IPL 2022, RR vs RCB Highlights in tamil: 15வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்றிரவு நடந்த 13வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூரூ அணியின் கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் பந்துவீசுவதாக அறிவித்தார். இதனையடுத்து ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தொடக்க வீரர்களாக ஜோஸ் பட்லர் - யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஜோடி களமிறங்கிய நிலையில், ஜெய்ஸ்வால் 4 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். சிறிது நேரம் பட்லருடன் சேர்ந்து மட்டையை சுழற்றிய தேவ்தத் பாடிக்கல். 2 சிக்ஸர் 2 பவுண்டரிகளுடன் 37 ரன்கள் சேர்த்த நிலையில் அவுட் ஆனார்.
பின்னர் வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் 8 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடக்க வீரர் பட்லருடன் ஜோடி சேர்ந்த ஷிம்ரோன் ஹெட்மியர் சிறப்பான ஜோடியை அமைத்தார். இந்த ஜோடியில் முதலில் ஹெட்மியர் சிக்ஸர், பவுண்டரிகளை விரட்டி அதிரடியாக ரன்களை சேர்த்தார். 18 ஓவர்கள் வரை 43 ரன்கள் மட்டுமே சேர்த்த பட்லர் 6,6,0,6,6,2,1 என ருத்ர தாண்டவம் ஆடி 47 பந்துகளில் 6 சிக்ஸருடன் 70 ரன்களை குவித்தார். ஹெட்மியர் 31 பந்துகளில் 2 சிக்ஸர் 4 பவுண்டரிகளுடன் 42 ரன்கள் சேர்த்தார்.
இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்த ராஜஸ்தான் அணி 169 ரன்களை சேர்த்தது. பெங்களூரு அணி தரப்பில் வனிந்து ஹசரங்கா, டேவிட் வில்லி, ஹர்ஷல் படேல் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
A solid 7⃣0⃣* from @josbuttler & some handy contributions from @SHetmyer (4⃣2⃣*) & @devdpd07 (3⃣7⃣) guide Rajasthan Royals to 169/3. 👏 👏#RCB chase underway 👍 👍
Scorecard ▶️ https://t.co/mANeRaI91i #TATAIPL | #RRvRCB pic.twitter.com/AEZ9k0cFQq— IndianPremierLeague (@IPL) April 5, 2022
தொடர்ந்து 170 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய பெங்களுரு அணிக்கு வலுவான தொடக்கம் கிடைத்தது. தொடக்க வீரர்கள் கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் - அனுஜ் ராவத் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடியில் கேப்டன் டு பிளெசிஸ் 29 ரன்னிலும், அனுஜ் 26 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
தொடர்ந்து வந்த வீரர்களில் விராட் கோலி (5), டேவிட் வில்லி (0), ரூதர்ஃபோர்ட் (5) போன்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறவே, பெங்களூரு அணி நடுக்கடலில் சிக்கி தவித்தது. அப்போது களத்தில் இருந்த ஷாபாஸ் அகமது - தினேஷ் கார்த்திக் ஜோடி அணியை மெல்ல மெல்ல கரை நோக்கி நகர்த்தியது. இந்த ஜோடியில் 3 சிக்ஸர் 4 பவுண்டரிகள் என வானவேடிக்கை காட்டி வந்த ஷாபாஸ் அகமது 45 ரன்னில் ஆட்டமிழந்தார்.
This is a Shahbaz appreciation post. 🔥
Absolute POWERPLAYER! 💪🏻#PlayBold #WeAreChallengers #IPL2022 #Mission2022 #RCB #ನಮ್ಮRCB #RRvRCB pic.twitter.com/3IxUgx9nGc— Royal Challengers Bangalore (@RCBTweets) April 5, 2022
எனினும், தொடர்முயற்சியை கைவிடாத அனுபவ வீரர் தினேஷ் கார்த்திக் அவ்வபோது பவுண்டரிகளை விரட்டி அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றார். அவருடன் மறுமுனையில் இருந்த ஹர்ஷல் படேல் சிக்ஸர் விளாசி ஆட்டத்தை முடித்து வைத்தார். பெங்களூரு அணி 5 பந்துகள் மீதமிருந்த நிலையில் வெற்றி இலக்கை எட்டிப்பிடித்தோடு, 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தியது. தினேஷ் கார்த்திக் ஆட்டநாயகன் விருதை தட்டச் சென்றார்.
