Advertisment

PBKS VS CSK Highlights: சென்னையின் போராட்டம் வீண்; 11 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி

IPL 2022 match 38, Punjab Kings and Chennai Super Kings (PBKS VS CSK) Check match highlights in tamil: சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 11 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி பெற்றது.

author-image
WebDesk
New Update
Punjab Kings and Chennai Super Kings / IPL 2022 Points Table

பஞ்சாப் கிங்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ்

Punjab Kings and Chennai Super Kings Highlights In tamil: 15வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்த 38-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ரவீந்திர ஜடேஜா பந்துவீசுவதாக அறிவித்தார். இதனையடுத்து மயங் தலைமையிலான பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது.

Advertisment

பஞ்சாப் கிங்ஸ் அணியில் கேப்டன் மயங்க் அகர்வால் - ஷிகர் தவான் தொடக்க வீரர்களாக ஜோடி களமிறங்கினர். அணிக்கு மந்தமான தொடக்கம் கொடுத்த இந்த ஜோடியில் கேப்டன் மயங் 2 பவுண்டரிகளை விரட்டி 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த பானுகா ராஜபக்சே உடன் ஜோடி அமைத்த தொடக்க வீரர் ஷிகர் தவான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது 46வது ஐபிஎல் அரைசதத்தை விளாசினார்.

இந்த ஜோடியில் 32 பந்துகளில் 2 பவுண்டரிகள் 2 சிக்ஸர்களை பறக்கவிட்ட பானுகா ராஜபக்சே 42 எடுத்து அவுட் ஆனார். 7 பந்துகளில் 1 பவுண்டரி 2 சிக்ஸர்களை அடித்த லியாம் லிவிங்ஸ்டோன் 19 ரன்னில் அவுட் ஆனார். கடைசி வரை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த தொடக்க வீரர் தவான் 59 பந்துகளில் 2 சிக்ஸர்கள் 9 பவுண்டரிகளுடன் 88 ரன்கள் குவித்தார்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 4 விக்கெட்கள் இழப்பிற்கு 187 ரன்களை சேர்த்தது. இதனால் டாஸ் வென்று முதலில் பந்துவீசிய சென்னை அணிக்கு 188 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.சென்னை அணி தரப்பில் பிராவோ 2 விக்கெட்டுகளையும், மகேஷ் தீக்ஷனா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

தொடர்ந்து 188 ரன்கள் வெற்றி இலக்கை துரத்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தொடக்க வீரர் ராபின் உத்தப்பா 1 ரன்னில் ஆட்டமிழந்தார். தலா 1 பவுண்டரியை அடித்த மிட்செல் சான்ட்னர் 9 ரன்னிலும் ஷிவம் துபே 8 ரன்னிலும் அவுட் ஆனார்கள். நீண்ட நேரம் களத்தில் இருந்து 3 பவுண்டரியை விரட்டிய தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 30 ரன்களில் அவுட் ஆனார்.

தொடக்க ஓவர்களில் விக்கெட்டுகளை இழந்து நிதானமான விளையாடி வந்த சென்னை அணிக்கு மிடில்-ஓவர்களில் உத்வேகம் கொடுத்திருந்தார் அம்பதி ராயுடு. அரைசத்தை அடித்த அவர் சந்தீப் சர்மா வீசிய 16 ஓவர்கள் ஹாட்ரிக் சிக்சருடன், பவுண்டரி விளாசினார்.

சென்னை அணியில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ராயுடு 39 பந்துகளில் 7 பவுண்டரிகள் 6 சிக்ஸர்களை பறக்கவிட்டு 78 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். சென்னையின் வெற்றிக்கு 6 பந்துகளில் 27 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ரிஷி தவான் வீசிய 20 ஓவரை சந்தித்த தோனி முதல் பந்தில் சிக்ஸர் விளாசினார். ஆட்டத்திற்கு உயிர் கொடுத்திருந்த அவர், அடுத்த பந்தை டாட் பால் விட்டு, 3 வது பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

தற்போது சென்னையின் வெற்றிக்கு 3 பந்துகளில் 20 ரன்கள் தேவைப்பட்டது, பிரிட்டோரியஸ் 1 ரன் எடுக்க, 5வது பந்தில் சிக்ஸர் அடித்தார் கேப்டன் ஜடேஜா, கடைசி பந்தில் 1 ரன் எடுக்க, சென்னை அணியின் போராட்டம் முடிவுக்கு வந்தது. சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனால் பஞ்சாப் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி புள்ளிப்பட்டியலில் 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. சென்னை அணிக்கு இது 6வது தோல்வியாகும்.

