IPL 2022, RR vs MI Highlights in tamil: 15வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் மும்பை டாக்டர் டிஒய் பாட்டீல் மைதானத்தில் நேற்றிரவு 7:30 மணிக்கு தொடங்கிய 44வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. பரபரப்புக்கு பஞ்சமில்லாத இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீசுவதாக அறிவித்தார். இதன்படி ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பேட்டிங் செய்தது.
ராஜஸ்தான் அணியில் ஜோஸ் பட்லர் – தேவ்தத் படிக்கல் தொடக்க வீரர்களாக களமிறங்கிய நிலையில், 3 பவுண்டரிகளை ஓடவிட்ட படிக்கல் 15 ரன்னில் ஆட்டமிழந்தார். 2 சிக்ஸர்களை பறக்கவிட்ட கேப்டன் சஞ்சு 16 ரன்னில் அவுட் ஆனார். பின்னர் வந்த டேரில் மிட்செலுடன் தொடக்க வீரர் பட்லர் ஜோடி அமைத்தார். விக்கெட் சரிவை தடுக்க நிதானமாக விளையாடிய இந்த ஜோடியில் மிட்செல் 17 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
ஹிருத்திக் ஷோக்கீன் வீசிய 16 வது ஓவரின் முதல் பந்தை சிக்ஸருக்கு பறக்கவிட்ட பட்லர் அரைசதம் விளாசினார். தொடர்ந்து வீசப்பட்ட 3 பந்துகளையும் சிக்ஸர் அடித்தார். 5வது பந்தை டாட் பால் விட்ட அவர் 6வது பந்தில் சூர்யகுமார் வசம் கேட்ச் கொடுத்து 67 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வீரர்களில் 1 சிக்ஸர், 3 பவுண்டரிகளை விரட்டிய அஸ்வின் 21 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 158 ரன்களை சேர்த்தது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 159 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. மும்பை அணி தரப்பில் ரித்திக் ஷோக்கீன் மற்றும் ரிலே மெரிடித் தலா 2 விக்கெட்டுகளையும், டேனியல் சாம்ஸ் மற்றும் குமார் கார்த்திகேயா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
Mumbai Indians fans – what do you all reckon? Who is going to be crucial to the #MI run-chase?
— IndianPremierLeague (@IPL) April 30, 2022
Let us know in the comments below ✍️#RRvMI | #TATAIPL | #IPL2022
Follow the game here: https://t.co/7GdkGvvdcz pic.twitter.com/4xwNNQPqPS
Jos the Boss continued his good run of form scoring a brilliant 67(52)
— IndianPremierLeague (@IPL) April 30, 2022
How good was he with the bat and how good were those 4 sixes 😎#RRvMI | #TATAIPL | #IPL2022 pic.twitter.com/wAt2LduwLy
தொடர்ந்து 159 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய மும்பை அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா 2 ரன்னிலும், தொடக்க வீரர் இஷான் கிஷன் 26 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். இதன்பிறகு அணிக்கு வலுவான ரன்களை சேர்த்த சூர்யகுமார் யாதவ் – திலக் வர்மா ஜோடியில், அதிரடி காட்டி அரைசதம் விளாசிய சூர்யகுமார் யாதவ் 39 பந்துகளில் 2 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 2 சிக்ஸர் ஒரு பவுண்டரியுடன் 35 ரன்கள் எடுத்த திலக் வர்மா ரியான் பாரக் வசம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
SKY shines bright and is leading #MI's run-chase!
— IndianPremierLeague (@IPL) April 30, 2022
Brilliant half century courtesy Suryakumar Yadav
113/2 in 14 overs – MI need 46 from 36 balls #RRvMI | #TATAIPL | #IPL2022
Follow the game here: https://t.co/7GdkGvvdcz pic.twitter.com/yqlxmoOZUi
களத்தில் இருந்த கீரன் பொல்லார்ட் – டிம் டேவிட் அணியை வெற்றி நோக்கி அழைத்துச் செல்ல போராடினர். மும்பை அணியின் வெற்றிக்கு கடைசி 6 பந்துகளில் 4 ரன்கள் தேவைப்பட்டது. 20வது ஓவரை சந்தித்த கீரன் பொல்லார்ட் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஆட்டத்தில் மேலும் பரபரப்பு தொற்றிக்கொண்ட நிலையில், பின்னர் வந்த டேனியல் சாம்ஸ் வீசப்பட்ட 2வது பந்திலே சிக்ஸர் அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தார். ஒரு சிக்ஸர் 2 பவுண்டரிகளை விரட்டிய டிம் டேவிட் 20 ரன்கள் எடுத்தார்.
That's it – no more tense moments in the last over
— IndianPremierLeague (@IPL) April 30, 2022
Sams finishes it off in one hit – SIX and #MI register their first win of the season #RRvMI | #TATAIPL | #IPL2022 pic.twitter.com/joftuaWZ7G
பரபரப்பான ஆட்டத்தில் பந்துவீச திணறி வந்த ராஜஸ்தானை வீழ்த்திய மும்பை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று முதல் வெற்றியை ருசித்தது. வெற்றிக்கணக்கை தொடங்கிகியுள்ள அந்த அணி 2 புள்ளிகளுடன் 10 வது இடத்திலே நீடிக்கிறது. தோல்வி கண்ட ராஜஸ்தான் 12 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது.
First win in the bag – Congratulations to #MI who have beaten #RR by 5 wickets 👏👏#RRvMI | #TATAIPL | #IPL2022 pic.twitter.com/MDPru1K4pj
— IndianPremierLeague (@IPL) April 30, 2022
The star ✨ of the night – @surya_14kumar
— IndianPremierLeague (@IPL) April 30, 2022
51(39) when his team was in a spot of bother – Surya went about his business in a calm and composed manner 🆒😎#RRvMI | #TATAIPL | #IPL2022 pic.twitter.com/tlXuQ2HNGr
2⃣0⃣0⃣0⃣ runs in #MI colours 💙💙 for Suryakumar Yadav 🔝#RRvMI | #TATAIPL | #IPL2022
— IndianPremierLeague (@IPL) April 30, 2022
Follow the game here: https://t.co/7GdkGvvdcz pic.twitter.com/9ueylquJkn
ராஜஸ்தான் ராயல்ஸ் ஆடும் லெவன்:
ஜோஸ் பட்லர், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), டேரில் மிட்செல், ஷிம்ரோன் ஹெட்மியர், ரியான் பராக், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரென்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் சென்
மும்பை இந்தியன்ஸ் ஆடும் லெவன்:
இஷான் கிஷன்(விக்கெட் கீப்பர்), ரோஹித் சர்மா (கேப்டன்), டிம் டேவிட், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, கீரன் பொல்லார்ட், ரித்திக் ஷோக்கீன், டேனியல் சாம்ஸ், ஜஸ்பிரித் பும்ரா, குமார் கார்த்திகேயா, ரிலே மெரிடித்
Indian Premier League, 2022Dr. DY Patil Sports Academy, Navi Mumbai 27 March 2023
Rajasthan Royals 158/6 (20.0)
Mumbai Indians 161/5 (19.2)
Match Ended ( Day – Match 44 ) Mumbai Indians beat Rajasthan Royals by 5 wickets
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 158 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று, முதல் வெற்றியை பதிவு செய்தது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 158 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணி 19 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 155 ரன்களை சேர்த்துள்ளது.
மும்பை அணியின் வெற்றிக்கு 6 பந்துகளில் 4 ரன்கள் தேவை.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 158 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் மும்பை இந்தியன்ஸ் அணி 18 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 147 ரன்களை சேர்த்துள்ளது.
மும்பை அணியின் வெற்றிக்கு 12 பந்துகளில் 12 ரன்கள் தேவை.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 158 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிக்கு 18 பந்துகளில் 25 ரன்கள் தேவை.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 158 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் மும்பை இந்தியன்ஸ் அணியில் அதிரடியாக விளையாடிய வந்த திலக் வர்மா 2 சிக்ஸர் ஒரு பவுண்டரியுடன் 35 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 158 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் மும்பை இந்தியன்ஸ் அணி 15 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 122 ரன்களை சேர்த்துள்ளது.
அதிரடி காட்டி அரைசதம் விளாசிய சூர்யகுமார் யாதவ் 39 பந்துகளில் 2 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
மும்பை அணியின் வெற்றிக்கு 30 பந்துகளில் 37 ரன்கள் தேவை.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 158 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் மும்பை இந்தியன்ஸ் அணி 14 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 113 ரன்களை சேர்த்துள்ளது.
அதிரடி காட்டி வரும் சூர்யகுமார் யாதவ் அரைசதம் விளாசி, 51 ரன்களுடனும், திலக் வர்மா 27 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
மும்பை அணியின் வெற்றிக்கு 36 பந்துகளில் 46 ரன்கள் தேவை.
