IPL 2022 RR vs KKR Highlights in tamil: 15வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை பிரபோர்ன் ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்த 30வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. பரபரப்புக்கு பஞ்சமில்லாத இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.
🚨 Toss Update 🚨@ShreyasIyer15 has won the toss & @KKRiders have elected to bowl against @rajasthanroyals.
— IndianPremierLeague (@IPL) April 18, 2022
Follow the match ▶️ https://t.co/f4zhSrBNHi#TATAIPL | #RRvKKR pic.twitter.com/WSIgF3iz0Z
ராஜஸ்தான் அணியில் ஜோஸ் பட்லர் – தேவ்தத் படிக்கல் ஜோடி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். தொடக்கம் முதலே அதிரடியை தொடங்கிய பட்லர் அரைசதம் விளாசினார். மறுமுனையில் இருந்த படிக்கல் 24 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் 38 ரன்களுடன் அவுட் ஆகி வெளியேறினார். விக்கெட் இழப்புகளுக்குள் மத்தியில் தனது அதிரடியை கைவிடாத தொடக்க வீரர் பட்லர் சதம் விளாசினார். இது நடப்பு தொடரில் அவர் பதிவு செய்த 2வது சதமாகும். அவர் 61 பந்துகளில் 9 பவுண்டரிகள் 5 சிக்ஸர்களை பறக்கவிட்டு 103 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டமிழந்தார்.
💯 for @josbuttler! 🙌 🙌
— IndianPremierLeague (@IPL) April 18, 2022
What a knock this has been from @rajasthanroyals right-hander! 👏 👏
His 2⃣nd hundred of the #TATAIPL 2022 & 3⃣rd IPL ton overall! 👌 👌
Follow the match ▶️ https://t.co/f4zhSrBNHi#TATAIPL | #RRvKKR pic.twitter.com/xQyj6yejl1
களத்தில் இருந்த ஷிம்ரோன் ஹெட்மியர் 26 ரன்களும், அஸ்வின் 2 ரன்களும் எடுத்தனர். இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 217 ரன்கள் குவித்தது. இதனால் கொல்கத்தா அணிக்கு 218 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தொடக்க ஓவர்களில் விக்கெட் வீழ்த்த திணறிய கொல்கத்தா அணி தரப்பில் சுனில் நரைன் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
𝗜𝗻𝗻𝗶𝗻𝗴𝘀 𝗕𝗿𝗲𝗮𝗸!@josbuttler led the charge with the bat & scored a fantastic hundred as @rajasthanroyals posted the highest total of the #TATAIPL 2022 on the board. 👏 👏
— IndianPremierLeague (@IPL) April 18, 2022
The @KKRiders chase will begin soon. 👍 👍 #RRvKKR
Scorecard ▶️ https://t.co/f4zhSrBNHi pic.twitter.com/z4jVJZxfFb
தொடர்ந்து 218 ரன்கள் கொண்ட இமாலய வெற்றி இலக்கை துரத்த கொல்கத்தா அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர் சுனில் நரைன் முதல் ஓவரின் 2வது பந்தில் ரன் ஓட முயன்று ரன் -அவுட் ஆகி வெளியேறினார். எனினும், பின்னர் வந்த கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயருடன் ஜோடி அமைத்த மற்றொரு தொடக்க வீரர் ஆரோன் ஃபின்ச் அணிக்கு வலுவான தொடக்கம் கொடுத்தார். 28 பந்துகளில் 9 பவுண்டரிகளை ஓட விட்ட அவர் 2 சிக்ஸர் விளாசி 58 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார்.
5⃣0⃣ for @AaronFinch5! 👏 👏
— IndianPremierLeague (@IPL) April 18, 2022
His first IPL half-century for @KKRiders. 👌 👌
Follow the match ▶️ https://t.co/f4zhSrBNHi#TATAIPL | #RRvKKR pic.twitter.com/EpRFg9pWKf
தொடர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்கிய கேப்டன் ஷ்ரேயாஸ் சிக்ஸர், பவுண்டரி என பறக்க விட்டு அரைசதம் அடித்தார். அவரின் அதிரடியால் அணியின் ரன் ரேட் மளமளவென உயர்ந்தது. கொல்கத்தா அணிக்கு வெற்றி முகம் கனிந்திருந்த தருணத்தில், 51 பந்துகளில் 4 சிக்ஸர் 7 பவுண்டரி என ரன் மழை பொழிந்து 85 ரன்கள் குவித்த கேப்டன் ஷ்ரேயாஸ் சாஹலின் சுழல் வலையில் சிக்கி ஆட்டமிழந்தார்.
