IPL 2022, RCB vs RR Highlights in tamil: 15வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் புனேயில் நேற்றிரவு 7:30 மணிக்கு தொடங்கிய 39வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் பந்துவீசுவதாக அறிவித்தார். இதனால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.
ராஜஸ்தான் அணியில் ஜோஸ் பட்லர் – தேவ்தத் படிக்கல் ஜோடி தொடக்க வீரர்களாக களமிறங்கிய நிலையில், 1 சிக்ஸரை பறக்கவிட்டு 7 ரன்கள் எடுத்த தேவ்தட் படிக்கல் சிராஜ் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார். பின்னர் வந்து 4 பவுண்டரிகளை ஓடவிட்ட அஸ்வின் 17 ரன்னில் ஆட்டமிழந்தார். நடப்பு தொடரில் ரன் மிஷினாக செயல்பட்டு வரும் ராஜஸ்தானின் தொடக்க வீரர் பட்லர் 8 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
அடுத்தடுத்த விக்கெட் இழப்புக்கு மத்தியில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் சஞ்சு சாம்சன் ஒரு பவுண்டரி 3 சிக்ஸர்கள் என 27 ரன்கள் எடுத்து வனிந்து ஹசரங்கா சுழலில் சிக்கி க்ளீன் போல்ட்-அவுட் ஆகி வெளியேறினார். பின்னர் வந்த வீரர்களில் பொறுப்பாக விளையாடிய ரியான் பராக் அரைசதம் அடித்தார். அவர் 31 பந்துகளில் 3 பவுண்டரி, 4 சிக்ஸர்களுடன் 56 ரன்கள் சேர்த்தார்.
இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த ராஜஸ்தான் அணி 144 ரன்களை சேர்த்தது. இதனால், பெங்களூரு அணிக்கு 145 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. டாஸ் வென்று முதலில் பந்துவீசிய பெங்களுரு அணியில் வனிந்து ஹசரங்கா, ஜோஷ் ஹேசில்வுட், முகமது சிராஜ் தலா 2 விக்கெட்டுகளையும், ஹர்ஷல் படேல் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
Innings Break!
— IndianPremierLeague (@IPL) April 26, 2022
Brilliant bowling effort from @RCBTweets restricts #RR to a total of 144/8 on the board.
Scorecard – https://t.co/fVgVgn1vUG #RCBvRR #TATAIPL pic.twitter.com/gCq3webZZw
A 56* off 31 deliveries from @ParagRiyan makes him our Top Performer from the first innings.
— IndianPremierLeague (@IPL) April 26, 2022
A look at his batting summary here 👇👇 #TATAIPL #RCBvRR pic.twitter.com/dydyVwEC1L
தொடர்ந்து 145 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய பெங்களூரு அணியில், தொடக்க வீரர் விராட் கோலி 9 ரன்னிலும், 3 பவுண்டரி, 1 சிக்ஸரை பறக்கவிட்ட கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் 23 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். களத்தில் இருந்த மேக்ஸ்வெல் பூஜ்ஜிய ரன்னில் அவுட் ஆகி நடையை கட்டினார்.
அந்த அணியின் அதிரடி வீரர் தினேஷ் கார்த்திக் 6 எடுத்த நிலையில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். பின்னர் களமிறங்கிய வீரர்களில் வனிந்து ஹசரங்கா 18 ரன்கள், ஷாபாஸ் அகமது 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறிய நிலையில், 19.3 வது ஓவரிலே அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்த பெங்களூரு அணி 115 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதனால் பந்துவீச்சில் தொடக்க முதலே மிரட்டி வந்த ராஜஸ்தான் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை ருசித்தது. அந்த அணி தரப்பில் குல்தீப் சென் 4 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஷ்வின் 3 விக்கெட்டுகளையும், பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இந்த அசத்தலான வெற்றியுடன் 12 புள்ளிகளை சேர்த்துள்ள ராஜஸ்தான் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. தோல்வி கண்ட பெங்களூரு அணி 5வது இடத்திலே நீடிக்கிறது.
Riyan Parag put on an impressive show & bagged the Player of the Match award as @rajasthanroyals beat #RCB by 29 runs.
— IndianPremierLeague (@IPL) April 26, 2022
Scorecard – https://t.co/fVgVgn1vUG #RCBvRR #TATAIPL pic.twitter.com/Ac8QOrrAeT
That's that from Match 39.@rajasthanroyals take this home by 29 runs.
— IndianPremierLeague (@IPL) April 26, 2022
Scorecard – https://t.co/fVgVgn1vUG #RCBvRR #TATAIPL pic.twitter.com/9eGWXFjDCR
Milestone 🚨 – 150 wickets in IPL for @ashwinravi99 👏👏#TATAIPL #RCBvRR pic.twitter.com/Heb56QIwtl
— IndianPremierLeague (@IPL) April 26, 2022
ராஜஸ்தான் ராயல்ஸ் பிளேயிங் லெவன்: ஜோஸ் பட்லர், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன்(கேப்டன் / விக்கெட் கீப்பர்), ஷிம்ரோன் ஹெட்மியர், ரியான் பராக், டேரில் மிட்செல், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரென்ட் போல்ட், குல்தீப் சென், பிரசித் கிருஷ்ணா, யுஸ்வேந்திர சாஹல்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பிளேயிங் லெவன்:
ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல், சுயாஷ் பிரபுதேசாய், ரஜத் படிதார், ஷாபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்ஷல் படேல், வனிந்து ஹசரங்கா, ஜோஷ் ஹேசில்வுட், முகமது சிராஜ்.
Indian Premier League, 2022Maharashtra Cricket Association Stadium, Pune 25 March 2023
Royal Challengers Bangalore 115 (19.3)
Rajasthan Royals 144/8 (20.0)
Match Ended ( Day – Match 39 ) Rajasthan Royals beat Royal Challengers Bangalore by 29 runs
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 145 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 19 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்களை சேர்த்துள்ளது.
தற்போது பெங்களூரு அணி வெற்றிக்கு 6 பந்துகளில் 30 ரன்கள் தேவை.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 145 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 17 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்களை சேர்த்துள்ளது.
தற்போது பெங்களூரு அணி வெற்றிக்கு 18 பந்துகளில் 42 ரன்கள் தேவை.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 145 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 16 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 94 ரன்களை சேர்த்துள்ளது.
தற்போது பெங்களூரு அணி வெற்றிக்கு 24 பந்துகளில் 51 ரன்கள் தேவை.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 145 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 15ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 90 ரன்களை சேர்த்துள்ளது.
தற்போது பெங்களூரு அணி வெற்றிக்கு 30 பந்துகளில் 55 ரன்கள் தேவை.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 145 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 13 ஓவர்கள் முடிவில் 72 ரன்களை சேர்த்துள்ளது.
அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரர் தினேஷ் கார்த்திக் ரன்-அவுட் ஆகி வெளியேறினார்.
பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரஜத் படிதார் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் ஐபிஎல் தொடரில் தனது 150 வது விக்கெட் எனும் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார் சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 145 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 9 ஓவர்கள் முடிவில் 55 ரன்களை சேர்த்துள்ளது.
அந்த அணியின் தொடக்க வீரர் விராட் கோலி 9 ரன்னிலும், 3 பவுண்டரி, 1 சிக்ஸரை பறக்கவிட்ட கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் 23 ரன்களிலும், மேக்ஸ்வெல் பூஜ்ஜிய ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
ரஜத் படிதார் 14 ரன்களுடனும், ஷாபாஸ் அகமது 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்களை சேர்த்துள்ளது. அந்த அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரியான் பராக் அரைசதம் அடித்து 3 பவுண்டரி, 4 சிக்ஸர்களுடன் 56 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்களில், 3 சிக்ஸர்களை பறக்கவிட்ட கேப்டன் சஞ்சு 27 ரன்களும், 4 பவுண்டரியை துரத்திய அஸ்வின் 17 ரன்களும் எடுத்தனர்.
