உனத்கட், ஜோஃப்ரா ஆர்ச்சர், மயங்க் மார்கண்டே, முருகன் அஷ்வின், ரிலே மெரிடித், டைமல் மில்ஸ், அர்ஷத் கான், டேனியல் சாம்ஸ், டெவால்ட் ப்ரீவிஸ், ஃபேபியன் ஆலன், கீரன் பொல்லார்ட், சஞ்சய் யாதவ், ஆர்யன் ஜூயல் மற்றும் இஷான் கிஷன்
ஐ.பி எல். கிரிக்கெட் தொடரில் புனேயில் இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்கும் 23வது லீக் ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் – பஞ்சாப் கிங்க்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் மும்பை – பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் குறித்து உடனுக்குடன் தெரிந்துகொள்ள ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ லைவ் பிளாக்குடன் இணைந்திருங்கள்.