அவரைத்தொடர்ந்து வந்த சிவம் மாவி, பாட் கம்மின்ஸ் போன்றோரும் சாஹலின் சுழல் சூறாவளிக்கு இரையாகினர். சுழலில் வித்தை காட்டிய யுஸ்வேந்திர சாஹலுக்கு “ஹாட்ரிக்” விக்கெட் கிட்டியது.
HAT-TRICK for @yuzi_chahal! 🙌 🙌
— IndianPremierLeague (@IPL) April 18, 2022
Absolute scenes at the Brabourne Stadium – CCI. 👍
👍
Brilliant stuff from the @rajasthanroyals spinner. 👏 👏
Follow the match ▶️ https://t.co/f4zhSrBfRK#TATAIPL | #RRvKKR pic.twitter.com/jGX1dhgvLD
இருப்பினும், ஆட்டத்தை உயிர்ப்புடன் வைத்திருந்த உமேஷ் யாதவ், டிரென்ட் போல்ட் வீசிய 18வது ஓவரை சிக்ஸர், பவுண்டரி (6,2,6,4,1) என வெளுத்து வாங்கினார். இதனால், கொல்கத்தாவின் வெற்றிக்கு 12 பந்துகளில் 18 ரன்கள் தேவைப்பட்டது.
19வது ஓவரை வீசிய பிரசித் கிருஷ்ணா 7 ரன்கள் மட்டும் கொடுக்க கொல்கத்தாவுக்கு கடைசி 6 பந்துகளில் 11 ரன்கள் தேவைப்பட்டது. ஓபேட் மெக்காய் வீசிய 20வது ஓவரை சந்தித்த ஷெல்டன் ஜாக்சன் முதல் பந்தில் 2 ரன்கள் எடுத்தார். அவர் அடுத்த பந்திலே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். 3 வது பந்தில் வருண் சக்கரவர்த்தி ஒரு ரன் எடுக்க 4வது பந்தை சந்தித்த உமேஷ் சிக்ஸர் அடிக்க முயன்று போல்ட் அவுட் ஆனார். இதனால், அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்த கொல்கத்தா அணி 210 ரன்னில் சுருண்டது.
WHAT. A. GAME! WHAT. A. FINISH! 👏 👏
— IndianPremierLeague (@IPL) April 18, 2022
The 1⃣5⃣-year celebration of the IPL done right, courtesy a cracker of a match! 👌 👌@rajasthanroyals hold their nerve to seal a thrilling win over #KKR. 👍 👍
Scorecard ▶️ https://t.co/f4zhSrBNHi#TATAIPL | #RRvKKR pic.twitter.com/c2gFuwobFg
சாஹலின் சுழல் வித்தை, கடைசி ஓவரில் அறிமுக வீரர் ஓபேட் மெக்காயின் அற்புத பந்துவீச்சு போன்றவற்றால் 7 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது ராஜஸ்தான். இந்த அசத்தலான வெற்றியின் மூலம் ராஜஸ்தான் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
சுழலில் மாயாஜாலம் செய்த யுஸ்வேந்திர சாஹல் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். நடப்பு தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் சாஹல் தான் முதலிடத்தில் உள்ளார். அவர் 6 ஆட்டங்களில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தி ஊதா நிற தொப்பியை வசப்படுத்தியுள்ளார். ஓபேட் மெக்காய் 2 விக்கெட்டுகளையும், பிரசித் கிருஷ்ணா மற்றும் ரவிச்சந்திரன் அஷ்வின் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். யுஸ்வேந்திர சாஹல் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.
சுவாரஷ்யமான விஷயம் என்னவென்றால், அதிக ரன்கள் குவித்த வீரர்களுக்கான ஆரஞ்சு தொப்பியும், அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களுக்கான ஊதா நிற தொப்பியும் ராஜஸ்தான் அணி வீரர்கள் வசம் தான் உள்ளது. 6 ஆட்டங்களில் 2 சதங்களுடன் 375 குவித்துள்ள ஜோஸ் பட்லர் வசம் அதிக ரன்கள் குவித்த வீரர்களுக்கான ஆரஞ்சு தொப்பி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
With a hat-trick & a match-winning five-wicket haul against his name, @yuzi_chahal bagged the Player of the Match award as @rajasthanroyals beat #KKR. 👌 👌 #TATAIPL | #RRvKKR
— IndianPremierLeague (@IPL) April 18, 2022
Scorecard ▶️ https://t.co/f4zhSrBNHi pic.twitter.com/q7Bfnjyegm
Dream11 GameChanger of the Match between @rajasthanroyals and @KKRiders is Jos Buttler.#TATAIPL #DreamBig @Dream11 #RRvKKR pic.twitter.com/xGpcQsthaL
— IndianPremierLeague (@IPL) April 18, 2022
After an absolute thriller of a Match 3⃣0⃣ in the #TATAIPL 2022, here's how the Points Table looks 🔽 #RRvKKR pic.twitter.com/K5e3L9edGP
— IndianPremierLeague (@IPL) April 18, 2022
Indian Premier League, 2022Brabourne Stadium, Mumbai 21 May 2022
Rajasthan Royals 217/5 (20.0)
Kolkata Knight Riders 210 (19.4)
Match Ended ( Day – Match 30 ) Rajasthan Royals beat Kolkata Knight Riders by 7 runs
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 218 ரன்கள் கொண்ட இமாலய வெற்றி இலக்கை துரத்திய கொல்கத்தா அணி 210 ரன்னில் சுருண்டது. இதனால் 7 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது ராஜஸ்தான்
ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 218 ரன்கள் கொண்ட இமாலய வெற்றி இலக்கை கொல்கத்தா அணி துரத்தி வருகிறது. தற்போது கொல்கத்தா அணியின் வெற்றிக்கு 6 பந்துகளில் 11ரன்கள் தேவை.
ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 218 ரன்கள் கொண்ட இமாலய வெற்றி இலக்கை கொல்கத்தா அணி துரத்தி வருகிறது. தற்போது 18 ஓவர்கள் முடிவில் அந்த அணி 8 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்களை சேர்த்துள்ளது.
கொல்கத்தா அணியின் வெற்றிக்கு 12 பந்துகளில் 18 ரன்கள் தேவை.
ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 218 ரன்கள் கொண்ட இமாலய வெற்றி இலக்கை கொல்கத்தா அணி துரத்தி வருகிறது. தற்போது 17 ஓவர்கள் முடிவில் அந்த அணி 8 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்களை சேர்த்துள்ளது.
அரைசதம் விளாசிய கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் சாஹலின் சுழலில் சிக்கிய நிலையில், தொடர்ந்து வந்த சிவம் மாவி, கம்மின்ஸ் அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டமிழந்து வெளியேறினர். சுழல் வித்தை காட்டிய சாஹலுக்கு ஹாட்ரிக் விக்கெட் கிடைத்தது.
ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 218 ரன்கள் கொண்ட இமாலய வெற்றி இலக்கை கொல்கத்தா அணி துரத்தி வருகிறது. தற்போது 15 ஓவர்கள் முடிவில் அந்த அணி 4 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்களை சேர்த்துள்ளது.
அரைசதம் விளாசிய கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்ல அதிரடியாக விளையாடி வருகிறார். கொல்கத்தா அணியின் வெற்றிக்கு 30 பந்துகளில் 51 ரன்கள் தேவை.
ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 218 ரன்கள் கொண்ட இமாலய வெற்றி இலக்கை கொல்கத்தா அணி துரத்தி வருகிறது. அந்த அணியில் நிதிஷ் ராணாவின் விக்கெட்டுக்கு பின்னர் வந்த ஆல்ரவுண்டர் வீரர் ஆண்ட்ரே ரஸ்ஸல் பூஜ்ஜிய ரன்னில் அவுட் ஆகி நடையை கட்டினார்.
ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 218 ரன்கள் கொண்ட இமாலய வெற்றி இலக்கை கொல்கத்தா அணி துரத்தி வருகிறது. தற்போது 13 ஓவர்கள் முடிவில் அந்த அணி 3 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்களை சேர்த்துள்ளது.