பந்துவீச்சில் மிரட்டி எடுத்த பெங்களுரு அணியில் வனிந்து ஹசரங்கா, ஜோஷ் ஹேசில்வுட், முகமது சிராஜ் தலா 2 விக்கெட்டுகளையும், ஹர்ஷல் படேல் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
தற்போது 145 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்த பெங்களூரு அணி களமிறங்கியுள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கும் எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் செய்துவருகிறது. பந்துவீச்சில் மிரட்டி வரும் பெங்களுரு அணி 6 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளது. முக்கிய விக்கெட்டுகளை பறிகொடுத்துள்ள ராஜஸ்தான் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
தற்போது ராஜஸ்தான் அணி 15.3வது ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 103 ரன்களை சேர்த்துள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கும் எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் செய்துவருகிறது. பந்துவீச்சில் மிரட்டி வரும் பெங்களுரு அணி 4 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளது. முக்கிய விக்கெட்டுகளை பறிகொடுத்துள்ள ராஜஸ்தான் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
தற்போது ராஜஸ்தான் அணி 13 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 95 ரன்களை சேர்த்துள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கும் எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் செய்துவருகிறது. ஒரு பவுண்டரி 3 சிக்ஸர்கள் என 27 ரன்கள் சேர்த்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் வனிந்து ஹசரங்கா சுழலில் க்ளீன் போல்ட் அவுட் ஆகி வெளியேறினார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கும் எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் செய்துவருகிறது. அந்த அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய தேவ்தத் படிக்கல் 1 சிக்ஸரை பறக்கவிட்டு 7 எடுத்த தேவ்தட் படிக்கல் சிராஜ் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார். 4 பவுண்டரிகளை ஓடவிட்ட அஸ்வின் 17 ரன்னில் ஆட்டமிழந்தார்.
நடப்பு தொடரில் ரன் மிஷினாக செயல்பட்டு வரும் ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர் பட்லர் 8 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
தற்போது ராஜஸ்தான் அணி 5 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 33 ரன்களை சேர்த்துள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கும் எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் செய்துவருகிறது. அந்த அணியில் தொடக்க வீரர்களாக ஜோஸ் பட்லர் – தேவ்தத் படிக்கல் ஜோடி களமிறங்கிய நிலையில், 1 சிக்ஸரை பறக்கவிட்டு 7 எடுத்த தேவ்தட் படிக்கல் சிராஜ் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார்.
தற்போது ராஜஸ்தான் அணி 2 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 19 ரன்களை சேர்த்துள்ளது.
ஜோஸ் பட்லர், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன்(கேப்டன் / விக்கெட் கீப்பர்), ஷிம்ரோன் ஹெட்மியர், ரியான் பராக், டேரில் மிட்செல், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரென்ட் போல்ட், குல்தீப் சென், பிரசித் கிருஷ்ணா, யுஸ்வேந்திர சாஹல்
ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல், சுயாஷ் பிரபுதேசாய், ரஜத் படிதார், ஷாபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்ஷல் படேல், வனிந்து ஹசரங்கா, ஜோஷ் ஹேசில்வுட், முகமது சிராஜ்
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் புனேயில் இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்கும் 39வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. தற்போது டாஸ் சுண்டப்பட்ட நிலையில், டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதன்படி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கும்.
#rcb have won the toss and they will bowl first against #rr.Live – https://t.co/LIICyVUet1 #rcbvrr #tataipl pic.twitter.com/2Hbl4BX2dp
— IndianPremierLeague (@IPL) April 26, 2022
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இதுவரை 25 ஆட்டங்களில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் பெங்களூரு அணி 13 முறையும், ராஜஸ்தான் அணி 10 முறையும் வென்றுள்ளன. 2 ஆட்டங்களில் முடிவு கிடைக்கவில்லை.