சென்னை சூப்பர் கிங்ஸ் பிளேயிங் லெவன்:

ருதுராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா, அம்பதி ராயுடு, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா(கேப்டன்), எம்.எஸ். தோனி(விக்கெட் கீப்பர்), மிட்செல் சான்ட்னர், டுவைன் பிரிட்டோரியஸ், டுவைன் பிராவோ, முகேஷ் சவுத்ரி, மகேஷ் தீக்ஷனா.

பஞ்சாப் கிங்ஸ் பிளேயிங் லெவன்:

மயங்க் அகர்வால் (கேப்டன்), ஷிகர் தவான், ஜானி பேர்ஸ்டோ, லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் ஷர்மா (விக்கெட் கீப்பர்), பானுகா ராஜபக்சே, ரிஷி தவான், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், சந்தீப் சர்மா, அர்ஷ்தீப் சிங்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“


  • 23:07 (IST) 25 Apr 2022
    சென்னையின் வெற்றிக்கு 18 பந்துகளில் 41 ரன்கள் தேவை!

    பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 188 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் சென்னை அணி 17 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 147 ரன்களை சேர்த்துள்ளது.

    சென்னையின் வெற்றிக்கு 18 பந்துகளில் 41 ரன்கள் தேவை!


  • 23:00 (IST) 25 Apr 2022
    சென்னையின் வெற்றிக்கு 24 பந்துகளில் ரன்கள் தேவை!

    பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 188 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் சென்னை அணி 16 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 141 ரன்களை சேர்த்துள்ளது. அரைசதம் விளாசிய ராயுடு அதிரடியாக விளையாடி வருகிறார்.

    சென்னையின் வெற்றிக்கு 24 பந்துகளில் 41 ரன்கள் தேவை!


  • 22:55 (IST) 25 Apr 2022
    அதிரடி காட்டும் ராயுடு; வெற்றியை நோக்கி சென்னை!

    பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 188 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் சென்னை அணி 15 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 118 ரன்களை சேர்த்துள்ளது. உத்தப்பா 1 ரன்னுடனும், சான்டனர் 9 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். பின்னர் வந்த துபே 8 ரன்னில் அவுட் ஆனார். தொடக்க வீரர் ருத்ராஜ் 30 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ராயுடு அரைசதம் விளாசியுள்ளார். சென்னையின் வெற்றிக்கு 30 பந்துகளில் 70 ரன்கள் தேவை!


  • 22:29 (IST) 25 Apr 2022
    3 விக்கெட்டுகளை பறிகொடுத்த சென்னை; 10 ஓவர்கள் முடிவில்...!

    பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 188 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் சென்னை அணி 10 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 69 ரன்களை சேர்த்துள்ளது. உத்தப்பா 1 ரன்னுடனும், சான்டனர் 9 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். பின்னர் வந்த துபே 8 ரன்னில் அவுட் ஆனார்.

    தொடக்க வீரர் ருத்ராஜ் 24 ரன்களுடனும், ராயுடு 18 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.


  • 22:17 (IST) 25 Apr 2022
    பவர் பிளே முடிவில் சென்னை அணி!

    பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 188 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் சென்னை அணி 6 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 32 ரன்களை சேர்த்துள்ளது. உத்தப்பா 1 ரன்னுடனும், சான்டனர் 9 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.


  • 21:30 (IST) 25 Apr 2022
    அரைசதம் விளாசிய தவான்; முதலில் பந்துவீசிய சென்னைக்கு 188 ரன்கள் வெற்றி இலக்கு!

    சென்னை சூப்பர் கிங்ஸ் எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 187 ரன்களை சேர்த்துள்ளது. அந்த அணியில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது 46வது ஐபிஎல் அரைசதத்தை விளாசிய தொடக்க வீரர் ஷிகர் தவான் 2 சிக்ஸர்கள் 9 பவுண்டரிகளுடன் 88 ரன்கள் குவித்தார். அவருடன் சிறப்பான ஜோடி அமைத்த பானுகா ராஜபக்சே 42 ரன்கள் எடுத்தார்.

    சென்னை அணி தரப்பில் பிராவோ 2 விக்கெட்டுகளையும், மகேஷ் தீக்ஷனா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். டாஸ் வென்று முதலில் பந்துவீசிய சென்னை அணிக்கு தற்போது 188 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


  • 20:49 (IST) 25 Apr 2022
    தவான் அரைசதம்; அதிரடிக்கு முயற்சிக்கும் பஞ்சாப் - 15 ஓவர்கள் முடிவில்!

