/tamil-ie/media/media_files/uploads/2022/04/tamil-indian-express-2022-04-23T190904.176.jpg)
IPL 2022, RCB vs SRH LIVE match HighlightsIn Tamil: 15வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை பிரபோர்ன் ஸ்டேடியத்தில் இன்று சனிக்கிழமை இரவு 7:30 மணிக்கு நடந்த 36வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். இதனால், பெங்களூரு அணி பேட்டிங் செய்ய களம் புகுந்தது.
பெங்களூரு அணியில் கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் - அனுஜ் ராவத் தொடக்க வீரர்களாக களமாடிய நிலையில், டு பிளெசிஸ் 5 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் வந்த விராட் கோலி, அவருடன் மறுமுனையில் இருந்த மற்றொரு தொடக்க வீரர் அனுஜ் ராவத் பூஜ்ஜிய ரன்னில் அவுட் ஆகி பெவிலியனுக்கு நடையை கட்டினர். இந்த மூவரின் விக்கெட்டுகளையும் ஐதராபாத் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் மார்கோ ஜான்சன் வீழ்த்தி இருந்தார்.
தொடர்ந்து வந்த கிளென் மேக்ஸ்வெல் 2 பவுண்டரிகளை விரட்டி 12 ரன்களில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனால் பவர்பிளே முடிவில் பெங்களுரு அணி 4 விக்கெட்டுகளை பறிகொடுத்து ரன் சேர்க்க தடுமாறி வந்தது. சிறிது நேரம் விக்கெட் சரிவை மீட்ட பெங்களூரு அணியின் சுயாஷ் பிரபுதேசாய் 15 ரன்னிலும், ஷாபாஸ் அகமது 7 ரன்னிலும் அவுட் ஆனார்கள்.
ஒருபுறம் அடுத்தடுத்த விக்கெட் இழப்பு, மறுபுறம் ரன் சேர்ப்பதில் தடுமாற்றம் என்று திணறிய அணியை அதிரடி வீரர் தினேஷ் கார்த்திக் மீட்டெடுப்பர் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், சுசித் வீசிய 8.5வது ஓவரில் தினேஷ் கார்த்திக் கேட்ச் கொடுத்து பூஜ்ஜிய ரன்னுடன் பெவிலியன் நோக்கி நடந்தார்.
தொடர்ந்து களமிறங்கிய வீரர்களில் ஹர்சல் படேல் (4) மற்றும் வனிந்து ஹசரங்கா (8) யார்க்கர் மன்னன் நடராஜனின் வேகத்தில் கிளீன் போல்ட் -அவுட் ஆகி வெளியேறினார்கள். புவனேஷ்வர் குமார் வீசிய 16.1வது ஓவரில் சிராஜ் கேட்ச் கொடுத்து ஆட்டமிழக்க, பெங்களூரு அணி அதன் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 68 ரன்கள் எடுத்தது. இதனால் ஐதராபாத் அணிக்கு 69 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
பந்துவீச்சில் மிரட்டி எடுத்த ஐதராபாத் அணியில் இளம் வேகப்பந்து வீச்சாளர் மார்கோ ஜான்சன் மற்றும் நடராஜன் தலா 3 விக்கெட்டுகளையும், ஜெகதீஷா சுசித் 2 விக்கெட்டுகளையும், உம்ரான் மாலிக் மற்றும் புவனேஷ்வர் குமார் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
After a superlative bowling performance, #SRH will be back for their run-chase
Join us for all the action in a bit and follow the game here: https://t.co/f9ENkwNWAn#TATAIPL | #RCBvSRH | #IPL2022pic.twitter.com/BPAQf5ZdLr— IndianPremierLeague (@IPL) April 23, 2022
தொடர்ந்து 69 ரன்கள் கொண்ட எளிய வெற்றி இலக்கை துரத்திய ஐதராபாத் அணியில் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 20 பந்துகளில் ஒரு சிக்ஸர் 8 பவுண்டரிகளை ஓட விட்ட 47 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். 2 பவுண்டரிகளை விரட்டிய கேப்டன் கேன் வில்லியம்சன் 16 ரன்கள் எடுத்தார். முதல் விக்கெட்டுக்கு பிறகு களமிறங்கிய ராகுல் திரிபாதி சிக்ஸர் அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தார்.