கொல்கத்தா அணியில் 11பந்துகளில் 1 பவுண்டரி, 2 சிக்ஸர் அடித்த நிதிஷ் ராணா 18 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார்.
அரைசதம் விளாசிய கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 63 ரன்களுடனும் களத்தில் உள்ளார்.
ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 218 ரன்கள் கொண்ட இமாலய வெற்றி இலக்கை கொல்கத்தா அணி துரத்தி வருகிறது. தற்போது 9 ஓவர்கள் முடிவில் அந்த அணி 2 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்களை சேர்த்துள்ளது.
கொல்கத்தா அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த தொடக்க வீரர் ஆரோன் பிஞ்ச் அரைசதம் விளாசி ஆட்டமிழந்தார். அவர் 28 பந்துகளில் 9 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களை பறக்கவிட்டு 58 ரன்கள் சேர்த்த நிலையில் அவுட் ஆனார்.
ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 218 ரன்கள் கொண்ட இமாலய வெற்றி இலக்கை கொல்கத்தா அணி துரத்தி வருகிறது. தற்போது 6 ஓவர்கள் முடிவில் அந்த அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 57 ரன்களை சேர்த்துள்ளது.
தொடக்க வீரர் ஆரோன் பிஞ்ச் 23 ரன்களுடனும், கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 33 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அந்த அணியின் தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் சதம் அடித்தார். அவர் 61 பந்துகளில் 9 பவுண்டரிகள் 5 சிக்ஸர்களை பறக்கவிட்டு 103 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். தொடக்க வீரர் தேவ்தட் படிக்கல் 24 ரன்களுடனும், கேப்டன் சஞ்சு சாம்சன் 38 ரன்களுடனும், ஷிம்ரோன் ஹெட்மியர் 26 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர்.
இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 217 ரன்கள் சேர்த்தது. இதனால் கொல்கத்தா அணிக்கு 218 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொடக்கத்தில் விக்கெட் வீழ்த்த திணறிய கொல்கத்தா அணி தரப்பில் நரேன் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்து வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் மிகச்சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகின்றனர்.
தற்போது 15 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 163 ரன்களை சேர்த்துள்ளது.
தொடக்க வீரர் சஞ்சு ஜோஸ் பட்லர் 90 ரன்களுடனும், கேப்டன் சாம்சன் 38 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்து வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் மிகச்சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகின்றனர்.
தற்போது 15 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 163 ரன்களை சேர்த்துள்ளது.
தொடக்க வீரர் சஞ்சு ஜோஸ் பட்லர் 90 ரன்களுடனும், கேப்டன் சாம்சன் 38 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்து வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தொடக்க வீரர் தேவ்தட் படிக்கல் 18 பந்துகளில் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸரை பறக்கவிட்டு 24 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
தற்போது 10 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 99 ரன்களை சேர்த்துள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்து வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் அரைசதம் விளாசினார். தற்போது 7 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விக்கெட் இழப்பின்றி 74 ரன்களை சேர்த்துள்ளது.
15வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை பிரபோர்ன் ஸ்டேடியத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்கிய 30வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
தற்போது 6 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விக்கெட் இழப்பின்றி 60 ரன்களை சேர்த்துள்ளது. தொடக்க வீரர்கள் ஜோஸ் பட்லர் 46 ரன்களுடனும், தேவ்தட் படிக்கல் 8 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
வெங்கடேஷ் ஐயர், ஆரோன் ஃபின்ச், ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), நிதிஷ் ராணா, ஆண்ட்ரே ரஸ்ஸல், ஷெல்டன் ஜாக்சன்(வ), சுனில் நரைன், பாட் கம்மின்ஸ், சிவம் மாவி, உமேஷ் யாதவ், வருண் சக்கரவர்த்தி
ஜோஸ் பட்லர், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன்(கேப்டன் / விக்கெட் கீப்பர்), கருண் நாயர், ஷிம்ரோன் ஹெட்மியர், ரியான் பராக், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரென்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா, ஓபேட் மெக்காய், யுஸ்வேந்திர சாஹல்
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை பிரபோர்ன் ஸ்டேடியத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்கும் 30வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. தற்போது டாஸ் சுண்டப்பட்ட நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
2020 முதல், ட்ரென்ட் போல்ட் 58 ஆட்டங்களில் 78 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவரது சராசரி 21.71 ஆகவும், எக்கனாமி 7.69. ஆகவும் உள்ளது.
நடப்பு தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களில் 55 – 30 ரன்கள் எடுத்த ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் அடுத்த 3 ஆட்டங்களில் 32 ரன்கள் மட்டும் தான் எடுத்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் 1500 ரன்களுக்கு மேல் குவித்துள்ள ஆல்ரவுண்டர் வீரர் ஆண்ட்ரே ரசல், அதிக ஸ்ட்ரைக் ரேட்டைப் பெற்றுள்ள வீரராக வலம் வருகிறார். 1879 ரன்களுடன் அவரது ஸ்ட்ரைக் ரேட் 178.61 ஆக உள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் 24 ஆட்டங்களில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் 9 ஆட்டத்திலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 13 ஆட்டத்திலும் வென்றுள்ளன. 2 ஆட்டங்களுக்கு முடிவு இல்லை.
முந்தைய ஆட்டம்:
ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷ்ரஜா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்த கடைசி ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது.
கடைசி 5 ஆட்டங்களின் முடிவுகள்:
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ராஜஸ்தான் ராயல்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஜோஸ் பட்லர், தேவ்தத் பாடிக்கல், சஞ்சு சாம்சன் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), ரஸ்ஸி வான் டெர் டுசென், ஷிம்ரோன் ஹெட்மியர், ரவிச்சந்திரன் அஷ்வின், ரியான் பராக், டிரெண்ட் போல்ட், குல்தீப் சென், பிரசித் கிருஷ்ணா, யுஸ்வேந்திர சாஹல்
ஆரோன் பின்ச், வெங்கடேஷ் ஐயர், ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), நிதிஷ் ராணா, ஆண்ட்ரே ரஸ்ஸல், ஷெல்டன் ஜாக்சன் (விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ், சுனில் நரைன், உமேஷ் யாதவ், அமன் ஹக்கிம் கான், வருண் சக்ரவர்த்தி
வெங்கடேஷ் ஐயர், ஆரோன் ஃபின்ச், ஸ்ரேயாஸ் ஐயர்(கேப்டன்), சுனில் நரைன், நிதிஷ் ராணா, ஷெல்டன் ஜாக்சன், ஆண்ட்ரே ரசல், பாட் கம்மின்ஸ், அமன் ஹக்கிம் கான், உமேஷ் யாதவ், வருண் சக்கரவர்த்தி, டிம் சவுத்தி, சாம் பில்லிங்ஸ் , முகமது நபி, சமிகா கருணாரத்னே, அஜிங்க்யா ரஹானே, பாபா இந்திரஜித், ரிங்கு சிங், அனுகுல் ராய், ஷிவம் மாவி, பிரதம் சிங், அபிஜீத் தோமர், அசோக் ஷர்மா, ரமேஷ் குமார், ஹர்ஷித் ராணா
ஜோஸ் பட்லர், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன்(கேப்டன் / விக்கெட் கீப்பர்), ரஸ்ஸி வான் டெர் டுசென், ஷிம்ரோன் ஹெட்மியர், ரியான் பராக், ஜேம்ஸ் நீஷம், ரவிச்சந்திரன் அஷ்வின், பிரசித் கிருஷ்ணா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் சென், நாதன் கவுல்டர்- போல்ட், கருண் நாயர், நவ்தீப் சைனி, கே.சி கரியப்பா, டேரில் மிட்செல், ஓபேட் மெக்காய், தேஜஸ் பரோகா, குல்தீப் யாதவ், யஷஸ்வி ஜெய்ஸ்வால், அனுனய் சிங், துருவ் ஜூரல், ஷுபம் கர்வால்
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை பிரபோர்ன் ஸ்டேடியத்தில் இன்று இரவு 7:30 7:30 மணிக்கு தொடங்கும் 30வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் ராஜஸ்தான் – கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் குறித்து உடனுக்குடன் தெரிந்துகொள்ள ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ லைவ் பிளாக்குடன் இணைந்திருங்கள்.