WE NEVER GIVE UP! 🤜🏻🤛🏻
✌🏻 points in the bag. 🙌🏻#PlayBold #WeAreChallengers #IPL2022 #Mission2022 #RCB #ನಮ್ಮRCB #RRvRCB pic.twitter.com/koJmR7r0cH— Royal Challengers Bangalore (@RCBTweets) April 5, 2022
What a sensational win! 👌 👌
Second victory on the bounce & 2⃣ more points in the bag for @RCBTweets as they beat #RR by 4⃣ wickets. 👏 👏
Scorecard ▶️ https://t.co/mANeRaZc3i #TATAIPL | #RRvRCB pic.twitter.com/VJMRJ1fhtP— IndianPremierLeague (@IPL) April 5, 2022
.@DineshKarthik is adjudged Player of the Match for his match winning knock of 44* off 23 deliveries.
This is also @RCBTweets's 100th win in #TATAIPL.
Scorecard - https://t.co/HLoQF5FrcT #RRvRCB pic.twitter.com/iKVIi548BP— IndianPremierLeague (@IPL) April 5, 2022
இந்த அசத்தலான வெற்றி மூலம் பெங்களூரு அணி தொடரில் 2வது வெற்றியை பதிவு செய்துள்ளது. முன்னதாக 2 தொடர் வெற்றியை பெற்ற ராஜஸ்தானுக்கு இது முதல் தோல்வியாகும்.
Some very well deserved accolades on a night to remember for our stars! 🤩#PlayBold #WeAreChallengers #IPL2022 #Mission2022 #RCB #ನಮ್ಮRCB #RRvRCB pic.twitter.com/vXcaLcP6wE
— Royal Challengers Bangalore (@RCBTweets) April 5, 2022
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
- 23:30 (IST) 05 Apr 2022ஷாபாஸ் அகமது - தினேஷ் கார்த்திக் அதிரடி; ராஜஸ்தானை வெளுத்து வாங்கிய பெங்களூருவுக்கு அபார வெற்றி!
ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 170 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் பெங்களுரு அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த அணியின் மிடில்-ஆடர் வீரர்கள் ஷாபாஸ் அகமது - தினேஷ் கார்த்திக் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சிக்ஸர் விளாசிய ஹர்ஷல் படேல் ஆட்டத்தை முடித்து வைத்தார்.
- 23:12 (IST) 05 Apr 2022பெங்களூரு வெற்றிக்கு 18 பந்துகளில் 28 ரன்கள்!
ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 170 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் பெங்களுரு அணி 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது. அந்த அணியின் வெற்றிக்கு 18 பந்துகளில் 28 ரன்கள் தேவை.
- 23:07 (IST) 05 Apr 2022வெற்றியை நோக்கி பெங்களூரு!
ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 170 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் பெங்களுரு அணி வெற்றி பெற 24 பந்துகளில் 32 ரன்கள் தேவை. களத்தில் தினேஷ் கார்த்திக் - ஷாபாஸ் அகமது ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்து வருகிறது.
- 23:02 (IST) 05 Apr 2022தினேஷ் கார்த்திக் அதிரடி ஆட்டம்; வெற்றியை நோக்கி பெங்களூரு!
ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 170 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் பெங்களுரு அணி 5 விக்கெட்டுகளை இழந்து வருகிறது. அந்த அணியின் கேப்டன் டு பிளெசிஸ் மற்றும் முன்னணி வீரர் கோலி ஆட்டமிழந்து வெளியேறியுள்ளனர். தற்போது பெங்களூரு அணி 15 ஓவர்கள் முடிவில் 125 ரன்களை சேர்த்துள்ளது.
மிடில்-ஆடரில் களமிறங்கி விளையாடி வரும் தினேஷ் கார்த்திக் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்து வருகிறார். அவர் 1 சிக்ஸர் 5 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் சேர்த்துள்ளார்.
- 23:00 (IST) 05 Apr 2022தினேஷ் கார்த்திக் அதிரடி ஆட்டம்; வெற்றியை நோக்கி பெங்களூரு!
ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 170 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் பெங்களுரு அணி 5 விக்கெட்டுகளை இழந்து வருகிறது. அந்த அணியின் கேப்டன் டு பிளெசிஸ் மற்றும் முன்னணி வீரர் கோலி ஆட்டமிழந்து வெளியேறியுள்ளனர். தற்போது பெங்களூரு அணி 15 ஓவர்கள் முடிவில் 125 ரன்களை சேர்த்துள்ளது.
மிடில்-ஆடரில் களமிறங்கி விளையாடி வரும் தினேஷ் கார்த்திக் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்து வருகிறார். அவர் 1 சிக்ஸர் 5 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் சேர்த்துள்ளார்.
- 22:31 (IST) 05 Apr 2022டு பிளெசிஸ், கோலி அவுட்; ரன் சேர்க்க தடுமாறும் பெங்களூரு!
ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 170 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் பெங்களுரு அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. அந்த அணியின் கேப்டன் டு பிளெசிஸ் மற்றும் முன்னணி வீரர் கோலி ஆட்டமிழந்து வெளியேறியுள்ளனர். தற்போது பெங்களூரு அணி 10 ஓவர்கள் முடிவில் 68 ரன்களை சேர்த்துள்ளது.
- 21:36 (IST) 05 Apr 2022அரைசதம் விளாசிய பட்லர்; பெங்களூருக்கு 170 ரன்கள் வெற்றி இலக்கு!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 169 ரன்களை சேர்த்துள்ளது. இதனால், முதலில் பந்துவீசிய பெங்களூரு அணிக்கு 170 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் 47 பந்துகளில் 6 சிக்ஸர்களை பறக்கவிட்டு 70 ரன்கள் குவித்தார். அவருடன் மறுமுனையில் இருந்து அவ்வவ்போது சிக்ஸர் பவுண்டரிகளை சிதறவிட்ட ஹெட்மேயர் 2 சிக்ஸர் 4 பவுண்டரிகளுடன் 42 ரன்கள் சேர்த்தார்.
பெங்களூரு அணி தரப்பில் வனிந்து ஹசரங்கா, டேவிட் வில்லி, ஹர்ஷல் படேல் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
We have a chase on our hands.
— Royal Challengers Bangalore (@RCBTweets) April 5, 2022
Batters, you’re up! 🙌🏻playbold wearechallengers ipl2022 mission2022 rcb ್ಮRCB rrvrcb pic.twitter.com/zNE1xa626c - 20:58 (IST) 05 Apr 202215 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்து வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 15 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 105 ரன்களை சேர்த்துள்ளது. ஜோஸ் பட்லர் (37) - ஹெட்மேயர் (11) ஜோடி களத்தில் உள்ளனர்.
- 20:40 (IST) 05 Apr 2022அடுத்தடுத்த விக்கெட் இழப்பு; நிதானம் காட்டும் ராஜஸ்தான்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்து வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அடுத்தடுத்த ஓவர்களில் விக்கெட்டுகளை இழந்துள்ளது. தற்போது அந்த அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில், 12 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 86 ரன்களை சேர்த்துள்ளது.
- 20:05 (IST) 05 Apr 2022பந்துவீச்சில் மிரட்டும் பெங்களூரு; நிதானம் காட்டும் ராஜஸ்தான்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்து வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பவர்பிளே முடிவில் ஒரு விக்கெட்டை இழந்துள்ளது. தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார்.
தற்போது அந்த அணி 6 ஓவர்கள் முடிவில் 35 ரன்களை சேர்த்துள்ளது. ஜோஸ் பட்லர் (10) - தேவ்தத் பாடிக்கல் (19) ஜோடி களத்தில் உள்ளனர்.
- 19:42 (IST) 05 Apr 2022ஜெய்ஸ்வால் அவுட்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்து வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அதன் முதலாவது விக்கெட்டை இழந்துள்ளது. தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார்.
- 19:37 (IST) 05 Apr 2022ஆட்டம் இனிதே ஆரம்பம்!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து, ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து விளையாடி வருகிறது. அந்த அணியில் தொடக்க வீரர்களாக ஜோஸ் பட்லர் - யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஜோடி களமிறங்கியுள்ளனர்.
- 19:13 (IST) 05 Apr 2022ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பிளேயிங் லெவன்!
ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), அனுஜ் ராவத், விராட் கோலி, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், ஷாபாஸ் அகமது, வனிந்து ஹசரங்கா, டேவிட் வில்லி, ஹர்ஷல் படேல், ஆகாஷ் தீப், முகமது சிராஜ்
- 19:13 (IST) 05 Apr 2022ராஜஸ்தான் ராயல்ஸ் பிளேயிங் லெவன்!
ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், தேவ்தத் பாடிக்கல், சஞ்சு சாம்சன்(கேப்டன் / விக்கெட் கீப்பர்), ஷிம்ரோன் ஹெட்மியர், ரியான் பராக், ரவிச்சந்திரன் அஷ்வின், நவ்தீப் சைனி, டிரெண்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா, யுஸ்வேந்திர சாஹல்
- 19:11 (IST) 05 Apr 2022டாஸ் வென்ற பெங்களூரு பந்துவீச்சு தேர்வு; ராஜஸ்தான் முதலில் பேட்டிங்!
15வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்கும் 13வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் – பெங்களூரு அணிகள் மோதுகின்றன. தற்போது டாஸ் சுண்டப்பட்ட நிலையில், டாஸ் வென்ற பெங்களூரு பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதனால், ராஜஸ்தான் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கும்.
- 19:03 (IST) 05 Apr 2022RR vs RCB ஹெட்-டு-ஹெட்:
மொத்தம் – 24
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - 12
ராஜஸ்தான் ராயல்ஸ் – 10
முடிவு இல்லை - 2
RR vs RCB முந்தைய ஆட்டம்
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்த இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது.
கடைசி ஐந்து முடிவுகள்:
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
ஒரு ஆட்டத்தில் எந்த முடிவும் இல்லாமல் ஆட்டம் முடிந்தது
- 19:00 (IST) 05 Apr 2022ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உத்தேச வீரர்கள் பட்டியல்!
ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), தேவ்தத் பாடிக்கல், ஷிம்ரோன் ஹெட்மியர், ரியான் பராக், ரவிச்சந்திரன் அஷ்வின், நவ்தீப் சைனி, டிரெண்ட் போல்ட், யுஸ்வேந்திர சாஹல், பிரசித் கிருஷ்ணா
- 18:59 (IST) 05 Apr 2022ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் உத்தேச வீரர்கள் பட்டியல்!
ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ் (கேப்டன்), அனுஜ் ராவத், விராட் கோலி, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், ஷாபாஸ் அகமது, வனிந்து ஹசரங்கா, டேவிட் வில்லி, ஹர்ஷல் படேல், ஆகாஷ் தீப், முகமது சிராஜ்
- 18:59 (IST) 05 Apr 2022ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீரர்களின் பட்டியல்!
ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ் (கேப்டன்), அனுஜ் ராவத், விராட் கோலி, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், ஷாபாஸ் அகமது, டேவிட் வில்லி, வனிந்து ஹசரங்கா, ஹர்சல் படேல், ஆகாஷ் தீப், முகமது சிராஜ், சித்தார்த் கவுல், கர்ன் ஷர்மா , சாமா வி மிலிந்த், ரஜத் படிதார், மஹிபால் லோம்ரோர், ஃபின் ஆலன், சுயாஷ் பிரபுதேசாய், அனீஷ்வர் கௌதம்
- 18:58 (IST) 05 Apr 2022ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீரர்களின் பட்டியல்!
ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ் (கேப்டன்), அனுஜ் ராவத், விராட் கோலி, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், ஷாபாஸ் அகமது, டேவிட் வில்லி, வனிந்து ஹசரங்கா, ஹர்சல் படேல், ஆகாஷ் தீப், முகமது சிராஜ், சித்தார்த் கவுல், கர்ன் ஷர்மா , சாமா வி மிலிந்த், ரஜத் படிதார், மஹிபால் லோம்ரோர், ஃபின் ஆலன், சுயாஷ் பிரபுதேசாய், அனீஷ்வர் கௌதம்
- 18:56 (IST) 05 Apr 2022ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அணி வீரர்களின் பட்டியல்!
ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், தேவ்தத் பாடிக்கல், சஞ்சு சாம்சன் (w/c), ஷிம்ரோன் ஹெட்மியர், ரியான் பராக், ரவிச்சந்திரன் அஷ்வின், நவ்தீப் சைனி, டிரெண்ட் போல்ட், யுஸ்வேந்திர சாஹல், பிரசித் கிருஷ்ணா, கருண் நாயர், ஜேம்ஸ் நீஷம், ரஸ்ஸி டெர் டுசென், கே.சி கரியப்பா, டேரில் மிட்செல், ஓபேட் மெக்காய், தேஜஸ் பரோகா, குல்தீப் யாதவ், அனுனய் சிங், குல்தீப் சென், நாதன் கவுல்டர்-நைல், துருவ் ஜூரல், ஷுபம் கர்வால்
- 18:55 (IST) 05 Apr 2022‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ லைவ் பிளாக்கு - க்கு அன்புடன் வரவேற்கிறோம்!
15வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்கும் 13வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.