IPL 2022, RR vs GT Highlights in tamil: 15வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை டாக்டர் டிஒய் பாட்டீல் மைதானத்தில் நேற்றிரவு நடந்த 24வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீசுவதாக அறிவித்தார். இதன்படி குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.
Let’s Play!
— IndianPremierLeague (@IPL) April 14, 2022
Live – https://t.co/yM9yMibDVf #RRvGT #TATAIPL pic.twitter.com/tFThFy5zcd
குஜராத் டைட்டன்ஸ் அணியில் மேத்யூ வேட் – ஷுப்மான் கில் ஜோடி தொடக்க வீரர்களாக களமிறங்கினர். அணிக்கு வலுவான தொடக்கம் கொடுக்க முயற்சித்த இந்த ஜோடியில் 3 பவுண்டரிகளை விரட்டிய வேட் 12 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் வந்த விஜய் சங்கர் 2 ரன்னில் அவுட் ஆனார். மறுமுனையில் 2 பவுண்டரிகளை விரட்டிய தொடக்க வீரர் ஷுப்மான் கில் 13 ரன்னில் ஆட்டமிழந்தார்.
குஜராத் அணி அடுத்தடுத்த ஓவர்களில் விக்கெட்டுகளை இழந்த நிலையில், களத்தில் இருந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா – அபினவ் மனோகர் நிதான ஆட்டத்தை தொடர்ந்தனர். ஒரு கட்டத்தில் அதிரடியை தொடங்கிய கேப்டன் பாண்டியா தனது அரைசதத்தை பதிவு செய்தார். அவருடன் ஜோடி அமைத்த அபினவ் மனோகர் 28 பந்துகளில் 4 பவுண்டரிகள் 2 சிக்ஸர்களை விளாசி 43 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்கிய டேவிட் மில்லர் 14 பந்துகளில் 1 சிக்ஸர் 5 பவுண்டரிகளை துரத்திய 31 ரன்கள் எடுத்தார். கேப்டனாக பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்த ஹர்திக் பாண்டியா 52 பந்துகளில் 8 பவுண்டரிகள் 4 சிக்ஸர்களுடன் 87 ரன்கள் குவித்தார். அதோடு, அதிக ரன்கள் குவித்த வீரர்களுக்கான “ஆரஞ்சு” தொப்பியையும் வசப்படுத்தினார்.
Orange cap is with captain Hardik Pandya in #IPL2022. pic.twitter.com/7p0RnQLLYn
— Johns. (@CricCrazyJohns) April 14, 2022
Hardik Pandya is our Top Performer from the first innings for his brilliant knock of 87* off 52 deliveries.
— IndianPremierLeague (@IPL) April 14, 2022
A look at his batting summary here 👇👇 #TATAIPL pic.twitter.com/RtqGqw5pMF
இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 192 ரன்கள் குவித்தது. இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 193 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ராஜஸ்தான் தரப்பில் ரியான் பராக், குல்தீப் சென், யுஸ்வேந்திர சாஹல் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
Innings Break!
— IndianPremierLeague (@IPL) April 14, 2022
87* from @hardikpandya7, well supported by Abhinav Manohar (43) & Miller (31*) guide #GujaratTitans to a total of 192/4.
Scorecard – https://t.co/yM9yMibDVf #RRvGT #TATAIPL pic.twitter.com/jd81BBSD8a
தொடர்ந்து 193 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தொடக்க வீரர் தேவ்தத் படிக்கல் பூஜ்ஜிய ரன்னில் நடையை கட்டினார். பின்னர் வந்த அஸ்வின் 1 சிக்ஸரை பறக்கவிட்டு 8 ரன்னில் அவுட் ஆனார். இதற்கிடையில், தொடக்க முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் அரைசதம் விளாசினார். அவர் 24 பந்துகளில் 8 பவுண்டரிகள் 3 சிக்ஸர்களை சிதறவிட்டு 52 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார்.
And, he departs the very next delivery.
— IndianPremierLeague (@IPL) April 14, 2022
Bowled by Lockie Ferguson.
