IPL 2022, MI vs RR Highlights in tamil: 15வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று மாலை 3:30 மணிக்கு தொடங்கிய 9வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீசுவதாக அறிவித்தார். இதன்படி ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் களமிறங்கியது.
ராஜஸ்தான் அணியில் ஜோஸ் பட்லர் - ஜெய்ஸ்வால் தொடக்க வீரர்களாக களமிறங்கிய நிலையில், ஜெய்ஸ்வால் 1 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். எனினும் சிறிது நிதானம் காட்டிய பட்லர் பாசில் தம்பியின் வீசிய 4 வது ஓவரில் சிக்ஸர் மழை பொழிந்தார் 3 சிக்ஸர் .2 பவுண்டரி என அந்த ஓவரில் மட்டும் 26 ரன்களை சேர்த்தார்.
ஆனால், அவருடன் மறுமுனையில் இருந்த படிக்கல் 7 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் 3 சிக்ஸர்கள் 1 பவுண்டரி என 30 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.
தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜோஸ் பட்லர் 60 பந்துகளில் சதம் அடித்தார். ஐபிஎல் தொடரில் அவருக்கு இது 2வது சதமாகும். அவருடன் களத்தில் இருந்த ஹெட்மயர் பொல்லார்ட் 17-வது ஓவரில் 2 சிக்ஸர், 2 பவுண்டரிகளை விளாசினார். அவர் 14 பந்துகளில் 3 சிக்ஸர் 3 பவுண்டரிகளுடன் 35 சேர்த்த நிலையில் அவுட் ஆனார். சதமடித்த பட்லர் 100 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் சேர்த்தது. இதனால், மும்பை அணிக்கு 194 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. மும்பை அணி தரப்பில் பும்ரா மற்றும் மில்ஸ் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
194. Come on, boys. We Believe. 💙#OneFamily #DilKholKe #MumbaiIndians #MIvRR pic.twitter.com/y1p9V7u7Xe
— Mumbai Indians (@mipaltan) April 2, 2022
Buttler smashed, Hetty hit - 194 to defend. Let’s do this. 💗#RoyalsFamily | #HallaBol | #MIvRR pic.twitter.com/BeTUlRLhau
— Rajasthan Royals (@rajasthanroyals) April 2, 2022
தொடர்ந்து 194 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய மும்பை அணிக்கு சரியான தொடக்க கிடைக்கவில்லை. அந்த அணியின் கேப்டன் ரோகித் சர்மா 10 ரன்னிலும், பின்னர் வந்த அன்மோல்ப்ரீத் சிங்க் 5 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்து அரைசத்தை பதிவு செய்த தொடக்க வீரர் இஷான் கிஷன் 54 ரன்னிலும், திலக் வர்மா 61 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். மும்பை அணி வெற்றிக்கு கடைசி ஓவரில் 28 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அந்த ஓவரை வீசிய நவ்தீப் சைனி மிகத்துல்லியமாக வீச ராஜஸ்தான் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Woke up and chose to HALLA BOL! 👊#RoyalsFamily | #दिलसेरॉयल | #IPL2022 | #MIvRR pic.twitter.com/XC3LCiCPQL
— Rajasthan Royals (@rajasthanroyals) April 2, 2022
இந்த அசத்தலான வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. 2 தொடர் தோல்விகளுடன் மும்பை 9வது இடத்தில் உள்ளது.
Ladies and gentlemen, today's Player of the Match. 💗😁 pic.twitter.com/2ZhRYuxSgB
— Rajasthan Royals (@rajasthanroyals) April 2, 2022
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.