    சென்னை சூப்பர் கிங்ஸ் எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணிக்கு மந்தமான தொடக்கம் கிடைத்த நிலையில், தற்போது அதிரடி ஆட்டம் காட்ட முயற்சித்து வருகிறது. தொடக்க வீரர் ஷிகர் தவான் தனது 46வது ஐபிஎல் அரைசதத்தை விளாசியுள்ளார்.

    பஞ்சாப் அணி 15 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 123 ரன்களை சேர்த்துள்ளது.

    தற்போது ஷிகர் தவான் 56 ரன்களுடனும், பானுகா ராஜபக்சே 38 ரன்களுடனும், களத்தில் உள்ளனர்.


  • 20:25 (IST) 25 Apr 2022
    பஞ்சாப்புக்கு மந்தமான தொடக்கம்; 10 ஓவர்கள் முடிவில்!

    சென்னை சூப்பர் கிங்ஸ் எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணிக்கு மந்தமான தொடக்கம் கிடைத்துள்ள நிலையில், 10 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 72 ரன்களை சேர்த்துள்ளது.

    ஷிகர் தவான் 27 ரன்களுடனும், பானுகா ராஜபக்சே 19 ரன்களுடனும், களத்தில் உள்ளனர்.


  • 20:05 (IST) 25 Apr 2022
    கேப்டன் மயங்க் அகர்வால் அவுட்; பவர் பிளே முடிவில் பஞ்சாப்!

    சென்னை சூப்பர் கிங்ஸ் எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணிக்கு மந்தமான தொடக்கம் கிடைத்துள்ள நிலையில், 6 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 37 ரன்களை சேர்த்துள்ளது.

    தொடக்க வீரரும் கேப்டனுமான மயங்க் அகர்வால் 18 ரன்கள் சேர்த்த நிலையில் அவுட் ஆகி வெளியேறினார்.


  • 19:31 (IST) 25 Apr 2022
    ஆட்டம் இனிதே ஆரம்பம்!

    சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் சென்னை அணி டாஸ் வென்ற நிலையில் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியுள்ளது. அந்த அணியில் கேப்டன் மயங்க் அகர்வால் - ஷிகர் தவான் ஜோடி தொடக்க வீரர்களாக களமிறங்கியுள்ளனர்.


  • 19:12 (IST) 25 Apr 2022
    பஞ்சாப் கிங்ஸ் பிளேயிங் லெவன்!

    மயங்க் அகர்வால் (கேப்டன்), ஷிகர் தவான், ஜானி பேர்ஸ்டோ, லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் ஷர்மா (விக்கெட் கீப்பர்), பானுகா ராஜபக்சே, ரிஷி தவான், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், சந்தீப் சர்மா, அர்ஷ்தீப் சிங்.


  • 19:11 (IST) 25 Apr 2022
    சென்னை சூப்பர் கிங்ஸ் பிளேயிங் லெவன்!

    ருதுராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா, அம்பதி ராயுடு, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா(கேப்டன்), எம்.எஸ். தோனி(விக்கெட் கீப்பர்), மிட்செல் சான்ட்னர், டுவைன் பிரிட்டோரியஸ், டுவைன் பிராவோ, முகேஷ் சவுத்ரி, மகேஷ் தீக்ஷனா.


  • 19:11 (IST) 25 Apr 2022
    டாஸ் வென்ற சென்னை பந்துவீச்சு தேர்வு; பஞ்சாப் முதலில் பேட்டிங்!

    15வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று இரவு நடைபெறும் 38-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. தற்போது டாஸ் சுண்டப்பட்ட நிலையில், டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதனால் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கும்.


  • 18:44 (IST) 25 Apr 2022
    நேருக்கு நேர் - ஹெட்-டு-ஹெட்!

    சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் மொத்தம் 27 ஆட்டங்களில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 16 முறை சென்னை அணியும், 11 முறை பஞ்சாப் அணியும் வென்றுள்ளன.

    முந்தைய ஆட்ட முடிவு:

    மும்பையில் உள்ள பிரபோர்ன் ஸ்டேடியத்தில் இவ்விரு அணிகளுக்கிடையேயான கடைசி போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது.

    கடைசி ஐந்து ஆட்டங்களின் முடிவுகள்:

    பஞ்சாப் கிங்ஸ் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

    பஞ்சாப் கிங்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது


  • 18:31 (IST) 25 Apr 2022
    வானிலை அறிக்கை!

    இன்று 57-60% ஈரப்பதம் காற்றின் வேகம் 11-14 km/hr, மற்றும் வெப்பநிலை 32-34 ° C ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விளையாட்டின் போது மழை பெய்ய வாய்ப்பு இல்லை.


  • 18:30 (IST) 25 Apr 2022
    வான்கடே எப்படி?

    மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் கடந்த சில ஆட்டங்களில் நிறைய ரன்கள் குவிக்கப்பட்டு உள்ளன. டெல்லிக்கு எதிராக ராஜஸ்தான் அணி 222 ரன்கள் குவித்து மலைக்க வைத்தது. எனவே இன்றைய ஆட்டத்திலும் ரன்விருந்தை எதிர்பார்க்கலாம்.


  • 18:22 (IST) 25 Apr 2022
    சென்னை சூப்பர் கிங்ஸ் உத்தேச வீரர்கள் பட்டியல்!

    ருதுராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா, அம்பதி ராயாடு, சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா (கேப்டன் ), எம்எஸ் தோனி (விக்கெட் கீப்பர்), டுவைன் பிரிட்டோரியஸ், டுவைன் பிராவோ, மிட்செல் சான்ட்னர், மகேஷ் தீக்ஷனா, முகேஷ் சவுத்ரி.


  • 18:21 (IST) 25 Apr 2022
    பஞ்சாப் கிங்ஸ் உத்தேச வீரர்கள் பட்டியல்!

    ஷிகர் தவான், மயங்க் அகர்வால் (கேப்டன்), பானுகா ராஜபக்சே, லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ஷாருக் கான், ஒடியன் ஸ்மித், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங், வைபவ் அரோரா.


  • 18:15 (IST) 25 Apr 2022
    பஞ்சாப் கிங்ஸ் அணி வீரர்கள் பட்டியல்!

    ஷிகர் தவான், மயங்க் அகர்வால் (கேப்டன்), அர்ஷ்தீப் சிங், ககிசோ ரபாடா, ஜானி பேர்ஸ்டோ, ராகுல் சாஹர், ஹர்ப்ரீத் ப்ரார், ஷாருக் கான், பிரப்சிம்ரன் சிங், ஜிதேஷ் சர்மா, இஷான் போரல், லியாம் லிவிங்ஸ்டோன், ஒடியன் ஸ்மித், சந்தீப் சர்மா, ராஜ் அங்கத் பாவா தவான், பிரேரக் மன்காட், வைபவ் அரோரா, ரிட்டிக் சட்டர்ஜி, பால்தேஜ் தண்டா, அன்ஷ் படேல், நாதன் எல்லிஸ், அதர்வா டைடே, பானுகா ராஜபக்சே, பென்னி ஹோவெல்.


  • 18:15 (IST) 25 Apr 2022
    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் பட்டியல்!

    ரவீந்திர ஜடேஜா (கேப்டன்), எம்எஸ் தோனி, மொயீன் அலி, ருதுராஜ் கெய்க்வாட், டுவைன் பிராவோ, அம்பதி ராயாடு, ராபின் உத்தப்பா, மிட்செல் சான்ட்னர், கிறிஸ் ஜோர்டான், ஆடம் மில்னே, டெவோன் கான்வே, சிவம் துபே, டுவைன் பிரிட்டோரியஸ், ராஜவர்தக்ஷானா, ராஜவர்தக்ஷானா ஹங்கர்கேகர், துஷார் தேஷ்பாண்டே, கேஎம் ஆசிப், சி ஹரி நிஷாந்த், என் ஜெகதீசன், சுப்ரான்ஷு சேனாபதி, கே பகத் வர்மா, பிரசாந்த் சோலங்கி, சிமர்ஜீத் சிங், முகேஷ் சவுத்ரி.


  • 18:14 (IST) 25 Apr 2022
    7:30 மணிக்கு தொடங்கும் ஆட்டம்!

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்கும் 38-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.


  • 18:10 (IST) 25 Apr 2022
    ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ லைவ் பிளாக்கு - க்கு அன்புடன் வரவேற்கிறோம்!

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் சென்னை – பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் குறித்து உடனுக்குடன் தெரிந்துகொள்ள ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ லைவ் பிளாக்குடன் இணைந்திருங்கள்.


Chennai Super Kings Sports Cricket Ipl Live Cricket Score Live Updates Ipl Cricket Ipl News Ipl Live Score Ipl 2022 Punjab Kings Csk Vs Pbks
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment