Advertisment

PBKS vs GT Highlights: பஞ்சாப்பை பந்தாடிய குஜராத்; 'ஹாட்ரிக்' வெற்றியை ருசித்தது!

IPL 2022 - Matchi 16, Punjab Kings vs Gujarat Titans (PBKS vs GT); Check match highlights Tamil News: பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 190 ரன்கள் கொண்ட இமாலய இலக்கை துரத்திய குஜராத் அணி திரில் வெற்றி பெற்றது.

author-image
WebDesk
New Update
IPL 2022 PBKS vs GT LIVE score updates

IPL 2022 PBKS vs GT Highlights in tamil: 15வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் மும்பையில் நேற்றிரவு நடந்த 16வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீசுவதாக அறிவித்தார். இதன்படி, பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.

Advertisment

பஞ்சாப் அணியில் தொடக்க வீரர்களாக கேப்டன் மயங்க் அகர்வால் - ஷிகர் தவான் ஜோடி களமிறங்கிய நிலையில், கேப்டன் மயங்க் 5 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் வந்த ஜானி பேர்ஸ்டோவ் 8 ரன்னிலும், மறுமுனையில் இருந்த தொடக்க வீரர் ஷிகர் தவான் 35 ரன்னிலும் அவுட் ஆனார்கள்.

களத்தில் அதிரடியாக விளையாடி வந்த லியாம் லிவிங்ஸ்டோன் தனது அரைசதத்தை பதிவு செய்தார். அவருடன் ஜோடி சேர்ந்திருந்த ஜிதேஷ் சர்மா 2 சிக்ஸர் 1 பவுண்டரியுடன் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். எனினும், அதிரடியை கைவிடாத லிவிங்ஸ்டோன் 27 பந்துகளில் 7 பவுண்டரிகள் 4 சிக்ஸர்களை பறக்கவிட்டு 64 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து களமிறங்கிய வீரர்களில் 2 சிக்ஸர்கள் விளாசிய ஷாருக் கான் 15 ரன்களில் அவுட் ஆனார். கடைசி ஓவர்களில் அதிரடியாக விளையாடிய ராகுல் சாஹர் 22 ரன்கள் எடுத்தார். இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 189 ரன்கள் குவித்தது.

குஜராத் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ரஷித் கான் 3 விக்கெட்டுகளையும், தர்ஷன் நல்கண்டே 2 விக்கெட்டுகளையும், லாக்கி பெர்குசன், முகமது ஷமி, மற்றும் கேப்டன் ஹர்திக் பாண்டியா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

தொடர்ந்து 190 ரன்கள் கொண்ட இமாலய இலக்கை துரத்திய குஜராத் அணியில் தொடக்க வீரர் மேத்யூ வேட் 6 ரன்னில் ஆட்டமிழந்தார். எனினும், பின்னர் களமிறங்கிய சாய் சுதர்சனுடன் ஜோடி சேர்ந்த ஷுப்மன் கில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த ஜோடியில் தொடக்கம் முதலே சிக்ஸர், பவுண்டரிகளை சிதறவிட்ட ஷுப்மன் கில் அரைசதம் விளாசினார். அவருடன் வலுவான ஜோடி அமைத்த சாய் சுதர்சன் 1 சிக்ஸர் 4 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார்.

களத்தில் இருந்த ஷுப்மன் கில்லுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா சில பவுண்டரிகளை ஓடவிட்டு, துடிப்புடன் வெற்றி இலக்கை துரத்தி வந்தனர். இந்த ஜோடியில் சதம் விளாசுவார் என பெரிதும் எதிர்பார்க்க ஷுப்மன் கில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஷுப்மன் கில் 59 பந்துகளில் 1 சிக்ஸர் 11 பவுண்டரிகளுடன் 96 ரன்கள் குவித்து இருந்தார்.

குஜராத் அணியின் வெற்றிக்கு கடைசி 6 பந்துகளில் 19 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 20வது ஓவரை ஒடியன் ஸ்மித் வீசினார். முதல் பந்து வைட் செல்ல, மீண்டும் முதல் பந்தை சந்தித்த மில்லர் ரன் ஓட முயன்று கேப்டன் ஹர்திக் பாண்டியாவை ரன் அவுட் செய்தார். கேப்டன் ரன்-அவுட் ஆனதால் ஆட்டம் தோல்வியில் தான் முடியும் என அணியினர் கண்ணத்தில் கை வைத்தனர்.

இந்த தருணத்தில் களம் புகுந்த ராகுல் தெவாடியா 2வது பந்தில் ஒரு ரன் எடுத்தார். அடுத்த பந்தை சந்தித்த மில்லர் பவுண்டரி விளாசினார். 4வது பந்தில் மில்லர் ஒரு ரன் எடுத்து ஸ்ட்ரைக்கை தெவாடியா வசம் கொடுத்தார். 'சிக்கினால் சிக்ஸர்…' என்று மட்டையை சுழற்றி தெவாடியா பந்தை பவுண்டரி கோட்டிற்கு மேல் பறக்க விட்டார். அடுத்த பந்தையும் அதே பாணியில் சந்தித்த அவர், இம்முறை ஆஃப் சைடில் சற்று நகர்ந்து வந்து மட்டையை சுழற்றி சிக்ஸர் விளாசி ஆட்டத்தை முடித்து வைத்தார்.

2 பந்துகளில் 12 ரன்கள் தேவைப்பட்ட தருணத்தில் ராகுல் தெவாடியா விளாசிய 2 சிக்ஸர்களால் குஜராத் அணி ஹாட்ரிக் வெற்றியை ருசித்து, பஞ்சாப் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. மேலும், 3 தொடர் வெற்றிகள் மூலம் குஜராத் அணி புள்ளிப்பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கில் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil


  • 23:48 (IST) 08 Apr 2022
    பஞ்சாப்பை பந்தாடிய குஜராத்; 2 பந்துகளில் 2 சிக்ஸர், ஆட்டத்தை முடித்து வைத்த ராகுல் தெவாடியா!

    பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 190 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வந்த குஜராத் டைட்டன்ஸ் அணியின் வெற்றிக்கு 2 பந்துகளில் 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், களத்தில் இருந்து மட்டையை சுழற்றி ராகுல் தெவாடியா 2 பந்துகளில் 2 சிக்ஸர் அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தார். பஞ்சாப் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியசத்தில் குஜராத் அணி வீழ்த்தியது.


  • 23:26 (IST) 08 Apr 2022
    ஹர்திக் பாண்டியா அவுட்; குஜராத் வெற்றிக்கு 5 பந்துகளில் 18 ரன்கள் தேவை!

    பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 190 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா ரன் அவுட் ஆனார். தற்போது அந்த அணியின் வெற்றிக்கு 6 பந்துகளில் 19 ரன்கள் தேவை.


  • 23:23 (IST) 08 Apr 2022
    குஜராத் வெற்றிக்கு 6 பந்துகளில் 19 ரன்கள் தேவை!

    பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 190 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் குஜராத் டைட்டன்ஸ் அணியின் வெற்றிக்கு 6 பந்துகளில் 19 ரன்கள் தேவை.


  • 23:22 (IST) 08 Apr 2022
    குஜராத் வெற்றிக்கு 6 பந்துகளில் 19 ரன்கள் தேவை!

    பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 190 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் குஜராத் டைட்டன்ஸ் அணியின் வெற்றிக்கு 6 பந்துகளில் 19 ரன்கள் தேவை.


  • 23:00 (IST) 08 Apr 2022
    சாய் சுதர்சன் அவுட்!

    பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 190 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் குஜராத் டைட்டன்ஸ் அணி 15 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்களை சேர்த்துள்ளது. அந்த அணியில் அதிரடியாக ரன்களை சேர்த்து வந்த சாய் சுதர்சன் 35 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    குஜராத் டைட்டன்ஸ் வெற்றிக்கு 50 பந்துகளில் 30 ரன்கள் தேவை.


  • 22:34 (IST) 08 Apr 2022
    10 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி!

    பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 190 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் குஜராத் டைட்டன்ஸ் அணி 10 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 94 ரன்களை சேர்த்துள்ளது.

    ஷுப்மன் கில் 59 ரன்களுடனும், சாய் சுதர்சன் 27 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.


  • 22:11 (IST) 08 Apr 2022
    பவர் பிளே முடிவில் குஜராத் அணி!

    பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 190 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் குஜராத் டைட்டன்ஸ் அணி 6 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 53 ரன்களை சேர்த்துள்ளது.