இதன் மூலம் ஐதராபாத் பெங்களூரூ அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. தொடர்ந்து 5வது வெற்றியை ருசித்துள்ள அந்த அணி 10 புள்ளிகளுடன் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. ஐபிஎல் தொடரில் 8வது முறை 100 ரன்களுக்கு கீழ் சுருண்ட பெங்களூரு அணி 3 தோல்வி, 5 வெற்றிகளுடன் 10 புள்ளிகளை பெற்று 4வது இடத்தில் உள்ளது.
An emphatic win for #SRH as they beat #RCB by 9 wickets 👏🔥
Splendid performance from Kane & Co. This is one happy group right now 😃😃
They move to No.2 on the points table #TATAIPL | #RCBvSRH | #IPL2022pic.twitter.com/TocgmvruFL— IndianPremierLeague (@IPL) April 23, 2022
ஆட்டநாயகன் விருதை ஐதராபாத் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் மார்கோ ஜான்சன் பெற்றார்.
For picking up 3 key wickets, Marco Jansen is the Player of the Match in Match 36 as @SunRisers beat #RCB by 9 wickets 👌👌#TATAIPL#RCBvSRHpic.twitter.com/3xENNUif1K
— IndianPremierLeague (@IPL) April 23, 2022
An Abhishek Sharma special in SRH's run-chase makes him the 🔝 Performer post his team's 9-wicket win 👏#TATAIPL | #RCBvSRH | #IPL2022pic.twitter.com/E2ls1HQo2b
— IndianPremierLeague (@IPL) April 23, 2022
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பிளேயிங் லெவன்:
ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), அனுஜ் ராவத், விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல், சுயாஷ் பிரபுதேசாய், ஷாபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), வனிந்து ஹசரங்கா, ஹர்சல் படேல், ஜோஷ் ஹேசில்வுட், முகமது சிராஜ்
சன்ரைசர்ஸ் ஐதராபாத் பிளேயிங் லெவன்:
அபிஷேக் சர்மா, கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), ஷஷாங்க் சிங், ஜெகதீஷா சுசித், புவனேஷ்வர் குமார், மார்கோ ஜான்சன், உம்ரான் மாலிக், டி நடராஜன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
- 21:17 (IST) 23 Apr 2022பந்துவீச்சில் மிரட்டிய ஐதராபாத்; பெங்களூரு அணி 68 ரன்னில் சுருண்டது!
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 68 ரன்கள் சேர்த்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது. இதனால் பந்துவீச்சில் தொடக்கம் முதல் மிரட்டி வந்த ஐதராபாத் அணிக்கு 69 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு அணியில் கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் 5 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் வந்த விராட் கோலி, அவருடன் மறுமுனையில் இருந்த மற்றொரு தொடக்க வீரர் அனுஜ் ராவத் பூஜ்ஜிய ரன்னில் அவுட் ஆனார்கள். களத்தில் இருந்த கிளென் மேக்ஸ்வெல் 12 ரன்னில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அந்த அணியின் அதிரடி வீரர் தினேஷ் கார்த்திக் பூஜ்ஜிய ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். அணியில் அதிகபட்சமாக சுயாஷ் பிரபுதேசாய் 15 ரன்கள் எடுத்தார்.
பந்துவீச்சில் மிரட்டி எடுத்த ஐதராபாத் அணியில் இளம் வேகப்பந்து வீச்சாளர் மார்கோ ஜான்சன், நடராஜன் தலா 3 விக்கெட்டுகளையும், ஜெகதீஷா சுசித் 2 விக்கெட்டுகளையும், உம்ரான் மாலிக், புவனேஷ்வர் குமார் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
After a superlative bowling performance, srh will be back for their run-chase
— IndianPremierLeague (@IPL) April 23, 2022
Join us for all the action in a bit and follow the game here: https://t.co/f9ENkwNWAntataipl | rcbvsrh | ipl2022pic.twitter.com/BPAQf5ZdLrStellar bowling performance from srh as they bundle out rcb for just 68
— IndianPremierLeague (@IPL) April 23, 2022
3 wickets for Jansen and 3 for T Natarajan who ended up with figures of 3/10 and he is our top performer for his economical bowling figures!
Follow the match: https://t.co/f9ENkwNWAntataipl | rcbvsrhpic.twitter.com/UViVjaCFGi - 20:55 (IST) 23 Apr 20228 விக்கெட்டுகளை பறிகொடுத்த பெங்களூரு; 15 ஓவர்கள் முடிவில்...!
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்து வ்ரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 15 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை பறிகொடுத்து 65 ரன்களை சேர்த்துள்ளது.
- 20:31 (IST) 23 Apr 20227 விக்கெட்டுகளை பறிகொடுத்த பெங்களூரு; 10 ஓவர்கள் முடிவில்...!
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்து வ்ரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 10 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை பறிகொடுத்து 49 ரன்களை சேர்த்துள்ளது.
அந்த அணியின் அதிரடி வீரர் தினேஷ் கார்த்திக் பூஜ்ஜிய ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
- 20:07 (IST) 23 Apr 2022அடுத்தடுத்த விக்கெட் இழப்பு; ரன் சேர்க்க தடுமாறும் பெங்களூரு!
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்து வ்ரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 6 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்து 32 ரன்களை சேர்த்துள்ளது. அந்த அணியின் தொடக்க வீரர் கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் 5 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறிய நிலையில், பின்னர் வந்த விராட் கோலி, அவருடன் மறுமுனையில் இருந்த மற்றொரு தொடக்க வீரர் அனுஜ் ராவத் பூஜ்ஜிய ரன்னில் அவுட் ஆனார்கள். களத்தில் இருந்த கிளென் மேக்ஸ்வெல் 12 ரன்னில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
இந்த 3 விக்கெட்டுகளையும் ஐதராபாத் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் மார்கோ ஜான்சன் வீழ்த்தியுள்ளார்.
- 19:53 (IST) 23 Apr 20223 விக்கெட்டுகளை பறிகொடுத்த பெங்களூரு!
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்து வ்ரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 3 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை பறிகொடுத்துள்ளது. அந்த அணியின் தொடக்க வீரர் கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் 5 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறிய நிலையில், பின்னர் வந்த விராட் கோலி, அவருடன் மறுமுனையில் இருந்த மற்றொரு தொடக்க வீரர் அனுஜ் ராவத் பூஜ்ஜிய ரன்னில் அவுட் ஆனார்கள்.
இந்த 3 விக்கெட்டுகளையும் ஐதராபாத் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் மார்கோ ஜான்சன் வீழ்த்தியுள்ளார்.
- 19:18 (IST) 23 Apr 2022ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பிளேயிங் லெவன்!
ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), அனுஜ் ராவத், விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல், சுயாஷ் பிரபுதேசாய், ஷாபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), வனிந்து ஹசரங்கா, ஹர்சல் படேல், ஜோஷ் ஹேசில்வுட், முகமது சிராஜ்.
A look at the Playing XIs for rcbvsrh 👇tataiplpic.twitter.com/CkXDfDfsCA
— IndianPremierLeague (@IPL) April 23, 2022 - 19:18 (IST) 23 Apr 2022டாஸ் வென்ற ஐதராபாத் பந்துவீச்சு தேர்வு; பெங்களூரு முதலில் பேட்டிங்!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை பிரபோர்ன் ஸ்டேடியத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்கும் 36வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. தற்போது டாஸ் சுண்டப்பட்ட நிலையில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதனால், பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கும்.
Toss Update from the Brabourne Stadium 👇@SunRisers win the toss and opt to bowl first against @RCBTweets 👍tataiplrcbvsrhpic.twitter.com/QBO1WHqFmv
— IndianPremierLeague (@IPL) April 23, 2022 - 19:15 (IST) 23 Apr 2022சன்ரைசர்ஸ் ஐதராபாத் பிளேயிங் லெவன்!
அபிஷேக் சர்மா, கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), ஷஷாங்க் சிங், ஜெகதீஷா சுசித், புவனேஷ்வர் குமார், மார்கோ ஜான்சன், உம்ரான் மாலிக், டி நடராஜன்
- 18:55 (IST) 23 Apr 2022நேருக்கு நேர் - ஹெட்-டு-ஹெட்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் இதுவரை 19 ஆட்டங்களில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் பெங்களுரு அணி 8 ஆட்டங்களிலும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் 10 ஆட்டங்களிலும் வென்றுள்ளன. ஒரு போட்டி ட்ராவில் முடிந்தது.
கடைசி ஆட்டம் முடிவு!
அபுதாபியின் சயீத் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்த முந்தைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
கடைசி 5 போட்டிகளின் முடிவுகள்:
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- 18:33 (IST) 23 Apr 2022சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வீரர்கள் பட்டியல்!
அபிஷேக் சர்மா, கேன் வில்லியம்சன்(கேப்டன்), ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன், ஷஷாங்க் சிங், ஜகதீஷா சுசித், புவனேஷ்வர் குமார், மார்கோ ஜான்சன், உம்ரான் மாலிக், டி நடராஜன், சீன் அபோட், ரவிக்குமார் சமர்த், வாஷிங்டன் சுந்தர், ஷ்ரேயாஸ் கோபால், க்ளென் பிலிப்ஸ், விஷ்ணு வினோத், பிரியம் கார்க், கார்த்திக் தியாகி, ரொமாரியோ ஷெப்பர்ட், ஃபசல்ஹாக் ஃபரூக்கி, அப்துல் சமத், சவுரப் துபே.
Ready to get off the blocks, while going out of the box. 💪🏾🔥orangearmyreadytorisetataiplpic.twitter.com/5caAZ6iV6U
— SunRisers Hyderabad (@SunRisers) April 22, 2022 - 18:31 (IST) 23 Apr 2022சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி உத்தேச வீரர்கள் பட்டியல்!
அபிஷேக் சர்மா, கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), ஷஷாங்க் சிங், ஜே சுசித் அல்லது வாஷிங்டன் சுந்தர், மார்கோ ஜான்சன், புவனேஷ்வர் குமார், உம்ரான் மாலிக், டி நடராஜன்.
Challenge accepted, we head to the stadium for a Royal clash. 🚌🏟️rcbvsrhorangearmyreadytorisetataiplpic.twitter.com/7ZBzO6PJyZ
— SunRisers Hyderabad (@SunRisers) April 23, 2022 - 18:31 (IST) 23 Apr 2022ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி உத்தேச வீரர்கள் பட்டியல்!
அனுஜ் ராவத், ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல், சுயாஷ் பிரபுதேசாய், ஷாபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக் விக்கெட் (கீப்பர்), ஹர்சல் படேல், வனிந்து ஹசரங்கா, ஜோஷ் ஹேசில்வுட், முகமது சிராஜ்.
𝐎𝐍𝐄 @MuthootIndia 𝐌𝐨𝐦𝐞𝐧𝐭 𝐨𝐟 𝐭𝐡𝐞 𝐃𝐚𝐲 playboldwearechallengersipl2022mission2022rcb್ಮRCBpic.twitter.com/mBjFdoLDpO
— Royal Challengers Bangalore (@RCBTweets) April 23, 2022 - 18:30 (IST) 23 Apr 20227:30 மணிக்கு தொடங்கும் ஆட்டம்!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை பிரபோர்ன் ஸ்டேடியத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்கும் 36வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன
It’s going to be a SUPER SATURDAY! 🔥
— Royal Challengers Bangalore (@RCBTweets) April 23, 2022
Tune into @StarSportsIndia at 7:30 PM onwards and let us hear your cheers all the way to the Brabourne Stadium. 🗣🥳playboldwearechallengersipl2022mission2022rcb್ಮRCBrcbvsrhpic.twitter.com/iS6usCtReH - 18:22 (IST) 23 Apr 2022ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீரர்கள் பட்டியல்!
ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), அனுஜ் ராவத், விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல், சுயாஷ் பிரபுதேசாய், ஷாபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக் வனிந்து ஹசரங்கா, ஹர்சல் படேல், ஜோஷ் ஹேசில்வுட், முகமது சிராஜ், சித்தார்த் கவுல் , டேவிட் வில்லி, ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், சாமா வி மிலிந்த், ரஜத் படிதார், மஹிபால் லோம்ரோர், ஃபின் ஆலன், ஷெர்பேன் ரதர்ஃபோர்ட், ஆகாஷ் தீப், அனீஸ்வர் கௌதம்
- 18:21 (IST) 23 Apr 2022‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ லைவ் பிளாக்கு - க்கு அன்புடன் வரவேற்கிறோம்!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் பெங்களூரு – ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் குறித்து உடனுக்குடன் தெரிந்துகொள்ள ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ லைவ் பிளாக்குடன் இணைந்திருங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.