SKY shines bright and is leading #mi's run-chase!Brilliant half century courtesy Suryakumar Yadav113/2 in 14 overs – MI need 46 from 36 balls #rrvmi | #tataipl | #ipl2022 Follow the game here: https://t.co/7GdkGvvdcz pic.twitter.com/yqlxmoOZUi
— IndianPremierLeague (@IPL) April 30, 2022
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 158 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் மும்பை இந்தியன்ஸ் அணி 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 75 ரன்களை சேர்த்துள்ளது.
சூர்யகுமார் யாதவ் 32 ரன்களுடனும், திலக் வர்மா 14 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
மும்பை அணியின் வெற்றிக்கு 60 பந்துகளில் 84 ரன்கள் தேவை.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 158 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் மும்பை இந்தியன்ஸ் அணி 6 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 41 ரன்களை சேர்த்துள்ளது.
மும்பை அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் ரோஹித் சர்மா 2 ரன்னிலும், தொடக்க வீரர் இஷான் கிஷன் 26 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 158 ரன்களை சேர்த்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக அரைசதம் அடித்த பட்லர் 67 ரன்கள் குவித்தார்.
மும்பை அணி தரப்பில் ரித்திக் ஷோக்கீன் மற்றும் ரிலே மெரிடித் தலா 2 விக்கெட்டுகளையும், டேனியல் சாம்ஸ் மற்றும் குமார் கார்த்திகேயா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
Jos the Boss continued his good run of form scoring a brilliant 67(52)How good was he with the bat and how good were those 4 sixes 😎#rrvmi | #tataipl | #ipl2022 pic.twitter.com/wAt2LduwLy
— IndianPremierLeague (@IPL) April 30, 2022
Mumbai Indians fans – what do you all reckon? Who is going to be crucial to the #mi run-chase?Let us know in the comments below ✍️#rrvmi | #tataipl | #ipl2022 Follow the game here: https://t.co/7GdkGvvdcz pic.twitter.com/4xwNNQPqPS
— IndianPremierLeague (@IPL) April 30, 2022
மும்பை அணி 158 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்த களமிறங்கும்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்து வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்த பட்லர் 67 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார். ஒரு சிக்சருடன் 48 பந்துகளில் அரைசதம் அடித்த அவர் தொடர்ந்து மூன்று சிக்ஸர்கள் என 4 தொடர் சிக்ஸர்களை பறக்கவிட்டு 16 வது ஓவரின் கடைசி பந்தில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணியில் 15 ஓவர்கள் வரை நிதானமாக விளையாடி வந்த தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் தற்போது அதிரடியில் இறங்கியுள்ளார். மேலும், தனது அரைசதத்தையும் பதிவு செய்துள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணியில் அதிரடி காட்ட முயற்சித்த டேரில் மிட்செல் ஒரு பவுண்டரியை விரட்டி 17 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
தற்போது ராஜஸ்தான் அணி 15 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 102 ரன்களை சேர்த்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணியில் ஜோஸ் பட்லர் – தேவ்தத் படிக்கல் ஜோடி தொடக்க வீரர்களாக களமிறங்கிய நிலையில், படிக்கல் 15 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் வந்த கேப்டன் சஞ்சு 16 ரன்னில் அவுட் ஆனார்.
தற்போது ராஜஸ்தான் அணி 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்கள் இழப்பிற்கு 73 ரன்களை சேர்த்துள்ளது. தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் 28 ரன்களுடனும், டேரில் மிட்செல் 11 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணியில் ஜோஸ் பட்லர் – தேவ்தத் படிக்கல் ஜோடி தொடக்க வீரர்களாக களமிறங்கிய நிலையில், படிக்கல் 15 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
தற்போது ராஜஸ்தான் அணி 6 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 40 ரன்களை சேர்த்துள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதன்படி ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியுள்ளது.
அந்த அணியில் ஜோஸ் பட்லர் – தேவ்தத் படிக்கல் ஜோடி தொடக்க வீரர்களாக களமிறங்கியுள்ளனர். முதல் ஓவரை பும்ரா வீசுகிறார்.
பெங்களூரு அணிக்கு எதிரான 171 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய குஜராத் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.
https://tamil.indianexpress.com/sports/ipl/ipl-2022-gt-vs-rcb-live-score-updates-447947/
Aapde GT gaya 😁#aavade #gtvrcb #seasonoffirsts pic.twitter.com/66yMc0BlMy
— Gujarat Titans (@gujarat_titans) April 30, 2022
நடப்பு தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றுக்கொண்ட ரவீந்திர ஜடேஜா தனது பொறுப்பை அணியின் முன்னாள் கேப்டனாக இருந்த எம்எஸ் தோனியிடமே ஒப்படைத்துள்ளார். ஜடேஜா வழிநடத்திய சென்னை அணி நடப்பு தொடரில் விளையாடிய 8 ஆட்டங்களில் 2 வெற்றியும் 6 தோல்வியும் கண்டுள்ளது. மேலும், அந்த அணி புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது.
📢 Official announcement! Read More: 👇#whistlepodu #yellove 🦁💛 @msdhoni @imjadeja
— Chennai Super Kings (@ChennaiIPL) April 30, 2022
இஷான் கிஷன்(விக்கெட் கீப்பர்), ரோஹித் சர்மா (கேப்டன்), டிம் டேவிட், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, கீரன் பொல்லார்ட், ரித்திக் ஷோக்கீன், டேனியல் சாம்ஸ், ஜஸ்பிரித் பும்ரா, குமார் கார்த்திகேயா, ரிலே மெரிடித்
A look at the Playing XI for #rrvmi 👇#tataipl pic.twitter.com/PpM34SumXD
— IndianPremierLeague (@IPL) April 30, 2022
ஜோஸ் பட்லர், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), டேரில் மிட்செல், ஷிம்ரோன் ஹெட்மியர், ரியான் பராக், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரென்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் சென்
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் மும்பை டாக்டர் டிஒய் பாட்டீல் மைதானத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்கும் 44வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. தற்போது டாஸ் சுண்டப்பட்ட நிலையில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதன்படி ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கும்.
Toss Update from the DY Patil Stadium 🚨@mipaltan have won the toss and have elected to bowl against #rr.#tataipl | #rrvmi pic.twitter.com/JxNkUHqEYn
— IndianPremierLeague (@IPL) April 30, 2022
தேவ்தத் படிக்கல், ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (கேப்டன்), ஷிம்ரோன் ஹெட்மியர், தேவ்தத் பாடிக்கல், ரியான் பராக், நாதன் கவுல்டர் நைல், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரென்ட் போல்ட், யுஸ்வேந்திர சாஹல், பிரசித் கிருஷ்ணா.
ரோகித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, டிம் டேவிட், கீரன் பொல்லார்ட், டேனியல் சாம்ஸ், முருகன் அஷ்வின், ஜஸ்பிரிட் பும்ரா, பாசில் தம்பி, டைமல் மில்ஸ்.
ரோஹித் சர்மா (கேப்டன்), அன்மோல்பிரீத் சிங், ராகுல் புத்தி, ராமன்தீப் சிங், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, டிம் டேவிட், அர்ஜூன் டெண்டுல்கர், பாசில் தம்பி, ஹிருத்திக் ஷோக்கீன், ஜஸ்பிரித் பும்ரா, ஜெய்தேவ் உனத்கட், ஜோஃப்ரா ஆர்ச்சர், மயங்க் மார்கண்டே, முருகன் அஷ்வின். ரிலே மெரிடித், டைமல் மில்ஸ், கார்த்திகேயா சிங், டேனியல் சாம்ஸ், டெவால்ட் ப்ரீவிஸ், ஃபேபியன் ஆலன், கீரன் பொல்லார்ட், சஞ்சய் யாதவ், ஆர்யன் ஜூயல் மற்றும் இஷான் கிஷன்.
சஞ்சு சாம்சன் (கேப்டன்), ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரியான் பராக், ஷுபம் கர்வால், துருவ் ஜூரல், குல்தீப் யாதவ், குல்தீப் சென், தேஜஸ் பரோகா, அனுனய் சிங், கே.சி. கரியப்பா, ரஸ்ஸி வான் டெர் டுசென், நாதன் கவுல்டர் நைல், ஜிம்மி நைல், , டேரில் மிட்செல், கருண் நாயர், ஓபேட் மெக்காய், நவ்தீப் சைனி, ரவிச்சந்திரன் அஷ்வின், டிரென்ட் போல்ட், ஷிம்ரோன் ஹெட்மியர், தேவ்தத் படிக்கல், பிரசித் கிருஷ்ணா, யுஸ்வேந்திர சாஹல்.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் மும்பை டாக்டர் டிஒய் பாட்டீல் மைதானத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்கும் 44வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் ராஜஸ்தான் – மும்பை அணிகளுக்கு இடையிலான ஆட்டம் குறித்து உடனுக்குடன் தெரிந்துகொள்ள 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்' லைவ் பிளாக்குடன் இணைந்திருங்கள்.