    ஷுப்மன் கில் 33 ரன்களுடனும், சாய் சுதர்சன் 12 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.


  • 22:02 (IST) 08 Apr 2022
    மேத்யூ வேட் அவுட்!

    பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 190 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் குஜராத் டைட்டன்ஸ் அணி அதன் முதல் விக்கெட்டை இழந்துள்ளது. அந்த அணியின் தொடக்க வீரர் மேத்யூ வேட் 6 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    4 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 37 ரன்களை சேர்த்துள்ளது.


  • 20:48 (IST) 08 Apr 2022
    பஞ்சாப் அணிக்கு அடுத்தடுத்த விக்கெட் இழப்பு!

    குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்து வரும் பஞ்சாப் கிங்ஸ் அணி தற்போது 5 விக்கெட்களை இழந்துள்ளது. அந்த அணி 14 ஓவர்கள் முடிவில் 134 ரன்களை சேர்த்துள்ளது.


  • 20:44 (IST) 08 Apr 2022
    அரைசதம் விளாசினார் லிவிங்ஸ்டோன்!

    குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்து வரும் பஞ்சாப் கிங்ஸ் அணி மிடில் ஆடர் வீரர் லியாம் லிவிங்ஸ்டோன் அதிரடியாக விளையாடி 21 பந்துகளில் 4 பவுண்டரிங்கள், 4 சிக்ஸர்களை விளாசி அரைசதம் விளாசினார்.


  • 20:27 (IST) 08 Apr 2022
    தவான் அவுட்!

    குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்து வரும் பஞ்சாப் கிங்ஸ் 3 விக்கெட்களை இழந்துள்ளது. அந்த அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான் 35 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார்.


  • 20:25 (IST) 08 Apr 2022
    10 ஓவர்கள் முடிவில் பஞ்சாப்!

    குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்து வரும் பஞ்சாப் கிங்ஸ் 2 விக்கெட்களை இழந்துள்ளது. அந்த அணியின் கேப்டன் மயங்க் அகர்வால் 5 ரன்னிலும், ஜானி பேர்ஸ்டோவ் 8 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

    பஞ்சாப் அணி 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 86 ரன்களை சேர்த்துள்ளது. தற்போது லிவிங்ஸ்டோன் 36 ரன்களுடனும் - ஷிகர் தவான் 35 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.


  • 20:09 (IST) 08 Apr 2022
    2 விக்கெட்டுகளை பறிகொடுத்த பஞ்சாப்; பந்துவீச்சில் கலக்கும் குஜராத்!

    குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்து வரும் பஞ்சாப் கிங்ஸ் அதன் 2 விக்கெட்களை இழந்துள்ளது. அந்த அணியின் கேப்டன் மயங்க் அகர்வால் 5 ரன்னிலும், ஜானி பேர்ஸ்டோவ் 8 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

    பஞ்சாப் அணி 6 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 43 ரன்களை சேர்த்துள்ளது.


  • 19:47 (IST) 08 Apr 2022
    முதல் விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப் கிங்ஸ்!

    குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்து வரும் பஞ்சாப் கிங்ஸ் அதன் முதல் விக்கெட்டை இழந்துள்ளது. அந்த அணியின் கேப்டன் மயங்க் அகர்வால் 5 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

    பஞ்சாப் அணி 3 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 20 ரன்களை சேர்த்துள்ளது.


  • 19:11 (IST) 08 Apr 2022
    குஜராத் டைட்டன்ஸ் பிளேயிங் லெவன்!

    மேத்யூ வேட்(விக்கெட் கீப்பர்), ஷுப்மன் கில், சாய் சுதர்சன், ஹர்திக் பாண்டியா(கேப்டன்), டேவிட் மில்லர், ராகுல் தெவாடியா, அபினவ் மனோகர், ரஷித் கான், லாக்கி பெர்குசன், முகமது ஷமி, தர்ஷன் நல்கண்டே


  • 19:10 (IST) 08 Apr 2022
    பஞ்சாப் கிங்ஸ் பிளேயிங் லெவன்!