முந்தைய ஆட்ட முடிவு:
இந்த இரு அணிகளுக்கும் இடையே மும்பையில் நடந்த முந்தைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது.
கடைசி ஐந்து ஆட்டங்களில் முடிவுகள்:
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
அனுஜ் ராவத், ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ் (கேப்டன்), கிளென் மேக்ஸ்வெல், விராட் கோலி, ஷாபாஸ் அகமது, சுயாஷ் பிரபுதேசாய், வனிந்து ஹசரங்கா, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஜோஷ் ஹேசில்வுட், ஹர்ஷல் படேல், முகமது சிராஜ்.
𝗢𝗡𝗘 𝗠𝘂𝘁𝗵𝗼𝗼𝘁 𝗠𝗼𝗺𝗲𝗻𝘁 𝗼𝗳 𝘁𝗵𝗲 𝗗𝗮𝘆 📸 Game faces 🔛 as we head to the MCA stadium for our clash against RR tonight. 👊🏻 @MuthootIndia #playbold #wearechallengers #ipl2022 #mission2022 #rcb ್ಮRCB pic.twitter.com/eRLZ7JjnLd
— Royal Challengers Bangalore (@RCBTweets) April 26, 2022
தேவ்தத் படிக்கல், ஜோஸ் பட்லர், ஷிம்ரோன் ஹெட்மியர், சஞ்சு சாம்சன் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), ரியான் பராக், கருண் நாயர், டிரெண்ட் போல்ட், ரவிச்சந்திரன் அஷ்வின், ஓபேட் மெக்காய், பிரசித் கிருஷ்ணா, யுஸ்வேந்திர சாஹல்
You know the drill.👇 #hallabol | #rcbvrr | #jiodigitallife | #jiotogether | @reliancejio pic.twitter.com/0vpTUdZzq7
— Rajasthan Royals (@rajasthanroyals) April 26, 2022
யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரியான் பராக், ஷுபம் கர்வால், துருவ் ஜூரல், குல்தீப் யாதவ், குல்தீப் சென், தேஜஸ் பரோகா, அனுனய் சிங், கே.சி கரியப்பா, சஞ்சு சாம்சன் (கேப்டன்), ஜோஸ் பட்லர், ரஸ்ஸி வான் டெர் டுசென், நாதன் கவுல்டர் நைல், ஜிம்மி எம். , கருண் நாயர், ஓபேட் மெக்காய், நவ்தீப் சைனி, ரவிச்சந்திரன் அஷ்வின், டிரென்ட் போல்ட், ஷிம்ரோன் ஹெட்மியர், தேவ்தத் பாடிக்கல், பிரசித் கிருஷ்ணா, யுஸ்வேந்திர சாஹல்.
விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல், முகமது சிராஜ், ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), ஹர்ஷல் படேல், வனிந்து ஹசரங்கா, தினேஷ் கார்த்திக், ஜோஷ் ஹேசில்வுட், ஷாபாஸ் அகமது, அனுஜ் ராவத், ஆகாஷ் டீப், மஹிபால் லோம்ரோர், ஃபின், ஷெர்ஃபான் ஆலன், ஷெர்ஃபேன், ஆலன் சுயாஷ் பிரபுதேசாய், சாமா மிலிந்த், அனீஸ்வர் கவுதம், கர்ண் ஷர்மா, டேவிட் வில்லி, ரஜத் படிதார், சித்தார்த் கவுல்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் புனேயில் இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்கும் 39வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
We’re back in Pune for our second game at the MCA Stadium and it’s going to be one exciting clash! ⚔️ Are you ready for Game Day, 12th Man Army? 🥳#playbold #wearechallengers #ipl2022 #mission2022 #rcb ್ಮRCB #rcbvrr pic.twitter.com/LysBI0lmNm
— Royal Challengers Bangalore (@RCBTweets) April 26, 2022
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் பெங்களூரு – ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் குறித்து உடனுக்குடன் தெரிந்துகொள்ள ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ லைவ் பிளாக்குடன் இணைந்திருங்கள்.