Live – https://t.co/yM9yMibDVf #RRvGT #TATAIPL https://t.co/myiW9OGGs2
களத்தில் இருந்த ரஸ்ஸி வான் டெர் டுசென் – கேப்டன் சஞ்சு சாம்சன் ஜோடியில் ரன் ஓட முயன்ற கேப்டன் சஞ்சு கேப்டன் பாண்டியா வசம் சிக்கி ரன்அவுட் ஆகி வெளியேறினார்.
Bulls Eye 🎯
— IndianPremierLeague (@IPL) April 14, 2022
The Gujarat skipper gets the better of his counterpart!
Sanju Samson departs for 11 runs.
Live – https://t.co/yM9yMibDVf #RRvGT #TATAIPL pic.twitter.com/ktwdAnSVLR
பின்னர் வந்த வீரர்களில், அணிக்கு அதிரடியாக ரன்களை குவித்து வந்த ஷிம்ரோன் ஹெட்மியர் 28 ரன்களிலும், ரியான் பராக் 18 ரன்களிலும், ஜேம்ஸ் நீஷம் 17 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை பறிகொடுத்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ராஜஸ்தான் அணியை 37 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் வீழ்த்தியது.
That’s that from Match 24.@gujarat_titans win by 37 runs and now sit atop the #TATAIPL Points Table.
— IndianPremierLeague (@IPL) April 14, 2022
Scorecard – https://t.co/yM9yMibDVf #RRvGT #TATAIPL pic.twitter.com/tyce9OyqJa
மிரட்டலான பந்துவீச்சு தாக்குதலை தொடுத்திருந்த குஜராத் டைட்டன்ஸ் அணியில் அறிமுக வீரர் யாஷ் தயாள் மற்றும் லாக்கி பெர்குசன் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். முகமது ஷமி மற்றும் கேப்டன் பாண்டியா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
Our Top Performer from the second innings is Lockie Ferguson for his brilliant bowling figures of 3/23.
— IndianPremierLeague (@IPL) April 14, 2022
A look at his bowling summary here 👇👇 #TATAIPL #RRvGT pic.twitter.com/BI7YD4AclT
இந்த ஆட்டத்தில் அபார வெற்றியை ருசித்த கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் குஜராத் டைட்டன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. தோல்வி கண்ட ராஜஸ்தான் ராயல்ஸ் 3வது இடத்திற்கு பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது.
Hardik Pandya is adjudged Player of the Match for his all round show, which comprised an 87*, a brilliant run-out and bowling figures of 1/18 (2.3 overs)#TATAIPL #RRvGT pic.twitter.com/gBRUiq5gd5
— IndianPremierLeague (@IPL) April 14, 2022
Hardik Pandya in #IPL2022:
— Johns. (@CricCrazyJohns) April 14, 2022
33(28)
31(27)
27(18)
50*(42)
87*(52)
Taking over the captaincy, he has took all the responsibility with bat and ball for Gujarat. pic.twitter.com/5mwnEpkyGK
Indian Premier League, 2022Dr. DY Patil Sports Academy, Navi Mumbai 18 May 2022
Rajasthan Royals 155/9 (20.0)
Gujarat Titans 192/4 (20.0)
Match Ended ( Day – Match 24 ) Gujarat Titans beat Rajasthan Royals by 37 runs
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
193 ரன்கள் கொண்ட இலக்கை துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை பந்துவீச்சில் மிரட்டிய குஜராத் டைட்டன்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 193 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வெற்றிக்கு 6 பந்துகளில் 40 ரன்கள் தேவை.
தற்போது ராஜஸ்தான் அணி 19 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 153 ரன்கள் சேர்த்துள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 193 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வெற்றிக்கு 12 பந்துகளில் 44 ரன்கள் தேவை.
தற்போது ராஜஸ்தான் அணி 18 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 149 ரன்கள் சேர்த்துள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 193 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 13 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 138 ரன்கள் சேர்த்துள்ளது.
ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு 24 பந்துகளில் 55 ரன்கள் தேவை.
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 193 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அதிரடியாக விளையாடி வந்த ஷிம்ரோன் ஹெட்மியர் 17 பந்துகளில் 1 சிக்ஸர் 2 பவுண்டரிகளை விரட்டி 29 ஓவர்கள் சேர்த்த நிலையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
தற்போது ராஜஸ்தான் அணி 13 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 117 ரன்கள் சேர்த்துள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 193 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது. தற்போது அந்த அணி 11 ஓவர்கள் முடிவில் 94 ரன்கள் சேர்த்துள்ளது.
ராஜஸ்தான் அணியில் 6 ரன்கள் சேர்த்த ரஸ்ஸி வான் டெர் டுசென் கீப்பர் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்.
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 193 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது. தற்போது அந்த அணி 10 ஓவர்கள் முடிவில் 89 ரன்கள் சேர்த்துள்ளது.
ரஸ்ஸி வான் டெர் டுசென் 6 ரன்களுடனும், ஷிம்ரோன் ஹெட்மியர் 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 193 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் 7.3வது பந்தில் ரன் ஓட முயன்றகேப்டன் சஞ்சு சாம்சனை ரன்அவுட் செய்தார் கேப்டன் ஹர்திக் பாண்டியா. அப்போது அவர் வீசிய பந்து ஸ்டெம்பில் பலமாக பட்டு பழுதடைந்தது. சில நிமிடங்களுக்கு பிறகு சரிபார்க்கப்பட்டது.
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 193 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது. தற்போது 7.3வது ஓவரில் 74 ரன்கள் சேர்த்துள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ஹர்திக் பாண்டியா 52 பந்துகளில் 8 பவுண்டரிகள் 4 சிக்ஸர்களுடன் 87 ரன்கள் குவித்தார். அவருக்கு உறுதுணையாக ஆடிய அபினவ் மனோகர் 35 ரன்னில் அவுட் ஆனார். 1 சிக்ஸர் 5 பவுண்டரிகளை துரத்திய டேவிட் மில்லர் 31 ரன்கள் எடுத்தார்.
இறுதியில் , குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 192 ரன்கள் குவித்தது. இதனால் ராஜஸ்தான் அணிக்கு 193 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் அணி தரப்பில் ரியான் பராக், குல்தீப் சென், யுஸ்வேந்திர சாஹல் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணியில் மிடில்- ஆடரில் களமிறங்கி கேப்டன் பாண்டியாவுடன் சிறப்பான ஜோடி அமைத்து விளையாடி வந்த அபினவ் மனோகர் 43 ரன்கள் சேர்ந்திருந்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
தற்போது குஜராத் அணி 17 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 145 ரன்களை சேர்த்துள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணி 15 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்களை சேர்த்துள்ளது
களத்தில் இருந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா அரைசதம் விளாசியுள்ளார். அவருடன் ஜோடி சேர்ந்த அபினவ் மனோகர் 35 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணி 10 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 73 ரன்களை சேர்த்துள்ளது
தற்போது கேப்டன் ஹர்திக் பாண்டியா 34 ரன்களுடனும் அபினவ் மனோகர் 10 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய ஷுப்மான் கில் 2 பவுண்டர்களை ஓடவிட்டு 13 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணி பவர்பிளே முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 42 ரன்களை சேர்த்துள்ளது
அந்த அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய மேத்யூ வேட் ரன் அவுட் ஆகி வெளியேறிய நிலையில், பின்னர் வந்த விஜய் சங்கர் 2 ரன்னில் அவுட் ஆனார்.
தற்போது தொடக்க வீரர் ஷுப்மான் கில் – கேப்டன் ஹர்திக் பாண்டியா களத்தில் உள்ளனர்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்து வரும் குஜராத் டைட்டன்ஸ் அணி அதன் முதலாவது விக்கெட்டை பறிகொடுத்தது. அந்த அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய மேத்யூ வேட் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி டாஸ் வென்றுள்ள நிலையில், குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியுள்ளது.
குஜராத் அணியில் தொடக்க வீரர்களாக மேத்யூ வேட் – ஷுப்மான் கில் ஜோடி களமிறங்கியுள்ளனர்.
மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), ஷுப்மான் கில், விஜய் சங்கர், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டேவிட் மில்லர், அபினவ் மனோகர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், லாக்கி பெர்குசன், முகமது ஷமி, யாஷ் தயாள்
A look at the Playing XI for #rrvgt Live – https://t.co/yM9yMibDVf #rrvgt #tataipl https://t.co/MgBjbwAVA5 pic.twitter.com/SdmTvLh4ba
— IndianPremierLeague (@IPL) April 14, 2022
ஜோஸ் பட்லர், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன் (கேப்டன்/ விக்கெட் கீப்பர்), ரஸ்ஸி வான் டெர் டுசென், ஷிம்ரோன் ஹெட்மியர், ஜேம்ஸ் நீஷம், ரியான் பராக், ரவிச்சந்திரன் அஷ்வின், குல்தீப் சென், பிரசித் கிருஷ்ணா, யுஸ்வேந்திர சாஹல்
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை டாக்டர் டிஒய் பாட்டீல் மைதானத்தில் இன்று இரவு நடைபெறும் 24வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. தற்போது டாஸ் சுண்டப்பட்ட நிலையில், டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதனால், குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கும்.
#rr have won the toss and they will bowl first against #gujarattitans Live – https://t.co/yM9yMibDVf #rrvgt #tataipl pic.twitter.com/TE0Udrg0ZO
— IndianPremierLeague (@IPL) April 14, 2022
ஐபிஎல் தொடரில் மிக வேகமாக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற ரஷித் கானுக்கு இன்னும் 1 விக்கெட் தேவை. ஐபிஎல் தொடரில் ரஷித் கான் மிகச்சிறந்த வீரர்களுள் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால்/தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), ஷிம்ரோன் ஹெட்மியர், ரியான் பராக், ரவிச்சந்திரன் அஷ்வின், ஜிம்மி நீஷம், நவ்தீப் சைனி, டிரெண்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா, யுஸ்வேந்திர சாஹல்
ரஹ்மானுல்லா குர்பாஸ்/மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), ஷுப்மான் கில், சாய் சுதர்சன், ஹர்திக் பாண்டியா (கேப்டன் ), டேவிட் மில்லர், ராகுல் தெவாடியா, அபினவ் மனோகர், ரஷித் கான், லாக்கி பெர்குசன், முகமது ஷமி, தர்ஷன் நல்கண்டே
ஜோஸ் பட்லர், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன்(கேப்டன்), ரஸ்ஸி வான் டெர் டுசென், ஷிம்ரோன் ஹெட்மியர், ரவிச்சந்திரன் அஷ்வின், ரியான் பராக், டிரென்ட் போல்ட், குல்தீப் சென், பிரசித் கிருஷ்ணா, யுஸ்வேந்திர சாஹல், ஜேம்ஸ் சனி, நவ்தீப், நவ்தீப், நவ்தீப். நாதன் கூல்டர்-நைல், கருண் நாயர், கே.சி கரியப்பா, டேரில் மிட்செல், ஓபேட் மெக்காய், தேஜஸ் பரோகா, குல்தீப் யாதவ், யஷஸ்வி ஜெய்ஸ்வால், அனுனய் சிங், துருவ் ஜூரல், ஷுபம் கர்வால்
மேத்யூ வேட், ஷுப்மன் கில், சாய் சுதர்சன், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டேவிட் மில்லர், அபினவ் மனோகர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், லாக்கி பெர்குசன், முகமது ஷமி, தர்ஷன் நல்கண்டே, விருத்திமான் சாஹா, பிரதீப் சங்வான், பிரதீப் சங்வான் ஆரோன், ஜெயந்த் யாதவ், விஜய் சங்கர், குர்கீரத் சிங் மான், அல்சாரி ஜோசப், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், ரஹ்மானுல்லா குர்பாஸ், டொமினிக் டிரேக்ஸ், யாஷ் தயாள், நூர் அகமது
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை டாக்டர் டிஒய் பாட்டீல் மைதானத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்கும் 24வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
Hello and welcome to the DY Patil Stadium for Match 24 of #tataipl.@IamSanjuSamson led #rr will take on @hardikpandya7's #gujarattitans.Who are you rooting for?#rrvgt pic.twitter.com/PnYgQwCQAh
— IndianPremierLeague (@IPL) April 14, 2022
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் ராஜஸ்தான் – குஜராத் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் குறித்து உடனுக்குடன் தெரிந்துகொள்ள ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ லைவ் பிளாக்குடன் இணைந்திருங்கள்.