    மயங்க் அகர்வால் (கேப்டன்), ஷிகர் தவான், லியாம் லிவிங்ஸ்டோன், ஜானி பேர்ஸ்டோவ் (விக்கெட் கீப்பர்), ஜிதேஷ் சர்மா, ஷாருக் கான், ஒடியன் ஸ்மித், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், வைபவ் அரோரா, அர்ஷ்தீப் சிங்


  • 19:06 (IST) 08 Apr 2022
    டாஸ் வென்ற குஜராத் பந்துவீச்சு தேர்வு; பஞ்சாப் முதலில் பேட்டிங்!

    15வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் மும்பையில் இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்கிய 16வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. தற்போது டாஸ் சுண்டப்பட்ட நிலையில், டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதனால், பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கும்.


  • 19:00 (IST) 08 Apr 2022
    100வது சிக்ஸரை அடிப்பாரா கேப்டன் ஹர்டிக் பாண்டிய?

    ஐபிஎல் தொடருக்கான குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்டிக் பாண்டிய, ஐபிஎல் தொடரில் இதுவரை 100 சிக்ஸர்களை விளாசியுள்ளார். அவர் தனது 100வது சிக்ஸரை இன்றைய ஆட்டத்தில் பறக்க விடுவாரா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.


  • 18:21 (IST) 08 Apr 2022
    குஜராத் டைட்டன்ஸ் அணி உத்தேச வீரர்கள் பட்டியல்!

    ஷுப்மன் கில், மேத்யூ வேட், விஜய் சங்கர், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டேவிட் மில்லர், அபினவ் சதராங்கனி, ராகுல் தெவாடியா, ரஷித் கான், முகமது ஷமி, லாக்கி பெர்குசன், வருண் ஆரோன்.


  • 18:20 (IST) 08 Apr 2022
    பஞ்சாப் கிங்ஸ் அணியின் உத்தேச வீரர்கள் பட்டியல்!

    ஷிகர் தவான், மயங்க் அகர்வால் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோவ், பானுகா ராஜபக்சே, லியாம் லிவிங்ஸ்டோன், ஷாருக் கான், ஜிதேஷ் சர்மா, ஹர்பிரீத் பிரார், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங்.


  • 18:15 (IST) 08 Apr 2022
    பஞ்சாப் கிங்ஸ் அணியின் வீரர்கள் பட்டியல்!

    மயங்க் அகர்வால் (கேப்டன்), ஷிகர் தவான், அர்ஷ்தீப் சிங், ககிசோ ரபாடா, ஜானி பேர்ஸ்டோ, ராகுல் சாஹர், ஹர்ப்ரீத் பிரார், ஷாருக் கான், பிரப்சிம்ரன் சிங், ஜிதேஷ் சர்மா, இஷான் போரல், லியாம் லிவிங்ஸ்டோன், ஒடியன் ஸ்மித், சந்தீப் சர்மா, ராஜ் அன்கத் பாவா, ரிஷி தவான், பிரேரக் மன்கட், வைபவ் அரோரா, ரிட்டிக் சாட்டர்ஜி, பால்தேஜ் தண்டா, அன்ஷ் படேல், நாதன் எல்லிஸ், அதர்வா டைடே, பானுகா ராஜபக்சே, பென்னி ஹோவெல்.


  • 18:14 (IST) 08 Apr 2022
    குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர்கள் பட்டியல்!

    ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ரஷித் கான், ஷுப்மான் கில், முகமது ஷமி, லாக்கி பெர்குசன், அபினவ் சதராங்கனி, ராகுல் தெவாடியா, நூர் அகமது, சாய் கிஷோர், விஜய் சங்கர், ஜெயந்த் யாதவ், டொமினிக் டிரேக்ஸ், தர்ஷன் நல்கண்டே, அல்ஸ் தயாள், அல்ஸ் தயாள், , பிரதீப் சங்வான், டேவிட் மில்லர், விருத்திமான் சாஹா, மேத்யூ வேட், வருண் ஆரோன், பி சாய் சுதர்ஷன்.


  • 18:11 (IST) 08 Apr 2022
    ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ லைவ் பிளாக்கு - க்கு அன்புடன் வரவேற்கிறோம்!

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் பஞ்சாப் - குஜராத் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் குறித்து உடனுக்குடன் தெரிந்துகொள்ள 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்' லைவ் பிளாக்குடன் இணைந்திருங்கள்.


Sports Cricket Ipl Live Cricket Score Live Updates Ipl Cricket Ipl News Ipl Live Score Gujarat Titans Ipl 2022 Punjab Kings Pbks Vs Gt
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment